யாருக்கு அதி முக்கியத்துவம்??? அம்மாவுக்கா??? மனைவிக்கா???

கல்யாணம் ஆன பின்பு, யாருக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கணும்???... அம்மாவுக்கா??? மனைவிக்கா??? (ரெண்டு பேரும் முக்கியம்.... அதி முக்கியத்துவம்-னு கேட்டு இருக்கேன்....)... திரியை கொளுத்தி போட்டேன்.... பதில்கள் பட்டாசா வெடிக்கணும்... சரியா??? (என்னை மாதிரி ஆளுங்க, அன்பர்கள் என்ன நினைச்சு வச்சு இருக்காங்க-னு தெரிஞ்சுக்குற சுய நலம்-னு கூட இந்த திரியை சொல்லலாம்...)

என்றும் உங்கள் அருண் பிரசங்கி

ஹாய் அருண் நன்றாக இருக்கிறீர்களா? இது தான் நான் முதலில் உங்களிடம் பேசுவது.. உங்களின் மிகச் சில பதிவுகள் மட்டுமே படித்து இருக்கிறேன்... மிக நன்றாக சகஜமாக பேசுகிறீர்கள்... என்னைப் பொருத்தவரை, எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி பேசுவது ஒரு வரம்..வாழ்த்துக்கள்ங்க.
இந்த டாபிக் பற்றி ஏற்கனவே நிறைய பேசி இருக்காங்கன்னு நினைக்கிறேன்...திடீர்னு நீங்க கேட்டதால், கல்யாண ஏற்பாடு நடக்குதா உங்களுக்கு?..
வாழ்த்துக்கள்..

//(என்னை மாதிரி ஆளுங்க, அன்பர்கள் என்ன நினைச்சு வச்சு இருக்காங்க-னு தெரிஞ்சுக்குற சுய நலம்-னு கூட இந்த திரியை சொல்லலாம்...)//

சுத்தி வளைச்சு எல்லாம் யோசிக்காதீங்க... முதலில் நீங்களே ஆரம்பிக்கலாமே...

என்னைக் கேட்டா, உங்களைப் பற்றி ஏற்கனவே புரிந்து கொண்டு இருப்பவர் அம்மா, நீங்களும் அம்மாவைப் புரிந்து கொண்டு இருப்பீர். புதிதாய் வரும் மனைவிக்கு உங்களையும், உங்கள் தாயாரையும் புரிந்து கொள்ள சில காலம் ஆகலாம்.. அதேபோல், நீங்கள் முதலில் உங்கள் மனைவியை புரிந்து கொள்ள சில காலம் ஆகலாம். எடுத்த உடனே அதி முக்கியத்துவம்னு நினைக்க வேண்டாம்னு தோணுது... "நீ பிறரின் குணாதிசயங்களை கணிக்கத் துவங்கினால், அவர்பால் அன்பு செலுத்த நேரம் இல்லாமல் போகும்" நம்ம பொன்மொழிப் பக்கத்தில் தாங்க இருக்கு.. மென்மையான, நெருங்கிய உறவுகள் இந்த வரியை அடிக்கடி நினைத்துக் கொண்டாலே போதும்...
அன்பு செலுத்தனுமா, குறை கண்டுபிடிக்கனுமா இதில் ஒரு பதிலை செலக்ட் பண்ணினால் போதும்னு நினைக்கிறேன். அன்பு செலுத்தவே என் பொன்னான நேரத்தை ஒதுக்குவேன்னு முடிவு பண்ணிட்டு இருக்கையிலே, என்ன சொன்னாலும் குறை சொல்வதாய் தெரியாது... புரிந்து கொள்ளுதல் இருக்கும்.. ஈகோ சுத்தமா இருக்காது... அடுத்த தலைமுறையில் மாமியார் மருமகள் பிரச்சினையா அப்படி ஒன்னு இருக்கான்னு கேள்வி தான் வரும்...
நா ஏதும் அதிகப் பிரசங்கித் தனமா சொல்லி போர் அடிச்சிட்டேனா? தவறு இருப்பின் பெரும் மனது கொண்டு மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் என் பதிலை சொல்கிறேன் சகோதரர் என்ற உரிமைல.....

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

வாங்க ஆயிஸ்ரீ வணக்கம் வந்தனம்... நல்லா போகுது எல்லாமே... உங்களுக்கும் அப்படி தான்னு நம்புறேன்.. என்ன வரம் அப்படி இப்படி-னு சொல்றீங்க???..அப்படி எல்லாம் இல்லை... நம்மலா அடிச்சு விட வேண்டியது தான் ஆயிஸ்ரீ... சரி... நல்லது... நான் போட்டு இருக்கிறதே சில பதிவுகள் தான்.... ஆமாம்...இந்த தலைப்பில் ஏற்கனவே வந்து இருக்கா??? நானா பாக்கலையே... சரி சர்ச் பண்ணி பாக்குறேன்...

