சும்மா ஜாலிக்குதாம்ப்பா! யார் மனசையும் நோகடிக்கும் நோக்கம் இல்லை) -2

காட்சி - 11
ஓரிடத்திலிருந்து "கமகமன்னு" பலவித வாசனை மூக்கைத்துளைக்க வந்துகொண்டிருக்கிறது!

கீதா: அட! எங்கிருந்தோ சாப்பாட்டு வாசனை சூப்பரா வருதே! சொல்லாம கொள்ளாம ஒரு பெரிய விருந்தே நடக்கும்போல தெரியுதே? ச்சேஒருவாரம் வீடு மாத்தற பிஸியில் அறுசுவைப்பக்கம் வராம போனது தப்பா போச்சே!
கிட்டே நெருங்க,நெருங்க உள்ளேயிருந்து ஒரு குரல் மெதுவாக கேட்கிறது.
குரல்: ஆமா ஜலீலா, நேத்து பஹ்ரைன் போயிருந்தப்ப மஞ்சள் ரோஜா கிடைக்கலை. வெள்ளைதான் கிடைச்சுது. அதனால, அதையே வாங்கிட்டு வந்து மஞ்சள்கலர் பெயிண்ட் அடிச்சு காய வெச்சிட்டு வந்திருக்கேன்.
அசத்தல் ராணி யாருன்னு அறிவிப்பு வந்ததும், " அசத்தல் ராணிக்கு வாழ்த்துக்கள். பிடிங்க மஞ்சள் ரோஜா" வைன்னு நைசா நீட்டிடவேண்டியதுதான்.
கீதா: மஞ்சள் ரோஜாவா??? அட நம்ம சவூதி செல்வி மாதிரி தெரியுதே!! அடப்பாவி, விஷயமே இல்லாம மூச்சுக்கு முண்ணூறு மெயில் அனுப்புவாங்க. விருந்துக்கு மட்டும் கமுக்கமா வந்திட்டாங்களே. ச்சே இதுக்குதான் சொந்த ஊர்க்காரங்களையே நம்பக்கூடாதுங்கறது!
உள்ளே நைசாக எட்டிப்பார்க்க,
அறுசுவை தோழிகள் ஆங்காங்கே அமர்ந்து ஒருகையில் குறிப்பு பேப்பரும், இன்னொரு கையில் கரண்டியுமாக அரக்க,பரக்க சமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதிரா கையில் குண்டாந்தடியுடன்," இன்னும் ஒருசில மணித்திலாயங்களே உள்ளது. கெதியா சமையுங்கோ என்று எல்லாரையும் விடட்டி,விரட்டி சமைக்க வைத்துக்கொண்டிருக்க,
ரேணுகா, கையில் பேப்பரும், பேனாவுமாக," சமைச்சு முடிச்சவங்க எல்லாம் சீக்கிரமா வந்து கணக்கு சொல்லிட்டு போங்க" என்று தொண்டை நோக கத்திக்கொண்டிருக்கிறார்.
கீதா: அச்சச்சோ! இது சமைத்து அசத்தலாம் பகுதி போல தெரியுதே. தெரியாம வந்து மாட்டிகிட்டோம் போல தெரியுதே. நல்லவேளை நம்மை யாரும் கவனிக்கலை. அப்பிடியே ரிவர்ஸ் கியர் போட்டு நைசா ஓடிடவேண்டியதுதான்,
ரேணு: வாங்க சாய்கீதா! என்ன இந்தப்பக்கம்?
கீதா: போச்சுடா! யார் கண்ணில் படக்கூடாதுன்னு நினைச்சமோ அவங்க கன்ணிலேயே பட்டு தொலைசிட்டோமே??!!!
அதுவந்து.........ரேணு........ , நம்ம சவூதி செல்விக்கு ஒரு மெயில் அனுபியிருந்தேன். அது கிடைச்சுதான்னு கேட்டுட்டு போலான்னு வந்தேன். அவங்க பிஸியா இருபாங்க போல தெரியுது. நான் அப்பறம் வர்றேன்.
ரேணு: என்ன அப்பறமா வர்றீங்களா? இந்த மெயில், குயில் விஷயமெல்லாம் பேச இது அரட்டைப்பக்கம் அல்ல. சமக்கிற பக்கம்.
இங்க தெரியாம நுழைஞ்ச தப்புக்கு பனிஷ்மென்டா, ஒரு ஓரமா வந்து உக்காந்து ரெண்டு குறிப்பு செய்து எனக்கு கணக்கு சொல்லிட்டு போங்க.
கீதா: இல்ல ரேணு, இப்ப அவசரமா நம்ம ப்ரபதாமு ஆரம்பிச்ச கணவன் - மனைவி அன்யோன்யம் பகுதியில் ஒரு பதிவு போட்டு நம்ம வனிதாவை டென்ஷன் ஏத்தற வேலை இருக்கு. நான் அப்பறம் கண்டிப்பா வர்றேன்.
ரேணு: அப்பறம் இந்த ஏரியாப்பக்கமே எட்டிப்பாக மாட்டீங்கன்னு எனக்கும் தெரியும். மறுபடியும், கணவன் - மனைவி அன்யோன்யம் பகுதிக்கு வந்து உங்க கழுத்தில் என் துப்பட்டாவை போட்டு இழுதிட்டு வந்து சமைக்க வைக்க என்னால் முடியாது.
கீதா: என்ன ரேணு இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு. என் கையப்பாருங்க சமைக்கிறதுக்கு அண்ணா,குண்டா இல்ல,மளீகைசாமான் இல்ல, காய்கறி இல்ல. எப்பிடி சமைக்கிறதாம்?( மெதுவாக) சே! ஏமாந்திட்ட்டோமே! விருந்து நடக்குது, மூக்கப்பிடிக்க தின்னுட்டு போலான்னு வந்தா, மூச்சுப்பிடிக்கசமைக்க
சொல்றாங்களே.

