உங்கள் குழந்தைகள் தயாராகிவிட்டார்களா???

அன்பு நேயர்களுக்கு வணக்கம். எல்லோரும் எப்படி இருக்கீங்க? நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பதிவு. என்னங்க, குழந்தைங்க தயாராகிவிட்டார்களா என்று ஏன் கேட்க்கிறீங்க? பள்ளிக்கூடத்திற்கு தானேன்னு நீங்க கேட்ப்பது தெரிகின்றது, ஆனால் நான் கூற வந்த விசயம் அதுவல்ல! அதாவது அவங்க தன்னுடைய வீடுகளில் தனியாக இருக்க, இன்னும் கூறினால் இரண்டு பெற்றோர்களும் வேலைச் செல்லுவதால் தனியாக விடப்பட்ட பிள்ளைகள் வீட்டில் யாருடைய துணியுமின்றி தனியாக இருக்க தயாராகி விட்டார்களா என்று தான் கேட்டேன். இதற்கு போய் என்ன தயார் செய்யவேண்டும் என்ற சந்தேகமா? மேலே படிங்க.

பொதுவாக வேலைக்குச் சென்றுக்கொண்டிருந்த இளம் அம்மாக்களின் கருத்து இதுதான், என் குழந்தைக்கு குறைந்த பட்சம் மூன்று வயதாகி விட்டால் நான் வேலைக்கு போய்விடுவேன் என்று கூறுவார்கள், இன்னும் சிலர் என் மூத்தக் குழந்தை ரொம்ப சமத்து அவன் தம்பியை அல்லது தங்கையை அவளே பார்த்துக் கொள்வாள்/கொள்வான் என்று வேலைக்கு போக தயாராய் இருப்பவர்கள், இன்னும் சிலர் இருக்கவே இருக்கு டேக் கேர் அதில் விட்டுவிட்டால் பிறகு ஒரு பிரச்சனையில்லாமல் வேலைக்கு போகலாம் என்று கூறுவார்கள். ஆனால் இவர்கள் குழந்தைக்காக வாழ்கிறேன் என்று கூறி தங்களை மட்டுமே முன்நிறுத்துகின்றார்களோ என்று தான் தோன்றுகின்றது.

பெற்றோர்கள் இருவரும் சரிவர நேரில் பேசுவதற்க்கு கூட நேரம் கிடைக்காமல் உழைப்பது அவர்களின் குடும்ப வருமானத்தை மேம்படுத்துவது ஒரு பக்கம் இருந்தாலும் குழந்தைகளுக்கு நல்வாழ்வு அளிப்பதற்கு தான் அதன் நோக்கமே இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் நல்வாழ்வு என்றால் அந்த குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தையும் அதில் சேர்த்து பார்த்தால் உடல் ஆரோக்கியத்தை விட மன ஆரோக்கியத்தை இழந்த குழந்தைகளாகத்தான் பெரும்பாலான குழந்தைகள் இருக்ககூடும், ஏனெனில் குழந்தைகளின் வளர்ச்சியை அவர்களில் வயதையோ அல்லது உடலையோ வைத்து முடிவுச் செய்து விட முடியாது. ஆரோக்கியமான மன வளர்ச்சியை வைத்துதான் ஒரு குழந்தையின் முதிர்ச்சியை கூற முடியும்.