அப்புறம் கல்யாண ஏற்பாடா??? நம்ம அந்த விஷயத்துல தலையை விடுறது இல்லை... ஏன் என்றால் நம்ம மேல நமக்கே அக்கறை இல்லை ஆயிஸ்ரீ..சுத்த சோம்பேறி (பல்லு விலக்க கூட நமக்கு பேஸ்ட்-ஐ யாராவது வச்சு கொடுத்து, ஹெல்ப் பண்ணனும்...) .. அம்மா அப்பா இருக்காங்களே... அவங்க எல்லாம் பார்த்துக்குவாங்க... ம்ம்ம்ம்...

உங்கள் கருத்துக்களை பார்த்தேன்.... போர் எல்லாம் அடிக்கல நீங்க... நல்லா சொல்லி இருக்கீங்க.... வாஸ்தவமான பேச்சு....

எனக்கு பிடிக்காத ஒண்ணு, நீங்க கடைசியா கொடுத்து இருக்கிற விளக்கம்... தவறு.. மன்னிப்பு-னு.... என்ன என்னமோ சொல்லி இருக்கீங்க... ஆமாம் தப்பா தான் சொல்லி இருக்கீங்க???? இப்படி எல்லாம் கேட்டா நான் இப்படி தான் குதர்க்கமா சொல்லுவேன்..... அக்கறையா சொல்ற இடத்துல இப்படி விளக்கம் எல்லாம் கொடுக்க வேண்டாம் ஆயிஸ்ரீ... நீங்க சீக்கிரம் பதில் போடுங்க... கோவமா தான் இருக்கேன்... சொல்றதை எல்லாம் சொல்லி விட்டு.... மன்னிப்பு... கோவமா-னு கேள்வி வேறு..... நான் எதுக்கு தப்பா நினைக்கணும்????

அம்பி அருண் வம்புக்கு ஆள்தேடுறாப்ல.கிட்டத்தட்ட இதே தலைப்பு பட்டிமன்றத்தில் விவாதிக்க பட்டது.கொஞ்சம் பொறுங்கோ சாப்பிட்டுட்டு லிங் தேடித்தாரன்.

சுரேஜினி

போன பதிவுல நான் கேட்ட, சுரேஜினி-னா என்ன??? என்ற கேள்விக்கே பதிலை காணோம்... இதுல சுரேஜினி இப்போ இந்த பதிவோட பழைய மூலத்தின் லிங்கை அனுப்ப போறாங்களா??? ம்ம்ம்ம் நான் வம்புக்கு எல்லாம் ஆளுங்க தேடல... தெம்பான கருத்துக்களை தெரிஞ்சுக்க விருப்பபடுறேன்... ம்ம்ம்ம் தெளிவா சொல்லணும் என்றால் தாவணி கனவுகள் (1983) ஆமாம் பாக்யராஜ் நடிச்சு இயக்கிய படம்... சினிமா பேரடிசோ-னு (1989) -ல ஒரு உலக தர படம் வந்தது.... முந்தைய படத்தின் கதை தான்... பின் சொன்ன படத்தின் கதையும்.. அதற்க்காக நம்ம ஊரு பாக்யராஜை வெள்ளை காரன் காப்பி அடிச்சான்னு சொல்ல முடியுமா????.... ம்ம்ம்ம் அது போல... முந்தி பதிவை போட்டவங்க மாதிரி எனக்கும் தோணுச்சு போட்டேன்..... (டே அருண்னு.... சுரேஜினி விட்டா நீ உக்காந்தா குத்தம், நின்னா குத்தம்-னு சொல்லுவாங்க போல... கவனமா இருடா...)... ரொம்ப சீரியஸ்-ஆ பேசுறேனோ????...ம்ம்ம்ம்... அப்படி எல்லாம் இல்லை... எனக்கு என்ன-னா அம்பி-னு (அந்நியன் அம்பி) சொன்னதால தப்பு சொல்றவங்களுக்கு உண்மைய விளக்கணும்-னு ஆடோமடிக்-ஆ அப்படி கருத்துக்கள் வந்து விட்டது.... ஹி... ஹி....

அருண்... தெளிவா விளக்கம் வேணுமா?!! "திருமணத்துக்கு பின் ஒரு பெண்ணுக்கு 'அதி'முக்கியம் கணவனா, பெற்றோரா?!!" - இந்த கேள்விக்கு பதில் குடுத்தா உங்க கேள்விக்கும் பதில் கிடைக்கும். ஏன்னா நாங்களாம் பெண்கள்ன்னு ஒரு ஆண் நீங்க சந்தேகம் கேக்கறீங்க.... அப்போ எங்களுடைய இந்த சந்தேகத்துக்கு நீங்க தான் பதில் சொல்ல முடியும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

போச்சுடா, இப்பிடி ஒரு தலைப்பை பார்த்தும் நம்ம வனிதாப்பொண்ண காணோமேன்னு நினைச்சேன். வந்திட்டாங்கப்பா!
ரொம்ப சரி வனிதா, பெண்ணினத்தின் பிரதிநிதியே! இப்பிடி ஒரு கேள்வியக்கேட்டு புரட்சிப்பெண் நீங்கன்னு மறுபடியும் நிரூபிச்சிட்டீங்க!அசத்தலான கேள்வி!

