அறுசுவை தோழிகளுடன் பாகம் 2

அங்கே முதல் பாகத்தில் பதிவுகள் 131 வந்துடுச்சு. அங்கேயே மீண்டும் தொடர்ந்தால் படிக்க கஷ்டமா இருக்கும்னு பாகம் 2 ஆரம்பிச்சுட்டேன். எல்லாருக்கும் இங்கே பதில் போட்டிருக்கேன்.

அஸ்மா நீங்க வந்தது எவ்வளவு சந்தோஷமா தெரியுமா இருக்கு. என்ன நீங்க , உங்களைப் போய் நாங்க கோச்சுக்குவோமா. நீங்க வீடு கட்டி நல்லபடியா கிரஹபிரவேசம் நடத்தினதே மகிழ்ச்சியா இருக்கு. சும்மாவா சொல்லி இருப்பாங்க, கல்யாணம் பண்ணிப் பாரு, வீட்டை கட்டிப்பாருன்னு. இப்ப உங்களுக்கு அதில் பிஎச்டி பண்ண அளவுக்கு அனுபவம் வந்திருக்கும். இப்போ உங்க உடல்நிலை எப்படி இருக்கு? உடல்நலனை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் கணக்கு அறிவினைப் பார்க்கும்போது எனக்கு பத்தாவதில் மேத்ஸ் எடுத்த குல்தீப்ஜான் மிஸ்ஸை நினைத்துக் கொள்வேன். மிகவும் எளிமையாக அதே சமயம் தெளிவாக பாடம் நடத்துவார்கள்.ப்ளஸ் டூவில் முதல் முறையா தூக்கம் வரவழைத்த மேத்ஸ் டீச்சர் வந்தப்பதான் அவங்க அருமையெல்லாம் புரிஞ்சுது.

என்னோட பிரெண்ட்ஸ் கூட ஒரே இடத்தில் பேச போன பாகம் ரொம்ப நல்லா இருந்துச்சு. லேட்டா பதில் போட்டா யாரும் கோச்சுக்காதீங்க. ப்ளீஸ். எப்படியாவது பெண்டிங்கில் இருக்கற கொஞ்சம் கேள்விகளுக்கு பதில் போடணும்னு பாக்கறேன். வேலை எக்கச்சக்கமா இருக்கு. கண்ணைத் திறந்துக்கிட்டே தூங்க வழி இருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். ஆபிசில் பிசியைப் பார்க்கற மாதீரி நேரா உட்கார்ந்துக்கிட்டே தூங்கிடலாம்.ம் . இதெல்லாம் எவனு(ளு))ம் கண்டுபிடிச்சா நோபல் ப்ரைஸ் தரலாம் ( நிச்சயம் வேலைக்குப் போற எல்லாரும் ரெகமெண்ட் பண்ணுவாங்க).

ஹாய் மஹா, எப்படி இருக்கீங்க? உங்க பதில் பார்த்து ரொம்ப சந்தோஷம். நான் கும்பகோணம்தான். நாகர்கோவில் சைடில் உறவினர்கள் கூட கிடையாது. பிரெண்ட்ஸ்தான் இருக்காங்க. அப்பாவும், அம்மாவும் கூட நாகர்கோவில் இல்லை. என் கணவர் டாக்டர்தான். அதனால்தான் நீங்க இந்த பெயர் தெரியும் என்று சொன்னதால் அது பொதுவான பெயர் என்று சொன்னேன். சீன மக்கள் எப்படி? நல்லா பழகுறாங்களா? நம்ம அட்மினுக்குதான் சீனா ரொம்ப பிடிச்ச நாடு. முன்பு ஒரு முறை சொல்லி இருக்கார்னு நினைக்கிறேன்.

ஹாய் தேவா

எப்படி நான் எதிர்பார்க்கவேயில்லை உடனடி பதில் (பதில் லேட்டான யாரும் கோபித்துக்கொள்ளவேண்டாம் என்று என்னை கூறியது போல் இருந்தது)
அப்படியா சீனா என்றால் பாபு அண்ணாவிற்க்கு பிடிக்குமா எனக்கு தெரியாது கேட்டுக்கொள்கிறேன். அதன்பிறகு நான் சீனாவைப்பற்றி எனற பதிவு அரட்டை பகுதி 55 2 ஆவது பகுதியில் போட்டு இருக்கிறேன் முடிந்தால் போய் படித்துப்பார்த்து பதில் போடுங்கள். நீங்கள் ஆஸ்திரேலியாவில் இருக்கிறீங்க உங்களுக்கு 1 பையனா என்னப்பண்ணுகிறார்.
எனக்கு ஒரு மகன் யுவன்ராஜ், 2 வயது முடிந்து உள்ளது.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

