பட்டிமன்றத்தில் உரையாட கருத்தளியுங்கள்

அருசுவை அங்கத்தினர் அனைவருக்கும் வணக்கம்,

நான் நெடுநாட்களாக அருசுவையை பயன்படுத்தியும், மன்றத்தின் கருத்துகளைப் படித்தும் வந்துள்ளேன். இப்பொழுது இந்த பதிவினை செய்வதற்கு காரணம் வரும் வாரத்தில் நான் ஒரு பட்டிமன்றத்தில் பேசவுள்ளேன்.
பட்டிமன்றத்தின் தலைப்பு , "தமிழ் பண்பாட்டுச் சிறப்பினை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்லாத குற்றத்தை புரிந்தவர்கள் - மூத்தக் குடிமக்களே! இளைய குடிமக்களே!"
இந்த தலைப்பில் மன்ற உறுப்பினர் அனைவரும் விவாதத்தில் பங்கேற்றால் நல்ல பல கருத்துக்கள் எனக்கு கிடைக்குமென்று நம்புகிறேன்.

உங்கள் மேலான கருத்தினை பதிவு செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

மூத்த குடிமக்கள் என்று யாரை சொல்லுகிறீர்கள்?இளைய குடிமக்கள் யார்?இதில் இளைய தலைமுறையினர் யார் ?கொஞ்சம் கோவிக்காமல் விளங்கப்படுத்தினீங்கள் எண்டா விவாதத்துக்கு நான் ரெடி.

சுரேஜினி

ஹாய் சுரேஜினி!
இதில் மூத்தகுடிமக்கள் என்பது 58 வயதிற்கு மேற்பட்டவர்கள். இளைய குடிமக்கள் என்பது 27-58 வயதிற்குள் உள்ளவர்கள், இளைய தலைமுறையினர் என்பது 27 வயதிற்கு குறைவானவர்கள் என்று நினைக்கிறேன்.
மூத்த குடிமக்கள் என்பது தாத்தா-பாட்டி, இளைய குடிமக்கள் என்பது அப்பா-அம்மா, இளைய தலைமுறையினர் என்பது குழந்தைகள் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.
அப்பிடிதானே யாழினி?
ஒரு அழகான் தலைப்பினை கொடுத்து கருத்து சொல்லுங்கன்னா அதைவிட்டு ஏதோதோ பேசறாங்களேன்னு யாழினி திட்றது கேட்குது.
சாரி யாழினி, எனக்கு இந்த தலைப்பு விஷயமா இப்ப எதுவும் தோணலை. இன்று குழந்தைகளூக்கு ஸ்கூல்; விடுமுறை. எதுவும் யோசிக்ககூட முடியலை. நாளை ஏதும் தோணீனால் கண்டிப்பா பதிவு பண்றேன்!
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

ஹாய்,
சுரேஜினி, சாய் கீதாலக்ஷ்மி இருவருக்கும் எனது நன்றி. மூத்த குடிமக்கள் பற்றிய கீதாலக்ஷ்மியின் கருத்து சரியானதுதான்.
தோழிகள் கருத்தளிப்பீர்கள் என்று நம்புகிறேன். சுரேஜினி சீக்கிரம் வாங்க உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்.

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்.

வணக்கம் யாழினி... நல்ல பெயர்... சரி அப்போ அருள் மதி???? சரி அப்புறம் நீங்க பட்டி மன்ற தலைப்பை மட்டும் கொடுத்து இருக்கீங்க.???? ஆனா நீங்க எந்த பக்கம் பேச போறீங்க என்று சொல்லவே இல்லையே????... சரி சொல்லுங்க.... மீண்டும் பாக்கலாம்...

ஹாய் அருண்பிரசங்கி,

வணக்கம். யாழினி என்பது என் மகள் பெயர். அருள்மதி என் பெயர்.
பட்டிமன்றத்தில் நான் மூத்தோர் என்ற பக்கம் பேசவுள்ளேன்.

அருண்பிரசங்கி, உங்களிடத்திலிருந்து நிறைய கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். உங்கள் பதிவுகள் பலவற்றை படித்துள்ளேன் (பெயர் காரணம் உட்பட). நன்றி.

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்.

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்.

அருள் மதி....
என்ன எல்லாம் நல்ல படியா போகுதா????
சரி.... பட்டி மன்றத்துக்கு தயார் ஆகுறீங்களா??? ம்ம்ம்ம்...
நான் நாளை-க்கு வர்றேன்... நல்லது... மீண்டும் பாக்கலாம்....

