சுவியம்

தேதி: March 20, 2009

பரிமாறும் அளவு: 5 பேருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

கடலைப்பருப்பு - 1/2 கப்
வெல்லத் தூள் - 1/2 கப்
தேங்காய்ப் பூ - 1/4 கப்
ஏலப்பொடி - 1/4 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
பச்சரிசி மாவு - 1/4 கப்
மைதாமாவு - 1/4 கப்
உப்பு - 1 சிட்டிகை
ரீஃபைண்ட் எண்ணெய் - பொரிப்பதற்கு


 

கடலைப்பருப்பை ஊற வைத்து வேக வைக்கவும். நீரை வடித்து விட்டு, ஆறியதும், மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய்ப் பூவை வறுத்துக் கொள்ளவும். வறுத்த தேங்காய்ப் பூவுடன் வெல்லத் தூள், கடலைப்பருப்பு, ஏலப்பொடி சேர்த்து, நெய் ஊற்றி, மிதமான தீயில் கிளறவும். பூரணம் தயார்.
பச்சரிசி மாவு, மைதா மாவு இரண்டையும் உப்பு கலந்து, தயிர் பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும்.
பூரணத்தை சிறிய எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.
கரைத்த மாவில் உருண்டைகளை முக்கி எடுத்து, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.


மைதா மாவுக்குப் பதிலாக 2 ஸ்பூன் உளுந்து ஊற வைத்து, அரைத்து சேர்க்கலாம். நன்றாக மிருதுவாக இருக்கும். உருண்டைகளை எண்ணெயில் போடும்போது, தீயைத் தணித்து வைக்கவும். உருண்டைகள் வாணலியின் அடியில் ஒட்டிக் கொண்டால், நிதானமாக திருப்பி விடவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments


சீதாம்மா!

என் மாமியார் அடிக்கடி இதை பண்ணுவார்.

ரொம்ப நன்னாருக்கும்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...