புலாவ் செய்வது எப்படி?

ஹலோ தோழிகளே, சிக்கன் / மட்டன் புலாவ் செய்வது எப்படி? புலாவுக்கும் பிரியாணிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

அதான் எனக்கும் சந்தேகம் இந்த புலாவுக்கும் பிரியாணிக்கும் என்ன வித்யாசம் என்று..ஆனால் எனக்கு தெரிந்து புலாவ் நம்மூர் கீ ரைஸில் சிக்கன் சேர்த்து வதக்கினது போல் சில காய்கறிகளும் கலந்டெஹு செய்வது..பிரியாணி நல்ல மசாலாவோடு செய்வது..புலாவ் மசாலா இல்லாததால் வெள்ளையாக இருக்கும்.
நான் ஓளருகிறேனா?தோழிகள் தெளிவுபடுத்தவும்

அன்பு ரூபி,
நலமா? பல்வலி போனது குறித்து சந்தோஷம். என் பெண் உனக்கு தேங்க்ஸ் சொல்ல சொன்னாள். நான் அதை அப்படியே அவளுக்கு ஃபார்வார்டு பண்ணிட்டேன். ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்குன்னா.
நீ உளரலை ரூபி, சரியாத்தான் சொல்லி இருக்கே. மசால் வாசனை குறைவா வெள்ளையாக இருந்தால் புலாவ். மசாலாவெல்லாம் அரைத்து கலராக செய்வது பிரியாணி.
ரீமா நலமா?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹலோ செல்வி மேடம்,புலாவ் செய்வது எப்படி என்று சொல்ல முடியுமா?
Save the Energy for the future generation

Save the Energy for the future generation

அன்பு இந்திரா,
புலாவ் செய்வது ரொம்ப சுலபம். எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து (குறைந்த எண்ணிக்கை)நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி காய்களோ\சிக்கனோ\ஓரளவு வேக வைத்த மட்டனோ சேர்த்து வதக்கி கழுவிய அரிசியை ஓரிரு நிமிடம் வறுத்து கொதிக்கும் நீரை (ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்றேகால் டம்ளர்) சேர்த்து மூடவும். முக்கால் பதம் வெந்ததும் உப்பு, கொஞ்சம் நெய் சேர்த்து கலக்கி அடுப்பை சிம்மில் வைத்து புலாவ் பொலபொலவென வந்ததும் இறக்கவும்.
விருப்பப்பட்டால் அரை மூடி லெமன் பிழியலாம்.
இன்னும் விளக்கமாக வேணும்னா குறிப்பாக கொடுக்கிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி மேடம், உங்கள் குறிப்புக்கு நன்றி. செய்து பார்க்கிறேன்.Save the Energy for the future generation

Save the Energy for the future generation

மேலும் சில பதிவுகள்