ரேணு: அப்பிடியே உங்க தலைய மட்டும் திருப்பி ஓரமா பாருங்க.
அங்கு ஒரு மூலையில் சமையல் பாத்திரங்கள், மளீகைசாமான்கள், காய்கறிகள் குவிந்து கிடக்கிறது.
கீதா: என்ன ரேணூ இது. அறுசுவைக்குள்ளெயே, பாத்திரக்கடை, மளீகைகடை, காய்கறிக்கடையெலாம் ஆரம்பிச்சிட்டாங்களா என்ன?
ரேணு: அதெல்லாம் இல்ல, உங்களை மாதிரி இந்தப்பக்கம் வந்திட்டு இது இல்ல,இது இல்லன்னு டிமிக்கி கொடுத்திட்டு ஓட்றவங்களுக்காகவே நானும், அதிராவும், சேர்ந்து இந்த ஏற்பாட்டை செய்திருக்கோம்.
பாத்திரமெல்லாம் வாடகைக்கு பிடிச்சி போட்டிருக்கோம். காய்கறி நம்ம பாப்பி அவங்க வீட்டு தோட்டத்தில் இருந்து அனுப்பி வெச்சாங்க. மளீகை சாமான்கள் காசு கொடுத்து வாங்கியது. பாத்திர வாடகைக்கும், மளிகை சாமான்களுக்கும் நம்ம ஜெயந்தி மாமிதான் ஏற்பாடு பண்ணி பாப்பி கையால் கொடுக்கச்சொன்னாங்க!
கீதா: அப்பிடியா???!!!
ரேணூ: என்ன, அப்பிடியா? நான் என்ன பாட்டி வடை சுட்ட கதையா சொல்லிட்டு இருக்கேன். மளமளன்னு போய் வேணுங்கிறதை பொறுக்கிகிட்டு ஒரு ஓரமா போய் சமைக்க ஆரம்பிங்க. பாருங்க செல்வி உங்களுக்காகவே மஞ்சள் ரோஜாவை ரெடி பண்ணி வெச்சிருக்காங்க.
கீதா: என்னது மஞ்சள் ரோஜாவா???????????? என்று அதிர்ச்சி ஆக,
செல்வி எட்டிப்பாத்து அச்சச்சோ பெயிண்ட் விஷயத்தை சொல்லிடாதீங்கன்னு கண்ணாலேயே கெஞ்சுகிறார்.

காட்சி - 12
சமைக்க தேவையானதையெல்லாம் எடுத்து மூட்டை கட்டிக்கொண்டு கீதா சோகமாக வந்து கொண்டிருக்கிறார்.
கீதா: யாரும் பாக்காத நேரமா கட்டியிருக்கிற மூட்டையோட எஸ்கேப் ஆயிட்டா ஒரு வருஷத்துக்கு மளிகை செலவே இல்லாம சமாளீச்சிடலாம் போல தெரியுதே!ச்சே இந்த சைனா மஹாலஷ்மி வேற கன்ணில் விளக்கெண்ணேய் விட்டுட்டு பாத்திட்டே இருக்காங்க. காட்டி கொடுத்திடுவாங்களோ?

