கோவா இலை (கபேஜ் இலை) வறை

தேதி: February 27, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோவா/கபேஜ் இலை – ஒரு பிடி
வெங்காயம் – ஒன்று
தேங்காய் துருவல் – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிது
செத்தல் மிளகாய் – 2
கறிவேப்பிலை – 2 கொத்து
மிளகாய் தூள் (கறிக்கு உபயோகிப்பது) – ஒரு தேக்கரண்டி (அல்லது தேவைக்கேற்ப)
சோம்பு, சீரகம், கடுகு - தேவையான அளவு


 

கோவா இலையை சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சுத்தம் செய்த இலையை மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயை சிறுத் துண்டுகளாக கிள்ளி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
அதன் பிறகு கறிவேப்பிலை, செத்தல் மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். அதனுடன் சோம்பு, சீரகம், கடுகு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும், அதை தனியே எடுத்து வைக்கவும். வதக்கும் போது கருகவிடாமல் கவனித்துக் கொள்ளவும்.
அதே பாத்திரத்தில் நறுக்கி வைத்திருக்கும் கோவா இலையை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி விடவும்.
கோவா இலை நன்கு வெந்தவுடன் தேங்காய் துருவல், மிளகாய் தூள், தாளித்து எடுத்து வைத்திருக்கும் வெங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கிளறி விட்டு சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி விடவும்.
சுவையான கோவா இலை வறை தயார். இந்த குறிப்பினை செய்து காட்டியவர், கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழரான <b> செல்வி. விசா </b> அவர்கள். இவர் தற்போது முதுகலை அறிவியல் பயின்று வருகின்றார், கூடவே சமையலும் சமைக்க ஆரம்பித்தது மூன்று வருடங்களுக்கு முன்புதான் என்றாலும், அதீத ஈடுபாட்டின் காரணமாக இன்று பல்வேறு உணவுகளை சுவைபட தயாரிப்பதில் திறன்பெற்றவராய் இருக்கின்றார். கேக், குக்கீஸ் செய்வதை தனது தனித்திறமையாக குறிப்பிடும் இவர், வரைதல், கைவினைப்பொருட்கள் செய்தல் போன்றவற்றை கொண்டு ஓய்வுப் பொழுதினை செலவு செய்கின்றார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பச்சைப்பசேல் என்று அப்படி ஒரு அழகு,எடுத்து உடனே சாப்பிடனும் போல இருக்கு.சத்தானதும் கூட.இங்கு கோவா இலை கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இதனை பார்ப்பதற்கு collard Greens Leaves மாதிரியே இருக்கு…கபேஜ் இலை என்றால் முட்டை கோஸ் இலையா? மிகவும் பொருமையாக இலைகளை ஒரே அள்வில் வெட்டி இருக்கிங்க…
அன்புடன்,
கீதா ஆச்சல்

அருமையாக நீட்டாக செய்திருக்கிறீர்கள்..யாரும் சமைக்கலாமில் குறிப்பு கொடுக்கும்பொழுது சில பொருட்கள் நறுக்கியது சரியாக அளவாக இல்லையென்றால் ஒரு மாதிரி சமைக்கவே பிடிக்காது..நீங்கள் நறுக்கியது அருமை..ஆனால் ஒரே ஒரு சந்தேகம் கடுகையும் போட்டு வதக்கினால் அது வெடிக்குமா?அல்லது முதல் எண்ணையிலேயே தாளிக்க வேண்டுமா?

கோவா இலைக்கு பதிலாக காபேஜில் செய்தேன். மிக மிக நன்றாக இருந்தது.எல்லா தோழிகளும் செய்து பாருங்கள்.

god is my sheperd