தேதி: February 24, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சிக்கன் - ஒரு கிலோ
பாஸ்மதி அரிசி - 3/4 கிலோ
எண்ணெய் - 200 கிராம்
பட்டர் - 50 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
தயிர் - 1/2 லிட்டர்
ப்ரைடு ஆனியன் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை - ஒன்று
பட்டை - ஒரு சிறிய துண்டு
ஏலக்காய் - 3
கிராம்பு - 5
பிரிஞ்சி இலை - 2
ஷாகிஜீரா - 2 தேக்கரண்டி
கருப்பு ஏலக்காய் - 2
ஜாதிபத்திரி - சிறிதளவு
கொத்தமல்லி தழை - ஒரு கொத்து
புதினா - ஒரு கொத்து
குங்குமப்பூ (அ) ரெட் கலர் தூள் - சிறிதளவு
தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பொடி வகைகள் மற்றும் வாசனை பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ப்ரைடு ஆனியன் கடைகளில் கிடைக்கிறது. இல்லையெனில் பல்லாரி வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி அரை தேக்கரண்டி அரிசிமாவை அதில் தூவி கைகளால் நன்கு பிசறி எண்ணெயில் போட்டு பொன்னிறமானதும் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

சிக்கனை சுத்தம் செய்து கழுவி அதில் 50 மி.லி எண்ணெய், இஞ்சி பூண்டு விழுது, 2 பச்சை மிளகாய், தயிர், உப்பு, அரைத்த மசாலா பொடி, சிறிதளவு பட்டை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் சிறிதளவு உப்பு, 2 ஏலக்காய், ஒரு பச்சை மிளகாய், 2 கிராம்பு, ஒரு பிரிஞ்சி இலை, சிறிதளவு பட்டை, சிறிதளவு ஷாகிஜீரா ஆகியவற்றை சேர்த்து ஊற வைத்திருக்கும் அரிசியை போட்டு சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து அரை பதமாக வேக வைத்து வடித்து எடுத்துக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டர் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்த சிக்கன் கலவையை போட்டு 1 1/2 டம்ளர் (350 ml) தண்ணீர் ஊற்றி சிக்கனை சமப்படுத்தி விடவும்.

சிக்கன் கலவையின் மேல் வேக வைத்த சாதத்தை கொட்டி நன்கு பரப்பி விடவும்.

அதன் மேல் ப்ரைடு ஆனியன், மல்லி தழை, புதினா போன்றவற்றை சுற்றிலும் போடவும். கடைசியாக குங்குமப்பூவை பாலில் கரைத்து ஆங்காங்கே தெளித்து விடவும். கலர்பொடி என்றால் இருகலர் பயன்படுத்தலாம். கலர்பொடி சேர்ப்பது உடல்நலத்திற்கு நல்லதல்ல. அதனால் குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளவும்.

பாத்திரத்திலிருந்து நீராவி வெளியில் செல்லாதவாறு மூடி போட்டு கொள்ளவும். இதுப்போல் க்ளாஸ் மூடியில் ஆவி வெளியே செல்லாது. 1/2 மணி நேரம் மிதமான தீயில் வைக்கவும். இடையிடையே திறக்க கூடாது. ஸ்டீம் வெளியே சென்றால் சாதம் அடியில் பிடித்து விடும். (சாதரணமூடி என்றால் அலுமினியம் பாயில் போட்டு ஒட்டி விட்டு அதன் மேல் மூடி போடவும். அல்லது பாத்திரத்தை சுற்றிலும் சப்பாத்தி மாவை ஒட்டி அதன் மேல் மூடி போடலாம்.)

அரைமணி நேரம் கழித்து அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கி விடவும். இப்போது பிரியாணி தயாராகி இருக்கும். வெயிட் அதிகம் இல்லாத கரண்டியினால் சாதத்தை மெதுவாக பிரட்டி விடவும்.

சுவையான ஹைதராபாத் சிக்கன் பிரியாணி தயார். விரும்பினால் முந்திரி, திராட்சை, போன்ற நட்ஸ் வகைகளை பட்டரில் ப்ரை செய்து போடலாம். ஒரு சிலர் இன்னும் நிறைய வாசனை பொருட்கள் சேர்ப்பார்கள். இதில் கொடுத்துள்ளவை மற்றும் சேர்த்தாலே சுவை நன்றாக இருக்கும். கசூரிமேத்தி பவுடர் (வெந்தயக்கீரை பவுடர்) சிறிது சேர்த்தாலும் சுவைக் கூடும்.

