குறிஞ்சா வறை/சுண்டல்

தேதி: March 14, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (5 votes)

 

குறிஞ்சா இலைகள் - 200 கிராம்
வெங்காயம் - 30 கிராம்
காய்ந்த மிளகாய் - 3
தேங்கய்ப் பூ - 4 - 5 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரைத் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
உப்பு - அரைத் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 4 - 5 மேசைக்கரண்டி


 

குறிஞ்சா இலைகளை, ஒரு ஈரத் துணியால் அல்லது கிச்சன் டவலை நனைத்து, நன்கு துடைத்து எடுத்துக் கொள்ளவும். இலைகள் சுத்தமில்லாமல் இருந்தால், நிறையத் தண்ணீரில் மெதுவாக அலசிக் கழுவி, துடைத்தெடுக்கவும். இலைகள் கசங்கினால் கைப்பு அதிகமாகும்.
பின்னர், காம்புகளை நீக்கிவிட்டு, இலைகளை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி, சிறிய கட்டுகளாக உருட்டி, மெல்லிய கூர்க்கத்தி அல்லது ப்ளேட்டை உபயோகித்து தலைமுடியைப் போல் மெல்லியதாக, நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை தோல் உரித்து மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை இரண்டிரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் குறிஞ்சா இலைகளை போட்டு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றை போட்டு பிரட்டி வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம், காய்ந்த மிளகாயை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பிரட்டி வைத்துள்ள குறிஞ்சா இலைகளை போட்டு பிரட்டவும்.
இரண்டு, மூன்று நிமிடம் பிரட்டிய பின்னர் உடனே இறக்கி வைத்து விடவும்.
சுவையான குறிஞ்சா வறை தயார். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஏங்க வைக்கிறீங்களே அதிரா. :-) படங்களெல்லாம் அழகாக இருக்கின்றன.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

lakshmi ravindran
kurinja leaf is not familiar for me,this one call any other name, this recipe looking nice

lakshmi ravindran

அன்பு அதிரா,
நலமா? எனக்கே எனக்குன்னு போட்ட குறிப்பா தான் எனக்கு தோணுது (இனியாவது வேலியெல்லாம் மேயாமல் ஒழுங்கா ரோட்டில் நடக்க சொல்லி சொல்றது கேட்குது). இதை பச்சை பசலைன்னு நாங்க சொல்வோம். இதில என்ன கொடுமைன்னா, இதை நான் கொண்டு வந்து வீட்டில் நட்டு வைத்து ஒருமாசாச்சு. ஆக, வீட்டிலேயே செடியை வெச்சுகிட்டு வேலியெல்லாம் தேடி இருக்கேன்:-) இது லேசான வழுவழுப்பு தன்மை இருக்கும் தானே?
குறிப்பும் ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் இலை வரட்டும். செய்து பார்த்து சொல்கிறேன். இந்த கீரையை நாங்க கர்ப்பிணிகளுக்கு அதிகம் கொடுப்போம்.
எனக்காக கனடாவில் இருந்து வரவழைத்து போட்டோ போட்டதற்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விக்கா
ஏற்கெனவே நாந்தான் சொன்னேனே, இது பசலைக்கீரை, வழுவழுப்பா இருக்கும்னு நீங்க இல்லன்னு சொல்லி, நானும் இன்றுவரை குறிஞ்சாஇலையை தேடிட்டு இருந்தேன்!

அக்கா இது நம்ம ஊர் பச்சை பசலைகீரைதான்.ஒரு வழியாக அதிராவின் உதவியால் குறிஞ்சாஇலைக்கு விடைகிடைத்துவிட்டது.

அதிரா இந்த குறிப்பை நான் ஊருக்கு செல்லும்பொழுது செய்துபார்த்துவிட்டு சொல்கிறேன்.
செல்வி

சவுதி செல்வி

ஆமாம் கீதா, நீ சொன்னது சரிதான். இது பச்சை பசலை. இன்னொரு வகைதான் வயலட் கலர்ல இருக்கும். இப்ப நானே நட்டு வெச்சிருக்கேன் இரண்டு வகையையும்.
செல்வி,
மெயில் பார்த்தியா? இப்ப எரிச்சல் எப்படி இருக்கு?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

சகோதரிகளே,
இது பசலை அல்ல. குறிஞ்சா. பசலை கசக்காது. குறிஞ்சா வழுவழுக்காது. வயலட் கலர்ல இருக்காது. பச்சை மட்டும்தான்.
அதிரா, உங்கள் முயற்சியெல்லாம் வேஸ்ட். :-(( போட்டோ எல்லாம் சரிவராது. இவங்களுக்கு ஆளுக்கொரு கட்டு பாசல் அனுப்புங்க. :-)
உத்ரா, பின்னூட்டம் மாறியிருக்கிறது. :-)

‍- இமா க்றிஸ்

எனக்கு தெரிந்தது அதிரா குறிஞ்ச இலையயை சுருட்டி வைத்து வெட்டிய விதம் சூப்பர்.

என் கண்ணுக்கு நல்ல விளக்கெண்ணை ஊற்றி தான் பார்த்தேன் அது வெத்தலை மாதிரி தெரியுது, என்ன அதிரா தலையிடி போச்சா இல்லையா?
ஆவி புடிகோ எல்லாம் சரியாகிடும்.

