ஆரோக்கிய உணவு

ஆரோக்கிய உணவு சம்பந்தமானவைகளை பற்றியும் நாம் உரையாட வேண்டும். ஏன் என்றால் நாவின் சுவை மட்டும் தேடுவதால் நமக்கு பலவிதமான உடல் உபாதைகள் எட்டி பார்க்க தொடங்கி விடுகின்றன. சுவை இல்லாமலும் வாழ முடியாது. அதே நேரம் சுவையோடு கூடிய ஆரோக்கிய உணவுகள் பற்றியும் ஆராய்ந்தால் நாம் எல்லோருக்கும் நல்லது என்று நினைக்கிறேன். நல்ல கருத்துக்களை கூறி இந்த இழையை ஆரோக்கியமாக கொண்டு செல்ல முன் வாருங்கள் தோழிகளே!

பொதுவாக "ஆயுளை கூட்ட ஒயிலை குறை" என்று சொல்வார்கள். நல்லெண்ணெய், ஒலிவ் எண்ணெய் போன்றவற்றை பாவித்தால் பாதிப்பின் அளவு குறைந்து விடும் என்று கூற கேட்டு இருக்கிறேன். ஆனால் ஒலிவ் எண்ணெயை அப்படியே சாப்பாட்டில் சேர்த்து சாப்பிட வேண்டும் என்றும், சமைத்தால் அது எதிர்மறை விளைவுகளை தரும் என்றும் கேள்வி பட்டு இருக்கிறேன். சில சஞ்சிகைகளில் ஒலிவ் எண்ணெய் சமைக்க நல்லது என்றும் வாசித்து இருக்கிறேன். இது பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன தோழிகளே?

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

ஆலிவ் எண்ணெயை அதிக சூடு படுத்தினால் அதன் குணங்கள் மாறும் என்று நானும் பத்திரிகைகளில் வாசித்திருக்கிறேன். அதாவது இளஞ்சூட்டில் காய்கறிகளைத் தாளிக்க உபயோகிக்கலாம். ஆனால் பொறிக்க உபயோகிக்கக் கூடாது. மேலும் சாலட், ஸ்ப்ரெட் போன்றவற்றில் ஊற்றி சாப்பிடலாம்.

"ஆயுளைக் கூட்ட ஆயிலைக் குறை" என்பது மிகச் சரியானது.

அறை வெப்பத்தில் (Room Temperature) உறையக் கூடிய எந்த எண்ணெயையும் உபயோகிப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் - நெய், தேங்காய் எண்ணெய், டால்டா.

ஆலிவ் எண்ணெயைப் போல கெனோலா ஆயிலும் (Canola) மிக நல்லது.

ரீஃபைண்ட் ஆயில் என்ற பெயரில் எண்ணெயில் இயற்கையாக உள்ள சத்துக்களை அழித்து விடுவதால் இக்காலத்திய வெஜிடபிள் ஆயில்களும் (Corn, Sunflower) எந்த ஊட்டமும் தருவதில்லை; மாறாக ரீஃபைண்ட் செய்யப்படாத நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை அளவு குறைத்து சமையலில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிட்டால் உடனே மிகச் சூடாக வெந்நீர் குடித்தால் உணவுக் குழாயில் எண்ணெய் படிவதையும், அஜீரணக் கோளாறுகளையும் ஓரளவு தவிர்க்கலாம்.

உங்கள் கருத்து வரவேற்க்கத்தக்கது. அதே போல் காரத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் காரத்துக்கு அடிமையாகி விட்டோம். முற்றிலும் நிறுத்தி விட முடியாது. ஒன்று செய்யலாம். மிளகாயை குறைத்து காரத்தை கூட்ட மிளகு பாவிக்கலாம். "எட்டு மிளகு இருந்தால் எதிரி வீட்டிலும் சாப்பிடலாம்" என்று என் தந்தை சொல்ல கேட்டு இருக்கிறேன். மிளகு பொதுவாக உடலுக்கு தீங்கு பயக்காதது. மாறாக நன்மை தரக் கூடியது.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

உண்மைதான் லக்ஷ்மி. நானும் பச்சை/சிவப்பு மிளகாய் மற்றும் மிளகாய்ப் பொடிக்குப் பதிலாக மிளகுதான் அதிகம் யூஸ் பண்ணுவேன்.

