இரண்டாவது குழந்தை

மர்ழியாவுக்கு என்றதும் இந்த இழை துவங்க தோன்றியது
பின்னால் எங்களுக்கெல்லாம் யூஸ்ஃபுல்லா இருக்கும்.
இரண்டாவது கர்பத்துக்கும் முதல் கர்பத்துக்கும் ஆன வித்தியாசம்,பிரசவத்திற்கான வித்தியாசம்,இரண்டாவது குழந்தையை முதல் குழந்தை எப்படி வரவேற்றது அல்லது எப்படி ரியாக்ட் பன்னியது?அல்லது எப்படி முதல் குழந்தையை தயார்படுத்திநீர்கள்,எப்படி சமாளித்தீர்கள்..இதையெல்லாம் இரண்டு குழந்தை உள்ளவர்கள் சொல்லுங்கள்..பின்னாளில் மிகவும் பயனுள்ள த்ரெட்டாக அமையும்

மர்ழியாவுக்கு இரண்டாவது குழந்தை என்றதும் இந்த இழை துவங்க தோன்றியது
பின்னால் எங்களுக்கெல்லாம் யூஸ்ஃபுல்லா இருக்கும்.
இரண்டாவது கர்பத்துக்கும் முதல் கர்பத்துக்கும் ஆன வித்தியாசம்,பிரசவத்திற்கான வித்தியாசம்,இரண்டாவது குழந்தையை முதல் குழந்தை எப்படி வரவேற்றது அல்லது எப்படி ரியாக்ட் பன்னியது?அல்லது எப்படி முதல் குழந்தையை தயார்படுத்திநீர்கள்,எப்படி சமாளித்தீர்கள்..இதையெல்லாம் இரண்டு குழந்தை உள்ளவர்கள் சொல்லுங்கள்..பின்னாளில் மிகவும் பயனுள்ள த்ரெட்டாக அமையும்

முதலில் என் சந்தேகத்தை தீர்த்து வைத்தால்தான் நான் பதில் சொல்வேன்:).... இத் தலைப்பு இப்போ வரக் காரணம் என்ன? என் சந்தேகம் அதிகமாகிக்கொண்டே போகுது..:).. நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள்... முன்பு இதே தலைப்பு மர்ழி ஆரம்பித்தார்.. பின்னர் அது நின்று போனது.... நான் ஏதோ தப்பாக புலம்புகிறேனோ?:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தளி எப்படியிருக்கிறீங்க?ரீமா எவ்வாறு இருக்கிறாள்? நல்ல த்ரெட் தான் எமக்கு உதவியாக இருக்கும்.

அதிரடி அதிரா
இன்னமும் உங்கள் சந்தேகம் அதிகமாகும் என நினைக்கிறேன் சந்தேகம் எதுவும் தேவையில்லை என் பக்கத்தில் இருந்து, சும்மா எப்பவாது தேவைப்படும் அதற்கு வேண்டிதான், முதலில் நீங்களே கத்திரியால் ரிப்பன் கட் பண்ணி ஆரம்பித்து வையுங்கள்
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