ஜலீலா: கவலைப்படாதீங்க செல்வி நான்கூட, தக்காளி அல்வா பண்ண சிகப்புத்தக்காளி கிடைக்கலை. அதனால, தக்காளிக்காயில் அல்வா பண்ணி , சிகப்பு கலர் தூவி பார்சலுக்கு ரெடியா இருக்கு.
யாராவது கண்டுபிடிச்சிடுவாங்களோன்னுதான் பயமா இருக்கு.
கீதா: (மெதுவாக) தக்காளிக்காயில் அல்வாவா? ஒருவேளை அதுவும் இல்லாட்டி தக்காளி இலையில் அல்வா பண்ணுவாங்களோ?
அதுசரி, சமையல்ல எக்ஸ்பர்ட்டா இருக்கவங்க எதுல வேணா, என்ன வேனுன்னாலும் பன்ணுவாங்க. வெறும் வாயிலேயே அல்வா கிண்டற நமக்கு இதெல்லாம் எங்க தெரியப்போகுது.
அங்கு ஒரு ஓரத்தில் ஒரு பெண் பார்ட்டி வேர் அணிந்துகொண்டு ஒரு கையில் செல்போனும், இன்னொரு கையில் கரண்டியுமாக பயந்தபடியே சமைத்துக்கொண்டிருக்கிறார்.
கீதா: அட பார்ட்டி வேர்? அட நம்ம வனிதா மாதிரி தெரியுதே?
ஹாய் வனிதா நல்லாயிருக்கீங்களா?
அசரீரி: வாங்க சாய்கீதா? அந்த பெண்ணைப்பாத்தா என்னை மாதிரியா தெரியுது.
கீதா: அச்சச்சோ வனிதா, என்ன இது? நீங்க வாயே திறக்கல. குரல் மட்டும் அசரீரி மாதிரி கேட்குதே?
அசரீரி: அது நான் இல்லை கீதா. என் வீட்டில் வேலை பார்க்கும் ஸ்ருதி.அவதான் ரொம்ப நாளா சமைத்து அசத்தலாம் பகுதியில் கலந்துக்கனும்ம்னு ஆசைப்பட்டா. அதான் எனக்கு பதிலா அவளை அனுப்பி வெச்சேன்.
கீதா: ( மெதுவாக) போச்சுடா எது எதுக்குதான் டூப் போட்றதுக்கு விவஸ்தையே இல்லாம போய்டுச்சு.
(சத்தமாக,) ஆமா வனிதா இப்ப நீங்க எங்க இருக்கீங்க? உங்க குரல் மட்டும் கேட்குதே.
வனிதா: அதுவா இப்ப எங்க ஃப்ரெண்ட் வீட்டு பார்ட்டியில் இருக்கோம். எப்பிடியும் ஸ்ருதியை பாத்து நாந்தான்னு நினைச்சு எல்லாரும் குதிப்பீங்கன்னு தெரியும். அதுக்குதான் ஸ்ருதி கையில் ஒரு செல்போனை கொடுத்து ஸ்பீக்கரை ஆன் பண்ணி வெக்கச்சொல்லி, எல்லாருக்கும் இங்கிருந்தே பதில் சொல்லிட்டு இருக்கேன்.
ஸ்ருதியை என்னைன்னு நினைச்சதுக்கு தண்டனையா பெஞ்ச் மேல ஏறி நில்லுங்க.
கீதா:(மெதுவாக) அடக்கொடுமையே! எங்க போனாலும் இத மட்டும் விட மாட்டாங்க போல தெரியுதே.
(சத்தமாக) என்ன வனிதா இது இங்க போய் பெஞ்ச் மேல ஏறு, குதின்னு சொல்லிக்கிட்டு, அப்பறம் தவறிப்போய் கீழே விழுந்தா கொதிக்கிற சாம்பார்குள்ளேதான் விழணும். அப்பறம் கொலை முயற்சி கேஸில் உங்களை உள்ளே தள்ளிடுவாங்க.
வனிதா: ஐயய்யோஓஒ????
கீதா: அடடா வனிதா, என்னாச்சு? மறுபடியும் கொதிக்கிற சர்க்கரை பாகில் கையை விட்டுட்டீங்களா?
வனிதா: அதுகூட பரவாயில்லை கீதா, சைக்கிள் கேப்பில் என் கணவர் நழுவிப்போய் பார்ட்டிக்கு வந்திருக்கிற சிரியா பொண்ணுங்ககிட்ட அது வேணூமா?இது வேணுமான்னு கேட்டு"உம்மா" வாங்கிட்டு இருக்கார். நான் போய் அவரை கவனிச்சிட்டு வர்றேன்.அதுவரைக்கும் பெஞ்சைவிட்டு கீழே இறங்காதீங்க!
கீதா: இந்த கஷ்டத்திலும் பெஞ்ச் மேட்டரை மட்டும் மறக்கமாட்டாங்க போல தெரியுதே.
(மெதுவாக) நாமும் நைசா நழுவிப்போய், நம்ம வீட்டில் வேலை செய்யும் சுபாஷினியை கூட்டிட்டு வந்து பெஞ்சில் ஏத்திடவேண்டியதுதான்.