ஜலீலா

Jaleelakamal

என்னால் சிரிக்கவும் முடியவில்லை. சிரிக்காமல் இருக்கவும் முடியவில்லை. எதை எதை எல்லாம் சமைக்கப் போறீங்களோ? :-)
அதிரா, இங்கே வந்து பாருங்களேன். உரமாகத் தல இடிக்கப் போகுது. :-)

‍- இமா க்றிஸ்

இமா இங்கு கனடாவில் இது தாராளமாக கிடைக்கிறது.செய்யத்தெரியாமல்தான் வேண்டியதில்லை.ஆனால் விருப்பம் என் கேள்வி கர்ப்பிணிகள் சாப்பிடலாமா?சொன்னால் இண்டைக்கே வேண்டுவம்ல.
இமா நாங்கள் பசலைக்கீரை என்று சொல்வது வழு வழுவென்று இருக்கும் கீரையை அல்லவா.அப்போ இந்த நண்பிகள் பசலைக்கீரை குறிப்பை இதில் போட்டார்கள் என்றால் நாங்கள் தலையைப்பிக்க வேணும்போல இருக்கு.என்னாலும் சிரிப்பு தாங்க முடியவில்லை.

சுரேஜினி

ஹாய் இமா,
அவசரமா இங்க வாங்க. நீங்க சொல்றது நிஜமா? பாக்கு, சுண்ணாம்பு வெச்சு மென்றால் சிவக்குமா? அதை தான் சொல்கிறீர்களா? அப்படின்னா அது வெற்றிலை இல்லையா? வெற்றிலையில் 2 வகை உண்டு. கற்பூர வெற்றிலை, பச்சை வெற்றிலை (குண்டு வெற்றிலை). வெற்றிலை தானென்றால் எங்களை குழப்பிய உங்களுக்கும் அதிராவுக்கும் உண்டு தண்டனை. ஏன்னா எங்க ஊர் பக்கம் விவசாயமே வெற்றிலை தான். அதற்கு குறிஞ்சா என்றொரு பெயர் உள்ளது என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். தாம்பூலம் போடுவதை தவிர அதை சமைத்ததில்லை. மீதி பதில் கண்டு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

எனக்கும் வெத்தலை மாதிரி தான் இருக்கு பார்க்க.ஆனால் அழகா அதை கட் பன்ணி செய்திருக்கிங்க.நல்லாயிருக்கு அதிரா,இப்ப எனக்கு தலையிடியா இருக்கு அது வெத்தலையா,குறிங்சா இலையா சீக்கிரம் வந்து எங்கட சந்தேகத்தை தீர்த்து வைங்க அதிரா..

செல்வி அக்கா எங்கட ஊரிலயும் வெத்தில விளையுதாக்கும்.உண்மை என்னெண்டா வெத்திலைக்கும் குறிஞ்சா இலைக்கும் உருவத்தை தவிர எந்த சம்மந்தமும் கிடயாது.இது லைட்டா கைக்கும்[கசக்கும்]சரியோ
சுரேஜினி

அதிரா நலமா?
இப்படித்தான் நானும் குறிஞ்சா வறை செய்வேன். ஊரில் இருக்கும் போது அம்மா அடிக்கடி செய்வா. நீரிழிவு நோய்க்கு நல்லது என்று சொல்வார்கள்.குரக்கன் புட்டுடன் சேர்த்து அவிப்பார்கள்.

செல்வி அக்கா நலமா? இது நீங்கள் கூறும் பச்சைப் பசலை அல்ல.வெற்றிலையும் அல்ல.இமா சொல்வது போல் இதற்கு வழுவழுப்புத் தன்மை கிடையாது.இது கசப்புத் தன்மையுடையது.பச்சைப் பசலையை நாங்கள் பசலி என்போம். அது தான் வழுவழுப்புத் தன்மையுடையது.இது பார்ப்பதற்கு வெற்றிலை போல் தான் இருக்கும்.வெற்றிலையின் காம்பு இவ்வளவு நீளமாகவா இருக்கும்.

இமா நலமாக இருக்கிறீர்களா? உங்கள் நாட்டில் இது வாங்க முடியாதா? இங்கும் 4,5 ஏசியன் கடை இருக்கு ஆனால் ஒரு கடையில் மட்டும்தான் குறிஞ்சா வாங்கக் கூடியதாக உள்ளது.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

பார்க்கவும் அழகு,சமைத்த விதமும் அழகு.குறிஞ்சாவின் ஆங்கிலப்பெயர் என்ன?அதனை தெரிந்துகொண்டால் ஒரளவு ஊகிக்க முடியுமா ?என்று பார்க்கத்தான்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்ன இலை இதுன்னு நீங்க யாரும் இன்னும் முடிவுக்கு வரலை போல... :(

ஜலீலா... உங்களுக்காது வெத்தலை மாதிரி தெரியுது... எனக்கு எப்படி தெரியுதுன்னு சொன்னா எல்லாரும் சிரிப்பீங்க. நம்ம ஊர்ல கிராமத்துல ஒரு மரம் இருக்கும்... மஞ்சள் கலர் பூ இருக்கும். அதன் இலைகளை சுருட்டி விஸில் செய்து சின்ன பிள்ளைகள் ஊதும். அந்த மரம் பேரு நியாபகத்துக்கு வந்து தொலய மாட்டங்குது.... :( அந்த இலை போல் இருக்கு. அதை சமைச்சு நான் இது வரை பார்த்ததில்லை. காலையில் இருந்து நானும் இதை பல ஆங்கில்ல உத்து உத்து பாத்துகிட்டு தான் இருக்கேன்.

