அறுசுவையை நீங்கள் அறிந்தது எப்படி? அதனால் நீங்கள் அடைந்தது என்ன?

இந்த தலைப்பு ஏற்கனவே மன்றத்தில் இருக்கானு தெரியாது. என்னால் இப்போ பார்க்க முடியல. ஆனாலும் இப்போது நிறைய பேர் அறுசுவையில் உறுப்பினரா இருக்கோம். உங்களுக்கு யார் மூலமா இந்த தளத்தை தெரியும். முதலில் வந்த போது என்ன உணர்ந்தீர்கள். இத்தளத்தினால் நீங்கள் அடைந்த, அடைந்து கொண்டிருக்கும் நன்மைகள் என்ன? எல்லோரும் உங்க அனுபவத்தை வந்து அழகா சொல்லுங்க. நான் தனித்தனியா கூப்பிடாமல் எல்லோரும் வந்து சொல்லனும்.

நான் 2008 ஜனவரியில் அபுதாபி வந்தேன். அப்போது எனக்கு என் ஹஸ் நெட் கனைக்ஷன் கொடுத்து தந்தார். ஜஸ்ட் மெயில் மட்டும்தான் பார்ப்பேன். அப்போ எனக்கு தெரியாது இத்தளத்தைப் பற்றி. இவருடைய தங்கை US ல இருக்காங்க. ஒருநாள் என்னுடன் பேசும் போது அண்ணி உங்களுக்கு போர் அடிச்சா அறுசுவை.காம் போய் பாருங்கனு சொன்னாங்க. அப்போ அத காதுலயே வாங்கல நான். ஒருமாதம் அப்படியே போச்சு. தீடீர்னு அண்ணி சொன்னது நியாபகம் வந்து ஓபன் பண்ணி பார்த்தேன்

எல்லோரும் பேசிக்கொள்வது (மன்றத்தில்) ஆச்சரியமா இருந்தது. சமையலுக்குனு ஒர் தனித்தளமானு ஆச்சரியம். மத்த சைட் எல்லாம் சமையலும் ஒரு பகுதி என்பது இருக்கும். இதுல மெயினே சமையல்தானானு அதிசயமா பார்த்தேன். அப்போ மன்றத்தில் தளிகா, இலா, அதிரா, செல்விமா, மர்லி, எல்லோரும் காரசாரமா பெண்கள் திருமணமானாலும் அம்மா வீட்டில் இருப்பதை பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள். ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. அப்புறம் 1 மாதமாக வெறும் சைலண் ரீடராக மட்டும்தான் இருந்தேன். அப்புறம்தான் மன்றத்திற்கே வந்தேன்.

முதலில் என்னிடம் பேசியது ஜானகிதான். அப்புறம் ஜெயந்தி மாமி. மூன்றாவதாக நம்ம திவ்யா அருண். இப்போ பாப்பா வந்தவுடம் நம்ம திவ்யாவை அவ்ளோவா காணோம்.

அடைந்த நன்மைகள் இருக்கே அது நிறைய. என் சமையலே எனக்கு முக்கால்வாசி மறந்து போச்சு. எல்லாமே அறுசுவைதான். அறுசுவைதான் என் குடும்பத்தில் ஒரு அன்பான உறவு. பலன்கள் நிறைய இருக்கு... தொடரும்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

எனக்கு யாரும் சொல்லல... எப்பவாது சமைக்க நெட்டில் குறிப்பு தேடுவேன்... அப்படி ஒரு முறை கிடைத்தது அறுசுவை. வருவேன், குறிப்பு பார்ப்பேன், போயிடுவேன். மன்றம்'னு ஒன்னு கண்ணில் பட்டதே இல்லை. உள்ளே சென்று படித்ததும் இல்லை. 5/6 மாதங்களுக்கு முன் ஒரு முறை உமாராஜ் உணவு எதை சாப்பிடுவது என்று சந்தேகம் கேக்க... தற்செயலா கண்ணில் பட்டு உதவவே மெம்பர் ஆகி பதிவு போட ஆரம்பித்தேன். இப்போ இது தான் பல விஷயங்களை மறக்க, சிரிக்க உதவுது. என்னால் அறுசுவைக்கு குறிப்பு தருவதை தவிர வேறு ஒரு உதவியும் இதுவரை ஆனதில்லை. நம்ம கதை இதோடு போதும். மேற்கொண்டு சொன்னால் திசை மாறி போகும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் அறுசுவை தளம் நான் 2 வருடம் பார்வை இட்டு உள்ளேன். ஆனால் சமையல் குறிப்பு மட்டும் தான் பார்த்து இருந்தேன். பிறக்கு தான் இதில் இனைந்தேன்ப்பா....