சீதாலக்ஷ்மி மேடம், எப்படி இருக்கீங்க? உங்க குடும்பத்தில் அனைவரையும் மிகவும் விசாரித்து எழுதினதாக சொல்லுங்கள். உங்களை நினைச்சாலே உங்க தன்னடக்கமான தோற்றம்தான் ஞாபகம் வருது. பார்த்தவுடனே பிடிச்சிடுச்சு. வீட்டில் ஒருத்தவங்க மாதிரி ரொம்ப நெருக்கமா தோணுச்சு. அட்மினும் உங்களைப் பத்தி போன வாரம் சொன்னப்ப, கொஞ்சம் கூட அலட்டலே இல்லாதவங்க. நானே அவங்க இப்படி நல்லா பேசுவாங்கன்னு எதிர்பார்க்கலன்னு சொன்னாங்க. எல்லாரும் சொல்லி எனக்கும் உங்களைப் பாக்க ஆசையா இருக்கு. உங்க மருமகளும் நீங்களும் அம்மா பொண்ணு மாதிரி இருக்கீங்க. உங்க பேமிலியில் எல்லார்கூடவும் பேசவும் ஆசையா இருக்கு. ஏன் இப்பலாம் நீங்க அடிக்கடி வருவது இல்லை? நீங்க சொல்ற மாதிரி இந்தப் பதிவு ஆரம்பிச்சப் பிறகு ரொம்ப நாளா பேசாமல் போனவங்ககிட்ட ஒரே இடத்தில் பேச ரொம்ப சந்தோஷமா இருக்கு. நானும் உங்களை மாதிரியே ஹேமாவை ரொம்ப எதிர்பார்த்தேன். ரஸியா, ஜுலைஹா, கதீஜான்னு எல்லார்கூடவும் பேச ரொம்ப பிடிக்கும். ரொம்ப நாள் பழகின தோழிகளைப் போல பேசுவாங்க.

தேவா மேடம்
இவர்களைப்பற்றிதான் முன்பே நான் கேட்டேன்

//எனக்கு ஷமீமான்னு ஒரு பிரெண்ட் நாகர்கோவிலில் இருக்காங்க. உங்க ஊர் பக்கம்தானே? அவங்க ஹஸ்பண்ட் பேர் Dர். முகமது ஜாபர். உங்களுக்கு தெரியுமான்னு சொல்லுங்க. அவங்க கசினும் ( Dர். அபுபக்கர் & அவங்க ஒய்ப் ஆயிஷா) கூட எனக்கு நல்ல பிரெண்ட். ஆனால் என் காலேஜ் பிரெண்ட்ஸ் தவிர மத்த எல்லாருக்கும் நான் சித்ரான்னு சொன்னாதான் தெரியும். தெரிஞ்சா சொல்லுங்க//

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ஹாய் அஸ்மா
எப்படியிருக்கிறீங்க?உங்கள் நீண்ட பதிவினைப்பார்த்தேன். உங்களால் எங்களை எல்லாரையும் கூப்பிட முடியாமல் போனதே என்ற ஆதங்கம் எல்லாம் அதில் வெளிப்பட்டது, பராவயில்லை நல்லபடியா பால்காய்ப்பு நடந்ததே அதுவே மிகவும் சந்தோஷ்ம் எல்லாம் கடவுள் செயல் எவ்வாறு நடக்கனும் என்று அவர் தீர்மானித்தபடி தான் நடக்கும், எங்க வீட்டு பால்காய்ச்சும் போது என் கணவர் வரமுடியாமல் அவருக்கு லீவ் கிடைக்கவில்லை அதை நினைக்கும் போது நான் மிகவும் வருத்தப்பட்டென், ஆனால் வந்தவர்களை கவனிக்க வேண்டும் என்று சங்கடத்தை மாற்றிக்கொண்டேன் , அது தனி கதை அத விடுங்க , சரி எப்போது ஹாங்காங் வரீங்க?

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

சாரி மஹா. இப்பதான் உங்க கேள்வியை நான் தெளிவா புரிஞ்சுக்கிட்டேன். அவங்க ரெண்டு பேமிலியும் நாகர்கோவில்தான். என் ஹஸ்பண்ட் கூட வேலைப் பார்த்தவங்க. இப்ப காண்டாக்ட்ஸ் இல்லை. உங்களுக்கு இவங்களைத் தெரியுமா. ரெண்டு பேருமே வெளிநாட்டில்தான் (மால்தீவ்சில்) இருந்தாங்க. அங்கேதான் எல்லாரும் பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தோம். என் பேர் சித்ரான்னு சொன்னாதான் தெரியும்னு சொன்னேன். ஏன்னா என்னை எல்லாரும் அந்த பேரில்தான்( ஆபிஸ், ஸ்கூல் தவிர) கூப்பிடுவாங்க. என் பையனுக்கு 4 வயசு. Pre School போறான். உங்க செல்லம் யுவராஜ் என்ன பேசறார்? நிறைய கேள்வியா இனி கேட்பாங்க. பதில் சொல்லி நமக்கு மாளாது. ஆனாலும் அவங்க மனசில் ஒவ்வொரு விஷயமும் எப்படி திங்க் பண்றாங்கன்னு யோசிக்க நல்லா இருக்கும்.

