நூல்கோல் கூட்டு

தேதி: February 18, 2009

பரிமாறும் அளவு: 4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நூல்கோல் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 1
கடலைப் பருப்பு - 1 கப்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய் - 1/4 கப்
கொத்தமல்லி - கடைசியில் தூவ


 

முதலில் நூல்கோலில் தோலினை சீவி சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை அரிந்து கொள்ளவும்.
முதலில் ப்ரஷர் குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின்னர் நூல்கோலினை போட்டு 1 நிமிடம் வதக்கவும். அதன் பின் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
இத்துடன் கடலைப் பருப்பினை நன்றாக கழுவி இந்த கலவையுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
இதனை 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
தேங்காயினை அரைத்து வைக்கவும்.
விசில் அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதினை சேர்த்து 1 முறை கொதிக்கவிடவும்.
கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இதனை சாதம், இட்லி, தோசை, சாப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் கீதா ஆச்சல்,

எப்படி இருக்கிங்க?நான் உங்களுடைய நூல்கோல் கூட்டு செய்தேன் ரொம்ப நல்ல இருந்தது கீதா. மிகவும் சுவையாக இருந்தது.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

மிகவும் நன்றி மைதிலி…
நானும் இன்று மதியம் நூல்கோல் கூட்டு தான் செய்தேன்…இதில் நார்சத்தும் இருக்கின்றது. உடலிற்கு மிகவும் நல்லது.
அன்புடன்,
கீதா ஆச்சல்