தயவுசெய்து உடன் பதில் தரவும்.

தோழிகளே எனக்கு பெண் குழந்தை பிறந்து 10 நாட்கள் ஆஹின்றது. தற்போது தமிழ் மருந்து உட்கொள்வதால் தண்ணீர் குடிக்க கூடாது என்று வீட்டில் கூறுகிறார்கள். எனக்கு அடிக்கடி தண்ணீர் தாகம் எடுக்கிறது. தண்ணீர் குடிக்காமல் இருப்பது சரியான முறையா? தாகத்தை தவிர்க்க டிப்ஸ் கொடுங்கள்.. உடனடி பதிலை எதிர்பார்க்கிறேன்.

அன்பு ஜீவா,
நீ சொல்லும் தமிழ் மருந்து எதுன்னு புரியலை. கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா? நாட்டு மருந்தா? எதானாலும் தண்னீர் குடிக்காமல் இருப்பது நல்லதில்லையே.
நிறைய தண்ணீர், கொதிக்க வைத்து ஆறவைத்தது குடிக்கணுமே.
என்ன மருந்துன்னு சொல். இப்ப கொஞ்சமாவது முதல்ல தண்ணீர் குடி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு செல்வி
தமிழ் மருந்து பச்சை மருந்து மற்றும் களி வகையறா.. பச்சை மருந்தில் நிறைய நாட்டு மருந்து சேர்ப்பார்கள் எனக்கு பெயர் தெரியவில்லை.
தோழிகளே அப்படியே G அல்லது K ல் ஆரம்பிக்கும் பெயர்களை கூறவும்.
நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

அன்பு ஜீவா,
உனக்கும், குழந்தைக்கும் வாழ்த்துக்கள்.
இப்பல்லாம் எவ்வளவோ ஆங்கில மருந்துகள் இருக்கு.
பிரசவ லேகியம் சாப்பிடலாம். எதானாலும் தண்ணீர் நிறைய குடிக்கணும். இல்லையானால் வேறு பிரச்னைகள் வரும். ரொம்ப பழைய காலத்தில் தான் அப்படி தண்ணீர் குடிக்க கூடாதுன்னு சொல்வாங்க. இப்பல்லாம் டாக்டரே நிறைய தண்ணீர் குடிக்கணும்னு சொல்வாங்க.
பெயர் தானே, நம் தோழிகள் நிறைய பெயர் சொல்வார்கள். எனக்கு தெரிந்தது...
கிருத்திகா*(என் பெண்ணின் பெயர்),
கீர்த்தனா, காவ்யா, கல்பனா, காஞ்சனா, கீதாஞ்சலி, கங்கா... பழைய பெயராகத்தான் இருக்கும்.
உடம்பை பார்த்துக்கோ. பச்சை உடம்பில் ரொம்ப நேரம் பிசியில் அமராதே.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

என்ன மருந்தை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்..சாதரணமாக குடிப்பதை விட குழந்தை பிறந்தபின் குடிக்கனும்...அப்ப தான் பால் சுரக்கவும் உதவும்..இல்லையென்றால் ரொம்ப சிரமமாகும் மற்ற பல சிறுநீர் சம்மந்தமான நோய்கள் தாக்கும் வாய்ப்பு அதிகம்...இது வெறும் myth தான் கண்டிப்பா யார் சொன்னாலும் புரியவைத்து நிறிய தண்ணீர் குடிக்க பாருங்கள்..10 நாளா தண்ணீர் குடிக்காமல் இருந்தீர்கள்.

எங்க ஊரிலும் இந்த மாதிரி மருந்து தரும்போது இரவு சப்பாட்டிற்குப் பின் நாட்டு மருந்து - முட்டை, நல்லெண்ணெய், கருப்பட்டி, சாலியல், இன்னும் என்னவெல்லாமோ சேர்ந்தது தந்து அதன் பின் தண்ணீர் அரை கப் மேலே குடிக்க விடமாட்டார்கள்.

சில வகை நாட்டு மருந்துகளுக்கு பத்தியம் தேவைப்படும். அதன்படி மருத்துவரையும் நாட்டு வைத்தியரையும் ஆலோசித்து நடந்து கொள்ளுங்கள்.

வழங்கியவர் Jaleela Banu

ஆம் தண்ணீர் குடிக்க கூடாது தான் ஆனால் இப்ப தான் நிறைய தண்ணீர் குடிக்கனும் போல் இருக்கும்

மட்டன் எலும்பு சூப் தண்ணீர் மாதிரி செய்து நிறைய குடிங்க மாலை 7 மணிக்கு மேல் குடிக்கவே கூடாது கொஞ்சம் ஒரு மூடி அளவு ஒகே, இலலி வெத்தலை பாக்கு போஒடு அந்த ஜூஸை முழுங்குங்கள்,காலையில் இருந்து மாலை வரை தண்ணீர் குடிக்கலாம்
அப்படியும் தாக அடங்க வில்லையா சோடா வாங்கி சிறிது குடித்து கொள்ளலாம்.
ஜலீலா

ஆனால் எனக்கு இது ரொம்ப சந்தேகம்..தயவு செய்து யாராவது தெளிவு படுத்தவும்.
அந்தகாலத்தில் வீட்டில் தான் பிரசவம் ..பல பல சிக்கலில் கஷ்டப்பட்டு பிரசவிப்பார்கள்..சிறுநீர் கழிக்க 1 மைல் தூரம் நடக்க வேண்டும் வீட்டின் வெளியே ஒரு மூலையில் இருக்கும் டாய்லெட்.
ஆனால் இன்று அட்டேச்டாக பெட்ரூமிலேயே உண்டு..அதிலும் வசதி நினைத்தால் எழுந்து போகலாம் என்ன நட்ட நடுராத்திரியிலும்.
இன்று சொகுசாக பெற்றொக் கொள்கிறோம்..பெயின் கில்லரின் உதவியால் ஓரளவு நம்மால் தத்தம் வேலைகளை நன்றாகவே செய்ய முடிகிறது..அதனால் எனது சந்தேகம் அந்த காலத்தில் ஒரு காரணத்துக்காக சொல்லப்பட்டதை இன்றும் தேவையில்லாமல் பின்பற்றுகிரொமா..அல்லது இந்த நாட்ட்டுமருந்துகளுக்கு அப்படி ஏதும் கணக்குகள் உண்டோ நிஜத்தில்
ஜீவா உங்கள் மருத்துவரிடமே கேளுங்கள் கட்டாயம் தண்ணீர் நிறைய பருக சொல்வார்கள்

தளிகா நீங்கள் கூறுவது சரியென்றே எனக்கு தோன்றுகிறது. டாக்டர் நிறைய தண்ணீர் குடிக்க சொன்னார்கள். 1 மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க சொன்னார்கள். ஆனால் வீட்டிற்கு வந்த உறவினர் அனைவருமே தண்ணீர் குடிக்க கூடாது என்றே கூறினார்கள்.எதை நம்ப என்றே தெரியவில்லை. பதில் கூறிய அனைத்து தோழிகளுக்கும் நன்றி.
நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

மேலும் சில பதிவுகள்