இல்லை.உங்களை கோச்சுப்பீங்கன்னு சொல்லல. பொதுவா நான் இப்பலாம் லேட்டாதானே ரிப்ளை பண்றேன். என் பதிவுக்கு அவங்களாம் உடனடி பதில் கொடுக்கும்போது நான் மட்டும் கொடுக்காம இருக்கறது வருத்தமாதான் இருக்கு. அதனாலதான் பொதுவா ஒரு முறை மன்னிப்பு கேட்டுக்கிட்டேன்.

ஹாய் விஜி, எப்படி இருக்கீங்க? என்ன விஜி இப்படி சொல்றீங்க? எனக்கு தப்பா எழுதினாலும் விடாம தமிழில் எழுதறவங்களை ரொம்ப பிடிக்கும். தளிகாவை ரொம்பப் பிடிக்கும் இந்த விஷயத்தில். முன்பும்கூட உங்க தமிழ் ஒண்ணும் அத்தனை பிழை இல்லையே. படிச்சு புரிஞ்சுக்க முடிஞ்சா அதுவே நல்லா இருக்கும். உங்க தமிழ் முன்பைவிட ரொம்ப நல்லா இருக்கு. சிலர் தமிழில் எழுதறேன்னு ஒண்ணுமே புரிஞ்சுக்க முடியாது. அப்பவும் கூட அவங்க ஒரு முறை படிச்சுப் பார்த்தால் போதும். நிச்சயம் அடுத்த முறை தப்பில்லாம எழுதுவாங்கன்னுதான் சொல்வேன்.

என்னை ரொம்ப புகழ்ந்துட்டீங்க. அப்படிலாம் நான் எதுவும் அதிகமா எழுதறதே இல்லையே. நான் சமையலில்தான் எக்ஸ்பர்ட்னு எல்லாரும் சொல்வாங்க. ஏன்னா 10 வயதில் வீட்டில் சும்மா ஜாலிக்கு சமைக்க ஆரம்பிச்சு அது எனக்கு பிடிச்ச ஹாபியா மாறிப் போச்சு. நான் எப்படி அழகுக்குறிப்பு திசைக்கு மாறினேன்னு எனக்கே ஆச்சரியமா இருந்துச்சு. போன வாரம்கூட யோசிச்சுப் பார்த்தேன். இப்படி அழகுக்குறிப்பு அதிகம் எழுதறதால எனக்குத் தெரிஞ்ச பல நல்ல சமையல்களை என்னால எழுத முடியாமப் போயிடுச்சு. பல நாடுகளின் ரெசிப்பியையும் நல்லா தெளிவா எழுதணும்னு நினைப்பேன். அட்மின்கிட்ட நான் முதல் மெயில் சொன்னதே, எனக்கு எல்லாரும் சமைக்கற மாதிரி ஈசியா சமையல் குறிப்புகளை எழுதி அனுப்பணும்னு ஆசைன்னு. இன்னைக்கும் இங்கே என் பிரெண்ட்ஸ் என்கிட்ட சமையல் குறிப்பு கேட்டுக்கிட்டேதான் இருப்பாங்க. வீட்டில் எல்லாருக்கும் நானே அழகு விஷயங்களை செய்ய செய்ய அதுவே பழக்க மாயிடுச்சு. என் அறிவு எல்லாமே எக்ஸ்பீரியன்ஸ் மூலம் வந்தது மட்டும்தான். படிச்சது இல்லை. எனக்குத் தெரிஞ்சதை சொல்லப் போய் அந்தப் பகுதியிலேயே நான் தொடர்ந்து எழுதற மாதிரி ஆயிடுச்சு. இப்ப அது பிடிச்சும் இருக்கு. ஆனால் இன்னும் சமையல் குறிப்பு அதிகம் எழுதாதது வருத்தம்தான்.

