Please help me

கர்பமாக இருகும் போது Tylenol எடுகலாமா?என்னால் தலைவலி தாங்க முடியவில்லை.

தனுஷா,கர்பமாக இருப்பதற்கு முதலில் வாழ்த்துக்கள் உங்களுக்கு.கர்பகாலத்தில் தலைவலி,udal வலி,sorvu iruppathu இயற்க்கை.அதற்காக வருந்த வேண்டாம்.மிகவும் தலை வலித்தால்,balm எதாவது தடவலாம் அல்லது,நன்கு கொதிக்கும் தண்ணீரில் tigerbalm அல்லது அமிர்தாஞ்சன் எதாவது போட்டு ஆவி பிடிக்கவும்.தலையில் நீர் koorththu இருந்தாலும் தலை வலி இருக்கும்,ஆவி பிடிப்பதால் சரியாகிவிடும்.எவளவு வலி இருந்தாலும் tablet மட்டும் போட வேண்டாம்.அப்படி tablet போட்டால் தான் சரி ஆகும் என்று நீங்கள் நினைத்தால்,panadol மாதிரி பவர் குறைந்த tablet போடலாம்

jeyasutha
"As is our confidence, so is our capacity"

கர்பகாலத்தில் டைலினால் சேஃப் தான்..எனக்கு பல்,வலிக்கு அதான் தந்தார்கள்..
இருந்தாலும் நான் எடுக்கவில்லை...தூக்கம் கெடாமல் பாத்துக்குங்க..பசி கூடாம சரியான சமயத்துக்கு சாப்பிடுங்க...ஓரளவு தலைவலி வருவதை தடுக்கலாம்..தூங்கி பாருங்க..ரொம்ப சிரமமா இருந்தால் டைலினால் எடுக்கலாம்..எதுக்கும் உங்க டாக்டரிடம் ஒரு வார்த்தை கேட்டுட்டு சாப்பிடுங்க
எனக்கு புரியுது உங்க கஷ்டம்..ஒரு நாள் எனக்கும் வந்தது தலைவலி..சாப்பிடலாமா மாத்திரை என்றே நினைத்தூ விட்டேன் கடைசியில் எப்படியோ படுத்து உருண்டு பிரண்டு தூங்கினேன்.

Thank you so much உங்க ரிப்லைகு.உடன் பதில் போட முடியல.sorry.கர்பிணி பெண்கள் Fish சாபிட கூடாதா?அதிலுள்ள Mercury babyku கூடதா?

ஹாய் தனு கர்பினிகள் தினம் 4 பீஸ் மீன் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வார்கள்..சில வகை மீன்களின் தான் மெர்குரி அதிகமாக உள்ளது அது என்று என்று தெரியவில்லை.டூனா மீன் சாப்பிட கூடாதென்று கேள்விப்பட்டிருக்கிறேன்
மற்ற மீன்களை சாப்பிடுங்கள்

Thanx தளிகா.நேற்று Doctoridam கேட்டேன்.Shark
Mackerel (king)and tuna இதில் தான் அதிகம் என கூறினார்

தளிகா எனக்கும் மீன் அதிகமாக சாப்பிடும்படி டாக்டர் சொல்லியிருக்கிறார்.பேபி செண்டர் ல் இருந்து வந்த மெசேச் இலும் மீன் கட்டயம். சாப்பிட முடியாவிட்டால் மீன் எண்ணெய்க்குளிசை எடுக்கும்படி சொல்லியிருக்கிறார்கள்.
எனக்கு தலைவலிக்கு இலாவும் செல்வி அக்காவும் மாதுளம்யூஸ் ,ஒரேஞ் யூஸ் எல்லாம் அதிகமாக குடிக்கச்சொன்னார்கள்.உண்மையில் குறைவாக இருக்கிறது.என் நண்பிகூட சொன்னார் தண்ணீர் இந்த நேரம் நிறையத்தேவையாம்.இல்லாவிட்டால் தலையிடிக்குமாம் என்று.இப்போ 1மணித்தியாலத்துக்கு ஒருமுறை ஏதாவது யூஸ் குடிக்கிறேன் .தலைவலி இல்லை.முயற்சி செய்யுங்கோ.

சுரேஜினி

அப்படியா சுரேஜினி...முன்னயே நான் நல்ல லிட்டர் கணக்கா தண்ணி குடிப்பேன் இப்ப சொல்லவே வேனாம்...தினம் 2.5 லிட்டர் தண்ணியாவது என்னையறியாமல் குடித்து விடுவேன்..எனக்கு இப்ப தான் பழையபடி கொஞ்சம் அறுவெறுப்பு மாறி ஓரளவு உணவில் கான்சென்ட்ரேட் பன்ன முட்கிறது..இப்ப தான் ஆர்ஞ் எது மாதுளம் எது என்று பார்த்து பார்த்து சாப்பிட ஆரம்பித்திருக்கிறேன்...உங்களுக்கும் விரைவில் இதுவெல்லாம் மாறும்..சுரேஜினி மிக அழகாக பொறுமையாக பேசுகிறீர்கள் உங்களிடம் பேச எனக்கு ஆசை வந்துவிட்டது

thanx dhanu..king makceral enbadhu ayilai meen dhaane...nalla velai adhu idhu varai
saappidavillai.adhigam naan sappiduvadhu black pomfret..thanx again dhanu

