சிரிய நாடு

தோழிகள் பலரும் சிரிய (Syria) நாடு பற்றி தெரிந்து கொள்ள காட்டிய ஆர்வத்தை பார்த்து எனக்கும் இந்த நாட்டை பற்றி எழுத ஆசை வந்துவிட்டது. :) எனக்கு தெரிந்த விஷயங்களை என் அனுபவங்களை இங்கே எழுதுகிறேன். உங்களுக்கு சுவாரச்யாமாக இருந்தால் சந்தோஷம்... இதுவரை எழுதிய அனுபவம் இல்லை, இதுவே முதன் முறை, பிழைகளுக்கு மன்னிக்கவேண்டும்.

திருமணம் என்று நிச்சயித்த பின்பே டமாஸ்கஸ் என்ற ஒரு ஊர் பெயர் என் காதில் விழுந்தது. என் திருமணம் நிச்சயம் ஆன விஷயத்தை என் நண்பரிடம் சொன்ன போது... "என்னடி ஊரு பேரு சொல்ற?? எங்க இருக்கு இந்த ஊரு?"னு கேட்டார். "எனகென்ன தெரியும்... இப்படி ஒரு ஊர் பேரை தான் பெண் பார்க்க வந்த போது அவர் சொன்னதா நியாபகம்" என்றேன். "சரி எதுக்கு இருக்கு வெப்சைட்... கண்டு பிடிச்சிடுவோம்"னு சொல்லி அவரு தான் உலக வரைபடத்தில் இந்த ஊரை தேடி அதை பற்றிய முழு தகவலும் எனக்கு சொன்னார். கூடவே... "பக்கத்தில் இருக்கும் நாடு லெபனான்... இப்போ கொஞ்ச நாளா நியூஸ்'ல பார்த்திருப்ப... அங்கங்க குண்டு வீசிகிட்டு இருக்கான்" என்று தலையில் ஒரு இடியை போட்டார். :( உள்ளுக்குள் பயம் பிடித்துகொண்டது என்றாலும் நம்மலாம் யாரு... கீழ விழுந்து பொரண்டாலும் மீசையில் மண் ஒட்டலைன்னு சொல்ற சென்னை மண்ணில் வாழ்பவராச்சே.... "போடா.... நாங்களாம் வீசின குண்டை பிடிச்சு திருப்பி வீசும் வீர தமிழச்சியாக்கும்" என்று பொய்யாக சிரித்து விட்டு வந்தேன். சரி இது ரொம்ப பழைய கதை.... எப்படியோ ஒரு வழியா கல்யாணம் ஆச்சு. கிளம்ப வேண்டிய தேதியும் வந்தது... வேறு எங்க... சிரியாக்கு தான்.

பயணம் அற்புதமாய் இருந்தது. நல்ல தூக்கம் முதல் விமாண பயணம் என்பதும் மறந்து. திடீர்ன்னு என்னவர் என்னை உசுப்பினார்... "பாரு பாரு கீழ பாரு... ஃப்லைட் லேன்ட் ஆக போது... இது தான் நம்ம இருக்க போகும் ஊரு"... திருமணத்துக்கு பின் தேன் நிலவு கூட போகலை... இது தான் புகுந்த வீடு, புகுந்த ஊர் எல்லாம்... எத்தனை ஆர்வம் தெரியுமா??? ஆசையா என்னவரை தாண்டி கண்ணாடி வழியா கீழ பார்க்க.... பார்க்க... "அம்மாடியோ... ஃபிலைட்டை திருப்ப சொல்லு, நான் ஊருக்கே போறேன்.... பாவி கல்யாணம் பண்ணி முதன் முதல்ல ரொமான்டிக்கா ஸ்விஸ், சிங்கப்பூர், மலேசியா'னு கூட்டிட்டு போகாமா கொண்டு வந்து இப்படி ஒரு பாலைவணத்தில் விடுறியே... நியாயமா??"... அவர் சிரிக்கிறார்... "அதுகென்ன பண்றது... இந்த ஊருல தான் வேலை"னு. என்னென்னவோ சொல்லி சமாதானம் பண்ணார். ம்ம்... இப்படியாக சிரிய நாட்டின் ஏர்போர்ட்டுக்குள் விமாணம் லேன்ட் ஆனது.

ஏர்போர்ட் மிகவும் பழமை வாய்ந்தது.... நான் இதுவரை வெளிநாடு என்று படத்தில் பார்த்தது தான்... அந்த கர்பனைக்கு சிறிதும் ஒத்துவராத சின்ன பழைய ஏர்போர்ட். நம்ம சென்னை ஏர்போர்ட் போல. ;) எங்களை அழைத்து செல்ல வந்தார் இந்த ஊரை சேர்ந்த நன்பர் ஒருவர். எல்லாரும் ஏதோ பேசிக்கிறாங்க... நான் என்னவர் கையை பிடித்தது தான் இப்படி அப்படி அசையலை. பேன்னு பார்த்தேன் சுத்தி நின்று இருந்தவர்களை. எல்லாரும் என்னையும் அப்படி தான் பார்த்தாங்க... புடவையில் ஒல்லியா ஒரு பொண்ணு.... அதுவும் கை நிறைய வலையல் எல்லாம் போட்டு... அவங்களுக்கு நான் விதியாசமா தெரிஞ்சேன், எனக்கு அவங்க விதியாசமா தெரிஞ்சாங்க. சுத்தி எல்லாரும் அராபிக்கில் பேசுறாங்க... எனக்கும் என்னவருக்கும் ஒரு வார்த்தை கூட புறியலை. பேசிக்கொள்ளும் விதம் பார்க்க திட்டுவது போலவே தோணுச்சு. ஒரு வழியாக எல்லா ஃபார்மாலிடீஸ் முடிந்து காரில் ஏறினோம். வழி முழுக்க பாலைவணம் தான். இதோ அதோன்னு ஏரக்குறைய 30 நிமிட பயணம் நகரத்துக்குள் நுழைய. நகரம் எப்படி இருந்தது... அன்று வெள்ளி கிழமை... ஊரே அமைதியாய் காணப்பட்டது. ஒரே மாதிரியான கட்டிடங்கள்... அதில் ஒன்றின் முன் கார் நின்றது... "This is your residence sir" என்று சொல்லி வந்தவர் வீட்டின் உள் அழைத்து சென்றார்.

அம்மாடியோ... பட்டிகாட்டான் முட்டாய் கடையை பார்த்த மாதிரி பார்த்தேன்... அவ்வளவு பெரிய வீடு. அத்தனை அழகான வேலைப்பாடு உள்ள சோபாக்கள். இதுவரை நம்ம ஊரில் 5 நட்சத்திர ஹோட்டலில் மட்டுமே கண்டது !!

இனி ஊரை பற்றி சொல்றேன்.

--- என்ன ரொம்ப போர் அடிக்கறனா?! பரவாயில்லை ஏதோ எனக்கு தெரிந்த மாதிரி என் அனுபவத்தை எழுத முயற்ச்சி செய்து இருக்கேன். முதலில் உட்கார்ந்து எழுதி திரும்ப திரும்ப படித்து மாற்றங்கள் செய்து இங்கு நான் பதிக்கவில்லை. மனதில் ஓடிய ஓட்டத்தில் நான் கிளம்பியதில் இருந்து நடந்ததை மனதில் வைத்து அப்படியே டைப் செய்து பதிக்கிறேன். அதனால் பிழைகளுக்கு வாய்ப்பு அதிகம். தப்பா ஏதும் இருந்தா மன்னியுங்கள். மிச்சத்தை அப்பறமா சொல்றேன். இதுவரை இந்த ஊரை பற்றி படித்ததுக்கும் இனி படிக்க போவதற்கும் அத்தனை வித்தியாசம் இருக்கும்.... அப்படி ஒரு பூலோக சொர்க்கமான சிரிய நாட்டை பற்றி இனி தான் சொல்ல போறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி வாழ்த்துக்கள்! எனக்கு சிரியான்னதும் கதையில பல விஷயங்கள் படிச்சது நினைவுக்கு வரும். ஆரம்பம் நல்லா இருக்கும் உங்க ஸ்டைலில் காமெடியும் கலந்து அடிங்க.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் வனிதா
நல்லாயிருக்கீங்களா? யாழினிக்குட்டி நலமா? ரொம்ப சூப்பரா போகுது உங்க சிரியா பற்றிய பதிவுகள். சொல்லும் விதமும் ரொம்ப ரசிக்கும்படியா இருக்கு.
கண்டிப்பா அடுத்தடுத்த பதிவுகளுக்க்காக காத்திடுட்டு இருக்கேன்!

உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி இலா.. எதாச்சும் தப்பிருந்தா சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி சாய் கீதா. நாங்க இருவரும் ரொம்ப நலம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா வனிதா.நான் ரொம்ப ஆவலா இருந்தேன்..என் கணவரிடம் கூட சொன்னேன் அவரும் இன்னும் கேட்க ஆசைப்பட்டார்..அழகாக எழுதியிருகீங்க..என் கணவருக்கு சிரியாவில் தெரிந்தெல்லாம் தராத்தியா என்ற இடம் தான் அங்குள்ள நன்பர்கள் தான் முன்னே இருந்தவர்கள் எல்லாம்.
ஒரு வர பாலைவனம் என்பார்.உங்கள் நகரம் எப்படி.இன்னும் அறிய ஆவல்.நான் கூட இங்க வந்து புதிதில் இரவு படுத்து விட்டோம் பில்டிங்கின் கீழே இருவர் அரபியில் எதுவோ சத்தமாக சொல்லி சண்டை எனக்கு உள்ளுக்குள் பயம் "இன்னேரத்துல ஏன் அவங்க சண்டை போட்டுக்கராங்க என்று ஜன்னல் வழியே எட்டி பார்க்க இவருக்கு ஒரே சிரிப்பு அது சண்டை இல்லை பேச்சே அது தான் என்று

வனிதா தொடர்ந்து எழுதுங்க.சூப்பர்.படிக்க மிக்க ஆவலாய் உள்ளேன்.அரட்டையில் எழுதிய சிரிய மக்களின் பழக்கம் படித்து கற்பனை பண்ணி பார்த்தேன்.என் கணவர் சிரியன்ஸ் பழகுவதற்கு நல்ல டைப் என்று அடிக்கடி முன்பே சொல்வார்.இப்ப நீங்களும் எழுதுவது மேலும் மதிப்பு அதிகரிக்கிறது.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு வனி,
சிரியா பற்றி தகவல் நல்லா இருக்கு. இங்கு ஒருத்தர் நாம் கூட அங்க போயிடலாமான்னு கேட்கறார். இன்னும் சுவையான தகவல்களை எதிர்பார்க்கிறோம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அட்டகாசம் வனிதா!!
வனிதா எழுதுங்க எழுதுங்க, நான் சிரியாவை விட, உங்கள் திருமணக் கதையைத்தான் ஆவலாகப் படித்துக்கொண்டிருக்கிறேன்... ஆமா!! ஆச்சரியமாகக் கேட்கிறேன் சாறியோடயா வந்தீங்க? கெட்டிக்காரிதான்:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வனிதா,

நான் மஹாகிட்ட சீனாவைப் பத்தி கேக்க, நீங்க சிரியாவைப் பத்தி சொல்றேன்னு இப்ப தனி இழையாவே எழுத ஆரம்பிச்சுட்டீங்க. நல்லா சுவையா எழுத்றீங்க. நாளை நீங்க இதை புத்தகமா வெளியிடும்போது எனக்கும் ராயல்டி கண்டிப்பா தருவீங்கன்னு நினைக்கிறேன். உம்மா கொடுத்துடாதீங்க.

தொடர்ந்து எழுதுங்க. ஆர்வத்தோடு காத்திருக்கிறோம்.

மேலும் சில பதிவுகள்