குழந்தையை தாய் பால் குடிக்க வைப்பது எப்படி?

அறுசுவை தோழிகளுக்கு மிக்க நன்றி எனக்கு குழந்தை பிறந்து 11 நாள் ஆகிரது, பிறந்து 24 நேரத்தில் குழந்தைக்கு jaundice .எனக்கு தாய் பால் போதுமானதாக இல்லை அதனால் பாட்டில் பால் குடுக்க வேண்டியது ஆகிவிட்டது,இப்பொழுது என்னிடம் குடிக்க மறுக்கிறான்
1.அவனை எப்படி என்னிடம் தாய் பால் குடிக்க வைப்பது?
2.தாய் பால் சுரக்க வழி சொல்லுங்கலென்?

எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.என்ன செய்வதென்று தெரியவில்லை அழுகை வருகிறது. எனக்கு உதவி செய்யுகள்

சில குழந்தைகள் தாய்பால் குடித்து பழக 5 நாள் கூட ஆகும்..1 வாரம் வரை கூட அதுக்கு வேறெதுவும் கொடுக்காமல் ட்ரை பன்னுங்க என்று மருத்துவர் சொல்வார்..நமக்கு தான் பசிக்குமே என்று அடித்துக் கொள்ளும்.
பிறந்த குழந்தை தாய்ப்பால் குடிக்க மறுத்தால் அல்லது ஃபார்முலா கலக்கி கொடுப்பதாக இருந்தால் ஒரு போதும் பாட்டிலில் கொடுக்க கூடாது..
அல்லது நன்றாக தாய்ப்பால் குடிக்க பழகியபிறகு பாட்டில் கொடுக்கலாம்....இல்லையென்றால் நிப்பில் கன்ஃபியூஷன் வரும் என்று சொல்வார்கள்..குழந்தை குழம்பிப்போகும்..பிறகு பழக்க சிரமம்.
ஸ்பூனால் தான் பாலை கொடுக்க வேண்டும்..மெல்ல நாமும் ட்ரை பன்னிக் கொண்டே இருக்க வேண்டும் தாய்ப்பால் கொடுக்க.தாய்ப்பால் போதவில்லை என்று நாம் ஒருபோதும் சொல்வது சரியும் அல்ல.
குழந்தைக்கு பால் போதுமா இல்லையா என்று சுமார் 1 மாதம் போன பின் தான் மருத்துவரால் கூட சொல்ல முடியும்..ஏனென்றால் பிறந்த எல்லா குழந்தையும் முதலில் எடை இழக்கும்..பிறகு தான் எடை கூடும்.
1 மாதமாகியும் எடை கூடாவிட்டால் அல்லது அதற்கு மேலும் வெயிட் பன்னி பார்க்க சொல்லி எடை கூடாவிட்டால் மட்டுமே பால் போதவில்லை என்ற தீர்மானத்திற்கு வர முடியும்...அதுவும் குழந்தை குடிக்க குடிக்க தான் சுரப்பது அதிகரிக்கும்.
மனதில் உள்ள கவலை எல்லாம் விட்டு ரூமில் தாழிட்டு தனியாக ட்ரை பன்னுங்க..குழந்தைக்கும் எந்த அசவுகரியமும் இல்லாமல் கொடுக்கு பாருங்க ரிலாக்ஸ்டாக.முக்கியமாக கசாபிசா என்று ஆட்கள் சுத்தியிருக்க ட்ரை பன்னாதீங்க..தனியா ட்ரை பன்னுங்க..1 சொட்டு sugar syrup தடவி விட்டு குடிக்க வச்சு பாருங்க..அந்த டேஸ்டுக்கு குடிக்கலாம்.
எனக்கும் உங்கள் நிலை புரிகிறது மிகவும் வருத்தமாக இருக்கும்.ஆனால் என் மருத்துவரும் என்னிடம் இதை தான் சொன்னார்.
5 நாளுக்கு பிறகு தான் என் குழந்தையே பழகியது...நீங்கள் புட்டிப்பாலை கண்ணில் காட்டாமல் நல்ல பசியோடு குழந்தை இருக்கும்பொழுது ட்ரை பன்னுங்கள்.
மனதை தளரவிடாமல் முயற்ச்சி செய்யுங்க சரியா..இன்று நம் ஊரிலேயே மதர் ஹார்லிக்ஸ் போன்ற எதெதுவோ உண்டு பால் சுரக்க..அது எதையாவது கலக்கி குடியுங்கள்.
நிறைய தண்ணீர் குடியுங்க..கவலை இருந்தா கூட பால் சுரப்பது குறையும்..பூண்டை நெய்யில் வறுத்து சாதத்தில் பிசைந்து சாப்பிடுங்க.
கட்டாயம் உங்கள் குழந்தை தாய்பாலுக்கு பழகிவிடும் என்று நம்பிக்கையோடு இருங்க..வாழ்த்துக்கள்