நெட்டில் தேடினா இந்த பேருக்கு தமிழில் "natpalai"னு வருது. யாருக்காது இந்த பேரு கேட்ட மாதிரி இருக்கா?

இந்த குறிஞ்சா'ன்ற பேரை தெலுகு பேருன்னு சொல்றாங்க... Other tamil names given:

naippalai, nancaruppan, nancharuppan, nanjaruppan, nayppalai, nangilaippirattai, paalaaikeerai, kondam, karungai, kaakittam

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அது பூவரசம் இலை.இது அதுல்ல.இது இலை என்பதை விட மூலிகை என்றுகூட சொல்லலாம்.சிலவேளை இது இந்தியாவில் இல்லாமல் இருக்கலாம்.மீதி அதிராவைத்தான் கேக்க வேணும்.

சுரேஜினி

குறிஞ்சா படுத்தும் பாடு:)
முதலில் இதை நான் கேட்டுக்கொண்டபடி வெளியிட்ட அட்மினுக்கு மிக்க மிக்க நன்றி.

என்னால் பகல் இதைப் பார்க்க முடியவில்லை, இத்தனை பேரை இந்தக் குறிஞ்சா பாடாய்ப்படுத்துகிறது:), நான் நினைத்திருந்தேன், படம் போட்டால் விடை கிடைத்துவிடும் என்று. ஆனால் இன்னும் குழம்பித்தானுள்ளார்கள்.

நல்லவேளை இமா, சுரேஜினி, வத்சலா பதிலளித்ததால், இது பசளி இல்லை என்பதை சொல்லியாச்சு. இல்லாவிட்டால் செல்வியக்கா, சாய்கீதா, எஸ்எம்எஸ் செல்வி எல்லோருமே பசளிதான் என முடித்திருப்பார்கள்.:)

இமா சொன்னதுபோல், செல்வியக்கா உங்களுக்காக கனடாவிலிருந்து அவசரமாக வரவழைத்தது வேஸ்ட்தான்.:) பார்க்கா பளபளப்பாக இருக்கும் ஆனால் வழுவழுப்பாக இருக்காது. பசளிக்கீரையில் தண்ணித்தன்மை உண்டு, அதில் கறி வைத்தால் மசிந்து வருமெல்லோ, இது அப்படி மசியாது, இதில் தண்ணித்தன்மை இல்லை. கைக்கும்.

மேனகா!! வெற்றிலைபோலவே இருக்கும் ஆனால் வெற்றிலை அல்ல.
லக்ஸ்மி! இதுக்கு வேறு பெயர் இருப்பதாக எனக்குத் தெரியேல்லை.
ஜலீலாக்கா! இமா சொன்னதுபோல், தலையிடி வந்தாலும் வந்துவிடும்போல இருக்கு, எல்லோரும் கெதியா கண்டுபிடியுங்கோ குறிஞ்சாவை. அல்லது செல்வியக்கா.. வேலிக்கை பூருவதை விட்டுவிட்டு எனக்கொரு டிக்கட் போட்டால் நான் வந்து கரெக்ட்டா காட்டித்தாறேன்:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

குறிஞ்சா
வத்சலா! உண்மைதான் எனக்கும் சரியான விருப்பம், ஆனால் இங்கே கிடைப்பதில்லை.
இது நீரிழிவு நோய்க்கும் மிக நல்ல மருந்து. குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றிலுள்ள தேவையற்ற பூச்சிகள் அழிந்துவிடும். வயிற்று நோ இருப்பவர்களுக்கு நோவைக் குறைக்கும். எங்கள் அப்பம்மா, அரிசியை ஊறவிட்டு பின்னர் குறிஞ்சா இலைகளைப் போட்டு சேர்த்து அரைத்து அப்படியே புட்டவிப்பா, நான் இதுவரை அப் புட்டு உண்டதில்லை, ஆனால் சுவை என்றார்கள்.

ஆஸியா, இதன் ஆங்கிலப் பெயரும் தெரியவில்லை. முயற்சி செய்கிறேன், யாராவது சொன்னால் சொல்கிறேன். இதைக் குறிஞ்சா என்று தவிர வேறெப்படியும் கூப்பிட்டுப் பழக்கமில்லை.

வனிதா!! நான் சொல்ல வந்தேன் சுரேஜினி சொல்லிப்போட்டா, அது பூவரசம் இலைதான், நான் ஊருக்குப் போனால் ஒரு தடவை விசிலாகச் செய்து ஊதுவது வழக்கம். அதைப் படங்களில் பார்த்தாலே எனக்கு ஊர் ஞாபகம் வந்துவிடும். இதுவும் அதுபோலத்தான் ஆனால் குறிஞ்சா கடும் பச்சை நிறம் பெரிய காம்புகள்.