அறுசுவை உறுப்பினரான <b> திருமதி. தனிஷா </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இந்த ஹைதராபாத் சிக்கன் பிரியாணி குறிப்பினை விளக்கப்படங்களுடன் செய்து காட்டியுள்ளார்.

Comments
வாவ்
வாவ் சூப்பர் பிரியாணி சூப்பர் குட்டி..அழகா சிரிச்சிருக்காங்க அஃப்ரா.
தனிஷா
சூப்பர் பிரியாணி.அஃப்ராவின் சிரிப்பு கொள்ளைஅழகு.
செல்வி
சவுதி செல்வி
தனிஷா,
சூப்பர்.இவ்வளவு நாளும் குறிப்பு கொடுக்காமல் அறுசுவையை ஏமாற்றிவிட்டீர்கள்.எங்களை எல்லாம் குறிப்பு கொடுக்கச்சொல்லி விட்டு,இப்படி அருமையான குறிப்பு எல்லாம் எங்கே வைத்திருந்தீர்கள்.தொடருங்கள்,நிச்சயம் இந்த வாரம் வெள்ளி இந்த பிரியாணிதான்,சேர்த்திருக்கும் சாமானை பார்த்தாலே ருசி அருமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.பாப்பாவும் சூப்பர்.நேரில் தான் தினமும் பார்க்கிறேனே!நானும் நம்ம ஊரு பிரியாணி செய்து அட்மினுக்கு அனுப்பி இருக்கிறேன்.எப்ப வரும் என்றுதெரியலை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
Super
ஹாய் தனிஷா
மிகவும் நல்லா இருக்கு பிரியாணி மற்றும் அஃப்ரா குட்டி , நான் ரொம்ப நாளா ஹைதரபாத் பிரியாணி செய்யவேண்டும் என்று எண்ணினேன் கண்டிப்பாக் செய்துப்பார்த்து பின்னுட்டம் அனுப்புவேன், மற்றும் ஷாகிஜீரா என்றால் பெருசீரகமா?
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
மஹா...
மஹா... கறுஞ்சீரகம்'னு நினைக்கிறேன் (Black cumin seeds / kala jeera / kashmiri jeera).
தனிஷா... குட்டியும் சூப்பர், பிரியாணி'யும் சூப்பர். நானும் செய்துட்டு சொல்றேன். அடுத்த முறை சிக்கன் வீட்டுக்கு வந்தா கண்டிப்பா உங்க பிரியாணி தான். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
தளி,செல்வி,ஆசியாக்க
தளி, செல்வி நன்றிப்பா
ஆசியாக்கா, இது எங்கள் திருமணமான புதிதில் இவர் நண்பர் வீட்டிற்கு பெங்களூர் சென்றபோது சாப்பிட்டோம். அவர்களிடம் செய்முறை கேட்டு கற்றுக் கொண்டேன். அன்று முதல் இதே செய்முறைதான் இன்றுவரை. ஆட்கள் அதிகமாகி விட்டால் நம்ம ஊர் முறைதான். எண்னெயில் பிர்ஞ்சி இலை போட்டுக் கொள்ளுங்கள் மறந்து விட்டேன். சாதிகா அக்காதான் அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க. தனிஷா குறிப்பு கொடுங்கனு.
ஆசியாக்கா, சாதிகா அக்கா, செல்விமா கொடுத்த ஊக்கத்தினால்தான் இந்த குறிப்பினை அனுப்பினேன். உங்கள் அளவுக்கு நான் எக்ஸ்பர்ட் கிடையாது.
வெளியிட்ட அட்மினுக்கு என் மனமார்ந்த நன்றி.
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
மஹா, வனிதா
மஹா ரொம்ப நன்றிப்பா. ஷாகிஜீரா என்பது சீரகம் போலவே ரொம்ப சிறியதாக இருக்கும். ஹைத்ரபாத் உணவுகளில் (பிரியாணி, புலாவ், குருமா) சேர்ப்பார்கள். கருஞ்சீரகம் இல்லை. caraway என்பது கொஞ்சம் பெரிதாக இருக்கும் கேக் செய்வதற்கு சேர்ப்பார்கள். கடைகளில் ஷாகி ஜீரா (Shahi jeera) அல்லது ஷாஜீரா (Sha jeera) என்றே கிடைக்கிறது. மஹா செய்து பார்த்து விட்டு சொல்ல்லுங்கள். ஷாகிஜீரா இதில் ரொம்ப முக்கியம். ஒரு ஸ்பூன் கூட சேர்த்தாலும் நன்றாக இருக்கும்
வனிதா உங்கள் பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றி. செய்து பார்த்து சொல்லுங்கள்.