காட்சி - 13

ஒரு ஓரத்தில் ஒரு கையில் ஜூஸ் டம்ளரும், இன்னொரு கையில் கரண்டியுமாக ஒரு ஆண் சமைத்துக்கொண்டிருக்கிறார்.
கீதா; அட, இந்த பக்கத்தில் ஒரு ஆண்மகனா? இந்த மாதிரி தைரியமெல்லாம் அருண்பிரசங்கியத்தவிர யாருக்கும் வராதே??
அட, அவரேதான். அச்சச்சோ, மாட்டினா, ம்ம்ம்ம்ம்......... நல்லது........மீண்டும் பிறகு பார்க்கலாம்............. அப்பிடின்னு ஏகப்பட்ட டாட்ஸ், கொஸ்சின் மார்க்கெல்லாம் போட்டு பேசி கொன்னுடுவாரே?
அப்பிடியே கவனிக்காத மாதிரி ஓடிட வேண்டியதுதான்.
பிரசங்கி: வாங்க சாய்கீதாலஷ்மி, நல்லாயிருக்கீங்களா?????????????????? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.............. நல்லது.....................
கீதா: போச்சுடா மாட்டினோமா? மனச திடப்படுத்திக்க வேண்டியதுதான்.
ஓ நல்லா இருக்கேன் பிரசங்கி. என்ன இந்த பக்கம்?
பிரசங்கி: அதுவா? எவ்வளவு நாளைக்குதான் மத்த பக்கங்களில் மட்டும் என் மொக்கைகளை பதிவு பண்றது. அதான் ஒரு மாறுதலுக்கு இந்த பக்கம். ம்ம்ம்..............
நல்லது..........
கீதா(மெதுவாக): அடக்கடவுளே! இந்த ஒரு பகுதிதான் இவர் இம்சை இல்லாம நல்லப்டியா போய்ட்டு இருந்தது. இப்ப இதிலேயும் கை வெச்சிட்டாரே. இது எதில போய் முடியப்போடுதோ தெரியலியே???
பிரசங்கி: என்ன யோசிக்கிறீங்க கீதாலஷ்மி??????? ம்ம்ம்ம்.........நல்லது...
கீதா; அதெல்லாம் ஒண்ணுமில்ல இவ்வளவு பொமபளைங்க கூடி நின்னு கும்மி அடிக்கிற அறுசுவையில் தனியொரு ஆம்பளையா தாக்கு பிடிக்கிறதுக்கே உங்களுக்கு தனியா "அசத்தல் ராஜா" பட்டம் கொடுக்கலாமே. இதுக்கு போய் சமைச்செல்லாம் கஷடப்படுததனுமான்னுதான்... யோசிச்சேன்.
பிரசங்கி: அதை அப்பிடியே சத்தம் போட்டு அதிராவிற்கு கேட்கிறாமாதிரி சொல்லுங்க பட்டம் தர்றவங்க அவங்கதானே??????
ம்ம்ம்ம்ம்.....நல்லது.....அப்பிடியே நேரம் கிடைக்கப்ப நம்ம ப்ளாக் பக்கம் கையில் ஜூஸ் டம்ளருடன் விசிட் பண்ணுங்க....ம்ம்ம்ம்ம்....நல்லது...
கீதா: (மெதுவாக) அடக்கொடுமையே, ஏற்கெனவே இவர் பேச்சை நம்பி நிறைய பேர் ப்ளாக் பக்கம் போய் முதல் பக்கத்திலேயே பெரிய சைஸில் இவர் போட்டோவை பாத்து திகிலடிச்சு திரும்பி வந்து,"அந்தப்பக்கமே போய்டாதீங்கன்னு" எச்சரிக்கை பண்ணீயதை சொல்லலாமா வேண்டாமா தெரியலியே??/
(சத்தமாக) அதுவந்து பிரசங்கி, இப்ப ஜூஸ் போட்றதுக்கு என் கையில் பழங்கள் எதுவும் இல்லை. அப்பறமா விசிட் பண்றேன், ம்ம்ம்ம்ம்.......நல்லது..........????
போச்சுடா கொஞ்ச நேரத்திலேயே ம்ம்ம்ம்.....நல்லது...... நமக்கும் வந்திடுச்சே!

காட்சி - 14
ஒரு கார் வேகமாக வந்து நிற்க, காரைவிட வேகமாக உள்ளேயிருந்து செல்விக்கா "பாட்ஷா" பட ரஜினி ஸ்டைலில் இறங்குகிறார்.
பின்னால் கார் டிக்கியில் இருந்து கட்டுகட்டாக கீரைகளை இறக்கி இரண்டுபேர் தூக்க முடியாமல் தூக்கிகொண்டு வருகிறார்கள்.
பேக்கிரவுண்டில் " பாட்ஷா படத்தில் வரும் பாட்ஷா பாரு, பாட்ஷா " மாதிரி,
ஏ, குறிஞ்சா பாரு, குறிஞ்சா பாரு,'
வெத்தலை போல இருக்கும் பாரு,
வேலி பூரா தேடிப்பாரு,
ஓணான் வந்தா கடிக்கும் பார்ருடா!
இந்த பேருக்குளே இம்சை உண்டு கேட்டுப்பாருடா,
இந்த பேருக்குள்ளே இம்சை உண்டு கேட்டுப்பாருடா"
குறிஞ்சா.....டொட்டடடொய்..............குறிஞ்சா.......டொட்டடடொய்
என்று மியூசிக அதிர அதிர செல்விக்கா ஸ்லோமோஷனில் வெற்றிநடை போட்டு வருகிறார்.
அதற்குள், செல்விக்கா குறிஞ்சாவுடன் வரும் விஷயத்தை ஒருவர் செல்போன் மூலமாக அதிராவிற்கு தெரிவிக்கிறார்.
அவசர ஆலோசனை என்ற போர்டின் கீழ் சுரேஜினி,இமா, அதிரா, ரேணுகா (அதிராவை கவலையோடு பார்த்தபடி) அமர்ந்திருக்கிறார்கள்
இமா: இப்ப என்ன பண்றது அதிரா, செல்வி ஒருவழியா குறிஞ்சாவை கண்டுபிடிச்சிட்டங்க போல தெரியுது. இவ்வளவு நாளா வேலி வேலியா அவங்களை அலையவிட்டு பொழுது ஓட்டிடு இருந்தோம். இனி அதுக்கு வாய்ப்பே இல்லாம போய்டும் போல தெரியுதே??
சுரேஜினி: பேசாம, குறிஞ்சா என்பது கீரையே இல்லை. அது ஒருவகை காய் எண்டு சொல்லி போடுவோமா?
ரேணு: எதுக்கு? அவங்க தோட்டம் தோட்டமா போய் ,மரத்து மேல உக்காந்துக்கிட்டு, இதுவா குறிஞ்சா, இதுவா குறிஞ்சான்னு அதிராவிற்கு தலையிடியை கொடுக்கவா?
அப்பறம், மறுபடியும் கமல் கெட்டப்பில்," ரெண்டு கையில் எதயாவது தூக்கிட்டு,
பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க,
காத்திருந்த குறிஞ்சா இங்கு காணகிடைக்கன்னு"
பேக்கிரவுண்ட் மியூசிக்கோட வந்திடுவாங்க. இதெல்லாம் நமக்கு தேவையா, அங்க பாருங்க ஆளாளூக்கு சமைக்கிறதை விட்டுடு இங்க என்ன நடக்குதுன்னு வேடிக்கை பாக்கிறாங்க. இதே நிலைமை நீடிச்சா, இந்த பகுதியை இழுத்து மூடிட்டு போய்டவேண்டியதுதான்.
அதிரா: அய்யகோ! இப்ப என்ன என்னதான் பண்ணச்சொல்றீங்க ரேணு?
ரேணு: அப்பிடிக்கேளூங்க, இப்ப செல்வி மேடம் எந்த கீரையை கொண்டுவந்தாலும் இது குறிஞ்சாதான்னு ஒத்துக்கிட்டு பேசாம இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளீ வெச்சிடுங்க.
நான் போறேன். கண்க்கு சொல்றவங்க க்யூ வேற நீளமாயிட்டே போகுது!