முதலில் நான் போசியது இலாவிடம் தான். பிறகு தாளிக்கா அக்கா, சுரேஜினி, அமர் என வலர்ந்து விட்டது.

இதனால் அதிகமான தோழிகள் கிடைத்தார்கள். எல்லரிடம் மனம் விட்டு போச முடிகிரது. அதிகமான விஷயம் கிடைத்து இருக்கிரது.

இதில் எனக்கு ஒரு( பாபு ) அண்ணன்னும், ஒரு (அருண்) தம்பியும் உள்ளனர். மற்றா சகேதரிகலும், தோழிகலும் கைடத்தனர்.

அறுசுவை ஒரு ஆலமரம்.

அதன் வேர் பாபு அண்ணா.

அதன் விழுதுகள் அதிகமான அனுபவ சளிகலள்.

அதன் கிலைகள் மற்றா தோழிகள்.

நாங்க ( ஒருசிலர் ) எல்லரும் அதில் இதமா மன நிம்மதிக்கு இலைப்பர வரும் பறவைகள். ( வெளி நாட்டில் தனிமையை போக்குகிரது அதர்க்கா சென்னேன்)

இந்த ஆலமரம் அதிகமான விழுதுகள் விட்டு வளர என்னுடையா வாழ்த்துக்கள்.

நன்றி அறுசுவை.

" வாழ்க வளமுடன் "
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நல்ல திரெட் தனிஷா,என்னிடம் சென்பகா முன்பே கணவன்மனைவி அந்நியோன்யத்தில் கேட்டாங்க,பதில் பெரியதாக சொல்லி இருந்தேன்.இன்னும் எவ்வளவோ இருக்கு,ப்ரபாதமு ரொம்ப அருமையாக சொல்லிட்டீங்க,வனிதா இதமாக சொல்லிருக்கீங்க,அ ன்புடன் ரு சியுடன் சு வைத்து மகிழ வை யகத்துக்கு வந்ததே அறுசுவை - defnition எப்படி இருக்கு ? ஏதோ எனக்கு தெரிந்த எளிய உரை.எனக்கு கத்தாரில் இருக்கும் என் கொழுந்தனார் மனைவி நாச்சியா மூலம் அறுசுவை அறிமுகம். அரிய பல சுவைகளை அறிமுகப்படுத்திய அறுசுவை பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் தனிஷா!
ரொம்ப நன்றிப்பா! உண்மையிலேயே அறுசுவையை பற்றி யாராவது வாய் திறக்க மாட்டாங்களா? மனசில் இருக்கிறதை கொட்ட மாட்டோமான்னு எதிர்பார்த்திட்டே இருந்தேன்.எவ்வளவு நாளைக்குதான் என் கணவரையே அறுசுவை பற்றி மாஞ்சு மாஞ்சு புகழ்ந்து அவரை கஷ்டப்படுத்தறது??? இப்பல்லாம் ஏதாவது பேசறதுக்கு முன்பு, அதாவதுன்னு சொல்றதுக்கு " அ" என்று நான் வாய் திறந்தால்கூட தப்பிக்க எந்த வழியா ஓடலான்னு திரும்பி, திரும்பி பார்ப்பார். சரிங்க, விஷயத்துக்கு வர்றேன்.
நான் முதன் முதலாய் இந்த அறுசுவை பற்றி தினமணி கதிரில் பாபு அண்ணாவின் கட்டுரை மூலமாக தெரிந்துகொண்டேன்
ஏதோ வழக்கமான குக்கரி சைட்டாத்தானே இருக்கும்னு நானும் உடனே ஓப்பன் பண்ணலை. 2 நாட்கள் கழித்து ஓப்பன் பன்ணி படிச்சேன். ஆரம்பத்தில் ஒண்ணும் புரியலை.
குறிப்புகளினை பார்வையிட்டபோது முதலில் பார்த்தது செல்விக்காவின் குறிப்புகள்.படிக்க,படிக்க எல்லாமே எங்க ஊர் சமையலை போலவே ,அம்மாவின் சமையலைபோலவே இருந்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
அடுத்தடுத்து எல்லாரின் குறிப்புகளும் படிக்க, படிக்க எல்லாமே ரொம்ப எளிமையாய் சந்தேகங்களுக்கு விளக்கங்களுடன் பார்த்ததும் நம்பவே முடியலை எல்லாமே எளிய தமிழில்!
ஆஹா, "இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் கீதாலஷ்மி" ந்னு மணிக்கணக்காய் சுற்றுலாவில் பல இடங்களினையும் கண்டு எப்பிடி ஆச்சர்யமும், சந்தோஷமும் அடைவோம்.அந்த ஒரு உணர்வுதான் மற்ற மன்றப்பகுதிக்குள் வலம் வந்தபோது இருந்தது.
இன்று காலையில் கூட என் கணவர் சொன்னார்.
நம்ம கம்ப்யூட்டரோட ஹோம் பேஜ் இப்பல்லாம் அறுசுவையா ஆய்டுச்சுன்னு. காலையில் அறுசுவையை ஓப்பன் பண்ணினா ராத்திரி தூங்கப்பொற கடைசி நிமிஷம் வரைக்கும் எங்க குடும்பத்தில் ஒருவராக எங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருக்கும்!
"தினமணியை பார்வையிட்ட அந்த நாள் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்"
என் வாழ்க்கையில் எனக்கும் நன்றாக சமைக்க தெரியும்னு உணர வைத்தது, உலகம்பூராவும் இருக்கும் அன்பான தோழிகளை அடைந்தது,எனக்குள்ளும் இருக்கும் சிறு நகைச்சுவை உணர்வை வெளிக்கொண்டுவந்தது என்று அறுசுவையால் நான் அடைந்த பலன்கள் இன்றுவரை ஏராளம்!
இது எல்லாமே மனதால் உணர்ந்து அனுபவித்து எழுதிய உண்மையான வார்த்தைகள்!
வாழ்க பாபு அண்ணா! வளர்க அறுசுவையின் புகழ்!

