இரண்டாம் குழந்தை ................................. பாகம் 2

தோழிகளே எல்லாரும் நலம் தானே.........

ஒரு சந்தோஷமான செய்தி நானும் ஒரு வழியாக 2 ஆவது இன்னிங்க்ஸ் (இலா சொன்னதுப்போல்) விளையாட களத்தில் இறங்கிவிட்டேன் 2 மாதம் முடிந்து உள்ளது.
இந்த முறையும் கடவுளின் ஆசிர்வாதத்தில் நல்ல முறையில் இன்னிங்க்ஸ்யை முடித்து வெற்றி பெற வேண்டும். உங்கள் எல்லாருடைய ஆசிரும் எனக்கு வேண்டும்.

என்ன புரியவில்லையா? யுவனுக்கு கூட விளையாட 2ஆவது பாப்பாவுக்கு ரெடி ஆகிவிட்டேன் அதை சொல்ல வெட்கமாகதான் இருந்தது அதுதான் இப்படிஎல்லாம் சொன்னேன்.

மஹாபிரகதீஸ், China

என்னை பிற பதிவுகளில் வாழ்த்திய அதிரா, கவி.எஸ், இலா, செல்விம்மா, மேனகா உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்

எனக்கு ஒரு சந்தேகம்

1.முதல் குழந்தையை ஆபிரேஷன் மூலம் பெற்றுள்ளேன், இரண்டாவது குழந்தை நார்மல் டெலிவரி ஆகும் வாய்ப்புள்ளதா?

2. இதேப்போல் யாரவது குழந்தை பெற்றவர்கள் இருந்தால் அவர்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

தெரிந்தவர்கள் சொல்லுங்களே ஃபீஸ்.......

எனக்கு இந்தமுறையேனும் நார்மல் ஆகவேண்டும் என்றே எண்ணம்.......

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.யுவன் எப்படி இருக்கார்.உடம்பை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள்.நான் உங்களிடம் அதிகம் பேசியது இல்லை.நான்தான் சவுதி செல்வி.
அன்புடன்
செல்வி

சவுதி செல்வி

ஹாய் மஹா வாழ்த்துக்கள்,இப்பதான் அரட்டை பகுதியில இந்த கேள்விய கேட்டு வந்தேன்.சந்தோஷம்பா வாழ்த்துக்கள்,உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள்.

ரொம்ப மகிழ்ச்சியா இருக்குப்பா. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தளிக்கு ஒரு ஆள் சேர்ந்தாச்சு. இரண்டு பேரும் இனி டவுட் க்ளியர் பண்ணிபீங்க. உடம்ப நல்ல கவனிச்சுக்கோங்க மஹா.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹிஹீ..நான் கூட யாரோ என் த்ரெட் ரொம்ப நீண்டதால் பார்ட் - 2 தொடங்கிட்டாங்களோன்னு நெனச்சேன்..வாழ்த்துக்கள் மஹா
ஓஹ் இருக்காங்களே எனது நெய்பர் பொண்ணுக்கு முதல் சிசேரியன் ஊரில் இரண்டாவது இங்கே நார்மல்
அதே போல் எனுறவினர் ஒரு பெண் முதல் குழந்தை சிசேரியன் அதுவும் இங்கே இரண்டாவது அதுவும் இங்கே ஆனால் நாமல்

ஹாய் மஹா,
எப்படி இருக்கீங்க? உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் பா.
உடம்பை நன்றாக பார்த்துக்குளுங்க நல்ல ரெஸ்ட் எடுங்க.
என் தோழிக்கு முதல் குழந்தை சிசேரியன் ஆனால் பிறகு முன்று வருடம் கழித்து இரண்டாம் குழந்தை
நார்மல். இரண்டு டெலிவரியும் அவளுக்கு ஊரில்தான் மஹா.

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

ஹாய் மஹா!!! வாழ்த்துக்கள்! எனக்கு ஒரு குருட்டு கெஸ் இருந்தது. இன்னும் பல பேர் மேல இருக்கு... அடிக்கறதுக்கு முன்னாடி ஓடிக்கோ இலா!!! எல்லாரும் மெதுவா வந்து சொல்லுங்க. உடம்பை பார்த்துக்கோங்க. நல்லபடியா சாப்பிடுங்க.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அட நாங்க கேட்கும் போதெல்லாம் அதான் மழுப்பலா பதில் சொன்னீங்களா!சரி சரி யுவன் செல்லத்தோட விளையாட ஒரு குட்டி பாப்பா வர போறாங்களா!ரொம்ப சந்தோஷமா இருக்குபா.நல்ல ஆரோக்கியமான் குழந்தையை பெற்றெடுக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!நல்ல சத்தான ஆகாரத்தை சாப்பிடுங்க.பிரசவம் எப்படி இருக்கும் என்று இப்பவே நினைத்து கவலைபடாதீங்க(அடிமனதில் ஒரு ஓரத்தில் இருந்துகிட்டு தான் இருக்கும்).

அப்புறம் 2 வருடத்திற்க்கு முன் என் பக்கத்து ரூமில் உள்ள தோழி ஒருவருக்கு முதல் குழந்தை இந்தியாவில் சிசேரியன் செய்தார்கள்.இரண்டாவது குழந்தை இங்கு தான் டெலிவரி பார்த்தார்கள்.நார்மல் டெலிவரி தான்.அரட்டையில் கூட உங்களை விசாரிச்சு இருந்தேன்பா.உடம்பை பார்த்துகோங்க.

அன்பு மஹா,
உடம்பை பத்திரமா பார்த்துக்க. பிடிச்சதை (செய்து) சாப்பிடு. சத்தாக சாப்பிடு.
யுவனையும் பத்திரமாக பார்த்துக் கொள்.
கர்ப்பவதியின் ஆசை, அதனால் என் பொண்ணுங்க பேரு சுபா, கிருத்திகா. பையன் பேர் சந்துரு.
நானும் அவரும் ஒரே ஆபீஸன்னதும்
புரிஞ்சுப்பேன்னு நினைச்சேன். எங்களது லவ் மேரேஜ்:-)மூன்று பேரும் மூன்று பக்கம். இப்ப எங்க கூட இருப்பது லக்கி மட்டும்.
உடம்பை பார்த்துக்க.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் மஹா, முக்கியமானதை மறந்துட்டேன். நல்லா கவலைப்படாமே எல்லா வேலைகளும் வழக்கம் போல் செய். கண்டிப்பாக நார்மல் டெலிவரி ஆகும். நிறைய சான்ஸ் இருக்கு. முதல் குழந்தை சிசரியேன்னா, அடுத்ததும் அப்ப்டித்தான் ஆகணும்னு கட்டாயம் இல்லை.
சந்தோஷமா இரு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்