காட்சி - 15
சமைத்து அசத்தலாம்- பாகம் 50
என்ற போர்டை ஒருவர் லேட்டாக வந்து மாட்டிவிட்டு போகிறார்.
கீதா: ச்சே இதை முன்ன்னாடியே மாட்டியிருந்தா இந்த ஏரியா பக்கமே வராம தப்பிச்சு போயிருக்கலாமே? எல்லாம் என் நேரம்?? என்று நொந்துகொண்டே சமைத்துக்கொண்டிருக்க,
வெளீயில் செல்விக்கா குறிஞ்சா இலைக்கட்டு, மியூசிக் ட்ரூப்புடன் அறுசுவை பூராவும் வெற்றி நடை போட்டு குறிஞ்சாவை கண்டுபிடிச்ச செய்தியை சொல்லாமலேயெ அறிவிப்பு செய்து கடைசியாக அதிரா இங்கு இருக்கும் செய்தி கேள்விப்பட்டு வந்து சேர்கிறார்.
செல்விக்கா: (கைகளை மேலே உயர்த்தி) ஸ்டாப் ம்யூசிக்!

"கண்டேன் குறிஞ்சாவை,
கூப்பிடுங்கள் அதிராவை"
என்று வெற்றி முழக்கமிடுகிறார்.
கீதா" ஹை செல்வி, செல்வி(ச்வூதி) சீக்கிரமா அந்த ஆரத்தி தட்டை எடுத்திட்டு வாங்க. நம்ம செல்விக்கா குறிஞ்சவோட வந்திட்டாங்க.
செல்வி அரக்க, பரக்க ஒரு கையில் ஆரத்தி தட்டும், இன்னொரு கையில் மஞ்சள் ரோஜா மாலையுமாக ஓடி வருகிறார்.
செல்வி(சவூதி): கீதா, முதல்ல ஆரத்திய எடுத்திட்டு மாலையை போடணூமா, இல்ல மாலையை போட்டு ஆரத்தி எடுக்கணூமா? அச்சச்சோ இந்த நேரம் பாத்து ஆரத்தியில் கிள்ளிப்போட ஒரு வெத்தலை கூட இல்லியே !
கீதா: (மெதுவாக) அதுசரி, வெள்ளை ரோஜாவுக்கு மஞ்சள் பெயிண்ட் அடிச்சு ஊரை ஏமாத்த தெரியுது. ஆரத்தி எடுக்க மட்டும் தெரியலை.
இங்க பாருங்க நம்ம செல்விக்கா கொண்டுவந்த குறிஞ்சாவே வெத்தலை மாதிரிதன் இருக்கு. சட்டுபுட்டுன்னு கிள்ளிப்போட்டு ஆரத்தி எடுங்க.
அங்க பாருங்க எல்லாரும் சமைக்கிறதை விட்டுட்டு குறிஞ்சாவையே முறைச்சு முறைச்சு பாக்கிறதை. செல்விக்கா இதை கண்டுபிடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு அவங்ககூட செர்ந்து வேலி,வேலியா சுத்தன நமக்குதான தெரியும்.
செல்வி ரோஜாமாலையை போட்டு ஆரத்தி எடுத்து ஊற்றி செல்விக்காவை உள்ளே அழைத்து வருகிறார்கள்.
உள்ளே நுழைந்த வேகத்தில் செல்விக்கா, கீதாவின் தோளீல் கிடந்த சுரிதார் துப்பட்டாவை வேகமா உருவி, மேலே தூக்கி போட்டு எதையோ இழுக்க முயற்சி செய்ய, துப்பட்டா தலையில் பாதியும், முகத்தில் பாதியுமாக விழுகிறது.
கீதா: செல்விக்கா என்னதிது? இது என்ன படையப்பா படத்தில் வர்ற ரம்யா கிருஷ்ணன் வீடுன்னு நினைச்சீங்களா?
துப்பட்டாவை தூக்கிபோட்டு சுண்டி இழுத்தா ஊஞ்சல் வந்து விழுந்து, அதுல நீங்க ஸ்டைலா ஏறி உட்கார்ந்து அதிராகிட்ட அலம்பறை பண்றதுக்கு?
சிங்கிள் சேர்கூட இல்லாத இடத்தில் வந்து நின்னுக்கிட்டு வித்தை காட்டிகிட்டு. இதெல்லாம் நமக்கு தேவையா?
(செல்விக்கா வரும் செய்தி கேள்விப்பட்டு அங்கு கிடந்த சேரையெல்லாம் மறைத்து வைக்க சொல்லிய விஷயம் செல்விக்காவிடம் யாரோ போட்டுக்கொடுத்துவிட்டார்கள்)
செல்விக்கா: அதெல்லாம் இருக்கட்டும், உங்க வீட்டு வேலைக்காரப்பெண் சுபாஷிணீ ஒரு வாரம் லீவோ?