சாதாரணமாக நம் வீடுகளில் பருவம் அடைந்த பெண்குழந்தைகளும், ஆண்குழந்தைகளும் சிறிய சிறிய மூன்று நான்கு வயதையோத்த பிள்ளைகளுடன் விளையாடுவதைப் பார்த்திருக்கின்றோம், ஏன் நாமே கூட அப்படித்தான் இருந்திருப்போம் அதைப் பார்த்து இரண்டாங்கெட்டான் என்று மற்றவர் கேலி செய்வதையும் பார்த்திருபோம் கேட்டிருப்போம் ஆனால் என்னைப் பொருத்த மட்டில் அது தவறானது, மனவளர்ச்சி குன்றி அவ்வாறு இருக்கும் குழந்தைகள் வேறு, அவர்களை இதில் சேர்க்க முடியாது அவர்களுக்கு தேவை மருத்துவச் சிகிச்சை, ஆனால் மற்ற வளர்ந்த பிள்ளைகள் சிறு பிள்ளைகளோடு விளையாடுவது அவர்கள் இன்னும் வயத்திற்க்கேற்ப்ப பக்குவப்படவில்லை என்றே கொள்ளலாம். உடல் வளர்ச்சி இயல்பாக நடைப் பெறும் செயல் ஆனால் மன வளர்ச்சிக்கு சுற்றுப் புற சூழ்நிலைகூட ஒரு காரணமே. இந்த மன வளர்ச்சி என்பது குழந்தைக்கு குழந்தை மாறுபடும் என்பதால் அவர்களை ஏதோ கண்மூடித்தனமாக அவர்களின் வயதை வைத்து, அவர்களை வீட்டில் தனியாக இருக்கவிடுவது பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு என்று தான் கூறுவேன்.

சரி அப்போ எப்பத்தான் என் குழந்தையை வீட்டில் தனியே அல்லது மற்ற கூட பிறந்த பிறப்புகளோடு விட்டு விட்டு நான் வேலைக்கு செல்வது? எதை வைத்து அவர்களின் பக்குவத்தை தெரிந்துக் கொள்வது என்கிறீர்களா? இதோ என்னுடைய அனுபவத்தை வைத்து ஒரு சில கேள்விகளை எழுப்பியுள்ளேன் அதற்க்கெல்லாம் ஆம் என்பதே உங்கள் விடையாக இருந்தால் உங்கள் குழந்தை ஒரு பாதுகாப்பான நல்ல சூழ்நிலையில் இருக்கின்றது என்று தாராளமாக நம்பலாம், இதனால் நீங்க வேலைக்கு போவதால் வரும் பிரச்சனைகள் மிக மிக குறைவாகத்தான் இருக்கும். அதே நேரத்தில் ஏதாவது ஒரு கேள்விக்காவது இல்லை என்ற பதிலிருந்தால் உங்கள் குழந்தை தனியே இருக்க இன்னும் பக்குவப்பட வில்லை நீங்க வேலைக்குப் போக இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று அர்த்தம் சரீங்களா.ஒகே இதோ அந்த கேள்விகள்:

1. நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு ஏற்றவாறு உங்க குழந்தை தனியாக வீட்டில் இருக்கும் வயதில் இருக்கின்றார்களா?
2. உங்க வீடு ஒரு நல்ல பாதுகாப்பு சூழ்நிலையில் உதாரணமாக, மின்சாரக் கசிவு, மருந்து மாத்திரைகள், கண்ணாடிப் பொருட்கள், கத்தி, கத்திரிக்கோள் போன்று குழந்தைகள் எளிதாக கையாளக்கூடிய விசயங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக நம்புகின்றீர்களா?
3. பொதுவாக உங்கள் குழந்தை பயமறியாத சுபாவம் கொண்டவரா?
4. உங்கள் குழந்தையால் ஏதாவது ஒரு மொழியிலாவது சரிவர பேசவும்,பிறர் பேசுவதை புரிந்துக் கொள்ளவும் முடியுமா?
5. உங்க குழந்தையால் பெற்றோரைத் தவிர மற்ற நபர்களோடு சகஜமாக அவர்களின் கேள்விகளுக்கு பதிளக்கும் திறன் வந்துவிட்டதா?
6.தொலைப் பேசியில் எப்படி பதிலளிப்பது அதில் மற்றவர்களோடு எப்படி சரிவர பேசுவது மற்றும் உதவி ஏற்ப்பட்டால் எப்படி மற்றவர்களை அழைத்து பேசுவது போன்ற பயிற்ச்சி இருக்கின்றதா?
7. உங்க குழந்தையால் யாருடைய உதவியும் இல்லாமல் வீட்டின் கதவையும்,ஜன்னல்களையும் திறக்கவும் மூடவும் தெரியுமா?
8. அவசர நேரத்தில் உங்க குழந்தையிடம் மிகவும் விரைவாக சென்றடைய உங்களுக்கு வேண்டியவர்/நண்பர் யாராவது உங்க வீட்டின் அருகாமையில் வசிக்கின்றார்களா?அல்லது அருகாமையில் வேலைச் செய்கின்றார்களா?
9. வீட்டில் ஆபத்தான தருணங்களில் உதாரணமாக, நெருப்பு போன்ற ஆபத்தான சூழ்நிலையில் தற்காப்பு முறைகள் தெரிந்து வைத்திருக்கின்றார்களா?
10, உங்க குழந்தையால் யாருடைய உதவியுமின்றி உதாரணமாக, டாய்லெட் அறையை பயன்படுத்துவது போன்று தன் சொந்த காரியங்களைச் செய்துக் கொள்ள்முடியுமா?
11, உங்க குழந்தையால் தனியாக ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலாவது தனியாக இருக்க முடியும் என்று முழு மனதாக நீங்க நம்புகின்றீர்களா?
12. முக்கியமாக, தனியாக இருப்பேன் என்று உங்க குழந்தை சம்மதம் தந்துவிட்டாரா?