சுரேஜினி!! இது நீங்களும் சாப்பிடலாம் என்றுதான் நினைக்கிறேன். அதிகம் உண்ணாமல் இடைக்கிடை சாப்பிடுங்கோ. இது நீங்கள் சொன்னதுபோல் மூலிகைதான். சிலபேருக்கு குழந்தை வயிற்றிலிருக்கும்போது சுகர்த் தன்மை அதிகமாகுமெல்லோ, அதுக்கும் இது நல்லதுதானே.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா எங்கே போனீங்க? இங்கு பெரிய முஸ்பாத்தியாக இருக்கு.
முதலில் உத்தமி, உத்ரா இருவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். சிரித்துச் சிரித்து பெயரை மாற்றி எழுதிவிட்டேன்.
ஜலீலா, செல்விமா, மேனு, இது வெற்றிலை இல்லை. (அது நான் சும்மா எழுதியது. தாம்பூலம் மாதிரி போடாதீங்க. ஸ்மைலி பார்க்கவில்லையா? ஸாரி. எரர் வந்த்தில் உடன் பதில் போட இயலவில்லை.)
சுரே,
ஆமாம். கசக்கும். கர்ப்பிணிகள், மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கும் நல்லது. நிறைய இரும்புச் சத்து உள்ளது. உதிரப் போக்கு அதிகம் உள்ளவர்களையும் சாப்பிடச் சொல்லுவார்கள். (ஆனால் வேறு மருந்துகள் சாப்பிடும் போது அவற்றின் தன்மையைக் குறைத்துவிடும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். உண்மை தெரியாது.) நேற்று பார்த்தும் பதில் போட இயலவில்லை.
ஹாய் வத்சலா, அதிரா பாவம். இன்னும் தலை வலி தீரவில்லை போல. நீங்களாவது உதவிக்கு வந்தீங்க. இங்கு இதுவரை காணவில்லை.
ஆஸியா,
ஆங்கிலப் பெயர், தாவரவியற் பெயர் எதுவும் தெரியவில்லை. கூகிளிலும் பெயர் தவிர வேறு விபரம் இல்லை. ஆனால் அதிரா அழகாகப் படமெடுத்துப் போட்டிருக்கிறார்.
வனீ,
நீங்கள் சொல்வது பூவரசு. (மூன்று முடிச்சில் ஸ்ரீதேவி ஊதுவது.) :-) இது பாலைக் கீரையும் அல்ல. பாலைக் கீரையை விடவும் கடும் பச்சையாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

அப்பாடி. வந்துட்டீங்களா அதிரா? தலைவலி பரவாயில்லையா? போற போக்கப் பார்த்தால் வருசத்துக்குக் குறிஞ்சாவில கைவியலம் வச்சுக் குடுத்திருவாங்கள் போல. :-) இனி நீங்க பார்த்துக் கொள்ளுங்கோ. நான் போறன். இதுக்கு மேல சிரிக்க ஏலாது. :-)

‍- இமா க்றிஸ்

இமா போக வேண்டாம், சமையல் முடித்திருப்பீங்கள், கொஞ்சம் இன்னும் யோசித்து குறிஞ்சாவுக்கு விளக்கம் சொல்லுங்கோ:) உங்களுக்கும் ஒரு பார்ஷல் வேணுமோ?, இன்னுமொரு பார்ஷல்(பக்கட்) இருந்தது, இப்போதான் முழுவதையும் வெட்டி வைத்துவிட்டு வந்தேன் நாளைக்கு சுண்ட. இல்லாவிட்டால் பழுதாகிவிடுமல்லோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பார்க்கவே சாப்பிட வேண்டும் போல உள்ளது…சூப்ப்பர் அதிரா..
அன்புடன்,
கீதா ஆச்சல்

குறிஞ்சாவின் பொட்டானிகல் பெயர் Dregea volubilis. இந்த பெயரை டைப் செய்து கூகிள் இமேஜில் பாருங்கள் :) நான் தேடிப் பார்த்ததில் இதன் வேறு பெயர்கள் என்று ஒரு வெப் சைட்டிலிருந்து கண்டு பிடித்தவை :-

Assamese (1) khamal-lota

Bengali (1) tita kunga

Hindi (4) nakchhikni, nakchikni, murd bel, murd-bel

Kannada (3) dugdhike, karegije, karigichi

Malayalam (2) vattakkakkakkoti, wattakakacodi

Marathi (8) ambri, haranvela, hirandodi, hirandori, hori, khandodi, harandodi, harandori

Oriya (2) madhumalati

Sanskrit (18) hemajivanti, hemakshiri, hemalata, hemapurna, hemavalli, hemavati, hemavha, himashraya, madhumalati, saumya, sujivanti, sumangala, suparnika, svarnajiva, svarnajivantika, svarnalata, svarnaparna, trinagranthi

Tamil (10) kamal, kodippalai, kudasappalai, kurinja, kurinjakkirai, palaikkodi, singittam, sivandi, vanadittam, kodiepalay

Telugu (4) dudipala, palakura, palatige, doodeepalla

Urdu (1) nakchikni

அதிரா இதோடு குறிஞ்சா படுத்தும் பாடு தீரும் என நினைக்கிறேன். எனது மாமியார் பொட்னி டீச்சர். அவரிடம் கேட்டு பெயர் கண்டுபிடித்து தேடினேன். :)
-நர்மதா :)

பார்க்கவே ரொம்ப நல்லாயிருக்கு. ரொம்ப அழகா ப்ரெசண்ட் பண்ணியிருக்கீங்க. நானும் வெற்றிலையோனுதான் நினைத்தேன். பாவம் செல்விமா குறிஞ்சா இலை உங்களை படுத்துறபாடு.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தோழிகளே முன்னே ஒரு முறை இந்த பதிவு போடனும்னு நினைத்தேன்.ஆனால் எனக்கு இந்த குறிஞ்சா இலை பற்றி அவ்வளவாக தெரியாது.இணையதளத்தில் தேடிய பின் கிடைத்தது.இது சரியா என்று தெரியவில்லை.சரி என்றே நினைக்கிறேன்.

http://www.geocities.com/tamildictionary/herbs/

இந்த லிங்கில் போய் பார்த்தால் அதில் சிறு குறிஞ்சான் என்று இருக்கு.இந்த மூலிகைக்கு பெயர் -GYMNEMA SYLVESTRE.

http://www.shellaherbotech.com/gymnema-sylvestre-extract.html இந்த லின்கில் பார்த்தால் அதன் பலன்கள் பற்றி கூறியிருக்கின்றார்கள்.