இங்கே நாம் இருவர் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறோமே !! மற்றவர்களும் தங்கள் அனுபவங்களைக் கூறினால் உதவியாக இருக்கும்.

இங்க ஒரு தனி டிராக் போகுதா?! நல்ல விஷயம் தான். ஆலிவ் ஆயில் பொதுவாக இந்திய சமையலுக்கு ஒத்து வராது. காரணம் அதை தாளிக்க பயன்படுத்த கூடாது. நம்ம சமையல் தாளிப்பில் தானே துடங்கும். :) ஆலிவ் ஆயில் பொதுவாக சாலட் வகைக்கு தான் சிறந்தது. ஒரு அளவுக்கு மேல் அதை சூடாக்கினால் கேன்ஸர் ஏர்படுத்தும் தன்மை உடையது என படித்திருக்கிறேன்.

மிளகு காரத்துக்கு ஏற்றது. நானும் அதிகமாக மிளகு சேர்ப்பேன்.

ஆனால் என்ன தான் உணவில் கட்டுபாடு இருந்தாலும், நமது ஆரோக்கியம் உணவில் மட்டுமல்ல, உடல்பயிர்ச்சியிலும் இருக்கிறது.

நல்லா சாப்பிடனும், ஆரோக்கியமா சாப்பிடனும்; இது வேணும், இது வேணாம்னு சொல்லாம சாப்பிடனும்; உடல் உழைப்பு இருக்கனும்; ஆரோக்கியம் தானா வரும். உட்கார்ந்த இடத்தை விட்டு நகராம டயட் 'ல இருந்தாலும் வியாதி தான் வரும். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உண்மை தான் வனிதா, உடலில் சேரும் கலோரிகளை குறைத்தேயாக வேண்டும். அதற்கு சக்தி விரயமாக உடல் உழைப்பு தேவை. இல்லாவிட்டால் எல்லா கலோரிகளும் உடலில் தங்கி நீரிழிவு, கொலோஸ்டரோல் போன்ற நோய்களை உண்டாக்கும். அதேபோல் உணவில் எது நல்லது எது கேட்டது என அறிந்து உண்டால் CANCER போன்ற வெளித்தெரியாத வியாதிகளும் மற்றும் தோல் வியாதிகளும் உருவாகாது. உடலை ஆரோக்கியத்தோடு மட்டுமல்ல அழகோடும் பேணலாம். இது என் கருத்து.

லக்ஷ்மி

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

மற்றவர்களும் நம்மோடு இணைந்தால் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம். ஒலிவ் ஆயில் சமைக்க உகந்ததல்ல என்பது திருமதி உசைன், வனிதா மூலம் தெரிந்து விட்டது. என்னை பொறுத்தவரை எனக்கு இந்த தகவல் மிக உபயோகமானது. ஏன் என்றால் நான் ஒலிவ் ஆயில் சமையலுக்கு அடிக்கடி பாவிப்பேன். இது போல் உணவு சம்பந்தமான மற்ற விடயங்களை இவ்வாறே நாம் அறிந்து கொள்ளலாம். வாருங்கள் தோழிகளே! ஆரோக்கியமே மிக பெரிய சொத்து.

மேலும் ஒரு தகவல் உங்கள் மத்தியில். இட்லி, தோசை போன்றவற்றை தயாரிக்கும் பொழுது அரிசிக்கு பதில் ரவை, ஆட்டா மா, கோதுமை மா போன்றவற்றை பாவிக்கலாம். இவற்றில் நார் சத்து அதிகம் உள்ளதோடு குறைந்த கலோரிகளே உள்ளது. அத்தோடு புளிக்க வைக்க சோடா போன்றவற்றை பாவிக்க வேண்டாம். சோடா போன்றவற்றால் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் தோன்றும். நாளடைவில் என்ன பிரச்சினையாக உரு மாறும் என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. "வரும் முன் காப்பது தான் புத்திசாலித்தனம்".

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

சோடா உப்புக்குப் பதில் உளுந்து, வெந்தயம் போன்றவற்றைத்தான் சேர்க்க வேண்டும். ஆப்பத்திற்கு ஊறவைக்கும் போது வெந்தயம் போட்டு அரைத்தால் நன்றாகப் புளித்து மிகவும் மென்மையாக வரும்.