தாளிக்க உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. நான் தாய் பாலை pump பண்ணி குடுக்கிறேன். பற்றக் குறைக்கு ஃபார்முலாவும் கலக்கி கொடுக்கிறேன்.சக்கரை தண்ணிர், பட்டினி பொட்டும் பார்த்து விட்டென் எதுக்கும் அசைது கொடுக்க மாட்றான். நிங்கள் சொன்ன மதிரி பாட்டிலை நிறுத்தி விட்டு ஸ்பூனால் கொடுத்து தாய்ப்பால் கொடுக்க ட்ரை பண்ணுகிறேன்.
11 நாளில் மாற்றுவது சுலபாமா??

தாளிக்க உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. நான் தாய் பாலை pump பண்ணி குடுக்கிறேன். பற்றக் குறைக்கு ஃபார்முலாவும் கலக்கி கொடுக்கிறேன்.சக்கரை தண்ணிர், பட்டினி பொட்டும் பார்த்து விட்டென் எதுக்கும் அசைது கொடுக்க மாட்றான். நிங்கள் சொன்ன மதிரி பாட்டிலை நிறுத்தி விட்டு ஸ்பூனால் கொடுத்து தாய்ப்பால் கொடுக்க ட்ரை பண்ணுகிறேன்.
11 நாளில் மாற்றுவது சுலபாமா??

சோஃபி 11 நாளில் கொஞ்சம் சிரமம் தான்..ப்ரெஸ்ட்ஃபீடிங் க்லாஸ் உள்ள ஹாஸ்பிடலுக்கு ஒரு விசிட் போடுங்க பலன் கிடைக்கலாம்..அப்படியே ட்ரை பன்னி 2 வாரம் கழிச்சும் முடியாட்டா கவலை விடுங்க ரொம்ப நல்லதா போச்சுன்னு நெனச்சுக்குங்க..பம்ப் பன்னி பன்னி பாட்டிலில் ஊத்தி கொடுங்க.
பாட்டிலை நல்லா ஸ்டெரிலைஸ் பன்னனும் அதான் முக்கியம்.

priseka

hai sofia, this is priya...
ஒரு கை பிடி பூண்டு, இரன்டு டம்ளர் பால். அடுப்பில் வைத்து காச்சி பிறகு ஆரவைது பூண்டை எடுத்து சாப்பிடு விட்டு பிற்கு பாலை குடித்து விடுங்கள், இப்படி 5 நாள் சாப்பிட பால் நன்றாக சுரக்கும்....
தாய் பாலை பிழிந்து கொஞ்சம் சீனீ போட்டு கொடுத்து பாருங்க...
என்னோட அக்கவோட பாப்பாவுக்கு எங்க அம்மா இப்படிதான் கொடுத்தாங்க...

