வயிற்றுப்புண் (சிசேரியன்)

எனக்கு இரண்டு முறை சிசேரியன் (சத்திரசிகிச்சை) நடந்தது. கடைசியாக பெப்ரவரி 2008 இல் நடந்தது. உடல் எடை குறைப்பதற்காக Treadmill இல் 3 - 4 மணித்தியாலங்கள் என 4 மாதங்களுக்கு மேலாக நடந்தேன். இப்பொழுது நல்ல கால நிலை என்பதால் வெளியில் (ரோடு [Road] மேடு பள்ளமாக உள்ள பகுதியில் நடக்கின்றேன்) மூன்று - மூன்றரை மணித்தியாலங்கள் (Treadmill ல் நடப்பதை விட ஆறுதலாக) நடக்கின்றேன். வெளியில் நடக்கத் தொடங்கியதில் இருந்து என் வயிற்றில் சிசேரியன் செய்த இடத்தில் (வயிற்றுக்குள்) புண்ணாக நொந்து கொண்டிருக்கின்றது. வீட்டில் சாதாரணமாக நடக்கும்பொழுதும் படுக்கும்பொழுதும் (குப்புறப் படுத்தால் வயிற்றுப் பகுதி பெட்டில் {Bed} பட) வேதனையாக இருக்கின்றது. உள்ப்புண் ஆற ஏதாவது உணவுவகைகளோ அல்லது வீட்டு வைத்திய முறையோ இருந்தால் தயவு செய்து தெரிந்தவர்கள் சொல்லித்தாருங்கள். வேதனை தாங்க முடியவில்லை.

அன்புடன்
பிருந்தா

ஹை பிருந்தா,
உங்களுக்கு இரண்டு முறை சிசேரியன் சிகிச்சை நடந்திருப்பதால், கவனமாக தான் இருக்க வேண்டும். எடை குறைப்பது என்பது நல்ல விஷயம் தான்,அதற்காக ஒரேயடியாக 3 மணிநேரம் ,4 மணிநேரம் நடப்பது என்பது கூடாது. சிசேரியன் என்பதால் நமக்கு வெளியில் உள்ள புண் நன்கு அறிய மாதிரி தெரிந்தாலும் குட உள்ளே உள்ள புண் ஆற கொஞ்சம் நிறைய டைம் எடுக்கும். அதனால் தான்,பெரியவர்கள் சிசேரியன் செய்தால் காரம்,புளிப்பு,உப்பு நிறைய உள்ள வுணவு சிசேரியன் செய்தவர்கள் சாப்பிட கூடாது என்று சொல்கின்றனர்
உங்களுக்கு வலி இருப்பது நீங்கள் அதிகம் நடப்பதால் க்குட இருக்கலாம்,இல்லை உள்ளே உள்ள தையல் பிரிந்து இருந்தாலும் வலி இருக்கும்.
நீங்கள் ஒரு வாரம் நடக்காமல் இருந்து பாருங்கள்,பிறகும் வலி இருந்தால்,டாக்டர் இடம் செல்வது நல்லது. நீங்கள் எடை குறைக்க விரும்பினால்,உணவில் கட்டுப்பாடு மற்றும் சிறிது சிறிதாக நடைபயிற்சி செய்யும் நேரத்தை கூட்டுவது நல்லது.

jeyasutha
"As is our confidence, so is our capacity"

உங்கள் பதிலுக்கு நன்றி சுதா. நீங்கள் கூறியதும் கொஞ்சம் பயமாக உள்ளது. ஆனால் என் மருத்துவர்களோ என்னை அடிக்கை ஊக்கப் படுத்தினார்கள், அதன் அடிப்படையில் தான் நானும் கடுமையான உடற்பயிற்சியில் இறங்கினேன். இப்பொழுது ஒரு மணித்தியாலம் நடந்தாலே வலிக்கத் தொடங்கி விடும். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனால் தான் வயிற்றுப் புண் ஆற என்ன உணவு உட்கொள்ளலாம் என்று கேட்டேன். ஆரம்பத்தில் 15 நிமிடம் அரை மணித்தியாலம் என்று செய்யத் தொடங்கித்தான் படிப் படியாக நேரத்தைக் கூட்டினேன். இப்போ மறுபடியும் நேரத்தை நன்கு குறைத்துச் செய்கின்றேன்.

உணவு உட்கொள்ளும் விசயத்தில் மிகவும் கவனமாகவே இருக்கின்றேன். ஆனால் என் உடல்வாசி அப்படி, என்ன செய்வது? சில நாட்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று இருந்தால் எடை கூடி விடும்.

மேலும் சில பதிவுகள்