தோழிகளே உங்களுக்குத் தெரிந்த வெஜ் ரெஸிபி சொல்லுங்க...

ஹாய் தோழிகளே அனைவரும் நலமா?
நாளையிலிருந்து ஏப்ரல் 11ந்தேதி வரை எப்பவுமில்லாமல் என் ஹஸ் இந்த வருஷம் புதுசா 45நாள் விரதமிருக்கப் போறார்.சோ ஆடு,கோழி,மீன் எல்லாம் பொழைச்சு போகட்டும்.அதுவரை எங்க வீட்ல வெஜ் தான்.என்னை நான் வெஜ் சாப்பிட சொல்றார் ஆனால் நான் ரொம்ப பெறுமையா நானும் உங்ககூட சேர்ந்து விரதமிருக்கேன்னு சொன்னேன்.அப்படியே மனுஷர் ரொம்ப சந்தோஷப்பட்டார்[ஆனால் என் மனசுக்குள்ள ஒரே கஷ்டமா இருக்கு.எப்படி இருக்க போறோம்னு,நானே சரியா நான் வெஜ் சாப்பிட மாட்டேன் இப்ப அதுக்கும் பஞ்சம் வந்துடுச்சு].அதாவது என்ன விரதம்னா நாளையிலிருந்து கிறிஸ்தவர்களின் தவக்காலம் ஆரம்பிக்குது அதான் என் ஹஸ் விரதம்.

ஒ. கே பாயிண்டுக்கு வரேன்.இப்ப எனக்கு ஒரே குழப்பமாயிருக்கு.அந்த 45 நாளும் என்ன வெஜ் சாப்பாடு செய்றதுன்னு.நைட்ல டிபன்.அதனால் உங்களுக்கு தெரிந்த வெஜ் ரெசிபி பெயர் சொல்லுங்க.எனக்கும் ஈஸியா இருக்கும் சமையல் செய்றதுக்கு.உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.அனைவரும் வந்து பதில் போடுங்கப்பா...

மேனு நானும் வீராவும் இந்த வருஷம் ஆரம்பத்தில் இருந்து சொல்ல போனால் ஜனவரி 5 க்கு அப்புறம் வெஜ் மட்டும் தான் சாப்பிடுறோம் நான் லஞ்ச் கொடுக்கலைன்னா வீரா ஆபிஸ் கேஃபடீரியாவில எதாவது சாப்பிடுவார் :(( நான் அருசுவை பார்த்துதான் எல்லா வெஜ் ஐட்டமும் சமைக்கிறேன். போன வாரம் பிரிட்ஜ் காலி அதனால் அதிகம் சமைக்கலை. இந்த வாரம் பாருங்க அசத்திடோமில்ல :))

அதிராவும் இப்ப வெஜிடேரியன் தான் சாப்பிடுறாங்க. இது ஒன்னும் கஷ்டமில்லை. எனக்கு எப்படியும் இந்தியா போனா இருக்குது.. அதனால் இப்ப கறி மீன் எதுவும் சாப்பிடலை வெறு முட்டை மட்டும் சேர்ப்பேன்.

எனக்கு பொதுவாவே நான் வெஜ் ஸ்மெல் பிடிக்காது யாராவது சமைத்து கொடுத்தா சாப்பிட பிடிக்கும் ஹோட்டல் மாதிரி . இப்ப எனக்கு கொஞ்சம் கொஞ்சமா அந்த கிரேவிங் போகுது.

இப்ப லெந்த் டைம் அதனாலும் பலரும் தங்களுக்கு பிடிச்சதை விடுவாங்க. இங்க யூ எஸ் ல எல்லாரும் இன்டெர்னெட் விடுறாங்க :))

"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எப்படியிருக்கிங்க?ப்ரேக் பாஸ்ட்லாம் முடித்தாச்சா?.நானும் இந்த சாக்கில வெயிட் குறைச்சுக்கலாம்னு பார்க்கிறேன் அதான் என் ஹஸ்கிட்ட நானும் உங்க கூடவே விரதமிருக்கேன்னு சொல்லிட்டேன்.
எனக்கு என்னனென்ன சமைக்கலாம்னு ரெசிபி பெயர் சொல்லுங்கப்பா.அப்பதான் எனக்கும் சமைக்க ரொம்ப ஈஸியா இருக்கும்.அதிராவும் வெஜ் சாப்பாடு தானா?

ஹாய் மேனகா,

எப்படி இருக்கீங்க? முதலில் விரதத்துக்கு என் வாழ்த்துக்கள்.என் ஹஸ் போன வருடம் ஐயப்பன் சுவாமிக்கு 40 நாள் விரதம் இருந்து இந்தியாவிற்கு கோவிலுக்கு
போய்டுவந்தார். அந்த 40 நாள் சைவம்தான் (எனக்கும் அசைவம் தன் பிடிக்கும் என்ன பண்றது சுவாமி விரதம் அசே.., )சரி நான் விஷ்யத்துக்கு வரேன். நான் நம்ம
அறுசுவையில் வெஜ் ஐட்டம் பார்த்துதான் செய்தேன்.

