பறவை நோட் ஹோல்டர் செய்வது எப்படி?

தேதி: March 13, 2009

5
Average: 4.7 (6 votes)

கைவேலைக்காகப் பயன்படுத்திய பின் கத்தரிக்கோலை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்துவது நல்லதல்ல. இந்த வகைக் கத்தரிக்கோல்கள் எலும்புகளையும் இலகுவாக வெட்டக் கூடியவை. அவதானத்துடன் கையாளவும். இந்த அழகிய பறவை நோட் ஹோல்டரை செய்து காட்டியவர், அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள். 24 வருடமாக ஆசிரிய பணியை சிறப்புடன் செய்து வருகிறார். உணவுகள் தயாரிப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதை கலையுணர்வுடன் அழகுபடுத்தி பரிமாறுவதில்தான் மிகவும் ஆர்வம் என்று சொல்லும் இவர், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்.

 

மூடியுடனான சிறு ப்ளாஸ்டிக் டப்பா - 1 (கறுப்பு நிறம்)
அதே அளவான ப்ளாஸ்டிக் ஸ்ப்ரே கேன் (spray can) மூடி - 1 (கறுப்பு நிறம்)
ப்ளாஸ்டிக் க்ளிப் - 1 (கறுப்பு நிறம்)
மார்பிள் குண்டுகள் - 10-15
ப்ளாஸ்டிக் ஒட்டுவதற்கான க்ளூ
சமையலறையில் பயன்படுத்தும் கத்தரிக்கோல்

 

முதலில் நோட் ஹோல்டர் செய்ய தேவையானவற்றை தயார்படுத்தி வைத்துக் கொள்ளவும்.
டப்பாவிலிருக்கும் லேபிலினை முற்றிலுமாக நீக்கி விட்டு அதை சுத்தப் படுத்தவும்.
டப்பாவின் ஒரு பகுதியில்(அரை பாகம்) கொள்ளுமாறு மார்பிள்களை நிரப்பி மூடி விடவும்.
ஸ்ப்ரே கேன் மூடியிலிருந்து நடு வட்டத்தை மட்டும் கவனமாக வெட்டி எடுக்கவும்.
மீதி இருக்கும் துண்டிலிருந்து இறகு போன்ற வடிவங்கள், எத்தனை முடியுமோ அத்தனை வெட்டி எடுத்துக் கொள்ளவும். (மூடியின் வளைவு இறகு வடிவம் கிடைக்க உதவும்.)
வெட்டி வைத்துள்ள வட்ட வடிவத் துண்டை குறுக்கே நறுக்கி இரண்டு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
இவற்றை மார்பிள் அடைத்துள்ள டப்பாவின் வளைந்த மேற்பரப்பில், க்ளூ உதவியால் பறவையின் வால் போல் வருமாறு ஒட்டி விடவும். மார்பிள்கள் அடியில் வருமாறு ப்ளாஸ்டிக் டப்பாவை ஒரு முறை குலுக்கி விட்டு, ஒட்டிய வால் காயும் வரை மேற்புறம் இருக்குமாறு நிறுத்தி வைக்கவும். (க்ளூ உலர்வதற்கு எடுக்கும் நேரம் நீங்கள் தெரிவு செய்யும் தயாரிப்பைப் பொறுத்தது. அவசரப்பட்டு நிமிர்த்தினால் இறகுகள் இடம் மாறிவிடலாம்.)
வால் காய்ந்தபின் டப்பாவை நிமிர்த்தி வெட்டி வைத்துள்ள அரை வட்டங்களை பறவையின் இறக்கைகள் போல் இருபுறமும் ஒட்டி விடவும். ஒரு முறை அசைத்து மார்பிள்களைச் சரியான இடத்துக்குக் கொண்டு வந்து தேவையானபடி டப்பாவை நிறுத்தி வைக்கவும். இறக்கைகள் காயும் வரை அசையாது வைத்திருக்கவும்.
நன்கு காய்ந்தபின் க்ளிப்பை பறவையின் தலை போல் வைத்து ஒட்டிக் காயவிடவும்.
முன்பு இறகு வெட்டி மீந்துள்ள துண்டுகளிருந்து, கால்கள் இரண்டு வெட்டிக் கொள்ளவும்.
அவற்றை டப்பாவின் அடியில் பொருத்தமான இடத்தில் வைத்து ஒட்டி விடவும்.
அழகிய பறவை நோட் ஹோல்டர் ரெடி. ஒவ்வொரு முறையும் க்ளூ காய்வதற்குப் போதிய அவகாசம் கொடுத்தல் அவசியம். அழகாக இருக்கும் இந்தப் பறவையின் அலகில் குறிப்புச் சீட்டுக்களைச் சொருகி வைக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