கீதா: அட ஆமாங்க்கா உங்களுக்கு எப்பிடி தெரியும்?
செல்விக்கா: (கிசுகிசுப்பாக) அதான் துப்பட்டா ஓவரா நாறுது. அதை முதலில் சரி பண்ணு. நம்ம ஊர் மானத்தை வாங்காத!
செல்வி (சவூதி): என்ன செல்விக்கா இது வந்த விஷயத்தை விட்டுட்டு ஏதேதோ பேசிட்டு, அதிரா வேற தலையில கை வெச்சிட்டு எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருப்பாங்க.
செல்விக்கா: க்க்க்க்கும்..கூம் என்று தொண்டையை செறுமிக்கொண்டு அதிராவிடம் பேச தயாராக,
எல்லாரும் கரண்டியை கீழே போட்டுவிட்டு, செல்விக்காவின் அதிரடிப்பேச்சுக்கு தயாராக அவர் முகத்தையே பார்க்க,
செல்விக்கா: அன்பு அதிரா நலமா? உங்களை நான் நேத்து கூகுள் சாட்டுக்கு வரச்சொன்னேனே ஏன் வரலை? இப்ப தலையிடி பரவாயில்லையா?
என்று பேசிக்கொண்டே போக,
செல்வி: என்ன செல்விக்கா இது வந்த விஷயத்தை விட்டுட்டு விளையாட்டு பண்ணிட்டு.
செல்விக்கா: விளையாட்டு இல்ல செல்வி. கொஞ்ச வருஷமா இப்பிடியே ஆரம்பிச்சு பேசி பழக்கமாய்டுச்சி.திடீர்னு மாத்திக்க முடியலை. ஆமா நாம என்ன விஷயமா இங்க வந்தோம்.
கீதா: போச்சுடா! செல்விக்கா அதான்"குறிஞ்சா மேட்டர்,"குறிஞ்சா மேட்டர்"
செல்விக்கா: அன்பு அதிரா இனியும் என்னிடம் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. குறிஞ்சா இலை கட்டு கட்டா வெட்டி உங்க வீட்டு ஃப்ரிட்ஜ்குள்ளே நீங்க மறைச்சு வெச்சிருந்த செய்தி ஒற்றர்கள் மூலம் எனக்கு 3 நாளைக்கு முன்னாடியே ரகசியத்தகவல் வந்திடுச்சு.
அதான் நீங்க இங்க சுத்திட்டு இருந்த நேரம் பாத்து நான் யுகே டிக்கெட் எடுத்திட்டு போய் உங்க வீட்டு ஃப்ரிட்ஜ் பூராவும் நீங்க மறைச்சு வெச்சிருந்த எல்லா குறிஞ்சாவையும் எடுத்திட்டு வந்திட்டேன்.
உங்க வீட்டிலிருந்தே எடுத்ததாலே இனியும் இது குறிஞ்சா இல்லை. அது இப்பிடி இருக்காது, அப்பிடி இருக்காதுன்னு டபாய்க்க முடியாது.
பத்தாதுக்கு உங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற சூப்பர் மார்க்கெட் போய் இது குறிஞ்சாதான்னு கன்ஃபம் பண்ணியாச்சு.
இப்ப என்ன சொல்றீங்க என்று அதிராவின் முகத்துக்கு நேராக குறிஞ்சா இலைக்கட்டை எடுத்து நீட்ட,
வேற வழியே இல்லாமல் அதிரா,
அதிரா: அன்பு செல்வி, இவ்வளவு நாட்களாக கஷ்டப்பட்டு ஓணான் கடிச்சாலும் பரவாயில்லேன்னு தேடித்தேடி கடைசியில் எங்க வீட்டு குறிஞ்சாவை கண்டுபிடிச்ச உங்களுக்கு ,

"குறிஞ்சா ராணீ " என்ற பட்டத்தினையும்,
உங்களுக்கு பக்கபலமாக இருந்து ஒற்றர் வேலைகளை செய்த சாய்கீதாவிற்கும், சவூதி செல்விக்கும்
" குறிஞ்சா இளவரசிகள் "
என்ற படத்தினையும் எங்கள் இலங்கை வாழ் சகோதரிகள் சார்பாக வழங்குகிறோம்.
என்று அறிவிப்பு செய்யா, அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள்;