என்மகனுக்கும், மளுக்கும் உள்ள வயசு வித்தியாசம் 6 1/2.எனக்கு முதல் பிரசவம், நார்மலுக்கு ரொம்ப ட்ரை பண்ணீ முடியாம சிசேரியன் ஆய்டுச்சு. முடிந்தவரை பிரசவ வலியை அனுபவித்து, பிறகுதான் ஆப்ரெஷன்.
ஆனால் என் மகளுக்கு அப்படி அல்ல, ட்யூ டேட்டுக்கு ஒருவாரம் முன்பே அட்மிட் ஆகி, வலியே இல்லாம சிசேரியனில் பெத்து எடுத்தேன்.
இரண்டாவது குழந்தை பற்றி கன்ப்ஃர்ம் ஆனதுமே, விக்னேசிடம் தம்பீ/தங்கை பற்றி, அவனுக்கு இருக்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டுக்கிட்டே இருந்தோம்.
உதாரணத்திற்கு, ஜவுளிக்கடைக்கு போனால் குட்டி குட்டி ட்ரெஸ்செஸ், பொம்மைகள் பார்த்தால் நம்ம வீட்டிலும் ஒரு குட்டி பாப்பா இருந்தா, இதுபோல் வாங்கலாம்தானேன்னு சொல்வோம்.
ஆனால், எங்களுக்கு எந்த கஷ்டமும் கொடுக்காம, அவனுடைய 4வது வயதிலிருந்தே, அவன் நண்பர்களூடைய, பக்கத்து வீட்டு குழந்தைகளீன் சகோதர/சகோதரிகளை பார்த்து ஆசைப்பட்டு, "நம்ம வீட்டுக்கு எப்ப இதுபோல் குட்டிப்பாப்பா/தம்பி வரும்னு கேட்டு, ஏங்கிட்டே இருந்தான். அதனால், அவனை தயார்படுத்தற வேலையும் எங்களுக்கு மிச்சமாய்டுச்சு.
அபி பிறந்த பிறகுகூட, அவளுக்கு தேவையானதை விக்னேசை விட்டே "பாப்பாவுக்கு நீயே உனக்கு பிடிச்சதை செலக்ட் பண்ணுன்னு" அவனுக்கு முன்னிரிமை கொடுத்தோம்.
ரெண்டு பேருக்கும் வயசு வித்தியாசம் அதிகமா இருந்ததால், ஆரம்பத்தில் எந்த கஷ்டமும் தெரியலை.
ஆனா, இப்ப ரெண்டு பேரும் ஈக்குவலா எல்லா குறும்பும் பண்றாங்க.
ஆரம்பத்தில் சிரமமா இருந்தது. ஆனா இப்ப அதுவும் ஒரு ஈஸி வழியில் சரி பண்ணீட்டு இருக்கேன். ரொம்ப குறும்பு பண்ணினா, "அவங்களை சமாளீக்க முடியாம, நான் டயர்டாபோய், தலைவலியோடு உட்கார்ந்திருக்காமாதிரி" ஒரு ட்ராமா!
அதுபோதும், ரெண்டுபேரும் உருகிப்போய் சைலன்டா ஆய்டுவாங்க!

அதிரா உங்களிடம் சொல்லாமலா..கட்டாயம் சொல்லுவேன்..
ரிப்பனை கட் பன்னுங்கோ

கீதாலக்ஷ்மி உங்கள் பதிவுக்கு நன்றி.எனக்கும் இது பின்னால் உதவும் என நம்புகிறேன் .நல்ல ஐடியாவாக கொடுத்திருக்கிறீர்கள்...வயது வித்தியாசம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்

தளிகா,

இரண்டு குழந்தைகளுக்கு நடுவே குறைந்த இடைவெளி இருப்பதே நல்லது. நமக்கு வளர்ப்பதற்குக் கஷ்டமாக இருந்தாலும், குழந்தைகளுக்கு விளையாட அதே வயதில் துணை கிடைத்து விடும்.

வயது வித்தியாசம் அதிகம் இல்லாததால் டேஸ்ட் வித்தியாசம் இராது. முக்கியமாக ஒன்றைப் பார்த்து ஒன்று சாப்பிட்டு விடும்.

அதோடு, நமக்கும் சீக்கிரம் குழந்தை வளர்ப்புக் காண்டமும் முடிந்து, வேலைக்குப் போகவோ, அல்லது மற்றவைகளில் கவனம் செலுத்தவோ முடியும். இளையவன்/ள் வளர்ந்து வரும்போது நாமும் அதிக வயதாகி விடாமல் நடு வயதினராக இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் நாமும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யலாம்.

எனக்கு யாரும் இதெல்லாம் முதலிலேயே சொல்லித் தரவில்லை. அதோடு அரசாங்கமும் "இரண்டு குழந்தைகளுக்கிடையே போதிய இடைவெளி தேவை" என்று கூறியதால் நானும் 6 வருடங்கள் விட்டுவிடேன்.

