பூண்டின் மருத்துவ குணங்கள்

உடல் பருமனையும் இரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும்.
இதய அடைப்பை நீக்கும்.

இரத்த அழுத்தம் வராமல் காக்கும்

இரத்த அழுத்தம் இருந்தால் அதை கட்டுபடுத்தும் மருந்தாகவும் வெள்ளைப்பூடு விளங்குகிறது

பூண்டை பாலோடு காய்ச்சி கொஞ்சம் மஞ்சள் துள் சேர்த்து அருந்தி வந்தால் நாள் பட்ட சளித்தொல்லை நீங்கும்.

தொண்டை சதையை நீக்கும்

மலேரியா, யானைக்கால், காசநோய் கிருமிகளுக்கு எதிராக செயற்படும்.

தாய்ப்பால் சுரக்கும்

மாதவிடாய் கோளாறுகளை நீக்கும்.

நல்லெண்ணையோடு பூண்டை சேர்த்து காய்ச்சி இரண்டு சொட்டு காதில் விட்டு வந்தால் காது வலி நீங்கும்.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

லஷ்மி நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்கள்.

கிட்டத்தட்ட 10 மாதங்களின் முன்னர் வெளியான குமுதத்தில், பூண்டு பற்றி நிறைய விஷயங்கள் இருந்தது. நான் படித்தேன் மறந்துவிட்டேன். நெற்றில் நேரம்கிடைத்தால் தேடிப் பார்க்கலாம்.

பூண்டை வெட்டிப் போடக்கூடாது, அப்படியே நசித்து/தட்டிப் போடுவதுதான் நல்லது கறிகளுக்கு.

முழுப்பூண்டை தோல் நீக்கி தேனில் ஊற வைத்து, பின்னர் காலை வெறும் வயிற்றில் சாப்ப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறைய வாய்ப்பிருக்கிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

லக்ஷ்மி,

ஆரோக்கியமான உணவுகள் பற்றி நிறைய தகவல் கொடுக்கிறீர்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒர் தனி இழையைத் தொடங்குவதை விட எல்லாவற்றையும் ஒரே இழையில் பதிவு செய்வது நல்லது. தனிதனி இழை தொடங்குவதால் பல நல்ல குறிப்புகள் பலரால் கவனிக்கப் படாமல் போய்விட வாய்ப்பிருக்கிறது.

முடிந்தால் உங்களின் உணவு குறித்த எல்லா குறிப்புகளையும் உங்களின் "ஆரோக்கிய உணவு" என்ற இழைக்குள் காப்பி-பேஸ்ட் செய்ய்ங்கள்.

அதிரா, திருமதி உசைன் உங்கள் இருவரின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. திருமதி உசைன், நீங்கள் கூறியது போல் எனக்கும் இந்த குறிப்புக்களை ஒரே இழையில் போடத்தான் விருப்பம். ஆனால் அவை அனைவரின் பார்வைக்கும் படுமா என்பதில் எனக்கு ஒரு சின்ன சந்தேகம். இப்படி தனியாக போட்டால் அவை எல்லோரின் பார்வைக்கும் படும் என்ற ஒரு நப்பாசை எனக்கு. ஆனாலும் உங்கள் வார்த்தையை மதித்து இனிமேல் "ஆரோக்கிய உணவு" என்ற இழையில் எனது குறிப்புக்களை பதிவு செய்கிறேன். எல்லோரும் பயன் அடைந்தால் அது தான் எனக்கு சந்தோசம்.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

லக்ஷ்மி நலமாக இருக்கிறீர்களா?
இது ஒரு பயனுள்ள பகுதியாகும். நான் அறிந்தவற்றையும் பகிர்ந்து கொள்கிறேன்.
நீரிழிவு,வயிற்றோட்டம் போன்றவற்றிக்கு பூண்டு நல்லதொரு மருந்து.
மாரடைப்பு ஏற்படுத்துவதை தடை செய்கிறது.
புற்றுநோய்க் கலங்களை தடுக்கவல்லது.
சமிபாடு இன்மை,சளி பிடித்திருந்தால் இரவுச் சாப்பாட்டிற்கு பின்னர் பாலில் பூண்டினை அவித்து உண்ணலாம்.
பூண்டில் உள்ள அலிசின்(Alicin) என்னும் பதார்த்தம் தான் இத் தொழிற்பாடுகளைச் செய்கிறது.
பூண்டினை சமைக்காமல் பச்சையாக உண்பதே சாலச்சிறந்தது.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

நான் நலம். நீங்கள் நலமா வத்சலா? பூண்டினை பற்றிய உங்கள் குறிப்புக்கள் மிக்க பயனுள்ளது. நன்றி உங்களுக்கு.
அப்படியே உங்களின் இந்த குறிப்பை "ஆரோக்கிய உணவு" பகுதியில் copy பண்ணி விடுகிறீர்களா?

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

லக்ஷ்மி, நான் நலம். பூண்டின் பயன்களை ஆரோக்கிய உணவுப் பகுதிக்கு மாற்றி விட்டேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

லக்ஷ்மி, நான் நலம். பூண்டின் பயன்களை ஆரோக்கிய உணவுப் பகுதிக்கு மாற்றி விட்டேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

மிக்க நன்றி வத்சலா. எனக்கு வத்சலா என்ற ஆருயிர் தோழி இருந்தார். ஆனால் இப்போ இல்லை. அவளை நீங்கள் மீண்டும் நினைவு படுத்தி விட்டீர்கள்.

லக்ஷ்மி

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

மேலும் சில பதிவுகள்