காட்சி - 16
எல்லாரும் ஒருவழியாக குறிஞ்சாவை மறந்திட்டு மறுபடியும் சமைக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
அதிரா: எல்லாரும் சீக்கிரம் ஓடிவாங்கோ ,ஓடிவாங்கோ ரெயின் கிளம்பப்போகுது!
சாய்கீதா, சவூதி செல்வி ஓடிவான்ங்கோ!
கீதா: செல்வி அதிரா நம்ம ரெண்டுபேரையும் மட்டும் பேரைச்சொல்லி ஸ்பெஷலா கூப்பிட்றதை பாத்த, நம்ம ஒற்றர் வேலை பாத்ததை மனசில் வெச்சிட்டு ட்ரெயின் ஓவர் ஸ்பிடுல போறப்ப கீழே தள்ளப்போறாங்களோன்னு பயமா இருக்கு.
செல்வி (சவூதி): ஆமா, கீதா எனக்கும் அப்பிடிதான் தோணுது.இந்த செல்விக்கா வேற குறிஞ்சா கிடைச்ச சந்தோஷத்தில் நிம்மதியா தூங்க போய்ட்டாங்க!
எதுக்கும் நாம ஜாக்கிரதயாவே இருப்போம்.
எல்லாரும் வரிசையாக வந்து சமைத்த பாத்திரங்களூடன் ட்ரெயினில் ஏற ட்ரெயின் மெதுவாக கிளம்புகிறது.
குரல்: ட்ரெயினை நிறுத்துங்கோ, நிறுத்துங்க......,
குரல் கேட்டு எல்லாரும் எட்டிப்பார்க்க, தூரத்தில் தேவா காரைவிட்டு இறங்கி ஓடிவர, பின்னால் ஒரு லாரியில் மேக்கப் சாமான்கள் வந்து இறங்குகிறது.
தேவாவை பார்த்த ஆர்வத்தில் எல்லாரும் ட்ரயினை விட்டு கீழே குதிக்க முற்படுகிறார்கள்
குரல் - 1: தேவா என்க்கு கண்ணூக்கு கீழே.....
குரல் - 2 தேவா மேடம் எனக்கு தலைமுடி பூராவும்.......,
குரல் - 3 தேவா சிஸ்டர் எனக்கு மூக்குக்கு மேலே....
என்று ஆளாளூக்கு கத்த,
தேவா: ட்ரெயினை விட்டு குதிக்காதீங்க. குதிக்காதீங்க,, கீழே விழுந்து மூஞ்சி கிழிஞ்சி போச்சுன்னா, என் மேக்கப் டிப்ஸ் எல்லாம் உதவாது. அப்பறம் ஸ்ட்ரெயிட்டா பிளாஸ்டிக் சர்ஜரிதான். என்று கத்திக்கொண்டே ஓடிவர எல்லாரும் பயத்தில் முன்னே வைத்த காலை இழுத்துகொள்ள, அதிரா போட்ட ப்ரேக்கில் ட்ரெயின் கிறீச்சிட்டு நிற்கிறது.
தேவா: யாரும் கவலைப்படாதீங்க. பாருங்க இந்த தடவை வெறும் டிப்ஸ் மட்டும் கொடுத்திட்டு நான் போக்கப்போறதில்லை. உங்க எல்லார்காகவும் லாரி நிறைய மேக்கப் சாமான்கள் இருக்கு. ட்ரெயின் போகப்போக ஒவ்வொரு பெட்டியா வந்து நானே என் கையால் மேக்கப் பன்ணிவிடப்போறேன்.
என்றதும் எல்லாரும் சந்தோஷத்தில் குதிக்க ட்ரெயினே அதிர ஆரம்பிக்கிறது.
மறுபடியும் ட்ரெயின் கிளம்ப தயாராக இருக்க, தூரத்தில் யாரோ ஸ்லோமோஷனில் ஓடிவந்து கொண்டு இருப்பதை பார்த்து அதிரா மறுபடியும் ப்ரேக்கை பிடித்தபடியே எட்டி பார்க்கிறார்.
குரல்: ஹாய் பாப்பி! பாபு அண்ணா நல்லா இருக்காரா?
குரல் 2 : செண்பகா அண்ணீ, அட்மின் அண்ணன் முதுவலி எப்பிடி இருக்கு?
குரல் - 3 ஷென்பா பாபு மாமா நல்லாயிட்டாரா?
என்று ஆளாளுக்கு சந்தோஷமா கூக்குரலிட,பாப்பி வந்து சேர்கிறார்.
பாப்பி: உங்க எல்லாரையும் பாக்கத்தான் அவர் பின்னால் ஓடிவந்துகொண்டு இருக்கிறார் என்று சொல்ல,
எல்லாரும் கழுத்தை மட்டும் வெளீயில் நீட்டி எட்டிபார்க்க, தூரத்தில் 500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி வருகிறார்போல் பாபு அன்ணன் ஓடிவந்துகொண்டு இருக்கிறார்.
அவர் முதுவலி பூரணமாக குணமடைந்துவிட்டது என்பது அவர் ஓட்டத்திலேயே தெரியவர அனைவரும் ஆனந்தக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
பாபு அண்ணன்: அன்பான சகோதரிகளே உங்கள் அனைவருடைய அன்பாலும், ஆசீர்வாதத்தாலும், பிரார்த்தனைகளாலும் நான் என் முதுகுவலி பிரச்னையில் இருந்து பூரண குணமடைந்துவிட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். உங்கள் அனைவரின் அன்பிறகும் என் நன்றிகளை தெரிவிக்கிறேன்!
எல்லாரும் கண்ணில் கண்ணீர் வழிய கையசைத்து விடைபெற ட்ரெயின் வேகம் பிடித்து கிளம்புகிறது.
பாபு அண்ணா: அப்பாடா ஒருவழியா இப்பதன் நிம்மதியா இருக்கு பாப்பி, ஹாஸ்பிடல், முதுகுவலின்னு இவ்வளவு நாளா உட்காரக்கூட நேரம் இல்லை. வா, இந்த சிமென்ட் பெஞ்சில் கொஞ்சநேரம், உட்கார்ந்து பேசிட்டு போலாம்.
பாப்பி: அதுசரி, ஏதோ இவ்வளவு நாளா முதுவலியால கஷ்டப்பட்றீங்களேன்னு யாரும் புது சைட் பற்றி மூச்சு விடாம இருந்தாங்க.
இப்ப நீங்க வேற 500 மீட்டர் ஓட்டப்பந்தயம் மாதிரி ஓடிவந்து காட்டிட்டீங்க. இப்பக்கூட அவங்க சமைச்சு முடிச்சதை தின்னு தீர்க்கிற மூடில் போய்க்கிட்டு இருக்காங்க.
சாப்பிட்டு ஜீரணம் ஆனதும், போன ட்ரெயின்லேயே திரும்பி வந்து புது சைட் என்னாச்சுன்னு சட்டையை பிடிக்கறதுக்குள்ளே நாம ஓடிப்போய்டலாம் வாங்க!!!!