உங்க தங்கைக்கு என்ன வயசு? ஏன்னா ரிங்கிளில் ரெண்டு வகை பொதுவா இருக்கு. ஒண்ணு 30+ ல வர்றது. இன்னொண்ணு நம்ம பழக்கத்தால் வருவது. அதாவது முகத்தை எப்பவும் ஒரு மாதிரி சுருக்கி பார்ப்போம். சிலருக்கு விரலால் ஒரே இடத்தை அழுத்தமா தேய்த்து விடற பழக்கம் இருக்கும். சிலருக்கு வெயிலில் செல்லும்போது சரியான லோஷன் போடாட்டி சுருக்கம் வரும். கண்களை சுருக்கிக் கொண்டு கம்ப்யூட்டர், டிவி பார்ப்பது சிலருக்கு பழக்கமாக இருக்கும். இப்படி செய்வதால் அந்த இடங்களில் சுருக்கம் ஏற்படும். சிலருக்கு வாயில் உதடுகளுக்கு பக்க வாட்டில் மட்டும் ஒரே ஒரு லைன் போன்று சுருக்கம் இருக்கும். இவர்கள் முகத்திற்கு நல்ல லோஷனோ அல்லது பேபி ஆயிலோ ( அல்லது வைட்டமின் ஈ ஆயில்) போட்டு மேல் நோக்கி மசாஜ் செய்தால் சுருக்கத்தை நீக்கலாம். வெண்ணெய் மட்டும் தடவினால் கூட நல்ல பலன் கிடைக்கும்.அந்த முகம் சுருக்கிப் பார்க்கும் பழக்கத்தையும் கவனித்து மாற்ற வேண்டும். 30+ சுருக்கம் என்றால் Anti Age Treatment கென்றே பிரத்யேகமாக உள்ள ஆண்ட்டி ரிங்கிள் க்ரீம்களை வாங்கி பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

எப்படி இருக்கீங்க?என்னை ஞாபகம் வைத்து கேட்டதற்க்கு நன்றி மேடம்.உங்க அனுபவமான பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்.மேடம் உங்களுக்கும் ஒரு ஹாய்!!!

ஹாய் டியர் மனோகரி அக்கா
மிகவும் நலம், நீங்க மற்றும் வீட்டில் அண்ணன், 3 குழந்தைகள் (பெயர் தெரியாது) எல்லாரும் நலமா?
உண்மையில் நானும் பார்க்கவேண்டும் என்று ஆசைபடுவது ரஸியா அக்காவை அவங்க எனக்கு அடிக்கடி போன் போடுவாங்க நாங்க பேசுவோம். அவங்க மஹா என்று அழைப்பதே அழகுதான் எனக்கு ஒரு அக்கா மாதிரி அவங்ககூட நட்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அதுப்போல் நீங்க இப்படி உடனே பதில் தருவீங்க என்றும் நான் எதிர் பார்க்கவில்லை,

நீங்க எனக்கு தளிகாவின் பதிவில் கேட்டு இருந்தீங்க எதற்க்கு இந்த 6 மாத இடைவேளி முடிந்தால் சொல்லுங்க என்று,

நான் மனதளவில் ரெடி ஆகவேண்டும் மற்றும் பொருளாதாராமும் ஒத்துவரவேண்டும் அல்லவா அக்கா எப்படி இருந்தாலும் அதற்க்கு என்ற ஒரு நேரம் இருக்கும் அது அமையறப்போ ஒத்துக்கொள்ளவேண்டியது தான். ஆனால் நாங்கள் பிளான் பண்ணி விட்டோம் சீக்கரம் அடுத்து வேண்டும் என்று. ஏற்கனவே இருவருக்கும் திருமணம் லேட் மற்றும் எனக்கு முதல் குழந்தை அபார்ட் ஆகி அடுத்து தவம் இருந்து கிடைத்ததுப் போல் தான் எனது செல்லம் யுவன், மற்றபடி எனக்கு இப்போது 30 வயது முடிந்து விட்டது,, ஏற்கனவே எனக்கு ஆபிரேஷன் தான் அதுமட்டும் அல்லாது எனக்கு யுவன் புதுவரவை ஏற்றுக் கொள்ளுவதுப்பற்றி எல்லாம் பயம் இல்லை பொதுவாகவே அவனுக்கு ஆள்கள் வீடு நிறைய இருக்க வேண்டும், எல்லா குழந்தையுடனும் கொடுத்து விளையாடுவான் அதனால் எனக்கு அந்த பயம் இல்லை, அப்படி ஏதாவது பிரச்ச்னை வந்தால் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கிறேன் என்ன சரிதானே அக்கா மீதி உங்கள் பதிவு பார்த்து

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ஆஹா எப்ப பா வேற த்ரெட் ஆரம்பித்திங்க நான் இப்ப தான் பார்த்தேன் நான் அங்கு எல்லொருக்கு பதில் போடு விட்டேனே>

முடிந்தால் இங்கு காப்பி பேஸ்ட் செய்கிறேன்.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்