சிறமம் பர்க்காமல் என் தோழிகள் எனக்கு பதில்போடுவீகள் என நம்புகிறேன்.

ஹாய் தோழிகளே,எனக்கு ரிசல்ட்டு பஸ்டிவ்னு தெரிந்தவுடன் சந்தோசம் என்னவென்று சொல்ல வார்த்தைகள் இல்லை,ஆனால் கூடவே பயமும்,அதற்க்கு ஒரு காரனமும் உண்டு

சிறிய வயது முதலே எனக்கு டாக்டர்,ஊசி,மருந்து,மாத்திரை என்றாலே,அலர்சி.இதுவரை காய்ச்சல் வந்தால் கூட டாக்டர்கிட்ட போகமாட்டேன் குறைந்தது 5 ஊசிகள் போட்டு இருப்பேன்,அதுவும் 2பேர் உதவியோடு,
எங்க வீட்டில் எனக்கு உடம்புககு முடியவில்லை என்றால்,எங்கள் குடும்பத்துக்கே உடம்புக்கு உடம்பு முடியாத மாதிரிதான், எங்க அம்மா அழுதுடுவாங்க.
எங்கள் குடும்ப டாக்டர் வீட்டுக்கு வந்தல் கூட அவர் கண்ணில் படமல் ஒழிந்து கொள்வேன்.அவர் அதை என் திருமணத்துக்கு முன் என் கணவரிடம் சொல்லியிருக்கிறார்.சிரித்து இருக்கிறார்
இப்பொழுது உங்களுக்கு புரிந்து இருக்கும்,நான் எவ்வளவு தைரியசலி என்று.இப்பொழுது நான் பாய்ன்டுக்கு வரேன்.
எனக்கு பிறசவத்தை நினைத்தலே பயமாக உள்ளது,எங்க அம்மாவே என்ன பன்டபோராலோனு சொல்லுவாங்கஇபொழுது என் கேள்வி என்னவென்றல்,என் மனதை எப்படி தயர் படுத்துவது,நான் எதிர்பார்பது சுக பிறசவம்.(ரொம்ப வலிக்குமோ)1)என்ன மாதிரி உணவுகள் எடுத்துகொள்ளவேண்டும்,2)தூங்கும்பொழுது இப்பொழுது இருந்தே எழுந்து திரும்பிப்படுக்க வேண்டும்,3)சுகபிறசவம்மாக இப்பொலுது இருந்து என்ன உடற்ப்பயிற்ச்சி &என்ன என்ன சப்பிடனும்,4)குழந்தை அரோக்கியமா,இருக்க என்ன சப்பிடனும்,ரொம்ப கேள்வியா கேட்டுவிட்டேனோ,உங்கள் பதில்லுக்கா காத்திருப்பேன்,சிறமம் பர்க்காமல் என் தோழிகள் எனக்கு பதில்போடுவீகள் என நம்புகிறேன்.

ஆகா கவி முதல்ல வாழ்த்துக்கள்..நானும் உங்கள மாதிரியே தான் எல்லாத்துக்கும் பயம்..தெனாலி ஸ்டைல்ல சொன்னால் நான் பயப்படுவதற்கு பயந்ததே இல்ல..சரி சரி எல்லொரும் சொல்றது மனச சந்தோசமா வச்சுக்கங்க..கண்டிப்பா பயம் வரும் ஆனால் பயப்படாம இருக்க ட்ரை பண்ணுங்க..ஏதாவது சந்தேகம்னா டாக்டர்கிட்ட தயங்காமல் கேளுங்க..நல்லா சாப்பிடுங்க நல்லா தூங்குங்க, முதல் 3மாததுக்கு கஷ்டமான வேலை செய்யாமல் இருங்க..பிரசவ அனுபவங்கள் தலைப்புல தோழிகளோட அனுபவம் இருக்கும் படிங்க..என்ன கேட்டால் எனக்கு வலிக்கவே இல்லனு தான் சொல்வேன்..குட்டி குழந்தைய பார்க்கும் போது எல்லா வலியும் ஓடிரும்...