lakshmi ravindran
bird note holder is looking very nice

lakshmi ravindran

மிகவும் அருமையான ஆக்கம். உங்களிற்கு எனது வாழ்த்துகள் .

அன்பே வாழ்வை வழமாக்கும்

அன்பே வாழ்வை வழமாக்கும்

எனது ஆக்கங்களை வெளியிட்டு ஊக்குவிக்கும் அட்மின் & அறுசுவை குழுவினர்க்கு முதலில் எனது மனமார்ந்த நன்றிகள்.
நன்றி லக்ஷ்மி. உங்கள் பாராட்டு ஊக்கம் கொடுக்கிறது.
ஹாய் ப்ருந்தா, அறுசுவை சார்பாக உங்களை வரவேற்கிறேன். இணைந்ததும் முதல் பின்னூட்டமே எனக்குத்தானா? :-) மகிழ்ச்சி. நன்றி.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் இமா,
நல்ல கற்பனை. அழகா ஒரு பறவை மாதிரியே இருக்கு. பாராட்டுகள்.
எனக்கும் ஒன்று செய்து அனுப்புங்களேன்:-)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இதைப் பார்த்தவுடன் பறவை விடு தூது என்ற வாசகம் நினைவு வருகிறது.அட்டகாசமய் இருக்கிறது.ஒட்டி காய வைத்து எடுப்பது மிகவும் சிரமம் ,அதிலும் சேப் கொண்டு வந்தது மிகவும் சிறப்பு.பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

கற்பனை எல்லாம் கிடையாது செல்வி. கண்ணாடி அணியாமல் ஒரு நாள் ஜெல் டப்பாவையும் க்ளிப்பையும் அருகருகே பார்த்த போது கிடைத்த காட்சிப் பிழை இப்படி உருவெடுத்திருக்கிறது. அவ்வளவுதான். சரி, விலாசம் சொல்லுங்கள். அனுப்பி வைக்கிறேன். :-)

//பறவை விடு தூது// :-) பின்னூட்டம் ரசிக்கும்படியாக இருக்கிறது ஆசியா.

உங்கள் இருவருக்கும் எனது நன்றிகள்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மிகவும் அருமையாக இருக்கு..எப்படி இப்படி எல்லாம்…
இதற்கு எல்லாம் மிகவும் பொருமை மிகவும் அவசியம்…அதிலும் பறவை மாதிரி வடிவம் கொண்டு வருவது எல்லாம் மிகவும் சூப்பர்..
உங்களுடைய கிப்ட் பாகினை செய்துவைத்துள்ளேன்…
அதனை என்னுடைய பொண்ணு எடுத்து கொண்டு நடந்து கொண்டு இருக்கிறாள்…என்கிட்ட கொடு என்றால் கொடுக்க மட்டேன்…என்று சொல்கிறாள்…அவளுக்கு மிகவும் பிடித்து போய்விட்ட்து…
அன்புடன்,
கீதா ஆச்சல்.

