ட்விஸ்டட் ஸ்வீட் ரிப்பன் ரோல்ஸ்

தேதி: March 10, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - கால் கப்
அரிசி மாவு - ஒரு கப்
பொடித்த சீனி - கால் கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு


 

கோதுமை மாவு மற்றும் அரிசி மாவை சலித்துக் கொள்ளவும். ஒரு பெரிய தட்டில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு மற்றும் நெய் சேர்த்து கையால் ஓரே சீராக நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் சீனியை போட்டு கரைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு மாவுடன் சர்க்கரை பாகை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை நீளமாக உருட்டி மடித்து இரண்டு பக்கமும் பிடித்து ரிப்பன் போல் சுருட்டவும். (சுருட்ட முடியவில்லை என்றால் சிறிது கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளவும்.)
இதைப் போலவே மீதமுள்ள மாவில் செய்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் ரோல்களை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
சுவையான ட்விஸ்டட் ஸ்வீட் ரிப்பன் ரோல்ஸ் ரெடி. இந்த குறிப்பினை அறுசுவை உறுப்பினரான <b> திருமதி. பிரபாபிரபாகரன் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

இன்னும் அதிக இனிப்பு வேண்டுமென்றால் பொடித்த சீனியில் பிரட்டிக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்புள்ள பிரபா,
இந்த ரிப்பன் ரோல்ஸ் சிறுவர்களால் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி உண்ணக் கூடியது. நன்றி.
செபா.

இது மொறு மொறுன்னு இருக்குமா?உள்ளே சாப்டாக இருக்குமா?எப்படி இருக்கும்.எப்பவாவது செய்து பார்க்கலாம் என்று நினைகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நன்றி.

மடித்து சுருட்டுவதற்கு தான் சிறிது கோதுமை மாவு சேர்க்க வேண்டும், அரிசி மாவு நிறைய இருப்பதால் மொறு மொறுன்னு இருக்கும். (நிறைய கோதுமை மாவு சேர்த்தால் உள்ளே சாப்டாக இருக்கும், கொஞ்சமா சேருங்க).

krispy+இனிப்பு இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

பிரபாபிரபாகரன்