முதலில் தைரியாம இருங்க. நல்ல சாப்பிடுங்க எப்போதும் சந்தோஷமா, நல்லதை நினக்கவும்.
உங்களை அறியாமலேயே ஒரு வித சக்தியும், தைரியமும் வந்துவிடும். நமக்குள்ளே ஒரு உயிரா என்று உங்களையும் அறியாமலே நிங்க ஆட்டோமேடிக்கா எல்லாம் செய்விங்க. ஊசிபோட்டுகுவிங்க,ஐய்யோ நம்ம குழந்தை என்று ஆக மொத்ததில் நிங்க நல்ல தைரியாசாலியா ஆகிடுவிங்க. மீண்டும் வாழ்த்துகள்.நல்ல ப்ரோட்டின், பால், நல்ல காய்கறிகள், எது உங்களுக்கு பிடிக்குமோ அதெல்லாம் சாப்பிடலாம். நல்ல வாக்கிங் பெஸ்ட். அது டாக்டரிடம் ஆலோசனை கேட்டு செய்யவும்.
முடிந்தவரை நல்ல ஹெல்தியான உணவு வகைகள் சாப்பிடவும். விட்டமின்ஸ் சாப்பிடவும்.

ஹாய் கவிசிவா ,

வாழ்த்துக்கள் ...............

கர்ப்பிணிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள்

இரும்புச்சத்து

கீரைகள், சுண்டைக்காய், பாகற்காய், வெல்லம், எள், பேரீச்சம்பழம், முட்டை, இறைச்சி, தானிய வகைகள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டைவகைகள்.

பிரசவ காலத்தில் ரத்த சோகை வராமல் தடுக்கிறது. குழந்தை பிறந்தவுடன் பயன்படுத்திக் கொள்ள வசதியாக தாய்க்குக் கிடைக்கும் இரும்புச்சத்தை கருவில் உள்ள குழந்தை தனது கல்லீரலில் சேமித்து வைத்துக் கொள்கிறது.

புரதச்சத்து

பச்சைக் காய்கறிகள், பால், பால் பொருள்கள், இறைச்சி, மீன், பருப்பு வகைகள், கடலை, தானியங்கள்.

கருவில் குழந்தை உருவாவதற்கான திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. கர்ப்பப்பை வலுவாக இருப்பதற்கும் நச்சுக்கொடி உருவாவதற்கும் புரதச்சத்து அவசியம்.

கால்ஷியம்

பால் மற்றும் பால் பொருட்கள், முட்டை, கிழங்கு வகைகள், பழங்கள், மாவுப் பொருள்.

குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கும் கரு குழந்தைக்கு பற்கள் உருவாவதற்கும் கால்சியம் மிகவும் அவசியம்.

கார்போஹைட்ரேட்

பால், தேன், உருளைக் கிழங்கு, பழங்கள், மாவுப் பொருள்.

கர்ப்பக் காலத்தில் இயல்பைவிட அதிகக் கலோரிகள் தேவை என்பதால் கார்போஹைட்ரேட் சத்து தேவை. எனினும் மாவுச் சத்து அதிகமானால் உடல் பருமன் ஏற்படும்.

வைட்டமின்

வெண்ணெய், நெய், எண்ணெய், ஆட்டிறைச்சி, கோழி, முட்டை, முந்திரி, பாதாம் போன்ற கொட்டை வகைகள்.

சமச்சீர் உணவின் அடிப்படையில் வைட்டமின்கள் உடலில் சேர்வதற்கு கொழுப்புச் சத்து அவசியம். ஆனால் அதிகக் கொழுப்புச் சத்து உடல் பருமனை ஏற்படுத்தும்.

வைட்டமின்-ஏ

பால், வெண்ணெய், முட்டை, கேரட், பப்பாளி, மாம்பழம், கீரைகள், மீன்.

தோல், கண்கள், எலும்புகள் உள்பட உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்திற்குத் இச்சத்து தேவை.

வைட்டமின்-பி

பால், முட்டை, நல்லெண்ணெய், கைக்குத்தல் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், இறைச்சி

மலச்சிக்கல், நரம்புத்தளர்ச்சி, பிரிவுகள், தோல் நோய்கள் வராமல், வைட்டமின்- ஏ சத்துக்கள் தடுக்கின்றன. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு வைட்டமின் - பி சத்து தேவையாயுள்ளது.

