கோவக்காய் கடலை பருப்பு

தேதி: March 23, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கோவக்காய் - கால் கிலோ
கடலைப்பருப்பு - 50 கிராம்
வெங்காயம் - 1
பூண்டு - 1 பல்
தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்
சில்லி பவுடர் - கால் ஸ்பூன்
சீரக பவுடர் -கால் ஸ்பூன்
எண்ணெய் - 1- 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - 2 இணுக்கு


 

முதலில் கடலைப்பருப்பை ஊற வைத்து மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு உதிரியாக வேக வைத்து எடுக்கவும்.
கோவக்காயை நீளவாக்கில் சிறியதாக கட் செய்து வைக்கவும். வெங்காயம் கட் செய்து கொள்ளவும். பூண்டு தட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய்வற்றல் கிள்ளி போட்டு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் வதக்கி, தட்டிய பூண்டு போட்டு, கோவக்காய் போட்டு வதக்கவும். சிறிது வதங்கியவுடன் உப்பு, சில்லி பவுடர், சீரக பவுடர் சேர்க்கவும். பிரட்டி விடவும். வேக வைத்த கடலை பருப்பு சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
சுவையான கோவக்காய் கடலைப்பருப்பு பொரியல் ரெடி.


இதனை இலையில் பரிமாறினால் திரும்பி பார்ப்பதற்குள் காலியாகி விடும். இதன் ருசி அனைவருக்கும் பிடிக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கோவைக்காய் கடலைப்பருப்பு செய்தேன் நன்றாக வந்தது எனக்கு மிகவும் பிடித்து விட்டது. நன்றி

கடலைபருப்பு செய்தேன் உண்மையிலே ஆசியா நிங்க சொல்வது சரி என்னவர் கோவக்காயே சாப்பிடதாவர் நான் நல்ல அதில் கிர்ஸ்பியா வறுவல் செய்தால் தான்
சாப்பிடுவார் சரி இந்த தடவை உங்க முறையில் செய்தேன் காலியாகிட்டது நல்ல டேஸ்டியா இருந்தது.

மிக்க மகிழ்ச்சி.கோவைக்காய் ரெசிப்பிக்கு என்று ஒரு கிலோ வாங்கி விட்டேன்,3 கொடுத்தாச்சு,இன்னும் கால் கிலோ இருக்கு,அதனை எப்படி செய்வது என்று யோசனை ஓடிக்கொண்டிருக்கிறது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியா கோவைக்காய் கடலைப்பருப்பு செய்தேன். சுவை அபாரம். எனக்கும் என்னவருக்கும் மிகவும் பிடித்து விட்டது. நன்றி
அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆசியாக்கா,
நலமா? ரொம்ப நாள் ஆச்சு உங்களோட பேசி. ஊருக்கு போய்ட்டு திரும்பி வந்துட்டிங்களா?
வீக்கென்ட் உங்களோட கோவைக்காய் கடலைபருப்பு செய்தேன். சூப்பரா இருந்தது. எப்பவும், காயை மெலிதாய் நீளவாட்டத்தில் வெட்டி ஷலோ ஃபிரை பண்ணி பொடித்தூவி எடுப்பேன். ஒரு சேன்ச்க்காக இதுப்போல செய்ய விரும்பி, முயற்சி செய்து பார்த்தேன். கடலைபருப்பு, தேங்காய் எல்லாம் போட்டது வித்தியாசமான சுவையில் ரொம்ப நன்றாக வந்தது. என் கணவருக்கும் பிடித்திருந்தது. அடுத்தமுறை கோவைக்காய் வாங்கும்போது, உங்களோட மற்ற கோவைக்காய் குறிப்புகளையும் ட்ரை பண்ணி பார்க்கனும்னு நினைச்சிட்டுருக்கேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அன்பான பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி.உங்க சுவையான சுவையை விடவா.
நலம் .நான் என் மகளின் விடுமுறைக்கு வந்து குடும்பத்துடன் இருக்கிறேன்,இன்னும் ஒரு வாரம் அவருடன்,அப்புறம் ஊர்.திரும்பி விடுமுறைக்கு வரனும்.இப்போதைக்கு இப்படி போகிறது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.