வாழ்த்து அட்டை செய்முறை - 6 பாகம் 2

தேதி: February 26, 2009

Average: 4 (2 votes)

வாழ்த்து அட்டை செய்முறை - 6 ல் பயன்படுத்திய அதேப் பொருட்களைக் கொண்டு மற்றொரு முறையான வாழ்த்து அட்டை செய்யலாம். இந்த வாழ்த்து அட்டை செய்முறையை திருமதி. நர்மதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இங்கே செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை.

 

வெறும் வாழ்த்து அட்டைகள் & உறைகள் (blank cards & envelopes)
வர்ண கடதாசிகள் (scrappingbooking papers)
டிசைனர் கத்தரிக்கோல்கள்
கத்தரிக்கோல்
போம் (Foam) / Mouse pad
குந்தன் (Color stones)
செயற்கைப் பூக்கள்
பெயிண்ட்கள்
ரப்பர் ஸ்டாம்புகள் (Rubber stamps- eg:- 'Happy Birthday', 'Happy Anniversary', etc.)
சிறிய ஸ்பொஞ் துண்டு (spong piece)
பசை/கோந்து (glue)
அடிமட்டம் (Ruler)
ஸ்டைலஸ் டூல்(Stylus tool) - எம்போஸிங் செய்ய (for embossing)
ஸ்டென்ஸில்ஸ் (Stencils)

 

முதல் வாழ்த்து அட்டை போலவே இதற்கும் விரும்பிய படத்தின் ஸ்டென்ஸிலை வைத்து கீறி வர்ணம் கொடுக்கவும்.
பின்னர் வர்ண கடுதாசியில் ஒரு அங்குல சதுர துண்டுகள் 16 வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு துண்டை எடுத்து இரு மூலை விட்டத்தின் வழியே மடித்து பின்னர் விரித்து இரண்டு கரைகளையும் மூலவிட்ட மடிப்புடன் பொருந்துமாறு உள் பக்கமாக மடித்து விடவும். ஐஸ் கோன் போல இருக்கும்.
பின்னர் இதனை நீளவாக்கில் இரண்டாக மடிக்கவும். (Half-Kite folding)இவ்வாறு அனைத்து துண்டுகளையும் மடிக்கவும்.
பின்னர் ஒரு சிறிய துண்டு கடுதாசியில் பசை தடவி அதன் மேல் மடித்த கடுதாசிகளை விளிம்புகள் இணையுமாறு வைத்து அடுக்கவும்
இவ்வாறு அடுக்கும் போது பூ வடிவிலான மெடலியன் ஒன்று கிடைக்கும்.
பின்னர் இதன் நடுவில் ஒரு குந்தனை வைத்து ஒட்டி பின் இதை வாழ்த்து அட்டையின் நடுவில் வைத்து ஒட்டவும். பின்னர் ரப்பர் ஸ்டாம்பின் உதவியால் விரும்பிய வாழ்த்தினை பதிக்கவும் அல்லது வர்ண பேனாவினால் வாழ்த்தை எழுதவும். அழகான வாழ்த்து அட்டை தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

நர்மதா,
மிக அழகான வாழ்த்து அட்டை உங்கள் செய்முறைகள் அனைத்துமே கண்ணைக் கவர்கின்றன. வாழ்த்துக்கள்.
செபா.

ஹாய் நர்மதா,
மிக அழகாக இருக்கிறது. இன்னும் நிறைய வாழ்த்து அட்டை செய்முறைகள் கொடுக்க வேண்டும். :-)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta