குழந்தை வரம்

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்.. நான் இந்த இணைய தளத்திற்கு புதிது... arusuvai.com பற்றி தற்பொழுது தான் கேள்விபட்டேன்.. உங்களோடு இணைவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!!! எனக்கு திருமணம் ஆகி 6 மாதம் ஆகிறது. குழந்தை இல்லை என்பதால் மேற்கொண்டு B.E படிக்கலாம் என்று என் கணவர் சொன்னார். அப்படி என்றால் 3 வறுடங்களுக்கு கருத்தடை செய்ய முயற்ச்சிக்கலாமா? அவ்வாறு செய்வதால் பிறகு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுமா? கருத்தடை செய்ய முயற்ச்சித்தால் குழந்தை பேறு இல்லாமல் போகும் என்று பலர் சொல்கிறார்கள்.. எனக்கு அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது... படிக்க ஆசை தான்.. ஆனால் படிப்பு முக்கியம் இல்லை குழந்தையும் வாழ்க்கையும் தான் முக்கியம் என்று தோன்றுகிறது.. தோழிகளே ஒரு நல்ல முடிவு எடுக்க நீங்கள் தான் உதவ வேண்டும்..!!!

சந்தியா கருத்தடை என்பது வேண்டாம். படிப்பு முக்கியம்தான். அதை விட முக்கியம் குழந்தை. அப்படி தள்ளி போட நினைத்தால் பாதுகாப்பாக இருப்பது உங்கள் இருவர் கையிலும்தான் இருக்கு. மருத்துவ ரீதியாக எந்ததடையும் செய்யாதீர்கள்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் தென்றல்.... 6 மாதம்தானே ஆகிரது திருமணமாகி...நீங்கள் படிங்க.ஆனால் குழந்தையை மட்டும் நீங்களாக தடை செய்யாதீங்க.நமக்கு படிப்பைவிட குழந்தை அவசியமல்லவா.
எந்த காரணம் கொண்டும் முதல் குழந்தையை மட்டும் நீங்களாக தள்ளிப்போடாதீர்கள்.

ஹெல்லொ தனிஷா,
எப்படி இருக்கிங்க.. உங்கள் கருத்துக்கு நன்றி.
மருத்துவ ரீதியாக எந்ததடையும் செய்யாதவாறு பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் அபு தாபியில் இருக்கீங்கலா?
நான் மஸ்கட்ல இருக்கேன்.. ஊஆஏ 2 தடவை வந்து இருக்கேன்..
ஆன அங்கே முக்கியமா பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி சொல்லுங்களேன்..
தலைப்புக்கு தொடற்பு இல்லம பேசுறன்னு நினைக்க வேண்டாம்.

Thaen

ஹெல்லொ மோனி,
என் பெயர் சந்தியா.. தென்றல் என் செல்ல பெயர்
தங்கள் என்னை செல்லமாய் அழைத்ததற்கு நன்றி...
நீங்க சொல்வதும் சரி தான். ஆனால் தனிஷா மருத்துவ ரீதியாக எந்ததடையும் செய்யாமல் இருந்தால் பிரச்சனை இல்லைனு சொல்றாங்க.. அதுவும் சரி தானே.. நீங்க என்ன நினைக்றீங்க மோனி

Thaen

ஹாய் தென்றல்... தனீஷா சொல்வது சரிதான்.நீங்களாக தடை செய்து கொள்வது முடியும்.ஆனால் இன்றைய சூழ்நிலையில் பாலிசிஸ்டிக் ஓவரீஸ் நிறைய பேருக்கு வருகிரது.என் தோழி ஒருவருக்கு திருமனமாகி முதல் கர்ப்பம் 1 மாதத்திலேயே உருவானது அவளும் அவள் மிகவும் சந்தோஷமாய் இருந்தாள்.பிறகு 3 மாதத்தில் கலைந்துவிட்டது.பிரகு 2 மாதம் பொறுத்து பீரியட்ஸ் ஆனாள்.பின் 4 மாதங்களாக பீரியட்ச் ஆகவேயில்லை.டாக்டரிடம் கேட்டபோது அவளுக்கு பாலிசிஸ்டிக் ஓவரீச் இருப்பதாக சொன்னார்கள். அவளும் மாத்திரை எடுத்துக்கொண்டு இருக்கிராள்.இப்போது 2 வருடமாகியும் கருவுருவாகவில்லை.எனவே நமக்கு எந்த குறையும் இல்லாதபோதே நாம் குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது இல்லையா அதனால்தான் சொன்னேன்பா.எதர்கு நாமாக கூட தடை செய்வது நல்லது இல்லைதான்.இது என் கருத்துதான் தவராக எடுத்துக்கொளாதீர்கள்.

சந்தியா!
உங்கள் தலைப்பிலேயே பதிலும் இருக்கு. குழந்தை பாக்கியம் என்பது ஒரு வரம் மாதிரிதான். அதனை தள்ளிப்போடுவது சரியல்லை. அதிகபட்சம் ஒருவருடம் பரவாயில்லை. 3 வருடங்கள் என்பது மிகவும் அதிகம். மாத்திரைகள், வேறு கருத்தடை முறைகளை விட, பாதுகாப்பான நாட்கள் நல்லது.
பாதுகாப்பான் நாட்கள் என்பது ஒவ்வொருவரின் பீரியட்ஸ் நாட்களைப்பொறுத்து மாறுபடும். அந்த தேதிகளை லேடி டாக்டரிடம் குறிப்பிட்டு, பாதுகாப்பான நாட்கள் பற்றி தெரிந்து கொள்ளவும்.
யாரைக்கேட்டாலும், முடிந்தவரை தள்ளிப்போட வேண்டாம் என்றுதான் சொல்வார்கள். அதனால், நன்றாக யோசிக்கவும்!
வாழ்த்துக்கள்!

சந்தியா, படிப்பா, குழந்தையா என்று தீர்மானிக்க வேண்டியது நீங்களும் உங்கள் கணவரும். ஏனென்றால் இரண்டுக்குமே இதுதான் சரியான வயது/ காலம்.
1. வயது: உங்கள் வயது 25க்கு மேல் என்றால் இனி படித்து, வேலை செய்து பின் குழந்தை என்றால் லேட்டாகிவிடும்.
2. சூழ்நிலை: உங்கள் இருவரின் குடும்பத்தினரும் குழந்தைபேற்றைத் தள்ளிப்போட்டு படிக்கப் போவதை ஆதரிப்பார்களா?
3. படிக்க 3 வருடம், ஆனால் அதற்கு தயார் செய்ய நாட்கள் தேவைபடும் - நுழைவுத்தேர்வு, அட்மிஷன், ...; படித்து பின் வேலைக்கு செல்வீர்களா? எத்தனை வருடம்? அதையும் கணக்கில் சேர்க்கவேண்டும்.
4. நீங்கள் படிப்பதும், பின் வேலைக்குப் போவதும் ஒருவேளை உங்கள் குடும்பத்தினருக்கு பொருளாதார ரீதியாக மிகவும் தேவை என்றால் படிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கலாம். அப்படியானால் இப்போதுள்ள உங்களின் படிப்புக்கேத்த வேலை பார்க்கலாமே?
5. ஒருவேளை படிக்கும்போது நீங்கள் கருத்தரித்தால் எப்படி எதிர்கொள்வீர்கள்? படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு ஒரு வருடம் கழித்து பின் தொடர்வீர்களா? அல்லது பெற்றோர் பார்த்துக்கொள்வார்களா?
6. மிக முக்கியம், உங்களுக்கு இந்த 6 மாதத்தில் கர்ப்பமாகாமல் இருக்க ஏதேனும் செய்தீர்களா? இல்லயென்றால் ஏன் உண்டாகவில்லை - பரிசோதனை செய்தீர்களா?

இதையெல்லம் இருவரும் கலந்து ஆலோசித்து பின் முடிவு எடுங்கள்.

எது உங்கள் சாய்ஸ். முதலில் மிசஸ் ஹூசைன்.. அடிச்சு பின்னிட்டீங்க போங்க. எனக்கு தெரிந்த ஒருவர்.12வது முடிந்ததும் திருமணம் செய்துகொண்டார் 2 குழந்தைகளும் ஆயிற்று. அதன் பின் யூஎஸ்ல இளங்கலை பொருளாதாரம் படித்தார். அதுக்கும் அப்புறம் வார்ட்டன் பிஸினஸ் ஸ்கூலில் எம் பி ஏ படித்து இப்ப நல்ல கம்பெனியில் அதிக சம்பளத்துடன் வேலை செய்கிறார். படிக்கணும் எதையாவது செய்யனும்/சாதிக்கனும்ன்னு நினச்சா வயசோ/சூழ்நிலையோ ஒரு பொருட்டு அல்ல என்பது என் கருத்து. குழந்தை பிறந்து வளரும் போது படிக்க தயார் படுத்திக்கொண்டு அப்புறமும் படிச்சிக்கலாம். ஆனால் எந்த முடிவு எடுத்தாலும் நீங்க உங்கள கன்வின்ஸ் செய்துக்கனும் இது என் செய்கை இதன் பின்விளைவுகளை நான் சந்திப்பேன் good or bad!!!. ஆர்வமும் முயற்ச்சியும் இருந்தால் எதுவும் செய்யலாம் எந்த வயதிலும் .

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சந்தியா 6 மாதம் தானப்பா ஆகுது. குழந்தைன்னு எதிர்பார்க்காதிங்க. அது வரும்போது வரட்டும்ன்னு நினைங்க. எதிர்பார்த்தா அதிக ஏமாற்றம் தான். இது என் அனுபவம். நீங்க படிக்க முடிஞ்சா படிங்க. கருத்தடை எல்லாம் தேவையில்லப்பா... கீதாக்கா சென்னமாதிரி நடந்துக்கேங்க.

mrs.hussain அவங்க பாயிட் பாயின்டா செல்லி இருக்காங்க. அது பின்பற்றுங்கப்பா..... ஒருசிலருக்கு கருத்தடை யில்லம குழந்தை போரு தள்ளி போகுது. அதனாலா தெளிவா முடிவு எடுங்கப்பா...

இலா சென்னா மாதி அது உங்கள் சாய்ஸ்தான். நீங்கள்தான் முடிவு எடுக்கனும். இன்னும் அனுப சாளிகள் அதிகமான்வர்கள் வந்து செல்லுவார்கள்.

முதலில் ரிலாக்ஸ்சாக இருங்கள் . தெலிவான முடிவு எடுங்கள் ஒகேவா...... ஆல்த பேஸ்ட்....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

எனக்காக சிரமம் பார்க்காமல் ஆலோசனை கூரிய தனிஷா, தனு, கீதாலக்ஷ்மி, மிஸஸ் ஹுசெய்ன், இலா, பிரபா சகோதிரிகளுக்கு மிக்க நன்றி..
முதலில் மிஸஸ் ஹுசெய்ன் அக்காவிற்கு பதில் சொல்லி விடுகிறேன்...
1. என் வயது தான் ஆகிறது.
2. கண்டிப்பாக ஆதரிப்பார்கள்.
3. நான் டிப்லமோ என்பதால் உடனே அட்மிஷன் செய்துவிடலாம்.
4. பொருளாதார ரீதியில் தேவை என்பதை விட, என் கணவருக்கு என்னை படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை.
5. படிக்கும் போது கரு ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன்.
6.இந்த 6 மாதத்தில் கர்ப்பமாகாமல் இருக்க நாங்கள் எதுவும் செய்யவில்லை. டாக்டரிடம் பரிசோதிக்கலாம் என சென்றால் 2 வருடம் வரை பொருத்திருந்து விட்டு வர சொல்லி விட்டார்...

அதனால் நானும் என் கணவரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்து விட்டோம்.. அவர் இங்கேயே 3 வருடம் இருக்கட்டும்... நான் சென்னை சென்று படிப்பை தொடரலாம் என்று...
இந்த முடிவு உங்கள் ஆலோசனைகலுக்கு இனங்க எடுத்ததே...

உங்கள் சகோதிரிக்கு ஆலோசனை கூறியதற்கு மிகவும் நன்றி.. !!!!!

Thaen

மேலும் சில பதிவுகள்