இவ்வாறு இன்னும் உங்களின் சொந்த அனுபவங்களில் கண்ட கேட்ட விசயங்களையெல்லாம் கவனத்தில் இருத்தி எல்லாவற்றுக்கும் ஆம் என்று பதிளலித்தாலொழிய உங்கள் குழந்தை பத்து வயதாக இருந்தாலும் சரி பதினைந்தாக இருந்தாலும் சரி அவர்களை தனியே விட்டுவிட்டு வேலைக்கு போக வேண்டாம், ஏனெனில் அவர்களுக்கு வெளியுலக வாழ்க்கையோடு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள இன்னும் தாயின் அருகாமையும், கண்கானிப்பும் அவர்களுக்கு தேவைப்படுவதாக நினைத்து, நீங்க உங்க சொந்த குறிக்கோள்களை குழந்தைக்காக சிறிது விட்டுக் கொடுத்து வாழ்வது கூட தாய்மையின் அடையாளமே. உலகில் வாழும் மற்ற உயிரினங்கள் கூட தங்கள் குட்டிகளை, தனியாக விடும் பக்குவம் வரும் வரை கூடவே வைத்து பாதுக்காக்கின்ற போது மனிதர்களாகிய நாம் அதைச் செய்வதில் ஒரு குறையும் வராது என்று கூறி முடிக்கின்றேன் இன்னும் இதன் தொடர்ச்சியை மற்றொரு சமயம் எழுதுகின்றேன்.இந்த தலைப்பைக் குறித்த உங்கள் சந்தேகம் மற்றும் கருத்துக்களையும் எதிர்ப்பார்க்கின்றேன் நன்றி.

அருமையான தலைப்பு மற்றும் டிப்ஸ் இது பல தாய்மார்களுக்கு நிச்சயமாக உதவும். மனோகரி மேடம் இன்னும் வந்து எல்லாருக்கும் பயன் தரும் பல விஷயங்கள் எழுதுங்க. இப்ப உங்க கிச்சன் ஆர்கனைசேஷன் டிப்ஸ் படிச்சி செயல் படுத்த போகிறேன். உங்க நேர நெருக்கடியிலும் பதிவு போட்டு உதவுவதற்கு மிக்க நன்றி

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மனோகரி மேடம் எப்படியிருக்கீங்க? உங்களுக்கு நான் புதிது. ஆனால், நான் உங்களின் நிறைய பதிவு பார்த்து வியந்திருக்கிறேன், இந்தப் பதிவுள்பட. மிகவும் அருமையான யோசனைங்க, இது எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நான் அறுசுவையில் சேர்ந்தபின் உங்களின் நேரடிப் பதிவை முதன்முதலாய்ப் பார்த்ததும், பேசாமலிருக்க முடியவில்லை. தவறாக நிணைக்க வேண்டாம், மூன்றாவது கேள்வியை மட்டும் கொஞ்சம் சரிபார்க்கவும். உங்களுக்குப் புரியும். தவறாகயிருந்தால் மண்ணிக்கவும், மண்ணிச்சுக்கோங்க ப்ளீஸ்........