ஆமா சுரேஜினி என்னிடமும் எதை சாப்பிடாவிட்டாலும் தினம் 4 பீஸ் மீன்,3 கப் பால், 1 முட்டை.1 கப் சத்து மாவு காய்ச்சியது சப்பிட சொன்னார்..அன்று சரியான அறுவறுப்பு சமயம் கேட்டதுமே வாந்திவந்துவிட்டது..இப்பொழுதெல்லாம் ஒழுங்கா சாப்பிடுறேன்..nalla saappidungka suerejini& dhanu

thanx தளிகா
எனக்கும் மீன்கலின் பெயர் தமிழில் தெரியாது.இதில் check பண்ணி பாருங்க.
http://www.arusuvai.com/tamil/forum/no/3647

http://www.americanpregnancy.org/pregnancyhealth/sushimercury.htm

தளி எனக்கு தண்ணீர் குடிப்பது பெரியபாடாக இருக்கு.எங்களூக்கு இன்னும் சமர் தொடங்கவில்லை.சமர் வந்தால் தண்ணியில் விருப்பம்வரும் என்று பாத்துக்கொண்டிருக்கிறேன்.
3மணிக்கு நித்திரை வராமல் எழும்பி உங்கள் மாதக்கணக்கு பற்றி எல்லாம் பாத்துவிட்டு படுத்துவிட்டேன்.இப்போ அதை என்னால் தேடிப்பிடிக்க முடியவில்லை அதனால் இங்கேயே பதிவு போடுகிறேன்.

கர்ப்பகாலம் = 280நாட்கள்
40 வாரங்கள்
முறை 1
திகதி
கடைசி மாதவிடாய்த்திகதி[மாதவிடாயின் 1வது நாள்]+7நாள்
உதாரணம்
கடைசி மாதவிடாய்த்திகதி 8ஆக இருப்பின் 8+7=15
உங்கள் பிரவசத்திகதி 15

மாதம்
கடைசி மாதவிடாய் மாதம் - 3மாதங்கள்
உதாரணம்
கடைசி மாதவிடாய் மாதம் ஜனவரி
ஜனவரியில் இருந்து 3மாதங்களைக்குறைத்தால் ஒக்டோபர்
உங்கள் பிரசவ மாதம் ஒக்டோபர்

பிரசவம் ஒக்டோபர் 15

280 நாட்களை ஒரு மாதத்தில் 28 நாட்கள் என்று பிரித்து நம்மவர்கள் 10மாசம் சுமந்து பெற்ற பாடும் மறந்து... என்று சொல்லிப்பாடுகிறார்கள் சரியோ.
ஆனால் இங்கு யாரும் மாசத்தைக்கணக்கு வைப்பதில்லை எத்தனை வாரம் என்பதைத்தான் உபயோகிக்கிறார்கள்.உண்மையில் மாசப்படி கணக்கு வைப்பதாக இருந்தால் தளி சொல்வதுபோல் ஒவ்வொரு மாதமும் பீரியட் தேதியை ஜனவரி 8 பெப்ருவரி8 மார்ச் 8 என்று எண்ணிக்கொண்டு போனால் 9 மாதமும் 1 வாரமும் ஆன காலப்பகுதியே கர்ப்பகாலம் ஆகிறது.உண்மையும் இதுதான் யாரும் 10 மாசம் சுமப்பதில்லை.

முறை 2
கடைசி மாதவிடாய்த்திகதி + 7 நாள்
கடைசி மாதவிடாய் மாதம் + 9 மாதங்கள்

உதாரணம்
கடைசி மாதவிடாய்த்திகதி 8 அப்போ 8 + 7 =15
கடைசி மாதவிடாய் மாதம் ஜனவரி
ஜனவரி வருடத்தின் 1 வது மாதமாகையால் 1 என்று கணக்கு வைப்போம் [பெப்ருவரி என்றால் 2 ஹா ஹா]

இத்துடன் 9 மாதங்களைக்கூட்டுவது என்றால்

1 +9 =10
வருடத்தின் 10மாதம் அதாவது ஒக்டோபர்

பிரசவம் ஒக்டோபர் 15

கருவுர்ற நாளிலிருந்து 38 வாரமும் கடைசி மாதவிடாய் நாளிலிருந்து 40 வாரமும் கர்ப்ப காலங்கள்.

தளி சுற்றினால் என்னைத்திட்ட வேண்டாம் .கர்ப்பகாலத்தில் இப்படித்தான் இருக்கும்.

தானு மீன் பெயர் லிங்க் தந்ததுக்கு மிக்க நன்றி .எனக்கு அறுசுவை மூலம் வெளவால் மீனை மட்டும்தான் தெரியும்.இப்போ மீனின் பெயர்கள் எனக்கு தேவையா இருக்கு.நன்றீ.
சுரேஜினி

சுரேஜினி! தண்ணீர்குடிக்க முடியலைன்னா...
பானகம் அதிகம் புளி சேர்க்காமல் or தேசிக்காய் சாறு சேர்த்து குடிங்க.
http://www.arusuvai.com/tamil/node/10777
டீ-காபினேட்டட் ஹெர்பல் டீ .. லெமன் ஜிஞ்சர்... தாய் கோக்கனட்...ஹைபிஸ்கஸ் லெமன்.... ஜாஸ்மின் கிரீன் டீ .. ராஸ்பெர்ரி எல்லாம் சூடா தயார் செய்து அப்புரம் குளிர வச்சு பிரிட்ஜ்ல வைத்துக்கோங்க... இப்ப அவசரமா பதில் போடறேன். வந்து தெளிவா சொல்லரேன்
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்