இருகுழந்தைகளுக்கு இடையே இடைவெளீ 3ல் இருந்து 4 வயது இருக்கலாம். அடுத்த குழந்தை வேணும்னு முடிவு பண்ணிட்டா 4 வயது இடைவெளிக்குள் பெற்றுக்கொள்ளனும். அப்பதான் பரவாயில்லை.நிறைய இடைவெளீ விட்டா ஒரு குழந்தையை வளர்த்திட்டு அப்பாடான்னு ஓய்வெடுக்கும் நேரத்தில் மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து வரணும்.
இதிலேயே நம்ம வாழ்க்கையில் பாதி முடிஞ்சிடும். நம்மைப்பற்றி யோசிக்கக்கூட நேரம் இருக்காது.
இது என்னுடைய சொந்த அனுபவத்தில் வந்த கருத்து!

அன்பு தோழிகளே,

என் இரண்டு குழ்ந்தைகளுக்கும் 10வருட வித்தியாசம். அதிக வயது வித்தியாசம் இல்லாமல் இருப்பது தான் நல்லது. எனது முதல் பிரசவத்தின் போது அதிக சிரமம் இல்லை. ஆனால் இரண்டாவது பிரசவத்தின் போது உடல்ரீதியாக மிகவும் சிரமப்பட்டேன். ஆனால் குழந்தையின் முகம் பார்த்தவுடன் சிரமம் எல்லாம் ஓடி போய்விட்டது. எனது பையன் TEEN AGEல் இருக்கும் போது பெண்சிறியவளாக இருப்பது சமாளிக்க மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் சில சமயங்களில் எனது பையனே மகளை சமாளித்துவிடுவான். எனது மகளும் அண்ணன் சொன்னால் கேட்டுவிடுவாள்.

அன்பு தோழிகளே,

அன்பு சகோதரி தளிகா எப்படி இருக்கீங்க? மிகவும் நல்லதொரு தலைப்பை துவக்கியுள்ளீர்கள், பார்த்ததும் எனக்கும் சந்தேகமாய் உள்ளது! என்னங்க ஏதாவது விஷேஷமா? எதுவாயினும் இது நல்ல பயன் தரக்கூடிய கூடிய தலைப்புத்தான் என்பதில் சந்தேகமில்லை.

நமது சகோதரிகளும் பல்வேறு நல்ல கருத்துக்களை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள் . நானும் இதில் கலந்துக் கொள்வதில் மகிழ்ச்சியே. எனக்கு மூன்று குழந்தைகள் ஆக்சுவலாக நான்குக்குத் தான் திட்டம் இருந்தது ஆனால் கால ஓட்டத்தின் வேகத்தோடு ஈடுகொடுக்க முடியாமல் திட்டம் கைவிடப்பட்டுவிட்டது. இதில் என்னுடைய அனுபவத்தில் மிகவும் குறுகிய கால இடைவெளியிலும் நீண்ட கால இடைவெளியிலும் குழந்தைப் பெற்ற இரண்டின் அனுபவமும் இருப்பதால் அதை கொண்டு இதில் ஒரு சில கருத்துக்களை கூறுகின்றேன்.

பொதுவாக இரண்டாம் குழந்தை என்று கூற வேண்டுமானால் அதை பெற்றுக் கொள்ள நாம் ஏற்ப்படுத்தும் கால இடைவெளியை விட தாய் மார்களின் முதல் பிரசவம் தான் அதை நிர்ணயிக்கின்றது என்பது தான் பொருத்தமாக இருக்கும், ஏனெனில் அவ்வளவு பிரச்சனைகள் உடல்ரீதியாகவும், பொருளாதார இக்கட்டும், வாழும் சூழ்நிலைகளும் தம்பதியரை அலைக்கழித்துக் கொண்டிருப்பது தான் உண்மை. ஆனாலும் நல்லதொரு திட்டமிடுதல் இருந்தால் எந்த தடைகளையும் முறியடித்து நம்ம வாழ்க்கையை சிறப்பாக்கிக் கொள்ள முடியும் என்பது என் கருத்து.