தலைப்பை முழுமையாக விளங்கிக்கொண்டேனா என்று எனக்கே தெரியவில்லை யாழினி.இருவேறு பிரிவினரையும் இளைய இளைய என்ற ஒரே சொல்லால் அழைத்திருப்பது எனக்கு குழப்பமாக இருந்ததால் ஏதோ குத்துமதிப்பில் வாதாடியிருக்கிறேன்.இதோ

தமிழ் பண்பாட்டுச் சிறப்பினை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்லாத குற்றத்தை புரிந்தவர்கள் இளைய குடிமக்களே என்பது என் வாதம்.
பாவம் மூத்த குடிமக்களுக்கு பிற நாட்டு நாகரீகங்கள் பண்பாடுகள் நடைமுறைகள் பற்றியெல்லாம் பெரிதாக தெரியாது.
அவர்களுக்கு அதிகம் தெரிந்தது தமிழ் பண்பாடும் அதன் சிறப்புகளும்தான்.
தமிழ் பண்பாட்டுக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டுவதன் மூலம் அதை இளைய சந்ததியினருக்கு ஊட்டுகின்றனர்.
ஆனால் இந்த இளைய சந்ததியினர் இருக்கிறார்களே விஞ்ஞான முன்னேற்றம் ஊடகங்களின் முன்னேற்றம் வாயிலாக
பல இன மக்களின் பண்பாடுகள் நாகரீகங்கள் பற்றி அறிந்து கொள்கிறார்கள்.
அறிந்து கொண்டதோடு சும்மா இருந்து விடுகிறார்களா?
அதில் மோகம் கொண்டு இந்த இளைய சமுதாயம் தமிழ் பண்பாட்டின் சிறப்பம்சங்களை மறந்துபோக காரணமாகிறார்கள்.

உலகின் மிகச்சிறந்த பண்பாட்டு அம்சங்களைக் கொண்டதாக விளங்குவன ஜப்பானிய பண்பாடு,தமிழர்பண்பாடு என்று உலகமே ஏற்றுக்கொள்கிறது.
இத்தகைய அரிய பண்பாட்டை கட்டிக்காப்பது தமிழர்களின் தலையாய கடமை.மூத்த குடிமக்கள் அதை செவ்வனே செய்து வந்தார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆனால் இளைய தலைமுறைகள் அவற்றீல் ஒவ்வொன்றூக்கும் ஒவ்வொரு குற்றங் குறைகளைக் கண்டுபிடித்து தமது வசதிக்கேற்ப தமிழரின் பண்பாட்டிலிருந்து
விலகிச்செல்கிறார்கள்.இவர்களே விலகிச்செல்ல நினைக்கும் போது அதன்பின் வரும் இளைய சமுதாயத்துக்கு எதைக்கற்றுக்கொடுக்கப்போகிறார்கள்?

வந்தாரை வரவேற்றல் தமிழன் பண்பாடு.இந்த விடயத்தில் மூத்த குடிமக்களை எடுத்துக்கொண்டால் ,எந்த நேரம் எவர் வீட்டுக்கு வந்தாலும்
ஓடிச்சென்று வாசலில் இருந்து அழைத்து வந்து உட்கார வைத்து தமது இயலாமையிலும் கூட விருந்தோம்பி மனம் மகிழ்ந்தார்கள்.ஆனால்
இந்த இளைய குடிமக்கள் யாராவது திடீரென்று வீட்டுக்கு வந்தால் அவர்கள் மனதிலும் வார்த்தையிலும் வெளிவருவது என்ன திடீர் என்று இந்தப்பக்கம்
சொல்லாமல் கொள்ளாமல்!!!!!!இவர்களைப்பார்ர்க்கும் சின்னன் சிறுசுகள் என்ன செய்வார்கள் அறிவித்தல் இன்றி வீட்டுக்கு வருபவர்கள் ஏளனத்துக்கு உரியவர்கள்.
மரியாதை தெரியாதவர்கள்.இவர்களை நாங்கள் ஓஹோ என்று உபசரிக்கவேண்டிய அவசியமில்லை என்பதை மனதில் போட்டு விடுகிறார்கள்.ஆகமொத்தம்
இன்றைய விருந்தோம்பல் என்பது டாக்டரிடம் அப்பொயிண்ட்மண்ட் வாங்கி டாக்டரை சென்று பார்ப்பது போல் ஆகிவிட்டது.

