எப்படி நம்ப ஊரு தோடு போடுவது

ஹாய் தோழிகளே,
.இந்தியாவில் காது குத்தினால் வலிக்கும் என்று கறுதி இங்கேயே(அமெரிக்காவில்)குத்தினோம்.இப்ப ஒருவருடம் ஆகிடுச்சி நம்ம ஊரு தோடு ஒரு கிராம் அளவு கூட நுழைக்க முடியவில்லை, அந்த தோடை கையில் பார்த்தாலே அழுகிறாள்.என் குழந்தைக்கு 4 1/2 வயது ஆகிறது,இங்கு இருக்கும் தோடு மட்டுமே போட முடிகிறது(கம்பி போல)எப்படி நம்ப ஊரு தோடு போடுவது என்று யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள் பிளிஸ்.

இப்போ போடுவதை விட கொஞ்சம் weight அதிகம் உள்ள தொங்கல் கம்மல் போட்டால் ஓட்டை சிறிது கீழிறங்கும்.பிறகு நம் ஊரில் உள்ள மாதிரி தண்டு உள்ள கம்மல் போட முடியும் என் நினைக்கிறேன்.இல்லை வேறு எதாவது method இருக்கிறதா என தெரியவில்லை.

//இந்தியாவில் காது குத்தினால் வலிக்கும் என்று கறுதி இங்கேயே(அமெரிக்காவில்)
குத்தினோம்//-இங்கு எப்படி குத்தினார்கள்?

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

குயிலா இங்க நம்ம இந்தியன் ஸ்டயில ஹூப்ஸ் போடுங்க அதில கொஞ்சம் கொஞ்சமா அந்த பெரிய திக்னஸ் இருக்கற பகுதியை நுழைச்சுவிடலாம் .
//இங்கு எப்படி குத்தினார்கள்? - மாலில பியர்ஸ் பகோடாவில செய்யலாம் உத்ரா

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் உத்ரா,
உஙள் பதிலுக்கு நன்றி. இங்கு வால்மார்ட்டில் குத்தினோம்,ear பியர்ஸ் kit வைத்து குத்தினார்கள், வலியில்லை என் பொண்ணு சிரித்துகொண்டே காண்பித்தாள். எங்க சொந்தகாரங்க ஆசாரிகிட்ட ஊசியாலதான் குத்தனும் என்று சொன்னார்கள் அதற்க்கு பயந்துகொன்டு இங்கேயே குத்திவிட்டோம்

ஹாய் இலா,
நன்றி இலா,நீங்கள் சொல்லுவது போல் முயற்சி செய்கிறேன்.ஒரு சின்ன சந்தேகம் இந்த ஹூப்ஸ் எங்கு கிடைகும்.

குயிலா நான் இந்தியன் ஜுவல்லரியில் வாங்கினேன் ஜனவரியில் கூட. நீங்க இருக்கும் ஏரியால இருக்கா? இல்லைன்னா சிலர் ஆன்லைன் ஆர்டர் ஃபெசிலிட்டி வச்சு இருக்காங்கன்னு நினைக்கிறேன்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நான் கூட என் மகளுக்கு அப்படி தான் பன்னினேன் அந்த தோட்டிலேயே கொஞ்சம் வெயிட்டுள்ள மாட்டல் போட்டு விட்டேன் 2 மாசம் தான் ஓட்டை பெசியாசிடுச்சு.
ஆனால் பெரிசாக இல்லாத அழகிய டிசைன் தோடுகள் நம் ஊரிலேயே கிடைக்கிறது குட்டி மாட்டலுடன்

மேலும் சில பதிவுகள்