இமா ரீச்சர்!!! இன்னுமா தூங்கலை??!!!நீங்க ரொம்ப கற்பனை திறனுடையவராக இருக்கீங்க. எனக்கில்லாட்டி என்ன.. என் பிரெண்ட் இமா செய்து அனுப்புவாங்க.. இந்த வருஷம் முன்னமே வாழ்த்துஅட்டை ஒரு பெட்டி பார்சல் மை பிரெண்ட்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

முக்கியமான ஐடியா!!! நீங்க ஏன் இதனை ஒரு வீடியோவாக கொண்டு வரக்கூடாது. பல பெண்கள் கைவினை பொருள் செய்து சம்பாதிக்கிறார்கள். கிராமப்புற பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற உதவிடும்ன்னு நினைக்கிறேன். உங்க படைப்பு எல்லாமே நல்லா இருக்கு. அட்மினும் கவனிக்க. இங்க இருக்கும் கைவினை பொருள்களை இப்படி ஒரு திட்டமாக செய்யலாமே... மினிமம் நாகையில் ஒரு வொர்க்ஷாப் நடத்தலாம் . ஐடியா சரியில்லைன்ன அடிக்க வரவேணாம்.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சந்தோஷம் கீதா. குட்டீஸுக்குப் பிடித்தால் எல்லோருக்கும் பிடித்த மாதிரி இல்லையா? :-) மகளுக்கு என் அன்பு.
பாராட்டுக்கு நன்றி.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

குட்டன் மோகன், இலா வீரா. (9.19 மு.ப) இலாவுக்கு இலாததா? கட்டாயம் அனுப்புகிறேன்.
அட்ரஸ் ப்ளீஸ். :-)
ஐடியா நன்றாகத்தான் இருக்கிறது. பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். நான் ரெடி. யாருக்காவது உதவ முடிந்தால் எனக்கும் சந்தோஷம்தான். (நாகையில் வொர்க் ஷாப் என்றால் மறுக்கவே.... மாட்டேன். :-) பொறுங்க இலா, அட்மினை இன்னும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுங்க.)

‍- இமா க்றிஸ்

ரொம்ப அழகா இருக்கு இமா,நல்ல வித்தியாசமான கற்பனை!!எனக்கெல்லாம் புது ஐடியா சுத்திபோட்டாலாம் வராதுப்பா.பாராட்டுக்கள் இமா.இன்னும் நிறைய குடுங்கள் பார்ப்பதற்க்கு நிஜப்பறவைப்போலவே இருக்கு..

ஹாய் மேனு,
'இருக்கீங்களா?' என்று கேட்டீர்கள். உங்கள் பின்னாடியே வருகிறேன். நிற்காமல் ஓடுகிறீர்களே! இது நல்லாவே இல்லை. :-( இங்கேயும் டீச்சரா? :-(
நன்றி மேனு. உங்கள் அன்பு வேண்டுகோளை நிறைவேற்ற நிச்சயம் முயற்சிக்கிறேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா எப்படி இப்படி எல்லாம்??!! வால், கால் எல்லாம் இவ்வளவு துல்லியமாக வெட்டியுள்ளீர்களே!!
Kia Ora[Cheers!! :-))]

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

sala தோசத்துக்கு ஒரு சிறந்த வைத்தியம் சொல்லுங்க

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

உங்கள் பறவை மிகவும் அருமை உங்களுக்குள் இப்படி ஒரு திறமை உள்ளத உண்மையாகவே முகவும் அழகாக உள்ளது மிகும் ந்தன்க்ஸ் உங்களுக்கு

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா,
ஜலதோஷத்துக்கு நிறைய ஜலம் குடியுங்கள். ஆவி பிடிக்கலாம். சூடாக லெமன் ஜூஸ் உதவும். அதிகம் உதவ முடியவில்லை. மன்றத்தில் அரட்டையில் கேட்டால் நிறைய அட்வைஸ் கிடைக்கும்.
உங்கள் பாராட்டுக்கு நன்றி சோனியா.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