முகப்பில் பார்த்தவுடன் நீங்கதான் போட்டு இருப்பிங்க என்று வந்தேன். சாப்புட்டு மிச்ச நாள் ஆகிட்டு. நாட்டுக்கு போனால்தான் சாப்பிடலாம்.
கழுவின இலையை அப்படியே வெட்டினால் கூடுதலான கசப்பு இருக்கும்.
கழுவிய இலையை சீலையால் துடைத்து பின்னர் பிளைட்டினால் அரிந்தால் கசப்பு குறைவாக இருக்கும்.
நம் அசத்தல் ராணிக்கு வாழ்த்து சொல்லவும் இல்லை. என் கணவர் காரில் செல்லும் போது விபத்து ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் அருசுவைப் பக்கம் வரவில்லை. இப்ப நல்லம்.
அன்புடன் அதி

அதி நீங்களும் குறிஞ்சாப் பிரியரா? இலங்கையர் எல்லோருக்குமே இது விருப்பம்தான். கணவருக்கு அக்ஸிடன்ரா? இப்ப நலமா? கவனமாக பார்த்துக்கொள்லுங்கோ. அங்கு உங்களுக்கு உதவிக்கு ஆட்கள் இருப்பார்கள்தானே.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா குறிஞ்சா வறை பார்க்கவே சாப்பிடத் தூண்டுகிறது. ஆனாலும் என்ன செய்வது, இமா சொனது போல் பார்சல் அனுப்பினால் மட்டுமே சாத்தியம். அனுப்புங்கோ அதிரா குறிஞ்சா பிரச்சினையும் தீரும், ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.

இமா நாந்தான் உங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். புலம்பல்னு எழுதலாமா, வருத்தப் பட்டிருக்கீங்கனு எழுதலாமானெல்லாம் யோசித்து கடைசியில் அங்கலாய்ப்புனு எழுதலாம் சங்கடமில்லாமல் போய்விடும் என்றுதான் அப்படி எழுதினேன், அதுவும் உங்களை சங்கடப் படுத்திவிட்டது, மன்னிச்சுக்கோங்கப்பா. :-)

அன்புடன் :-).......
உத்தமி :-)

கலக்கீட்டீங்க நர்மதா. :-) உபயோகமான தகவல். இனித்தான் ஒவ்வொன்றாகப் பார்க்கப் போகிறேன்.
அதி & உத்தமி, அ. பா 63 ல் சந்திக்கிறேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஐயையோ மன்னிச்சுக்கொள்ளுங்கோ...
எனக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை. மேலே உள்ளவை என் கண்ணுக்கு தெரியவில்லை, முகப்பில் தெரிந்த பதிவைப் பார்த்து அதிக்கு மட்டும் பதில் போட்டுவிட்டேன். இப்போதான் தற்செயலாகப் பார்த்துக் கண்டுகொண்டேன்.

நன்றி கீதாச்சல், நர்மதா.. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இந்தியாவில் பாலக் கீரை என்கிறார்களே அதுவாகத்தான் இருக்கும், எமக்குப் பாலக்கீரை தெரியாதெல்லோ. மிக்க நன்றி.

உண்மைதான் தனிஷா, செல்வியக்காவுக்கு குறிஞ்சாக்களை வந்துவிட்டது றெஸ்ட் எடுக்கிறா.:)

நன்றி சுகன்யா, குறிஞ்சாவில் இருவகை உண்டு, என்னுடையது பெருங் குறிஞ்சா, நீங்கள் சொல்வது சிறு குறிஞ்சா. சிறு குறிஞ்சாவில் அதிகம் மருத்துவக் குணம் உள்ளதாம் அது அடிக்கடி சாப்பிட்டால், சுகரை நன்கு குறைத்துவிடுமாம் எனக் கேள்விப்பட்டேன்.

எப்படித்தான் இத்தனை பேருக்கும் பதில் போடத் தவறினேனோ தெரியவில்லை, மீண்டும் கேட்கிறேன் மன்னித்துக்கொள்ளவும்.

உத்தமி, பார்சல் அனுப்புவது அழகல்ல:), நான் நேரே கொண்டு வருகிறேன் வாசல்கதவைத் திறந்து வைத்திருங்கோ.. செல்வியக்காவின் ரிக்கெட்டுக்காக காத்திருக்கிறேன்:),

இமா நானும் இனித்தான் ஒண்டொண்டாப் பார்க்கப்போகிறேன், நன்று இமா, உத்தமியின் உங்கள் பதிவால்தான் நான் மீண்டும் இதைப் பார்த்தேன், இல்லாவிட்டால் கனபேருக்கு பதிலனுப்பாமல் விட்டிருப்பேன், அவர்களும் எனக்கு ஏதோ தங்களைப் பிடிக்கவில்லையோ:) என எண்ணியிருப்பார்களே...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு அதிரா,
நீ குறிஞ்சா இலை படம் போட்டு அதைப் பார்த்து பார்த்து எனக்கு தலையிடியே வந்துவிட்டது. ஆசியாவின் சமையலாவது கொஞ்சம் செய்யலாம்னு நினைச்சேன். அதற்கும் குறிஞ்சா தடை போட்டு விட்டது. ஆனா, இன்னிக்கு வண்டியில் போகும் போது எங்கேயோ அதே போல் இலை பார்த்தேன். மாமா கிட்ட சொல்லி வண்டிய நிறுத்தமுன் ரொம்ப தூரம் போயாச்சு. திரும்ப வர டைம் இல்லை. நாளைக்கு நேரமே கிளம்பி பார்த்திருவேன். ஒண்ணு மட்டும் நல்லா தெரியுது, இங்க யாரும் அதை சமைப்பதில்லை.
மீதி நாளை தலையிடி குறைந்தால். மூன்று நாளாக உயிரை வாங்குது.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