அருண், இந்த கேள்வியை நீங்கள் பெண்களிடம் கேட்பதை விட, மாமியார்-மருமகள் கருத்து வேறுபாடு இல்லாத வீட்டில் உள்ள கணவர்/மகனைக் கேளுங்கள். அவர்தான் உங்களுக்கு நல்ல ஆலோசனைக் கொடுப்பார்.

அருண், இந்த கேள்வியை நீங்கள் பெண்களிடம் கேட்பதை விட, மாமியார்-மருமகள் கருத்து வேறுபாடு இல்லாத வீட்டில் உள்ள கணவர்/மகனைக் கேளுங்கள். அவர்தான் உங்களுக்கு நல்ல ஆலோசனைக் கொடுப்பார்.

பார்ரா.... நமக்கேவா???? வாங்க வனிதா.... ம்ம்ம்ம்... படிச்சேன்.. படிச்சேன்....எனக்கு விளக்கம் கிடைச்சு போச்சு... ஆமாம்.... மிஸஸ் ஹுசைன் கொடுத்த பதிலில் இருந்து தான்... அதுவும் அவங்க என்னை மாதிரி ஆளுங்களுக்கு இரு முறை அனுப்பினா தான் புரியும் என்று இரு முறை அனுப்பி இருக்காங்க... கேட்டுக்கிறேன் மிஸஸ் ஹுசைன்.... என்ன அப்படிப்பட்ட ஒரு கருத்து வேறுபாடு இல்லாத குடும்பத்தை நான் கண்டுபிடிக்கணும்... அதுக்கும் உங்கள் உதவி வேண்டுமே....சரி முதலில் நான் முயற்சி செய்து பாக்குறேன்... முடிய வில்லை என்றால் மீண்டும் பதிவு போடுவேன்.... ஆமாம் சொல்லிட்டேன்.... அப்புறம்....நம்ம ஊரு பக்கம்.. நாத்திகவாதிகள் சொல்லுவாங்க...பகுத்தறிவு என்றால் ஏன் எதற்கு எப்படி-னு கேள்விகள் கேக்கணும்-னு பெரியார் சொன்னதாக சொல்லுவாங்க.. ஆனா உண்மை அது இல்லை... கல் தோன்றி மண் தோன்றா காலத்தே சொல்லி விட்டாங்க...பாரத போரில்.... அர்ஜுனன் ஏன் எதற்கு எப்படி-னு கேள்விக்கு மேல் கேள்வி கேட்டார்... அதற்க்கு எல்லாம் கிருஷ்ண பரமாத்மா தெளிவாக.... அழகாக விளக்கம் கொடுத்தார்... அந்த சமயம் கிருஷ்ண பரமாத்மா, ரொம்ப கேள்வி கேக்காத அதிக பிரசங்கி, நீ போரில் சண்டை போட்டு முடி... அப்படி முடிச்சா உனக்கே தெரியும் விடை-னு மொட்டையா சொல்லி இருந்தா நமக்கு கிடைச்சு இருக்குமா..... தெளிவான விளக்கங்கள் நிறைந்த பகவத் கீதை....(பகுத்தறிவு என்பது என்ன??? இது எல்லாம் புரியாமல்... சரி போதும்... தாமரைச்செல்வி .. உமா எல்லாரும் இதை படிச்சு பார்த்து பாதியில் ஜூஸ் குடிக்க போறாங்க.... இன்னொரு பதிப்பில் போடுகிறேன்....ஆனா மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் நான் கேட்டு தெரிஞ்சுகிட்டது தான்...)

அது போல தான்... வனிதா சொன்ன கேள்வி கலந்த பதில்.... ம்ம்ம்ம்... கேள்வி கேட்டா... பதில் கேள்வி எப்பவும் விடையாக இருக்காது.... இருந்ததும் இல்லை.... இதற்க்கு சாய் கீதா லக்ஷ்மி ஆதரவு வேறு... ஐயோ நான் என்ன பண்ணுவேன்????.... விடை சொல்ல வேண்டிய ஆளுங்களே இப்படி என்கிட்டே கொக்கி போட்டா????... (அப்பாடி ஒரு வழியா ஏதோ சொல்லி சமாளிச்சுட்டேன்... டே அருண்னு எப்படி-டா?? தானா வருது கண்டுக்காத...ஹி... ஹி...)... எனி வே... மிஸஸ் ஹுசைன் கொடுத்த பதில்... தற்காலிகமாக போதும்...நல்லது... எதுவும் என்றால் மீண்டும் வருவேன்...ம்ம்ம்ம்...

இதெல்லாம் சமாலிக்கர வேலை.... உண்மையில் உங்கள் மனதில் உள்ல பதில் "கணவர் தான் அதி முக்கியம்". எனக்கு அம்மா முக்கியம், என் மனைவிக்கு நான் தான் முக்கியமா இருக்கனும்... சுயநலக்காறர்கள் நீங்கள்.

விடை தெரிந்தே கேள்வி கேட்டா, பதில் கேள்வி தான் விடை ஆகும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்