வைட்டமின்-சி

எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யாப் பழம், ஆரஞ்சு, தக்காளி, பருப்பு வகைகள், முருங்கைக்காய், முள்ளங்கி, உருளைக் கிழங்கு, கொத்தமல்லி (இவற்றை அதிக நேரம் சமைக்கும் நிலையில் வைட்டமின் சத்துக்கள் போய்விடும் என்பதை மறந்து விடக்கூடாது).

கருவில் வளரும் குழந்தையின் தோல், எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின்-சி உதவுகிறது. நச்சுக்கொடி வலுவடையும் இரும்புச்சத்தை உட்கிரகிக்கவும் வைட்டமின்-சி உதவுகிறது.

வைட்டமின்-டி

சூரிய ஒளி, வெண்ணெய், பாலாடைக்கட்டி, முட்டை, மீன், ஈரல்.

கால்சியச்சத்தை உட்கிரகிக்க வைட்டமின்-டி உதவுகிறது. எலும்பு வளர்ச்சிக்கும் உறுதிக்கும் கால்சியச்சத்து தேவை.

வைட்டமின்-ஈ

கோதுமை, ஆப்பிள், கேரட், முட்டைக்கோஸ், கீரைகள், முட்டையின் மஞ்சள் கரு.

சீரானசத்து ஓட்டத்திற்கு வைட்டமின்-ஈ உதவுகிறது.

வைட்டமின்-கே

பச்சைக் காய்கறிகள், முட்டை தானிய வகைகள், உருளைக்கிழங்கு.

ரத்தம் உறையும் தன்மையைக் கொடுக்கிறது.

இது எனக்கு வந்த ஈமெயில்........அதை தான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

அன்புடன்
ஸ்ரீ

கருவுற்ற பெண்ணுக்கு...

இப்போது மருத்துவம் வெகுவாக முன்னேறி விட்டது. பல பெரிய நோய்களை குழந்தை கருவிலிருக்கும் போதே கண்டுபிடித்து விட முடியும். இதன் மூலம் குணப்படுத்த முடியாத நோய்களோடு குழந்தை பிறப்பதையும் தவிர்த்து விடலாம். கருவுற்ற பெண்கள் என்னென்ன சோதனைகள் செய்து கொள்ள வேண்டும்?

11லிருந்து 14 வாரங்களுக்குள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். இதன் மூலம் கருவின் வயதை உறுதிப்படுத்த முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தாலும் தெரிந்து விடும்.

20, 22 வாரங்களில் மீண்டும் ஒருமுறை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக்குறைபாடுகள் பெரும்பாலானவற்றை இதில் தெரிந்து கொள்ளலாம்.

மெட்டர்னல் சீரம் ஸ்கீரினிங் (Maternal Serum Screening)

கருவில் இருக்கும் குழந்தைக்கு டவுண்சிண்ட்ரோம், ட்ரிகோமி 18 என்ற ஜெனிட்டிக் பிரச்சனைகள் ஏற்படுவதை இந்த சோதனையில் மூலம் கண்டறியலாம். முதுகெலும்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் இதன்மூலம் கண்டறியலாம்.

கருத்தரித்த 11 முதல் 14 வாரங்களுக்குள் முதல் ட்ரைமெஸ்டர் ஸ்கீரினிங் (First Trimester Screening) சோதனையும், 15-21 வாரங்களுக்குள் ட்ரிபுள் ஸ்கீரினிங் டெஸ்ட் (Triple Screening test) சோதனையும் செய்ய வேண்டும்.

பெற்றோருக்கு மரபுக் குறைபாடுகள் இருந்தால் கருவுற்ற பெண்ணுக்கு கேரியர் ஸ்கீரினிங் (Carrier Screening) சோதனை செய்ய வேண்டும். இச் சோதனைகளால் டவுன் சிண்ட்ரோம், ட்ரைசோமி 18, மஸ்குலர் டிஸ்ரோபி, ஹீமோபிலியா போன்ற நோய்கள் இருந்தால் கண்டறியலாம்.