செல்வியக்கா இப்படியெல்லாம் தப்பமுடியாது... இத் தடவை கட்டாயம் பங்குபற்றவேணும்:)

குறிஞ்சாவால உங்களுக்கு மட்டுமில்லை, மாமாவுக்கும் தலையிடிதான் போல:), பாலக் கீரை என்பது இல்லையா செல்வியக்கா, நர்மதாவின் ஆங்கில பெயரில் இருக்கிறதே?.

என் தலையிடி உங்களுக்கு வந்துவிட்டதோ?:) பனடோலைப் போட்டுக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு படுத்து ஓய்வெடுங்கோ, சுகமாகிவிடும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா குறிஞ்சா வறை செய்தேன் அப்படியே ஊரில் சாப்பிட்டதுபோல் இருந்தது மிக்க நன்றி.ஆனால் சாப்பிடும் போது என்னால் சிரிப்பு தாங்க முடியவில்லை.
ஆனால் இந்த குறிஞ்சாக்கு மட்டும் உணர்ச்சி இருந்தால் இந்தக்குறிஞ்சா இனமே தற்கொலை செய்துவிடும்.இப்போ கூட வேலில ஓரமா இருந்து தலையில அடிச்சு அடிச்சு இந்தக்கொள்ளைக்கூட்டத்தில் வந்து மாட்டியதை நினச்சு அழுது வாடி வதங்கிக்கொண்டிருக்கும்.

சுரேஜினி

குறிஞ்சா சாப்பிட்டாச்சா? அவ்வளவுதான், இனி இன்னும் நிறையப் பேருக்கு வயிறெரியப் போகுது:), குறிஞ்சாவையே கண்டுபிடிக்கவேயில்லையே:), கனடாவிலும் வாங்குவது கஸ்டம்தானே சுரேஜினி, எனக்குக்கூட 2/3 கடைகளில் போனில் கேட்டு சொல்லி வைத்துத்தான் வாங்கினார்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு அதிரா,
கண்டுபிடிச்சேன், கண்டுபிடிச்சேன்,
குறிஞ்சா இலையைக் கண்டுபிடிச்சேன்!!!
உஷ், அப்பாடா!!!!! ஒருவழியா குறிஞ்சா இலையை கண்டுபிடிச்சுட்டேன். ஆபீசில் என்னுடன் பணிபுரியும் ஒரு தோழி நீங்க சொல்வது போல் ஒரு செடி எங்க வீட்டில் இருக்கு, நாளை கொண்டு வந்து தர்றேன்னு நேற்று சொன்னாங்க. இன்னிக்கு கொண்டு வந்து கொடுத்த செடி(கொடி) குறிஞ்சாவே தான். சின்ன இலைகள் பச்சை பசலை போலவும், பெரிய இலைகள் வெற்றிலை போலவும் லேசான மினுமினுப்பு, மெலிதான இலை. அதே குறிஞ்சா!!!! வேருடன் கொடுத்தாங்கன்னு கஷ்டப்பட்டு நட்டு வைத்தேன். மதியம் எங்க லக்கியை வெளியே கூட்டிப் போய்ட்டு அப்பறமா ஆபீஸ் கிளம்புவோம். அப்ப எப்பவும் வலது பக்கம் போவான், இன்று பார்த்து இடது பக்கம் திரும்பி எங்க வீட்டுக்கு பக்கத்தில இருக்கிற காலி இடத்து வேலி ஓரம் போனான். அந்தக் கொடுமையை என்ன சொல்ல??? வேலி முழுசும் குறிஞ்சாச் செடியா படர்ந்து கிடக்கு. நான் கத்தின கத்தலில் அவர் அவசரம் அவசரமா வண்டியை நிறுத்திட்டு ஓடி வந்தார். என்னாச்சுன்னு கேட்டதும், இங்க பாருங்க, வேலி முழுசும் குறிஞ்சா செடின்னு நான் சொல்ல, அவர் ரொம்பவே பயந்துட்டார், எங்க நாளைக்கே குறிஞ்சா வறை செய்து வைத்து சாப்பிட சொல்லிடுவேனோன்னு.
கீதா, இந்த இலையை நாம் சமைக்கவே மாட்டோம். மருந்துக்கு மட்டுமே பயன்படும்.
பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டால், ஐயையோ, அது ஏதோ கொடி, அதை யார் சமைப்பாங்கன்னாங்க.
வளைகாப்பு களி செய்வோமே கீதா, அதுக்கு 5 இலை சாறு எடுத்து கிளறுவாங்களே, அதில் இந்த தழையும் ஒன்றுன்னு நினைக்கிறேன். அப்ப பார்த்த ஞாபகம் இருக்கு.
அப்பாடி, ஒருவழியா நான் குறிஞ்சா இலையை கண்டுபிடிச்சிட்டேன். இன்னிக்கு நிம்மதியா தூங்குவேன்:-))
என்னிடம் காமிரா தற்சமயம் இல்லை, போட்டோ எடுத்து போட.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்... குறிஞ்சா இலையை கண்டுபிடிச்சேன்... அதிரா அதிரா... இது சரியா சரியா??!! பசலை குறிஞ்சா லொட்டு லொசுக்கு என்று நான் உரங்கும் போது ஒலரினேனே அன்று..... கண்டுபிடிச்சேன் கண்டு பிடிச்சேன்... குறிஞ்சா இலையை கண்டுபிடிச்சேன். - பாட்டு நல்லா இருக்கா? நம்ம ரஜினி ( செந்தமிழ் செல்வி) பாடுறமாதிரி நினைச்சுக்கங்க. (அட சிஷ்யா சிஷ்யா... இது சரியா சரியா? மானே தேனே மயிலே குயிலே என்று நீ உரங்கும் பொது உலரல் கேட்டேன் அன்று)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்ன அதிரா இது? எவ்வளவு கஷ்டப்பட்டு நான் குறிஞ்சா இலையை கண்டுபிடிச்சிருக்கேன். ஒரு வார்த்தை கூட சொல்லாம எங்கே போனே? கீதா சொன்னது நிஜம் தானோ? நீ, இமா, ரேணு, சுரேஜினி எல்லாம் ரகசியக் கூட்டம் நடத்துறீங்களோ? யாரையும் காணோம். இப்படி பேசாம இருந்தா எங்க பக்கத்து வேலில இருக்கிற குறிஞ்சா இலையை எல்லோருக்கும் ஒரு லாரி நிறைய அனுப்பி வெச்சிடுவேன், ஜாக்கிரதை!!!
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

குறிஞ்சா இலையைக்கண்டுபிடித்த செல்வி அக்கா வாழ்க.முதலில் உங்கள் கடுமையான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
நீங்கள் கண்டுபிடிச்சிட்டீங்கள் எண்டு சொன்னதும் சிலர் இந்தப்பக்கம் வராமல் விட்டதுக்கு காரணம் வகித்தெரிச்சல் தான்.
இருக்காதா நாங்களெல்லாம் பத்து பதினைஞ்சு வருசமா கண்ணில பாக்காமல் இப்போகூட தேடித்தேடி ஒரு நாட்டில இருந்து இன்னொரு நாட்டுக்கெல்லாம் பாசல் போடுவமாம் பாவம் இமாவுக்கு கிடைக்கவே கிடைக்காதாம். இதெல்லாம் இப்பிடியிருக்க செல்வி அக்கா மட்டும் பக்கத்து வேலில நிறையக்கிடக்கு அதிலும் லக்கி் உதவி செய்தான் என்றால் எல்லாருக்கும் லக்கியிலும் பொறாமை செல்வி அக்காவிலும் பொறாமை அவ்வளவுதான்.[இப்போ வருவார்கள் பாருங்கோ]
எனக்கு இங்கு கிடைத்தாலும் 10 இலை நல்லதென்றால் 10இலை வாடல் ஆனாலும் கிடைக்கிதே என்ற சந்தோசத்தில கண்டவுடன் வாங்கிவிடுவேன்.
செல்வி அக்கா உங்களை நேற்று கனவில் கண்டேன்.[சத்தியமா]கெட்டுக்கெதருக்கு உடுத்திய அதே சாரி யுடன்.உங்கள் பதிவு ஒன்றை பாத்துட்டு நீண்ட நேரமா அதையே சிந்திச்சுக்கொண்டு படுத்திட்டேனா அதுதான்.அதிரா அடிப்பா மீதி மெயிலில் அல்லது அரட்டையில்

சுரேஜினி

செல்வீக்கா எப்படியிருக்கீங்க? குறிஞ்சாவைக் கண்டுபிடித்தது குறித்து சந்தோஷம், அக்கா உங்களுக்கு முடியும் பொழுது போட்டோ எடுத்துப் போடுங்க. நம் ஊரில் குறிஞ்சாவிற்கு வேறு பெயர் இருக்குமோ என்னவோ, ஒருவேளை இடத்திற்கு இடம் பெயர் மாறி இருக்கலாமில்லையாக்கா, அதனால் வந்த குழப்பமாகக் கூட இருக்கலாம். எப்படியோ குறிஞ்சாவைக் கண்டும் பிடிச்சாச்சு, அதை நாம் சமைப்பதில்லை என்றும் தெரிஞ்சாச்சு, இனி நிம்மதியாகத் தூங்கலாந்தானேக்கா. அதிராவிடம் எல்லோருக்கும் பார்ட்டி வைக்கச் சொல்லிக் கேட்போம்.

நமக்குத் தெரிந்து குறிஞ்சிதான் கேள்விப்பட்டிருக்கிறோம். பனிரெண்டு வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ, கொடைக்கானல் போகும் வழியில் குறிஞ்சியாண்டவர் கோவிலைச் சுற்றிலும் இருக்கிறது. நாங்கள் ஹனிமூன் போயிருந்த பொழுது பூத்திருந்ததைப் பார்த்தோம், அதற்குப்பின் நான்கு வருடங்கழித்து பாஸ்கருடன் போனபொழுது செடி மட்டும்தான் இருந்தது.

அன்புடன் :-)
உத்தமி :-)

அடங்கொக்கா மக்கா:)!!!!
(தலைப்பைப் பார்த்து பயப்பட வேண்டாம்,இது அட்மின் இல்லை..... அதிரா....:))

செல்வியக்கா, நான் இப்படிச் சொன்னால் நம்புவேனாக்கும்:). செல்வியக்கா கொஞ்ச நாளைக்கு உங்களை குறிஞ்சா குறிஞ்சா என்று காதல் பட கதாநாயகன் மாதிரி ஆக்கலாம் என்று நாங்கள் எல்லோரும் ஒரு இரகசிய பிளான் வைத்திருந்தோம், இந்த சுரேஜினி கெடுத்துப்போட்டா:).

எப்படி செல்வியக்கா, இதுதான் முற்றத்து மல்லிகை வாசமில்லையாம் என்பதுபோல, பக்கத்தில குறிஞ்சாவை வைத்துக்கொண்டு, ஊராற்ற வேலியெல்லாம் பூரப்பார்த்தனீங்கள்?:) நல்ல வேளை மாமா பக்கத்தில் இருந்தமையால் கையோட தட்டுத்திட்டார் உங்களை அடி வாங்காமல் ஆட்களிடம்.:)

நீங்கள் சொல்லும் விதத்தைப் பார்த்தால் அது குறிஞ்சாவேதான், மருத்துவத்துக்கு அதிகம் பயன் படுத்துவார்கள். ஆனால் சுண்டிப் பாருங்கோ செல்வியக்கா, எதற்கும் ஒரு தடவை சந்தையில் கொண்டுபோய் யாரிடமாவது காட்டி கன்பாம் பண்ணுங்கோ. ஏனெனில்,

உப்பிடித்தான், முன்பு ஒரு மார்கட் ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் கூடும் "fair" ஒன்று இருந்தது, அங்கு அதிகாலை அது திறக்கும், ஊரிலில்லாத இலை, காய்,கனி அத்தனையும் அங்கே இருக்கும். அதற்கு அப்பா போனபோது, நல்ல குட்டிக்குட்டி, கொட்டைப்பாக்களவு புடலங்காய் இருந்ததாம், அது வடிவாகவும் இருக்கவே, வாங்கி வந்திட்டார். அதற்கு முன் நாங்கள் பார்த்ததில்லை. அம்மா நல்ல புடலங்காய்க் குழம்புபோல் தளதளவென்று அழகான குழம்பு செய்தா. வாயில் வைத்தால் வேப்பெண்ணைக் கைப்பு. உடனே இது சாப்பிடக்கூடாது எனச் சொல்லிப்போட்டு, அந்த ஊர்ப் பெண் ஒருவர் வீட்டு வேலை செய்ய வருபவ, அவவைக்கூப்பிட்டுக் கேட்டோம், அவ சொன்னா, ஐயையோ இது சமைப்பதில்லை, இதைப் பேய்ப்புடோல் என்று சொல்வோம், இதைக் கொட்டுங்கோ என்று, அந்த ஞாபகம்தான் எனக்கு வருகிறது.

இதைக் கண்ணு பிடித்த "லக்கிக்கு" வாழ்த்துக்கள், குறிஞ்சா சுண்டல் செய்து வெள்ளைச் சோற்றோடு ஊட்டிவிடுங்கோ செல்வியக்கா.

(பூஜைக்கு முன் சன்னதம் கொள்ளலாமோ:) எனக்கு நானே சொல்லிக்கொண்டு போறேன்:)....)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வாழ்த்துக்கள் செல்வி. :-) எதற்கும் யாரிடமாவது இலையைக்காட்டி நிச்சயம் பண்ணிக் கொண்டு சமையுங்கோ.
அதி & உத்தமி,
அந்தப் பதிவு காற்றிலேயே போய் விட்டது போலிருக்கிறது. என்ன எழுதினேன் என்றே மறந்துவிட்டது. :-(
குறிஞ்சா எண்டால் வெற்றிலை, பூவரசு ஞாபகம் வாறது சரி. ஹனிமூன் கூடவா ஞாபகம் வரும். :-)

‍- இமா க்றிஸ்

ஹாய்
நான் அந்த பதிவை ரொம்ப எதிர் பார்த்து தேடினேன். பரவாயில்லை இமா போனது போகட்டும்.

அதிரா இன்டைக்கு குறிஞ்சலைச் சுண்டல் . செய்து பர்த்துவிட்டு எப்படி இருந்தது என்று சொல்றன்.

ஹாய் தோழி அதிரா அவர்களே நீங்கள் செய்தது நாயமோ .?தோழிகள் அனைவரையும்
லோ ,லோ என்று ஜொள்ளு விட வைத்து விட்டு நீங்கள் மட்டும் ஜாலியாக .யாப்பா இப்படி .நானும் 1 நாள் முழுவதும் தேடி கண்டுபிடித்து ,,(அதிராவை,,குறிஞ்சாவை ,,)விட்டோம் ..

ஆனால் ,அதை இவள்ளவு அக்கறையா தேடும் விதம் புரிகிறதா .?
1 . நீங்கள் குறிஞ்சாவை கட் பண்ணிய தை பார்த்தால் (போட்டோ எடுத்து வீட்டில் எங்கள் அதிராவின் கை வண்ணத்தை பார்க்கவும் )என்று மாட்டிவிடுவேன்..

2 அதிராவின் கைக்கு மோதிரம் தான் போட வேண்டும் .

3 செந்தமிழ் செல்வி தேடி கண்டு பிடித்த குரின்ஜாவின் டேஸ்ட் எப்படியாம் .
அது உண்மையான குறிஞ்சா இலை தானா

அன்புடன் ஐஸ்வரியலக்ஷ்மி .