அதில் முக்கியமாக, தம்பதியர் குழந்தைகள் பெற்றுக் கொள்வதிலும் அவற்றுள் இடைவெளி இருப்பதிலும் ஒரு குறிப்பிட்ட வரையரை வகுக்க முடியாது என்றாலும் குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் பங்கு அதிகமிருப்பதால் அவர்களுக்கும் மேலும் அப்பாக்களும்கூட சாமார்த்தியமான முறையைக் கையாள்வதின் அவசியம் தேவைப்படுகின்றது. அவற்றை ஆரம்பத்திலிருந்து பார்த்தோமானால் அதாவது:

1. தம்பதியினர் திருமணமானதும் குழந்தை பெற்றுக் கொள்வதை சிறிது காலம் தள்ளிப்போடுவது அதிகபட்சம் ஒரு ஒரு வருடம் தள்ளிப் போடுவதுகூட தாயின் உடலுக்கும் மனவளர்ச்சிக்கும்கூட தன்னை தயார் படுத்த உதவும் சிறந்த வழியாக இருக்கும்.
2. பெற்றோர்கள் ஓரளவிற்கு தங்களுக்கு எத்தனைக் குழந்தையை பெற்றுக் கொள்வது என்ற ஒரு திட்டத்தோடு செயல் பட்டார்களானால் அது பிற்காலத்தில் குழந்தை வளர்ப்பின் வெற்றிக்கு முதல் படியாக அமையும்.
3. முதல் குழந்தைக்கு பிறகு மீண்டும் இரண்டாவது குழந்தை பெற விரும்பினால் குறைந்த பட்சம் இரண்டு வருட இடைவெளி இருப்பது நல்லது அதாவது முதல் குழந்தையின் முதல் பிறந்தநாளைக்கு பிறகிலிருந்தே அதற்கான முயற்சி எடுப்பது நல்லது.
4. இரண்டு குழந்தைக்கும் குறைந்த பட்சம் இடைவெளி இருப்பதால் இரண்டு குழந்தைகளையும் பராமரிப்பது மிகவும் எளிதாக இருக்கும் என்பது என் சொந்த கருத்து. ஏனெனில் பொதுவாக குழந்தைகளின் உடல்வளர்ச்சி, மனவளர்ச்சி என்று அவர்களின் ஒவ்வொரு வயதிற்கேற்றவாறு மாறுபட்டுக் கொண்டிருக்கும், ஆக இவ்வாறு குறைந்த இடைவெளியில் பிறக்கும் குழந்தைகளின் குணாதிசயங்கள் ஓரளவிற்கு ஒத்துப் போவதால் பெற்றோர்களால் அவர்களின் தேவையை சிறப்பாக கவனிக்க அதிகமாக போராடத் தேவையிருக்காது.
5. பொதுவாக நீண்ட இடைவெளியில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக செல்லத்தின் காரணமாக பிடிவாதம், சகிப்புதனமையின்மை, போன்று ஒரு சில தேவையற்ற குணாதிசயத்தை பெரும்பாலான பெற்றோர்கள் தங்களை அறியாமலே குழந்தைகளுக்கு போதித்துத்துவிடும் ஆபத்து அதிகம் என்று தான் கூறுவேன்.
6. மேலும் நாமும் நீண்ட இடைவெளியைத் தவிர்த்து மற்றவர்களின், உதாரணமாக நம்முடைய பெற்றோர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கும் போதே அவர்களின் உன்னத உதவிகளைப் பெற்று நாம் நம் குழந்தைகளை சுலபமாக வளர்த்து விடலாம். இல்லையென்றால் வயதான காலத்தில் பெற்றொருக்கு நாம் உதவமுடியாமல் போய்விடும் அவல நிலைகூட ஏற்ப்படலாம்.
7. மேலும் இடைவெளி குறைந்து பிறந்த குழந்தைகளுக்குள் போட்டி பொறாமை குறைவாகவே இருக்கும் ஏன் சில குழந்தைகளுக்குள் அது வரவே வாய்ப்பிருக்காது அப்படியே வந்தாலும் அது பெற்றொர் செய்த தவறாய் தான் இருந்திருக்கும்.