பெரியோர்க்கு மரியாதை மூத்த குடிமக்கள் காலத்தில் இருந்தது இப்போது இளைய தலைமுறையினரிடம் இல்லாதது.
அம்மா பாட்டிக்கு பழைய நைந்துபோன தட்டை தனியே வத்திருந்து அதிலே அவருக்கு வேண்டா வெறுப்பாக சோறு கொடுத்துவந்தாராம்.
அந்த தட்டை ஒருநாள் காணவில்லையென்று தேடிய போது மகன் சொன்னானாம் அம்மா பயப்படாதே நான் பத்திரமாக எடுத்து வைத்திருக்கிறேன் உனக்கு சோறூபோட
என்று.இது நாம் எல்லோருமே அறிந்த கதைதான். ஆனால் இதிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம் தவறு எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை.
முன்பு பெரியோர்கள் நிற்கும் போது சிறியோர்கள் அமர மாட்டார்கள்.இப்போ பஸ் ட்ரெயினில் பார்த்தால் தள்ளாத வயதினர் தள்ளாடிக்கொண்டு
இடமில்லாமல் நிற்க நல்ல திடகாத்திரமான இளையோர் கால்மேல் கால்போட்டு காதுக்குள் வயர்விட்டு பாட்டு கேட்டுக்கொண்டு இருப்பார்கள்.
மாமி,மாமா ,சித்தப்பா சித்தி,என்று உறவை சொல்லி அழைத்தார்கள் இன்றைய இளைய தலைமுறையினர் சின்னஞ்சிறுசுகள் பேசத்தொடங்கும்போதே
பெயர்சொல்லிக்கூப்பிட வைத்து விடுவார்கள்.

அடுத்து தனி மனித ஒழுக்கம்.நாகரீக வளர்ச்சி,வேற்றுமொழிக்கலப்பு என்பவற்றில் மூழ்கிக்கொண்டிருக்கிறது.
'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.' வள்ளுவர் சொல்லி வைத்தது.
தமிழர் பண்பாடுகளில் ஒன்றான தனிமனித ஒழுக்கம் இன்று இளைய சமுதாயத்தினரால் கடைப்பிடிக்கப்படுகிறதா?
ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு சில நியாயமான காரணங்கள்ளுக்காக மட்டுமன்றி எல்லையற்று சென்றுவிட்டதால்தான்
எயிட்ஸ் நோய் தமிழரிடத்திலும் தலைவிரித்தாடுகிறது.
எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அவை நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.
இதற்கேற்ப எல்லையற்ற சுதந்திரத்தை இளைய சமுதாயத்தினரிடம் கையளித்து அவர்களை தான்தோன்றித்தனமாக வாழ வழிகோலியவர்கள்
இந்த இளைய குடிமக்களேதான்.
கூட்டுக்குடும்ப முறையை ஏதேதோ காரணங்கள் கூறி உடைத்து முதியோர்களை அநாதை இல்லத்திலும் பெற்றோர்களாகிய தாம்
ஆபீஸ் லும் வாழும் இவர்களால் இந்த இளைய சமுதாயத்துக்கு எதைப்போதிக்க முடியும்?

வறியவர்களுக்கு உதவுதல் அதாவது இருப்பவர் இல்லாதோருக்கு இரக்கம் காட்டுதல் இதுவும் மூத்தோரால் கையாளப்பட்ட தமிழர் பண்பாடுதான்.
ஆனால் இப்போ வாழும் தலைமுறையினர் உறவாக இருந்தாலும்கூட பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தால் அவர்கள் எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும்
அவர்களுடன் உறவு கொண்டாட பயப்பட்டு விலகி விடுவார்கள்.அதே சுயநல வாழ்க்கையைத்தான் அதன்பின் வருவோரும் தொடர்ந்து செல்கிறார்கள்.

சுரேஜினி

உங்கள் கருத்து மிகவும் அருமை.

நான் பேசவிருக்கும் பட்டிமன்றத்தின் தலைப்பை நடுவர் இன்று மாற்றிவிட்டார். புதிய பட்டிமன்றத் தலைப்பு: " தமிழ் பண்பாட்டுச் சிறப்புகளை நாளைய தலைமுறைக்குக் கொண்டு செல்லாத குற்றத்தைப் புரிந்தவர்கள் சமூக அங்கத்தினர்களே! குடும்ப உறுப்பினர்களே!" சமூக அங்கத்தினர்களே! என்ற அணியில் நான் பேசவுள்ளேன்.

சுரேஜினி, உங்கள் கருத்துகள் தெளிவாகவும் கோர்வையாகவும் உள்ளது. நன்றி. மேலும் உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன். பிற தோழிகளும் கருத்தளிக்க வாருங்கள்.

மதி

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்.

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்.

வெறும் கேள்விக் குறியா போட்டுட்டு எங்க காணம போயிட்டிங்க?
பட்டிமன்றத் தலைப்ப மாத்திட்டாங்க, புதிய தலைப்ப பாத்துட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி.

மதி.

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்.

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்.

வெறும் கேள்விக் குறியா போட்டுட்டு எங்க காணம போயிட்டிங்க?
பட்டிமன்றத் தலைப்ப மாத்திட்டாங்க, புதிய தலைப்ப பாத்துட்டு உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். நன்றி.

மதி.

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்.

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்.

மேலும் சில பதிவுகள்