வனிதா ரொம்ப சாட்டா சொல்லிடீங்க. பரவாயில்லை. உங்க குறிப்பு இதில் வருவது மகிழ்ச்சினு சொல்லியிருக்கீங்க இன்னும் நிறைய கொடுங்க. எல்லோருடனும் மகிழ்ச்சியா இருங்க. இதுதான் பல விஷயங்களை மறக்க, சிரிக்க உதவுதுனு சொன்னீங்க பாருங்க இது கோடியில் ஒரு வார்த்தை

ப்ரபா உங்களிடம் இருந்து இப்படி பதிவை நான் எதிர்பார்க்கவே இல்லை. ரொம்ப அழ்கா எடுத்துகாட்டோடு சொன்ன விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அறுசுவை ஒர் ஆலமரம்னு சொல்லி அசத்தீடீங்க. குட்

ஆசியாக்கா நானும் உங்க பதிவை கணவன் மனைவி அன்னியோனியத்தில் படித்திருக்கேன். இருந்தாலும் இதில அறுசுவைய பத்தி ஷார்ட்டா கவிதை எழுதி அசத்திடீங்க.

கீதா உங்க பதில் ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது படிக்க. உங்க எழுத்து நடை எப்போதுமே நன்றாக இருக்கும். இதில் நீங்க அறுசுவை மேல் வைத்திருக்கும் அன்பு நல்ல புலப்படுகிறது. நன்றி கீதா. நானும் உங்களை மாதிரிதான். ஒருசில நேரங்களில் என் ஹஸ் டென்ஷனே ஆயிருக்கார். ஆரம்பத்தில் எல்லோரும் பாபு அண்ணாவுடன் ஜாலியா பேசும்போது இவங்க எல்லாம் இந்த அட்மினோட சொந்தகாரங்க போலனு நினைச்சேன். இப்போ நினைச்சா சிரிப்பா இருக்கும்.

