தேதி: February 22, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மைதாமாவு -1கப்
சர்க்கரை -3/4கப்
ஏலக்காய் -2
சமயல்சோடா -1சிட்டிகை
எண்ணை -பொரிப்பதுக்கு தேவையான அளவு
ஏலக்காயை பொடிசெய்யவும்.
மைதாவுடன்,சர்க்கரை,ஏலக்காய்பொடி,சமயல்சோடா சேர்த்து தண்ணீர் ஊற்றி இட்லிமாவு பதம் கரைத்து 1/2மணி நேரம் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணை காயவைத்து ஊறவைத்த மாவை சிறிதளவு கையில் எடுத்து போண்டாவாக எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.