Priya Sekar,
Brazil / 09-04-2009.
05.03pm.

priseka

priya solvathai seiyavum,athudan thaayin unavil paal sura enum meenai thinamum sapidavum

அறுசுவை தோழிகளே, எனக்கு பெண் குழந்தை பிறந்து 27 நாட்கள் ஆகிறது. எனக்கும் இதே போன்ற அனுபவம் கிடைத்தது, என் குழந்தை பிறந்து முதல் 18 நாட்கள் தாய்ப்பால் குடிக்கவே இல்லை , என் அருகில் எடுத்து வந்தாலே உடனே அழ ஆரம்பித்து விடுவாள். அதை பார்த்து நான் அழ ஆரம்பித்து விடுவேன்.
அந்த 18 நாட்களும் நான் பட்ட வேதனை கொஞ்சமல்ல. எங்கள் குடும்பத்தினர் அனைவரும் என்னென்னவோ செய்து பார்த்தும் சரி ஆகவில்லை, நானும் அறுசுவை தோழிகள் பகிர்ந்து கொண்ட அனைத்து
வழிகளிலும் முயற்சித்து பார்த்தேன், ஆனால் பால் குடிக்க மறுத்தாள். பம்ப் வைத்து எடுத்து எடுத்து கொடுத்தேன், அதை மட்டும் குடித்தாள். nipple shield வைத்தும் சரி ஆகவில்லை. கடைசியில் என் மாமியார் அவருடைய கிராமத்திலிருந்து ஒரு அம்மன் கோவிலில் பிரார்த்தனை செய்து திருநீறு மற்றும்
உப்பு கொண்டு வந்தார், ஆச்சர்யம் அதை எனக்கு மற்றும் என் குழந்தைக்கு கொடுத்த உடனே என் குழந்தை எந்த பிரச்சினையும் இல்லாமல் பால் குடிக்க ஆரம்பித்து விட்டாள். அது வரை நானும் என்
கணவரும் இதை எல்லாம் நம்பவே இல்லை, ஆனால் இதை அனுபவத்தில் உணர்ந்த பிறகு என்னால் நம்பாமல் இருக்க முடிய வில்லை. இதை நம்புவதற்கு உங்களுக்கு கடினமாக இருக்கலாம், ஆனால் சில சமயங்களில் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை நம்பி தான் ஆக வேண்டி இருக்கிறது. எனவே தோழிகளே, உங்கள் வீட்டிலோ தெரிந்தவர்களோ பெரியவர்கள் யாரவது இந்த மாதிரியான யோசனை கூறினால் அதை முயற்சித்து பார்க்கவும், இதெல்லாம் பொய் என்று ஒதுக்கி தள்ள வேண்டாம்.

எனக்கு குழந்தை பிறந்து சரியாக 50 நாட்கள் தான் ஆகிறது. எனது மகள் சில சமயம் பால் குடிக்க மறுக்கிறாள்.வாந்தி எடுப்பது போன்ற பாவனை செய்கிறாள்.எனது தாய் 'உன்னுடைய தாய்ப்பால் மிகவும் தண்ணீர் போல் இருக்கிறது.மேலும் சுவையின்றி இருக்கலாம்.அதனால் தான் உனது மகள் இவ்வாறு செய்கிறாள்.'என்று கூறுகிறார். அவர் கூறுவது உண்மையா? உண்மை எனில் அதற்கு நான் என்ன செய்தால் குழந்தை நன்றாக பால் குடிக்கும்? சகோதரிகளே தயவுசெய்து ஏதேனும் உத்தேசம் கூறுங்களேன்

Hai Lakshmi congratulations

Neenga paal kodukkumpodhu romba sooda ethuvum sapidathinga appadi sapitta paal pulikkum nu solluvanga appadi irunthalum pappaku kudikka pudikkathu thayi paal eppavum lighta inikkum. So athu paththukonga eppo feed pannalam neenga vethuvethuppa paal juice soop nu ethavathu kudichuttu kodunga. Paal flow Nalla varum.

மேலும் சில பதிவுகள்