ஹஹஹா... சாய் கீதா இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை?? என்னை இப்படி கலாட்டா பண்றீங்க.... நான் படிசிட்டு சிரிச்சதை பார்த்து என் பொண்ணு என்னமோ ஏதோன்னு என் முகத்தையே பாக்கறா.... நல்ல கற்பனை. அருமை. படித்தேன், ரசித்தேன், சிரித்தேன், பாராட்டி பதிவும் பதித்தேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாய்கீதா!! நீங்க அருசுவையில இருக்கற எலீட்( Elite) குருப் ஆப் Funny People என்ற குழுவில தேர்வாகிட்டீங்க... சூப்பர் காமெடி... குறிஞ்சா சீன் தான் ரொம்ப சிரித்தேன்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சாய்கீதா,

இதத்தான் "முக்கிய வேலை" இருக்குது, அப்புறம் வர்றேன்னு சொன்ன்னீங்களா?

நல்லா கவனிச்சு, கற்பனை வளம் கலந்து பொறுமையா எழுதியிருக்கீங்க.

பயங்கர சிரிப்பு,நைட் 11.45 மணிக்கு உட்கார்ந்து தனியா சிரிச்சிட்டு இருக்கேன்.
சாய் கீதா வீடு மாறி போயிருக்கீங்க சரியான வேலை இருக்கும் அதுதான் அரட்டை பக்கமே காணோம்னு பார்த்தா இங்க சத்தமில்லாம இந்த வேலை நடந்திருக்கா,நல்ல வேலை ஒரு சிலரை மட்டும் ஓட்டியிருக்கீங்க.
செல்விமா மேட்டர் எல்லாதைவிட டாப்:-)

அட்மின் அண்ணா... கடைசியில் உங்களையும் விடலை நம்ம சாய் கீதா. வந்து என்னன்னு கேலுங்க. அண்ணா ஓடி வந்தார்ன்னு படிச்சது ஏனோ தெரியலை சிரிப்பை அடக்கவே முடியல.... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் கற்பனை.படித்து எனக்கு சிரிப்புத் தாங்கலை.அதுவும் செல்விமா பாட்ஷா ஸ்டைல்ல வர்றாங்க பாரு அதான் சூப்பர்.யார் மனசும் நோகாமலெழுதிருக்கிங்க.எனக்கு அதைவிட ஜலிலாக்கா தக்காளிக்காயில் அல்வா செய்து கலர் தூவினாங்களே ஐயோ படித்து சிரித்து சிரித்து வயித்துவலியே வந்துடுச்சுப்பா.உங்களுக்கு கற்பனை ராணி பட்டம் குடுக்கிறேன். சூப்பர்ர்ர்ர் ம்ம்ம்ம்.......நல்லது????????.

மிகவும் அருமை சாய்கீதா…படிக்கபடிக்க சிரித்து கொண்டே இருந்தேன்..அதிலும் பிரசங்கி பற்றி…என்னால் சிரிப்பினை அடக்க முடியவில்லை…குறிஞ்சா ..பற்றி எழுதி இருப்பது மிகவும் நகைச்சுவையாக இருந்த்து..எப்படி தான் இப்படி எல்லாம்?
சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போங்க…
அன்புடன்,
கீதா ஆச்சல்

சுப்பர்ப் சாய் கீதா. இடையில் மிஸ் ஆன காட்சிகள் என்னவென்று அறிந்து கொள்ள ஆவல். பாவம் க. க. ப வின் கொ. ப. செ ஐயும் கரண்டி பிடிக்க வச்சிட்டீங்க.
நீள பதிவு காணாமல் போயிருது. பதிவு சின்னதாகத் தான் போட்டிருக்கிறேன். ஆனால். நிறையச் சிரித்தேன்.
என்ன மேனு, நீங்க கொ. ப. செ யின் அஸிஸ்டன்ட்டா? (பட்டம் எல்லாம் குடுக்கிறீங்க.) :-)
இந்த வாரம் அறுசுவைல பயங்கர சிரிப்பா இருக்குப்பா.
வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போகும். ம்ம்.. நல்லது..

‍- இமா க்றிஸ்

அப்பா என்னவொரு திறமை.காமெடி சீன்ஸ் பார்க்க வேண்டாம்,இந்த 2 லின்க் பார்த்தால் போதும்.இன்னும் எழுதுங்க,எனக்கு நிறைய சிரிக்கனும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சாய்கீதா கலக்குங்க!!

ஏன் இப்படி எல்லாரும் இதை மீண்டும் மீண்டும் உபயோகிக்க ஆரம்பித்து விட்டீர்கள்?

//ம்ம்ம்ம்.......நல்லது????????//-மேனகா

//ம்ம்.. நல்லது..//-இமா

மேனகா,இமா வேண்டாமே :-((

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

மேலும் சில பதிவுகள்