அன்புடன்:-)....
உத்தமி:-)

நல்ல டாபிக்.எல்லோரின் கருத்துக்களையும் படிக்க ஆவல்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நான் வேலைக்கு போகவில்லை.அதனால் இதுவிஷயமா சொல்ல எதுவும் இல்லை. ஆனாலும் ஒரு நல்ல தலைப்பை ஆரம்பிச்சிருக்கீங்க! வேலைக்கு போகும் கணவன் - மனைவி படிக்கவேண்டிய ஒரு முக்கியமான பதிவு இது!

டியர் இலா எப்படி இருக்கீங்க? உங்க கருத்துக்கு மிக்க நன்றி.இந்த தலைப்பும் நம் தாய்மார்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் தான் எழுதியுள்ளேன். கிச்சன் ஆர்கனைசேஷன் டிப்ஸ் எப்போ எழுதினேன் என்று நினைவில்லை அது உங்களுக்கு உதவினால் நிச்சயம் மகிழ்வேன்.நேரம் கிடைக்கும் போது நிச்சயம் இன்னும் பதிவுகள் போடுகின்றேன் நன்றி.

அன்பு சகோதரி உத்தமி எப்படி இருக்கீங்க? எனது பதிவுகளை நீங்களும் விரும்பி படிப்பது மகிழ்ச்சியாக உள்ளது மிக்க நன்றி. இந்த தலைப்பை பற்றி கருத்து கூறியதற்கும் நன்றி.அதில் மூன்றாவது கேள்வியை சரிபார்க்க கேட்டுள்ளீர்கள் ஆனால் என்ன பிழை என்று தெரியவில்லை எதுவாயினும் அந்த பதிவை திருத்தவோ மாற்றவோ நம்மால் முடியாது அதற்கு அட்மினைத்தான் அழைக்க வேண்டும் ஆனால் பிழை என்ன என்று கூறினீர்களானால் சரிபார்க்க உதவியாய் இருக்கும், இதற்கு போய் ஏன் மன்னிப்பு கேட்க்கிறீங்க என்ன பிழை என்று வந்து சொல்லுங்க நன்றி.

அன்பு சகோதரி ஆஸியா இந்த தலைப்பைப் பற்றிய உங்கள் கருத்துக்கு நன்றி. உங்க பதிவு எனக்கு சிரிப்பை வரவழைத்தது. நீங்க தயாரா என்று யாரு உங்களைக் கேட்டது கோவிச்சுக்காதீங்க சும்மா ஜோக்கா எழுதினேன் மீண்டும் நன்றி.

டியர் சாய் கீதா எப்படி இருக்கீங்க? உங்களின் கருத்துக்கு நன்றி நீங்க சொல்லுவது உண்மை தான். வேலைக்கு போகும் கணவன் மனைவி இருவருக்கும் இந்த தலைப்பு உதவினால் நல்லது தான். நன்றி.

மனோகரி மேடம்,
//3. பொதுவாக உங்க குழந்தை பயந்த சுபாவம் கொண்டவரா?//
இதற்கு ஆம் என்று சொன்னால்,
பயந்த சுபாவமுடைய குழந்தையைத் தனியே விட முடியாதல்லவா? அதைத்தான் சொன்னேன். ஒருவேளை நாந்தான் தவறாகப் புரிந்து கொண்டேனோ தெரியவில்லை. மறுபடியும் சாரீங்க....:) அனுபவம் நிறைந்த உங்களிடம், என்னால் சாரி கேட்காமலிருக்க முடியவில்லை.

அன்புடன்:-)......
உத்தமி:-)

டியர் உத்தமி மூன்றாம் கேள்வியின் விளக்கம் என்னவென்றால் பயந்த சுபாவம் கொண்ட குழந்தைகள் தனியாக வீட்டிற்குள் நுழையக்கூட பயப்படுவாங்க, தனியாக டாய்லெட் போகக் பயப்படுவாங்க, இருட்டு அறையில் சென்று லைட்டைப் போடக்கூட பயப்படுவாங்க அதை சாதாரணமாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. அந்த கேள்விக்கு இல்லை என்று பதிலளிப்பவர்களுக்கு பிரச்சனையில்லை. ஆனால் ஆம் என்று விடையளிப்பவர்கள் அதுப் போன்ற பயத்தை போக்கும் முயற்சியை எடுக்க வேண்டும், அதன் பிறகு தான் அவங்க குழந்தையை தனியே வீட்டில் இருக்கவிட வேண்டும் என்பது தான் அதன் விளக்கம், நான் தான் இந்த தலைப்பில் எழும் சந்தேகத்தையும் கேட்க்கும்படி கூறியிருந்தேனே பிறகு ஏன் தயக்கம் வாங்க இன்னும் சந்தேகம் இருந்தால்கூட கேளுங்க.