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
ஆம் தனிஷா...
ஆம் தனிஷா... நானும் இப்ப தான் பார்த்தேன் அதை. வாங்கி செய்துடறேன். மிக்க நன்றி. caraway'னா ஓமம். சமோசா மாவுக்கு கூட சேர்ப்போம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
வனி அஜ்வன் (Ajwan seeds) என்றால்தான் ஓமம் என்று நினைக்கிறேன். நான் சொல்வது சரியா இதுபற்றி இன்னும் தெரிந்தவர்கள் கூறவும்
caraway க்கு தமிழ் பெயர் எனக்கு தெரியவில்லை. ஆனால் கேக் செய்வதற்கு யூஸ்பண்ணியிருக்கேன். கேக் நல்ல ஸ்மெல்லாக இருந்தது. வனி இந்த லிங்கை பாருங்கள்
http://images.google.com/images?hl=en&q=caraway&um=1&ie=UTF-8&sa=N&tab=wi
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
Yes ajwain / carom seeds is
Yes ajwain / carom seeds is omam. I donno whats caraway.... :( when i searched it looks like perunjiragam/sombu. but it cannot be. i will continue my research in "theriyaadha unavu porul" link. thanku thanisha.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹாய் தனீ..
முகப்பில் ஹைதராபாத் சிக்கன் பிரியாணின்னு இருந்தப்பவே உன்னுடையதாகதான்னு இருக்கும்னு நினைத்தேன்.சூப்பரா இருக்கு.அப்ரா குட்டியும் அழகு.நான் தான் ஏற்கனவே அப்ராவை பார்த்திருக்கேனே.கருப்பு ஏலக்காய்னா சாதரண ஏலக்காயா?.இதே மாதிரி வெஜ் பிரியாணி செய்லாம் தானே?ஏன்னா என் ஹஸ் என்னிகும் இல்லாத இந்த வருஷம் 45நாள் விரதமாம்.சோ அது வரை வெஜ் தான்.நான் ஒரு த்ரெட் ஆரம்பிக்க போறேன் பதில் போடுங்க.
ஹாய் தனிஷா,
ஹாய் தனிஷா,
அன்னிக்கே இந்த பிரியாணி ரெசிப்பி தந்தீர்கள்.நானும் வரும் வெள்ளி அன்று இந்த பிரியாணிதான் சமைக்கப்போகின்றேன்..வெங்காயம்,தக்காளி இல்லாமல் செய்யப்படுவது எப்படி இருக்கின்றது என்று செய்து பார்த்து விட்டு சொல்கின்றேன்.தொடருங்கள் தனிஷா.படத்துடன் கூடிய குறிப்புகளை இன்னும் நிறைய கொடுங்கள்.அஃப்ரா பல் தெரிய சிரிக்கும் படம் கொள்ளை அழகு.
ஸாதிகா
arusuvai is a wonderful website
தனீஷ்
அன்பு தனீஷ்,
முதல் குறிப்புக்கு வாழ்த்துகள். முதல் குறிப்பே அமர்க்களமா இருக்கு. தொடரட்டும். இதுக்கு நானும் ஒரு காரணம்னு சொல்லி இருக்கே. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்ரா குட்டி அழகா இருக்கா. ஜூனியர்ஸுக்கு வழி விட்டு சீனியர்ஸ் ஒதுங்கிடாலாம்னு நினைக்கிறேன்:-)
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
ஹாய் தனீஷா, அருமை!
ஹாய் தனீஷா,
தெளிவான படங்கள், எளிமையான ஸ்டெப்ஸ், முடிவில் அருமையான பிரியாணி! அதைவிட அசத்தல், அருமை - கொள்ளை அழகில் உங்கள் அன்பு மகள் அஃப்ரா.
அன்புடன்
சுஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
சிக்கன் பிரியாணி
மேனு உங்க பின்னூட்டத்திற்கு ரொம்ப நன்றிப்பா. கண்டிப்பா உங்க த்ரெட்டில் பதில் போடுவேன். இப்போ கொஞ்ச வேலை இருக்கு வந்து போடுறேன்
சாதிகா அக்கா செய்து பாருங்க. நல்லவரும். உங்களுக்கு என் நன்றிகள் பல.
செல்விமா என்ன ஜோக் எல்லாம் அடிக்கிறீங்க. சமையலை பொறுத்தவரை பெரியவங்க எப்பவுமே ஒதுங்க கூடாது. எங்களை மாதிரி சின்னவங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்காது. சோ வழிநடத்துங்க.