நீங்களும் பார்த்து பண்ணுங்க.... ஒகே..:-)..

என்றும் அன்புடன்,
மைதிலிபாபு.

Mb

ஆயிரக்கணக்கா வெஜிடேரியன் ரெஸிபி இருக்கு இப்படி என்னைக்கேக்கலாமோ??!!!! எனக்கு பிடிச்சது பல எண்ணை கத்தரிக்காய்/பருப்பு கீரை/சன்னா மசாலா/வெஜிடபிள் பிரியாணி/ராய்தாஸ்/பச்சடிஸ்/புளிகுழம்புஸ்/மசாலாஸ் . என்ன காய் ஃப்ரெஷா இருக்கோ அதை வாங்கி அப்புறம் என்ன கரி செய்வதுன்னு யோசிச்சுகோங்க

"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நான் நலம்,நீங்களும் உங்க குட்டீஸ்களும் நலமா?உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றிப்பா.நானும் குரிப்புகளை அறுசுவை பார்த்து தான் செய்வேன்.சில நேரம் அறுசுவை பழிவாங்கிடும்.நெட் ரொம்ப ஸ்லோவா இருக்கும்.ரெசிபி பெயர் சொன்னால் இப்பவே பார்த்து வைத்தால் சமைக்க ஈஸியா இருக்கும்.ஒப்பன் ஆகலனாலும் கவலையில்லை.அதான்பா கேட்டேன்.

குட் கேர்ள்.ரெசிபி பெயர் சொல்லிருக்கிங்க.எனக்கு ப்ரெஷ் காய் என்ன கிடைக்கும்னா குடமிளகாய்,கத்திரிக்காய்,கோஸ்,கேரட்,பீன்ஸ்,உருளை,கீரை இதான் கிடைக்கும்.தமிழ்கடைக்கு போனால் ஒரு சில காய் போக மீதிலாம் ப்ரீசரில் வெட்டி வைத்துடுவேன்.
ஆமாம் என்னை ஏன் பேட்கேர்ள்ன்னு சொன்னிங்க??.நானும் இனி டெய்லி என்ன செய்தேன் என்று இந்த த்ரெட்ல போடுறேன்.மத்தவங்களுக்கு உதவுமில்லையா அதான்.

மேனு உங்களை பேட் கேர்ல் சொல்லலை. ரொம்ப மோசம் என்றேன் :)) நேத்து நான் பருப்புகீரை வாழைக்காய் பொரியல் . இன்னைக்கு கோதுமை மாவு வாங்கனும் வாங்கினால் முள்ளங்கி பராத்தா மற்றும் நவரத்ன குருமா + லஸ்ஸி . ஒரு பிளான் தான் இதுக்குன்னு மண்டை உடையாம இருக்கணும்ன்னா முதலிலே யோசிச்சா பிரச்சனை இல்லை . இல்லைனா சமைச்சு முடிக்கறவரை ஒரு குழப்பம் இருக்கும்
"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இதே மாதிரி தினமும் நீங்க என்ன செய்யப் போறிங்கன்னு சொன்னா எனக்கு வேலை ஈஸியா இருக்கும்.இந்த மண்டை உடைக்கிற பிரச்சினைல இருந்து நான் தப்பித்துக்கிறேன்.எனக்குப் பதிலா நீங்க நல்லா மண்டையகுடைஞ்ச்சி எனக்கு யோசனை சொல்லுங்க.அப்ப நீங்க இன்னும் வெரி குட் கேர்ள் ஆகிடுவீங்க.[நீங்க அடிக்க வரதுக்குள்ள நான் ஓடிடுறேன்.பதிவு போட்டு வைங்க,வந்து பார்க்கிறேன்]சும்மாதான் இலா நீங்க என்னை பேட்கேர்ள்னு சொல்லமாட்டீங்கன்னு தெரியும்.

இலா உண்மையாவே craving போயாச்சா இல்ல எதோ ஒரு படத்தில் வர மாதிரி ஒரு சீக்கு கோழியின் படத்தை கண்ணில் படற மாதிரி வைத்து veg dishes சாப்பிடறீங்களா? :-))

//இலா நீங்க என்னை பேட்கேர்ள்னு சொல்லமாட்டீங்கன்னு தெரியும்//-முடியல மேனகா முடியல.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

சொன்னா நம்ப மாட்டாங்களே!!!! தாய் ரெஸ்டாரன்ட்லே ( ரொம்ப பிடிச்சது) வெஜிடேரியன் சாப்பிட்டாச்சு அப்புறம் என்ன ...

மேனு!!! மக்கள் எல்லாம் ரொம்ப தான் ஸ்மார்ட்....

"Eliminate the time between the idea and the act."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்