8.இரண்டாவது குழந்தை உண்டானதிலிருந்தே மூத்த குழந்தைக்கு நீ அண்ணனாகப் போகின்றாய் அல்லது அக்காவாகப் போகின்றாய் என்று அறிவிப்பு செய்துவிடலாமே தவிர, அதற்காக ஒரேயடியாக எப்போதும் அதைப் பற்றியே பேசி குழந்தைக்கு மன அழுத்தத்தை தருவதும் தவறு என்பேன். அந்த புதுவரவிற்கு நீங்க மூவருமே முக்கியமானவர்கள் என்ற ரீதியில் மட்டும் குழந்தைக்கு தெரிந்திருந்தாலே போதுமானது.
9.அதைப் போல் இரண்டாவது குழந்தைப் பிறந்த பின்னும் நீ தான் இதைச் செய்ய வேண்டும் அதைச் செய்ய வேண்டும் என்று வற்புருத்தாமல் அதற்கு முன்பு மூத்தக் குழந்தைக்கு எவ்வளவு கவன ஈர்ப்பும், சுதந்திரமும் கொடுத்திருந்தோமோ அதில் சிறிதும் குறைந்து விடாமல் பெற்றோரின் செயல் இருப்பது மிகவும் அவசியம்.
10. மேலும் மூத்த குழந்தை தான் தனிப்படுத்தப் பட்டு விட்டொம் என்று உணராதபடி பெற்றோர்கள் நடந்துக் கொள்வது நல்லது மாறாக, பாப்பா தூங்குது நீ சத்தம் போடாதே, பாப்பாவிற்கு அடிப்பட்டுவிடும் நீ தூரமாய் போய் விளையாடு என்று கூறாமல், பாப்பாவை தூங்க வைக்கலாமா, நீயும் வா பாப்பாவை குளிப்பாட்டலாமா, என்று அவரையும் சிறு விசயங்களில் சேர்ந்துக் கொள்வது பின்னாளில் இரண்டு குழந்தைக்கும் ஒரு இருக்கமான உறவை ஏற்படுத்தும்.
11. முக்கியமாக மூத்த குழந்தைக்கு அவங்க தம்பியையோ தங்கையையோ முதன்முதலில் அறிமுகப்படுத்தும் போது அவங்க அதை எப்படி ஏற்றுக் கொள்கின்றார்கள் என்பதைப் பொருத்தே நாம் நடந்துக் கொள்வதும் அவசியம். உதாரணமாக சில குழந்தைகள் பிறந்த குழந்தையின் அருகில்கூட போக மறுப்பார்கள் அந்த தருணத்தில் அவங்களை வற்புருத்தி மல்லுக்கு நிற்பது தேவையற்றது, நாளடைவில் குழந்தைகளே அந்த எதார்த்தத்தை புரிந்துக் கொள்வார்கள்.
12. எல்லாவற்றுக்கும் மேலாக குறைந்த இடைவெளியில் குழந்தைகளைப் பெறுவதால் தாய்மார்களுக்கு பிரசவத்தின் போது ஏற்ப்படும் சிக்கலும் குறைவாகவே இருக்கும் என்பது என் கருத்து.

இவ்வாறு இன்னும் இதுப் போன்ற சிறந்த யுத்திகளைக் கையாண்டு நம்ம சொந்த வாழ்க்கையையும் வீணடிக்காமல், வருங்கால வாரிசுகளையும் திட்டமிட்டு பெற்று, அவர்களை வளர்ப்பதால் பின்னாளில் குடும்பத்தின் மகிழ்ச்சியான சூழல்களுக்கு எந்த தட்டுபாடும் ஏற்ப்படவே ஏற்ப்படாது என்பது உறுதி.

என்னங்க தளிக்கா இந்த டிப்ஸ் உங்களுக்கு ஒத்துவரும்ன்னு நினைக்கின்றீங்களா? தங்களின் தற்போதைய சூழல், மற்றும் இந்த தலைப்பின் மனநோக்கு எனக்கு தெரியாததால் இப்போதைக்கு இதை எழுதுயுள்ளேன் மேற்க்கொண்டு இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்க ஒகே..., வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

மேலும் சில பதிவுகள்