சுஸ்ரீ உங்க பின்னூட்டம் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இதுவரை உங்களிடம் பேசியதில்லை. இனி பேசுவோம். ரொம்ப நன்றிப்பா.
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
தனிஷா
பார்க்கவே மிகவும் அருமையாக இருக்கு…பிளேட்டில் எல்லாம் வைத்து இப்படி ஆசையை காட்டுரிங்க…ஒரு பிலேட் பார்சல் பிலிஸ்…சும்மா…தான் சொன்னேன்…இந்த வாரம் செய்யலாம் என்று நினைக்கிறேன்.
ஆனா எனக்கு இப்படி அடுப்பில் செய்வது என்றால் கொஞ்சம் பயம்…கொஞ்சம் அல்ல நிறைய பயம்..எங்கே அடிபிடித்து கொள்ளுமே என்று...ஏன் என்றால் இதுவரை ஒரு முறை கூட இப்படி சமைத்து ஒழுங்காக வந்த்தில்லை..என்ன செய்ய…பயமாக இருந்த்தாலும் ஆசை யாரைவிட்ட்து…இதனை எப்படியும் செய்து உங்களுக்கு பின்னுட்டம் கண்டிப்பாக கொடுப்பேன்..
உங்கள் குட்டி பாப்பா அழகாக இருக்கா…
அன்புடன்,
கீதா ஆச்சல்
அருமையான பிரியாணி
டியர் தனிஷா அருமையான பிரியாணி , அப்ராவின் பொக்கை வாய் சிரிப்பும் சூப்பர்
ஷாஜீரா தான் கார்வே என்று கேர்ஃபோரில் சொன்னார்கள்,
ஜலீலா
Jaleelakamal
கீதா,ஜலிஅக்கா
கீதா செய்து பாருங்க நல்லவரும். ஸ்டீம் வெளியே போனால் அடிபிடித்து விடும். ரொம்ப ஈஸி கீதா. ஒரு ப்ளேட் என்ன நிறையவே அனுப்பி வைக்கிறேன் நியூஜெர்ஸிக்கு. சரிதானே. தேங்க்ஸ் கீதா
ஜலிலாக்கா உங்க அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி. உங்க சமையலை எல்லாம் மிஞ்ச முடியாது. செம சூப்பரா கொடுப்பீங்க. ரொம்ப நன்றிக்கா
கேரிபோரில் தப்பா சொல்லியிருபாங்கனு நினைக்கிறேன் அக்கா. ஷாஜீரானே கிடைக்குது லூலூவில் பாருங்க.
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
ஹாய்
ஹாய் தனிஷா
ஒருவழியாக ஹைதராபாத் பிரியாணி இன்று வந்து சேர்ந்தது. தற்போது தான் சாப்பிட்டு முடித்த கையோடு பதிவு போடுகிறேன். கொஞ்சம் கீழே உள்ள சாதம் குழைந்ததுப்போல் இருந்தது தவிர சுவை உண்மையில் அருமை, . இன்று செய்தே தீர்வது என்ற முடிவுடன் களம் இறங்கி வெற்றியும் கிடைத்தது.அவர் நல்ல பாரட்டினார்
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China
மஹா
தேங்க்ஸ் மஹா. சிக்கன் பிரியாணி நல்ல வந்ததில் எனக்கு சந்தோஷம். மற்ற பிரியாணி போல் இல்லாமல் இது டேஸ்ட் வித்தியாசமாக இருக்கும். சாதம் குழையாமல் இருக்க. சூடாக இருக்கும் போதே மெதுவாக கிளறி வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும் நல்ல உதிர் உதிரா பார்க்கவே அழகா இருக்கும். அடிக்கடி செய்யுங்க மஹா உங்களுக்கு ரொம்ப சாதரணமாகி விடும்
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
சூப்பர்
வணக்கம் தனீஷ்,
உங்கள் குறிப்பு உங்கள் அன்பு மகள் அஃப்ரா போல மிகவும் நன்றாக இருந்தது.
தியாகு
ஹாய் தனிஷா!
ஹாய் தனிஷா!
இப்பதான் இந்த குறிப்பினை செய்து சாப்பீட்டு வர்றேன். ரொம்ப சூப்பரா இருந்தது.வீட்டில் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. விளக்கமாவும் கொடுத்து இருந்ததால் ரொம்ப ஈஸியா இருக்கு செய்வதற்கு! ரொம்ப நன்றி தனிஷா!