மற்ற தோழிகளும் வந்து உங்க அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஆமாம் தனிஷா, நமக்குன்னு யார் இருக்கா இங்க, கணவரைவிட்டா, . நான் பாடும் அறுசுவை புகழை கேட்காட்டி அவருக்கும் பொழுது ஓடாதுப்பா,
அதிலும், ஒரு முக்கியமான சந்தோஷமான நன்மை என்னன்னா, எங்க ஊர் அக்கா, செல்விக்காவை கண்டுபிடிச்சது.
அதிசயம் ஆனால் உண்மைன்னு கண்டிப்பா சொல்லலாம். முதன் முதலில் அவங்ககிட்டதான் பேசினேன். அப்ப இருந்தே ஏதோ ஒரு உணர்வு அவங்க ரொம்ப நெருக்கமானவங்க மாதிரி. ஆனா புரியலை.
ஒருமுறை,எங்க ஊர் பொங்கல் விழா பற்றிய பதிவில் தான் உண்மையாவே அவங்க நெருக்கமானவங்கன்னு தெரிய வந்தது.
அவ்வளவு சந்தோஷப்பட்டேன்.
அவங்க தங்கையும் நானும் ஒரே வருடத்தில் ஒரே காலேஜில் படிச்சிருக்கோம்.
அதேபோல்தான் சவூதி செல்வியின் அறிமுகமும். எல்லாருடைய நட்பும் கிடைக்க ஒரு பாலமாய் இருக்கும் அறுசுவை பற்றி சும்மா பேச்சுக்காக சொல்லக்கூடாது தனிஷா., புகழ்ந்து கொண்டே போகலாம்.
மற்ற மொழி பேசும் என் தோழிகள் இந்த சைட் பற்றி சொன்னால் , எனக்கு பொறாமையாய் இருக்கு கீதான்னு சொல்வாங்க "

ஹாய் தனி,
வீட்டில் பொழுது போகலையா? யோசிச்சுகிட்டே இருக்கியா?

அறுசுவை எனக்கு அறிமுகம் ஆனதை ஏற்கனவே எங்கோ சொல்லி இருக்கேன்.

பழைய தளம் இருக்கும் போதே என் கணவர் ஒருமுறை என்னிடம் இது போல் ஒரு தளம் இருக்குன்னு காட்டினார். வெறும் குறிப்புகளை மட்டும் பார்த்துட்டு போய் விடுவேன். அதன் பிறகு ரொம்ப நாள் கழித்து (நவம்பர் 2006) எங்களுக்கு ஏற்பட்ட ஒரு பெரிய விபத்தில் மனதொடிந்து போயிருந்தேன். எனக்கு சமையலில் ஆர்வம் அதிகம் என்பதால் என் மனதை திசை திருப்ப என் கணவர் நீயும் குறிப்புகள் கொடுக்க ஆரம்பி என்று எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தினார். முதல் குறிப்பை அடித்து பாபுவுக்கு அனுப்பி விட்டு காத்திருந்தேன், என் பெயரை சேர்த்து விட்டார் என்பது கூட தெரியாமல். பிறகுதான் எனக்கும் குறிப்புகள் கொடுக்கும் வசதி இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன். முதல் குறிப்பு பதிவாகி வந்ததும் நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அதன் பிறகே மன்றத்திற்கு வர ஆரம்பித்தேன். முதன்முதலில் என்னிடம் பேசியது கதீஜா தான். என் குறிப்புக்கு பின்னூட்டமும் கொடுத்து என்னை ஊக்குவித்தாள். அப்ப நான் ரொம்பவும் உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்பட்டேன். மனோ மேடம், அஸ்மா, மனோகரி எல்லாம் ஆளாளுக்கு வைத்திய முறைகள் சொல்லியும், ஆறுதல் சொல்லியும் தேற்றினார்கள்.

நான் அறுசுவையில் இணைந்து கிட்டதட்ட இரண்டு வருஷத்திற்கு மேலாயிற்று. இதன்மூலம் எனக்கு எத்தனை மகள்கள், சகோதரிகள், தோழிகள் கிடைத்துள்ளார்கள்!! ஒரு சகோதரரும் கூட கிடைத்துள்ளார். என் கவலைகளை மறக்க, சிரிக்க, சிந்திக்க, கலந்துரையாட எல்லாவற்றிற்கும் அறுசுவைதான்.

