உருளைக்கிழங்கு மசால்கறி

தேதி: February 23, 2009

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

உருளைக்கிழங்கு - 2 (பெரியது)
சாம்பார்த்தூள் - 2 டீஸ்பூன்
தாளிக்க :
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கீற்று
உப்பு - தேவைக்கேற்ப


 

உருளைக்கிழங்கை நன்றாக கழுவி தோல் எடுக்காமல் அதை சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
ஒரு அகன்ற வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும்.
அடுத்து உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும். 2 நிமிடம் வதக்கியப்பின் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மறுபடியும் மூடிப்போட்டு நன்றாக வேக வைக்கவும். மிதமான தீயில் வைத்து சமைக்கவும்.
வேகவைக்கும் வரைத்தண்ணீர் தெளித்தே சமைக்கவும். 3 நிமிடம் கழித்து சாம்பார்ப்பொடி மற்றும் உப்பு போட்டு மறுபடியும் கிளறி மூடிப்போட்டு வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் இறக்கி வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

NAAN ITHAI SAIDHU PARTHEN.ROMBA NALLA IRUNDHUTHU.SAMBAR THUL PATHILA RED CHILLI POWDER POTALUM NALLA IRUKKUM.KADAISIYA MALLI THALAI POTAL MANAMA IRUKUM.
THANK YOU.

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த உருளைக்கிழங்கு மசாலாக் கறியின் படம்

<img src="files/pictures/aa308.jpg" alt="picture" />

சைனா மஹா...கிழங்கு மசாலாக்கறி செய்தேன் நன்றாக வந்தது, செய்யவும் சுலபமாக இருந்தது. ஆனால் என்னிடம் சாம்பார் பொடி இல்லை, நான் அதற்குப் பதில் கறித்தூள்தான் பாவித்தேன். குறிப்பிற்கு மிக்க நன்றி. படம் சரியாக இருக்கிறதா.

என் பதிலை விட, என் படம் ரொம்ப ஸ்பீட்:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்