இயற்கை உணவு - ஒரு பெரியாரின் கருத்து

--- நீக்கப்படுகின்றது ----

திருமதி. லட்சுமி அவர்களுக்கு,

அறுசுவை தளத்தில் பலமுறை சுட்டிக்காட்டப்பட்ட விசயம் இது. பிற ஊடகங்களில் வெளியானவற்றை இங்கே வெளியிட அனுமதி இல்லை என்பதை நிறைய முறை குறிப்பிட்டு இருக்கின்றோம். நீங்கள் மீண்டும் மீண்டும் மற்ற ஊடகங்களில் வெளியான தகவல்களை இங்கே தொடர்ந்து கொடுத்து வருகின்றீர்கள். அத்தகைய பதிவுகள் நீக்கப்படுகின்றன. இது போன்ற பதிவுகள் அறுசுவை தளத்திற்கு பிரச்சனை தரக்கூடியவை என்பதை பலமுறை சுட்டிக்காட்டி இருக்கின்றேன். பார்வையாளர்களுக்கு பயன் தருமென்று நினைத்து நீங்கள் செய்யும் இது போன்ற பிரதி வெளியீடுகள், இந்த தளத்திற்கு நிறைய பிரச்சனைகளை தரக்கூடியது என்பதை நீங்களும் உணரவேண்டும். உண்மையில் மற்றவர்களுக்கு உதவிட விரும்பினால், இணையத்தில் கொட்டி கிடக்கும் தகவல்களை கற்று அறிந்து, உங்களது சொந்த நடையில் கட்டுரையாக்கி வழங்குங்கள். அப்படியே ஒருவரது உழைப்பை காப்பி செய்து பேஸ்ட் செய்வது, இதற்காக உண்மையில் உழைத்தவரையும் பாதிக்கும் செயல்.

நான் பிரசுரித்தது இன்னொருவரின் தகவல்கள் தான், ஆனால் எல்லோரும் பார்த்து பயன் பெற வேண்டும் என்று பதிவு செய்து விட்டேன். தவறுக்கு மன்னிக்கவும். நீங்கள் இது பற்றி பலமுறை கூறியதாக சொன்னீர்கள். ஆனால் உங்கள் தகவல் என் பார்வைக்கு படாது போனது என் துரதிஷ்டமே! ஏனெனில் நான் இந்த தளத்தில் பதிவுகளை தருவது கடந்த இரண்டு மூன்று மாதங்களாகத் தான். நன்று, இனி வரும் காலங்களில் என் சொந்த நடையில் தருகின்றேன்.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

Dear Admin,

தவறுக்கு மன்னிக்க வேண்டும். ஆனால் உங்களின் பதிலில் காணப்பட்ட காட்டத்தை கண்டு மிகவும் வருந்துகிறேன். நான் தனியாக அடுத்தவர்களின் குறிப்பை மட்டும் பதிவு செய்து வந்திருந்தால் உங்களின் வாசககங்கள் எனக்கு மிகப் பொருந்தும். ஆனால் எத்தனையோ என் சொந்த கருத்துக்களுக்கு மத்தியில் மற்றவர்களின் சில நல்ல கருத்துக்களையும் பிரசுரித்தேன்.

இப்படி நீங்கள் பொதுப்படையாக குற்றஞ்சாட்டும் போது இனி நான் என் சொந்த கருத்துக்களை பதிவு செய்தாலும் மற்றவர்களின் கருத்துக்களை பதிவு செய்ததாகவே மற்றவர் நினைப்பர். முதல் முதலாக எனக்கு அறிவுறுத்தும் போது கொஞ்சம் மென்மையாக சொல்லியிருக்கலாமே! நீங்கள் சொன்னப்பிறகும் நான் "மீண்டும் மீன்டும்" அந்த பிழையை செய்திருந்தால் இப்படியான "காட்டமான அறிவுறுத்தல்களை" எனக்கு தந்து இருக்கலாம்.

இது நான் வேண்டுமென்று தெரிந்து கொண்டே செய்த பிழை அல்ல. எனக்கு இந்த விதிகள் தெரியாமல் போய் விட்டது. ஏனெனில நான் இந்த தளத்தில் பதிவுகளை தருவது கடந்த இரண்டு மூன்று மாதங்களாகத் தான். இது உங்களுக்கும் தெரிந்து இருக்கும். I am really really frustrated on your words.

லக்ஷ்மி
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை
நல்லதையே நினைப்போம்

மேலும் சில பதிவுகள்