நன்றி
By www.thahir4u.co.cc/

ஹாய் கவி,
மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் கவி,
முதலில் எனது வாழ்த்துக்கள்.மனதில் ஒரு பயமும் வேண்டாம்.நல்லா சந்தோஷ்மாக இருங்கள் நல்லா சத்தான காய்,பழங்கள்,கீரைவகைகள் சாப்பிடுங்கள். தினமும் அரை லிட்டர் பால்,நண்கு லிட்டர் தண்ணீர் பருகவேண்டும்.நான் கருவுற்ற நாள் முதல் டெலிவரி வரை சாப்பிட்டேன் . நன்றாக ரெஸ்ட் எடுங்கள்.மனதிற்கு இனிமையான இசை கேளுங்கள்.எல்லாம் கடவுள் அருள்ளால் நல்லபடியாக நடக்கும்.

இந்த லிங் உங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்.

http://www.babycentre.co.uk/

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

கோவிக்காதீங்கோ கவி உங்களோட இழையில நானும் இணையிறன்.
3 மாசம் முடிச்சு சொல்லுவம் எண்டால் ஏகப்பட்ட சந்தேகம் வந்து தொலைக்குது.பாவம் செல்வி அக்காவும் இலாவும் .நன்றி செல்வி அக்கா என்னோட சந்தேகங்களைத்தீர்த்து வைத்ததுக்கு.இலா மெஹந்தி கொஞ்சம் லேட்டா போடுறன்.நாந்தான்போய் வாங்கவும் வேணும்.உங்களோட பொன்னான பதிலகளை நான் மட்டும் சுயநலமாக பயன்படுத்த விரும்பவில்லை.எல்லாரும் நன்மை அடையட்டுமே.பழைய இழைகளை தேடிப்பார்க்கும் போது இந்த ஞானம் வந்தது.
சந்தேகம் 1.எனக்கு கர்ப்பம் 6 வாரமாகிவிட்டது.1விசிட் டாக்டரிடம் போய் வந்துட்டேன்.இன்னும் ஸ்கானுக்கு எழுதித்தரவில்லை.அடுத்த அப்பொயின்மண்ட் 8வது வாரம் .நீங்கள் சொல்வதுபோல் 5வது வாரத்தில் அல்ராசவுண்ட் எடுக்கச்சொல்லவில்லையே.போய் கேக்க வேணுமோ?[பழைய இழையெல்லாம் படிச்சிட்டன்.நிச்சயமா இது புது சந்தேகம்தான்.]
சந்தேகம்2 மலச்சிக்கலுக்கு நீங்கள் பழைய இழைகளில் சொல்லி இருப்பது எல்லாம் படித்து அதன்படி நடந்தும் பலன் கிடைக்கவில்லை.புதுசா ஏதாச்சும் இருக்கா?
நான் செய்தவை- சீரகத்தண்ணீர்,முந்திரிவத்தல் ஊறவச்ச தண்ணீர்,ப்ருன் வத்தல்,1தடவை வாழைப்பழம்,அடுத்ததடவை ஆப்பிள், இவை எல்லாம் செய்து பாத்துட்டேன்.
ஆ இப்போதான் பார்த்தேன் அதிகாலை நாலரைக்கு எழும்பி சந்தேகம் கேக்கிறேனா?
நாளைக்கு வாரன்.

சுரேஜினி

கவி... வாழ்த்துக்கள். சுகப்பிரசவம் ஆக, முதல்ல தேவை நம்பிக்கை, தைரியம், மன அமைதி. இதை வர வெச்சுக்கங்க முதல்ல, அப்பரமா தான் சாப்பிடும் உணவு எல்லாம். மனசை சந்தோஷமா வெச்சுக்கனும். நான் அதை செய்யாம பிரசவத்தில் ரொம்ப கஷ்ட பட்டேன். அனுபவத்துல சொல்றேன்.... எந்த பிரெச்சனைனாலும் ஒரு 10 மாசம் தல்லி போடுங்க. நல்லா சாப்ட்டு நிம்மதியா இருங்க. நம்ம தோழிகள் சொல்றதை கேலுங்க. நல்லபடியா குழந்தை பிறக்க வாழ்த்துக்கள்.