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி
இந்த குறிப்பினை பார்த்து திருமதி. சாதிகா அவர்கள் தயாரித்த ஹைதராபாத் சிக்கன் பிரியாணியின் படம்
<img src="files/pictures/aa238.jpg" alt="picture" />
நன்றி அக்கா
சாதிகா அக்கா குறிப்பினை செய்து பார்த்து போட்டோ அனுப்பியதற்கு மிக்க நன்றி. பார்க்கவே அழகா இருக்கு. டயட்டில் இருக்கேன் ஆசையை தூண்டுறீங்க.
கீதா நீங்க சமைத்தேன் என்று மெயில் பண்ணியிருந்தீங்க. இப்போதான் பார்த்தேன் உங்க பின்னூட்டத்தை. ரொமப் நன்றி கீதா. டேஸ்ட் எல்லோருக்கும் பிடித்தது மகிழ்ச்சி
தியாகு உங்க அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
தனிஷா
தனிஷா,
நான் இதுவரை சிக்கன் பிரியாணி செய்ததில்லை.உங்கள் பிரியாணியை பார்த்துத்தான் செய்ய வேண்டும் போல் உள்ளது.படத்த பார்த்தாலே சாப்பிட வேண்டும் போல் உள்ளது.எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் அரிசி பாதி வெந்த பின் தான் சிக்கன் உடன் சேர்த்து கவர் பண்ணி வேக வைக்கிறீர்கள்.அதுவும் மிதமான தீயில். சிக்கன் அவ்வளவு குறைந்த நேரத்தில் வெந்து விடுமா?.தயவு செய்து பதில் தரவும்.
நன்றி.
வாசு
Vasu
ஹாய் வாசு
சிக்கன் கண்டிப்பா வெந்து விடும். அதில் சந்தேகம் வேண்டாம். ஆனால் ஸ்டீம் வெளியே போகக் கூடாது. போனால் அடியில் பிடிக்க ஆரமித்து விடும். அரிசி 50% வெந்தால் போதும். ரொம்ப வெந்தபின் போட்டால் உதிராக இருக்காது பிரியாணி. செய்து பார்த்து எப்படி வந்தது எனக்கூறுங்கள் வாசு. வேறு சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள்
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
நன்றி தனிஷா
தனிஷா ரொம்ப சந்தோசம் உடன் பதில் கிடைத்ததற்கு. கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லிறேன்.Many thanks.
வாசு
Vasu
தனிஷா
தனிஷா
எனக்கு ஒருநாள், பிறியாணி செய்யும் ஆசை வந்தது. ஓடிவந்து தேடினேன். உங்கள் பிறியாணிதான் பொருத்தமானதாக இருந்தது. கிட்டத்தட்ட 3 கிழமையின் முன்பு. உங்களை நினைத்தபடியே செய்தேன். அன்று தும்மியிருக்குமே உங்களுக்கு. நான் யாருடைய குறிப்போ, எதுவோ, எது செய்தாலும் அவர்களை நினைத்துக்கொண்டே செய்வது வழக்கம். பின்னர் பின்னூட்டம் கொடுக்கலாம் எனத் தேடினேன். பெயரை மறந்துவிட்டேன். கண்டு பிடிக்க முடியவில்லை. இன்றுதான் கண்டுபிடித்தேன்.
பிரிஞ்சி இலை, ஷாகிஜீரா, கருப்பு ஏலக்காய், ஜாதிபத்திரி, குங்குமப்பூ இவை அனைத்தும் சேர்க்கவில்லை. ஏனையவை சேர்த்தேன். நன்றாக வந்தது. அனைவரும் விரும்பிச் சாப்பிட்டோம். நான் கொஞ்சம் மிளகாய்த்தூள் அதிகம் சேர்த்தேன், அதனால் கலர் அதிகமாக இருந்தது.
மகள் அழகாக இருக்கிறார். கள்ளங்கபடமற்ற மழலைச் சிரிப்பு.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
அதிரா
ரொம்ப நன்றீ அதிரா. ஆமாம் அன்று முழுவதும் ஒரே தும்மல். நினைத்தது யாரோ நீதானா... அதிரா அடுத்த முறை இவை அனைத்தும் சேர்த்து செய்து பாருங்கள். சூப்பராக இருக்கும்.
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
Thanisha
Hi sister, today dinner unka biriyani than sema taste.. ennoda husband rompa virumpi saaptanka. ..........I like it very much. . Thank you for sharing the recipe. .