நான் சோடா உப்பு கேக் செய்யும்போது மட்டுமே போடுவேன். சோடா உப்பு விட்டமின் - பி சத்தை அழிக்கக் கூடியது.

பலகாரங்களில் சோடா உப்புக்குப் பதிலாக முட்டை சேர்க்கலாம். அல்லது ஈஸ்ட் ஓரளவு வரை சேர்க்கலாம்.

மிகவும் நல்ல டாப்பிக் ஆரம்பித்த லஷ்மி அவர்களுக்கு முதலில் நன்றி! நானும் எனக்கு தெரிந்த, தெரியாத, சந்தேகம் உள்ள விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொண்டு, தெளிவு பெற ஆவலாய் உள்ளேன்.

முதலில், ஆயில். இங்கு எனக்கு தெரிந்த ஒரு சில தோழிகள் ஆலீவ் ஆயிலில் அன்றாட சமையல் செய்கிறார்கள். தாளிக்க, குழம்பு வைக்க இப்படி. டீப் ஃபிரைக்கு மட்டும், வேறு எண்ணெய் -வெஜிடபிள் ஆயில் அந்த மாதிரி.

எனக்கும் இந்த சந்தேகம் நீண்ட நாளாகவே இருந்தது. சூடாக்கினால் உடம்புக்கு கெடுதல் விளைவிக்கும் ஆலிவ் ஆயில் என்றால், எந்த அளவு சூட்டை குறிப்பிடுகிறோம்?!! சாதாரணமாக நம் சமையலுக்கு தேவைப்படும் சூடே அதிக சூடா?! அல்லது, பொரிப்பதற்கு செய்யும் அளவா?!
கொஞ்சம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். இதை நன்றாக ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு எண்ணெயை மாற்றலாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.

அப்புறம், என்னுடைய டிப்ஸ் - சமீபத்தில் எங்கோ படித்தது, நானும் மாற்றிக்கொண்டது. அஜினமோட்டோ சால்ட் - இது எப்போதாவாது சைனீஸ் ரைஸ் செய்யும்போது சிறிய அளவில் உபயோகப்படுத்துவேன். இது அவ்வளவும் உடலுக்கு தீங்கு என்று தெரியவந்ததில் இருந்து, கம்ளீட் கட்!
சுத்தமாக நிறுத்தி விட்டென்.

தோழிகளே, நீங்கள் யாராவது இதை உபயோகப்படுத்தும் பழக்கம் உடையவராய் இருந்தால் மறுபரிசீலனை செய்யவும், உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்திற்காக.
இது பற்றிய உங்கள் அனைவரது கருத்துக்களைம் அறிய ஆவலாய் உள்ளேன்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

லக்ஷ்மி, வனிதா, திருமதி ஹுஸைன், ஸ்ரீ நல்ல விவாதம் இங்கு நடக்குது.

ஆலிவ் ஆயிலை அதிகமாக ஹீட் செய்தால் அதன் சுவைதான் மாறும். அதனால் உடலுக்கு தீங்கு ஏதும் இல்லை. இதோ இந்த லின்க்கை படித்துப் பாருங்கள் :

http://www.oliveoilsource.com/cooking_olive_oil.htm

நான் எப்போதும் செய்வது தாளிக்கும்போது கொஞ்சமாக சாதாரண எண்ணையில் தாளித்து கொண்டு பிறகு ஆலிவ் ஆயிலை சேர்ப்பேன்.

டீப் ஃப்ரை செய்ய சாதாரண ஆயிலே போதும்

மற்றுமொரு தகவல். சில எண்ணைகளில் அதில் செய்த உணவுகளிலும் Trans fat இருக்கும். அது உடலுக்கு தீங்கானது. Google ல் trans fat சேர்ச் செய்து பாருங்கள். நிறைய தகவல் கிடைக்கும். டால்டாவில் இந்த trans fat இருக்கும் வாய்ப்பு உள்ளது. சரியாக தெரியவில்லை. ஏனென்றில் டால்டாவின் Nutritional facts என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் டால்டா செய்யும் முறையை வைத்துப் பார்க்கும்போது அதில் trans fat இருக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. எந்த சந்தேகத்திற்கும் இடம் அளிக்காமல் டால்டாவை அதிகம் உபயோகிக்காமல் இருப்பது நல்லது.

மேலும் சில பதிவுகள்