சுரேஜினி.... மலசிக்கல் எதுக்கும் கேக்கலன்னா, டாக்டர்á பாருங்க. எனக்கும் இந்த பிரெச்சனை இருந்துச்சு, டாக்டர் ஒரு டானிக் தந்தர் இரவில் சாபிட. சாபிட்டா காலையில் பிரெச்சனை இல்லாமல் இருக்கும். கவலை படாதிங்க... நிறைய சந்தேக பட்டு குழப்பிக்காதிங்க. ;) உங்க டாக்டர் எப்போ ஸ்கேன் பண்ண சொல்றாங்களோ அப்போ பண்ணுங்க. ஊருக்கு ஊர் மாருபடும்.... கவலை வேண்டாம். ஒரு பெண்ணின் பிரெசவம் போல் இன்னொரு பெண்ணுக்கு இருப்பதில்லை, அதனால் உங்கள் உடம்புக்கு எது சரி என்று டாக்டர் சொல்கிறாரோ அப்படியே செய்யுங்கள். எல்லோரது ஆலோசனையும் கேலுங்கள், கூடவே வேண்டுமானால் இன்னொரு டாக்டரிடம் ஆலோசனையும் கேலுஙள். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு கவிசாரா,
தாயாகப் போவதற்கு முதலில் வாழ்த்துக்கள். பயப்பட வேண்டாம். தாய்மை என்னும் ஸ்தானம் கிடைக்க எவ்வளவு கஷ்டப்பட்டு விட்டு இப்ப பயப்படலாமா? உங்கம்மா பயந்திருந்தா நீ பிறந்திருக்க மாட்டே. கடவுள் யாருக்கும் தாங்கக்கூடிய வலியைத்தான் தருவார். மனதைரியம் இருந்தால் எதையும் சமாளிக்கலாம். குழந்தையின் சிரித்த முகத்தை மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தி பார். பயம் போய்விடும்:-)

சுரேஜினி,
இங்கெல்லாம் அப்படி அல்ட்ரா சவுண்ட் ஆரம்பத்தில் எடுப்பதில்லை. அது ஒரு பிரச்னையும் இல்லை.

மலச்சிக்கலுக்கு தினமும் கீரை, வாழைத்தண்டு, பீர்க்கங்காய், பீன்ஸ் சேர்த்துக் கொள். ஆரம்பத்தில் சில பேருக்கு அயர்ன் மாத்திரை எடுத்தாலும் அப்படி இருக்கும். அதை தவிர்க்க முருங்கைக்கீரை, பேரீச்சை எடுக்கலாம்.
எதற்கும் சரிவரலைன்னா ஒரு கிராமத்து வைத்தியம் இருக்கு. அதுதான் கர்ப்பிணிகளுக்கு கிராமத்தில் தருவார்கள். இரவு படுக்குமுன் உள்ளங்கையில் ஒரு அரை தேக்கரண்டி அளவு விளக்கெண்ணெய் விட்டு சாப்பிடணும். எந்த பிரச்னையும் இருக்காது. மலச்சிக்கலே வராது. குழந்தை பிறக்கும் வரை தருவார்கள். மாதம் முடிந்து பிரசவ நாள் நெருங்கியதும் உளுந்து வடை விளக்கெண்ணெயில் சுட்டு தருவார்கள். இப்பதான் எனிமா தருவதெல்லாம். அப்ப இந்த முறைதான் சிறந்த வைத்தியம்.
இது எனக்கு தெரிந்த எளிய முறை. பின்பற்றுவது உன் விருப்பம் தான்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஆமாம் செல்வி சொல்லும் மலசிக்கலுக்கு உரிய வைத்தியம் தான் என் அம்மா'வும் சொல்லுவாங்க. :) ஆனா எனக்கு சுத்தமான விளக்கெண்ணெய் கிடைக்கல :( . விளக்கெண்ணெய் தினமும் வயிற்றிலும் தடவனுமாம். அப்போ வயிரு நல்லா ப்ரீயா இருக்கும், டெலிவெரிக்கு நல்லதுன்னு சொன்னாங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்