என் குறிப்புகள் நிஜமாகவே கொஞ்சம் பேருக்காவது பயன்பட்டிருந்தால் ரொம்பவே சந்தோஷம் அடைவேன்.
இவ்வளவு சந்தோஷங்களை அள்ளிக் கொடுத்த அறுசுவைக்கும், பாபுவுக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

ஆனால்......
நானும் இப்ப அறுசுவைக்கு வருவதற்கு ஒரு சின்ன இடைவேளை கொடுக்கப் போகிறேன். அதற்கான காரணத்தையும், எப்போதிருந்தென்றும் விரைவில் சொல்கிறேன்:-)

இப்படியொரு வாய்ப்பு கொடுத்த தனிஷாவுக்கு மிக்க நன்றி. (நீ சொன்ன மாதிரியே சொல்லிட்டேம்பா)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நான் கூகிளில் சமையலப் பத்தி ஏதாவது தேடுவேன்.அப்படித் தேடினப்போ தமிழ்ல இருந்தது.அப்பநான் அசால்டா விட்டுட்டேன்.ஒரு 2 நாள் கழித்து அதுல என்னதான் இருக்குன்னு ஒப்பன்பண்ணா நிறைய குறிப்புகள் இருந்தது.எனக்கு 2007ல் அறிமுகம்.அப்போ பெயர் பதிவு மட்டும் செய்தேன்.எப்படி தமிழ்ல டைப் செய்றதுன்னு சரியா எனக்கு தெரியல.நான் எல்லோரும் அதுல அரட்டை அடிக்கறது பார்க்கும் போது ஆசையா இருக்கும்.சைலண்ட் ரீடரா மட்டும் இருந்தேன்,அப்புறம் படிக்க படிகதான் தெரிந்தது.என்னிடம் முதன்முதலா பேசியவங்க ரஜனி(aniaksh),விஜி டிவிம்.

என் பொழுதுபோக்கே என் பொண்ணும்,அறுசுவையும் தான்.போன் வருஷம் நான் கர்ப்பமா இருக்கும் போது அறுசுவை தான் ஆறுதல்.அதற்க்கு பாபு அண்ணனுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனீ ஏற்கனவே இந்த இழை தொடங்கியிருக்காங்க.மறுபடியும் நீங்க தொடங்கி எனக்கு வாய்ப்பளித்தற்க்கு உங்களுக்கும் என் நன்றி!!.

ப்ரபாதாமு அறுசுவையௌ அழகா ஆலமரம்னு சொல்லிருக்கிங்க.சூப்பர்!!.நமக்கு என்ன சந்தேகம் வந்தாலும் நாம கேட்டு தெளிவுபடுத்திக்கலாம்.

கீதா நீங்க சொல்வது சரிதான். உங்க ஊர் செல்விக்காவை கண்டுபிடிக்க உங்களுக்கு கிடைத்த வரப்பிரதாசம்னு சொல்லியிருக்கீங்க. உங்களுக்கு மட்டும் இல்லை எல்லோர்க்கும்தான்.

செல்விமா ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு, அறுசுவை மேல் நீங்க வைத்திருக்கும் மதிப்பை சொல்லியிருக்கீங்க. உங்களுக்கு எல்லோரும் கிடைத்த மாதிரி, எங்களுக்கும் நீங்க கிடைச்சிருக்கீங்க. எல்லாத்தையும் நல்ல சொல்லிட்டு அதுஎன்ன இடைவெளினு பேசியிருக்கீங்க. எப்பவும் உங்கள் அன்பான பதிவை பதியுங்கள். பாருங்க கீதா எவ்ளோ சந்தோஷமா சொல்லியிருக்காங்க உங்களை பத்தி. கவலைகளை மறக்க, சிரிக்க, சிந்திக்கனு எப்பவும் எங்களுடன் உரையாடுங்க. உங்க குறிப்பு கொஞ்ச பேருக்கு இல்லை நிறைய பேருக்கு உதவும்

மேனு ரொம்ப நன்றீ. நீங்க சொன்ன பிறகு நானும் நேத்து பார்த்தேன் அந்த பதிவில் ஒரு 5 பேர்தான் பதிவு போட்டுருக்காங்க. ஆனால் இதில் எல்லோரும் போடனும்னு எனக்கு ஆசை.எல்லோருக்கும் இந்த தளம் எப்படி கிடைத்தது பயன் என்ன அதுதான் இந்த இழையின் நோக்கமே அதுதான். நீங்க சொன்னமாதிரி நம்ம குழந்தையோடும் அறுசுவையோடும்தான் நமக்கு நேரம் போவுது. நம்ம எல்லோருமே பாபு அண்ணாவுக்கு கடமை பட்டிருக்கோம்.

எல்லோரும் தொடருங்க

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்