முட்டைகோஸ்

முட்டைகோஸ் பற்றி அண்மையில் எனக்கு ஒரு தகவல் தெரிந்தது. அதாவது, முட்டைகோஸ் சிறு குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாதாம். இங்கு பிரச்சினை முட்டைகோசில் இல்லை. அதன் உற்பத்தியில் தான் இருக்கிறது. பொதுவாக முன்னைய காலத்தில் மரக்கறிகள் இயற்கை உரம் போட்டு வளர்க்கப்பட்டதால் அவற்றின் தரமும் சுவையும் மிக நன்றாக இருந்தது. ஆனால் இன்றைய அவசர உலகில் பயிர்களுக்கு இரசாயன உரங்களையும், கிருமிநாசினிகளையும் பாவித்து தான் உற்பத்தி செய்கின்றனர். மற்ற மரக்கறிகளை விட முட்டைகோஸில் பாவித்த அந்த இரசாயன உரங்களும், கிருமினாசினிகளும் தேங்கி நின்று விடுமாம். ஏனெனில் அதன் அமைப்பு அவ்வாறு அமைந்திருக்கிறது. அதனால் தான் குழந்தைகளுக்கு இதனை கொடுக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

பெரியவர்கள் கூட இந்த மருந்துகளின் விசத்தன்மையில் இருந்து தப்பிக்கொள்ள காளானை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். காளானுக்கு மட்டும் தான் இதனால் வரும் பாதிப்பை அழிக்கக் கூடிய தன்மை இருக்கிறது.

மாற்று கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றது.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

மேலும் சில பதிவுகள்