இந்த ஆலோசனை அனைத்தும் நீங்க எனக்கே சொன்னதுமாதிரி உணர்கின்றேன். என்மகளுக்கு 16 மாதம் முடிந்து விட்டது. வீட்டிலுள்ள தனிமையும், குடும்ப சூழ்நிலையும் வேலைக்கு போகலாம் என்ற எண்ணத்தை வரவழைத்தது. கணவரிடம் கேட்டேன். நமக்கு குழந்தைதான் பெரிது.அவள் பெரிதாகும் வரை அதைப்பற்றி யோசிக்கவே கூடாது என்று சொல்லி விட்டார். க்ரீசில் விடலாம் என்று சொன்னேன். கீரிச்சில் நம்மை போல கவனிப்பார்களா வேண்டாம். நீயும், பேபியும் வீட்டில் சந்தோஷமா இருங்க. நீங்கள் கஷ்டப்படுவதை விரும்பவில்லை என்று முடிவாக கூறிவிட்டார். இருந்தாலும் என்மனது சமாதானமாகவே இல்லை.
ஜாபுக்கு போகனும் என்ற எண்ணம் உங்கள் பதிவை படிக்கும் முன் வரை மனதிற்குள் அழுத்திக்கொண்டே இருந்தது. உங்களுடைய ஆலோசனை என்னை நல்ல சிந்திக்க வைத்தது. உங்களால் மட்டும்தான் மேடம் இப்படி நல்ல சிந்தனையுள்ள ஆலோசனையை தரமுடியும்.

////நீங்க உங்க சொந்த குறிக்கோள்களை குழந்தைக்காக சிறிது விட்டுக் கொடுத்து வாழ்வது கூட தாய்மையின் அடையாளமே. உலகில் வாழும் மற்ற உயிரினங்கள் கூட தங்கள் குட்டிகளை, தனியாக விடும் பக்குவம் வரும் வரை கூடவே வைத்து பாதுக்காக்கின்ற போது மனிதர்களாகிய நாம் அதைச் செய்வதில் ஒரு குறையும் ///

ரொம்ப என்னை சிந்திக்க வைத்த வரிகள். நிறைய வேலையிருந்தது ஆனாலும் இந்த பதிவுக்கு பதில் போட்டு விட்டுதான் போகனும்னு உட்கார்ந்திருக்கேன். இதுபோன்று பயனுள்ள ஆலோசனைகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் மேடம். ரொம்ப நன்றி உங்களுக்கு. பழையபடி அரட்டையிலும் கலந்து கொள்ளுங்கள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மிகவும் நல்ல ஒரு தலைப்பை துவங்கி உள்ளீர்கள்.குழந்தைகள் சிறு வயதாக இருக்கும்பொழுது வேலைக்கு செல்லக்கூடியவர்களுக்கு மிகவும் பயனுள்ளது.எனக்கு நேரம் இருக்கும் பொழுது வந்து இது சம்பந்தமாக பதிவு போடுகிறேன்.
செல்வி

சவுதி செல்வி

மனோகரி மேடம் நலமாக இருக்கிறீர்களா?
உங்கள் கருத்து மிகவும் அருமையாக இருக்கிறது.ஒவ்வொரு பெற்றோரும் நிச்சயமாக இதைப் படிக்க வேண்டும்.பொருளாதார சிக்கலால் நானும் வேலைக்குப் போகிறேன்.ஆனால் கணவர் வீட்டில் நிற்கும் நேரம் தான் வேலைக்குப் போவேன்.
ஒரு போதும் தனியாக மகனை வீட்டில் விடுவதில்லை.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

மேலும் சில பதிவுகள்