கியா ஓரா உத்ரா.
//கால் எல்லாம் இவ்வளவு துல்லியமாக வெட்டியுள்ளீர்களே!!//
என்ன உத்ரா? சிரிக்கிறீங்களா? இது எந்தப் பறவை மாதிரி இருக்கு? (கலபகொஸ் தீவில பொறுக்கின ஃபாஸில் மாதிரி இருக்கு.)
பாராட்டுக்கு நன்றி. :-)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இப்பொழுது அரடைல ஒரு விடு கதை kedu இருக்கேன் அதை ningalum muyarchi barunga

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ரொம்ப நன்றாக இருக்கு. அதுவும் என் குட்டிஸுக்கு ஸ்கூல் ப்ரோஜக்டக்கு+வெக்கேஷன் டைமில் இதை மாதிரி எல்லாம் சொல்லி குடுக்க நன்றாகவும் எளிதாகவும் இருக்கு இமா. மேலும் நிறய்ய குடுங்க.
நன்றி.

இமா நலமாக இருக்கிறீர்களா?உங்களுடன் கதைத்து நீண்ட நாட்களாகி விட்டது.
உங்கள் குருவி மிகவும் அருமையாக இருக்கிறது.
எவ்வளவு நேர்த்தியாக செய்திருக்கிறீர்கள். எப்படி இப்படி எல்லாம் ஐடியா தோன்றுகிறது. இப்படி மேலும் நிறைய குறிப்புக்களைக் கொடுத்துக் கொண்டே இருங்கள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

இமா!! கறுப்புக் காகம் அழகாக இருக்கு, அன்று படம் பார்த்ததுமே யாராக இருக்குமென ஓபின் பண்ண எண்ணி எழுந்து போயிட்டேன், இப்போ பார்க்கிறேன், அது இமாவா? நம்பவே முடியவில்லை?:).

உண்மையில் நீங்கள்தான் செய்தீங்களா? அல்லது பிரம்பைக் காட்டி, ஸ்கூலில் பிள்ளைகளைக் கொண்டு செய்தீங்களோ:), அடிக்க வேண்டாம்.

இலா என்னவோ எல்லாம் ஐடியாச் சொல்கிறா... ஷொப் ஆம், நாகையிலயாம்? எப்போ திறப்புவிழா? ரிக்கட் போடவேணுமல்லோ வருவதற்கு அதுதான் கேட்கிறேன்.:).

இமா உண்மையிலேயே மிகவும் அழகாக இருக்கு, முதுகில் ஒரு பெரிய ஓட்டை வைத்தால் பென் ஹோல்டராகவும் பாவிக்கலாம் என எனக்கு ஐடியா வருது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி விஜி. ஆனால் சிறுவர்களிடம் கொடுக்கும் க்ளூ பற்றியும் கத்தரிக்கோல் பற்றியும் கவனமாக இருங்கள். நேரம் கிடைக்கும் போது நிச்சயம் முயற்சிக்கிறேன்.
உங்களுக்கும் எனது நன்றிகள் வத்சலா. நிச்சயம் முயற்சிப்பேன். இதைக் குருவி என்று சொன்னதற்கு நன்றி. :-)
அதிரா என்னைக் காகம் என்கிற மாதிரி இருக்கு. :-( //முதுகில் ஒரு பெரிய ஓட்டை // நல்ல ஐடியா அதிரா. நீங்களும் ஏதாவது க்ராஃப்ட் செய்யுங்களேன். (என் முதுகில் ஓட்டை போடாமல்!) காகம், காகம் என்று படித்துவிட்டு அதிரா வந்து வடை சுட்ட கதை சொல்லுறீங்களாக்கும் எண்டு நினச்சன். நன்றி அதிரா.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

மிகவும் அழகாக இருக்கிறது. பிள்ளைகளை செய்து பார்க்க சொல்ல வேண்டும்.

god is my sheperd

பின்னூட்டத்திற்கு நன்றி ஃபெல்ஷியா. உங்களோடு முன்பு பேசியதில்லை. நலமா? குழந்தைகள் கூட இருந்து மேற்பார்வை செய்யுங்கள். தனியே விடவேண்டாம்.

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta