சிரிய நாடு - பகுதி 2

தோழிகள் பலரும் சிரிய (Syria) நாடு பற்றி தெரிந்து கொள்ள காட்டிய ஆர்வத்தை பார்த்து எனக்கும் இந்த நாட்டை பற்றி எழுத ஆசை வந்துவிட்டது. :) எனக்கு தெரிந்த விஷயங்களை என் அனுபவங்களை இங்கே எழுதுகிறேன். உங்களுக்கு சுவாரச்யாமாக இருந்தால் சந்தோஷம்... இதுவரை எழுதிய அனுபவம் இல்லை, இதுவே முதன் முறை, பிழைகளுக்கு மன்னிக்கவேண்டும்.

நீங்க ஹமாம் என்று சொல்லவும் நானும் நம்ம ஊர் ஹமாம் சோப்பைத்தான் நினைத்தேன். பாட்டில் பாம்பா ரொம்ப பயமா இருக்குப்பா. பார்க்கும் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும். சிரியாவை பற்றி இப்படி அழகா எழுதி, ஒரு புக்கா பப்ளிஷ் பண்ணுங்க வனி.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹுசைன், நான் ஆமை புகுந்த வீடு என்று, வேறு ஒரு தலைப்பின் கீழே நகைசுவைக்காக எழுத வந்தேன், நீங்கள் இங்கே எழுதி இப்படி என்னை எழுதவிடாமல் பண்ணிட்டீங்களே:), என்னால் நம்ம முடியவில்லை, எப்படி நான் நினைத்ததை நீங்கள் தலைப்பாக போட்டீங்களென்று.

வனிதா, இதில் நான் ஒரு வரிகூட இன்னும் வாசிக்கவில்லை, தலைப்பைப் பார்த்துவிட்டு பதில் போடுகிறேன், பிறகு ஆறுதாலகத்தான் வாசிப்பேன். கொஞ்சம் வேளைக்கு எழும்பினேன் மோனிங் சொல்ல வந்தேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் வனிதா எப்படி இருக்கீங்க? குட்டி பாப்பா எப்படி இருக்கா? உங்களோட இந்த சிரிய பற்றிய விளக்கங்கள் ரொம்பவே சூப்பர்ங்க. அது எப்படி அப்படியே கற்பனையில வந்து நிக்கற மாதிரி இருக்கு. நீங்க ஒவ்வொரு முறையும் விடுற அந்த pause தாங்க ஹைலைட் அடடா அடுத்து எத பத்தி சொல்ல போறீங்க என்ன சொல்ல போறீங்கன்னு ஆர்வத்தை ஏற்படுத்துது. fantastic வனிதா. என் ப்ரண்ட் கூட இப்படி தான் லெட்டர் எழுதுவா ஏதோ என் கூட நேர்ல பேசுறது போலவே அங்கங்க பாஸ்விடுவா ஏய் இருடி அம்மா கூப்பிடுறாங்க அதபண்ணிட்டு வரேன் இதபண்ணிட்டு வரேன்னு. எங்க சிஸ்டம் கொஞ்ச நாளா சரி இல்ல இப்பதான் சரி ஆச்சு உடனே உங்க சிரியா பதிவ தான் முதலில் படிச்சேன்.

நல்ல படியா போயிட்டு வாங்க உத்தமி... நாங்க பிராத்திகிறோம்.

ஆம் மிசஸ் ஹுசைன் நானும் இதை எங்கோ படித்திருக்கேன்... இருப்பினும் ஆமை வீட்டில் வளர்த்து பார்ப்பது இங்கு தான். தொடர்ந்து படிங்க... மிக்க நன்றி.

மிக்க நன்றி தனிஷா... ஆமாம் கண்டிப்பா... காப்பி ரைட் கேட்டவர் இங்க தான் இருக்கார் (மிசஸ் ஹுசைன்) :)

அதிரா.... மிசஸ் ஹுச்சைன் சொல்ல வந்ததை நேரா சொல்லுன்வாங்க... நம்ம தான் ஊரையே சுத்திகிட்டு சொல்லுவோமே ;) ஹிஹிஹீ, நம்மட அழகு தமிழில் சொல்லுறது... படிக்க மாட்டன்னு சொல்லுவோமோ???

பாப்பா நலம் ஹரி காயத்ரி. மிக்க நன்றி..... நீங்க சொல்வது போல் ஒரு கடிதம் நினைத்து பார்த்தேன்.... சிரிப்பும் வந்தது அழகாகவும் தெரிந்தது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இலை உதிர் காலமும் போனது... குளிர் காலம் துவங்கியதும், வெளியே செல்ல முடியாத நிலை. இருந்தாலும் வாக்கிங் போவதை மட்டும் நானும் என்னவரும் ஒரு போதும் நிறுத்தவில்லை. தினமும் மாலை நேரம் மெஜே ஜபல் சாலையில் ஒரு வாக் போவோம். அங்கே சாலை ஓரம் நம்ம ஊர் பெட்டி கடை போல் என்று இருக்கும். அதன் முன் ஒரு காப்பி வென்டிங் மிஷின் இருக்கும். அங்கே காப்பியை வாங்கி (பால், சர்க்கரை உள்ள காப்பி தான்), அந்த கடையின் பின் சின்ன விளையாட்டு மைதானம் இருக்கும், அதை ஒட்டினார் போல் இருக்கும் குட்டி சுவற்றில் அமர்ந்து கொண்டு போகும் வரும் எல்லாரையும் பார்த்து கமன்ட் அடிச்சிகிட்டு (நம்ம மொழி பேசுர ஆளுங்க நாங்க தானே.... யாருக்கும் புரியாது, ;) தைரியமா பேசலாம்) நிம்மதியாய் காப்பி குடிப்பது என் வழக்கம். அப்படி ஒரு நாள் குடித்து கொண்டு இருந்த போது தான் அந்த கார்களின் வரிசை கண்ணில் பட்டது. முன்னே போன கார் மட்டும் பூ அலங்காரம் செய்யப்பட்டு, பின்னே வருசையாக 7, 8 கார்... நம்ம ஊரில் ரஜினி படத்துல அவர் பின்னாடி போர கார் மாதிரி.... எல்லாம் விலை உயர்ந்த கார்கள், ஓட்டியதெல்லாம் இளவட்டங்கள். ஓயாமல் வெச்ச கையை எடுக்காம ஹார்ன் அடிச்சாங்க. எனக்கு ஒன்னும் புரியலை.. என்ன எதாச்சும் முக்கியமான ஆளுங்க கார்'ஆ?? என்றேன். என்னவர் சொன்னார் "இந்த ஊரில் இப்படி போறது எல்லாம் கல்யாண வண்டிங்க... முன்னாடி போறது பெண் மாப்பிள்ளை வண்டி, பின்னாடியே வாலை பிடிச்சிகிட்டு போறது எல்லாம் அவங்க பிரென்ட்ஸ்"னு. எனக்கு ஒன்னும் புரியலை... ராத்திரி நேரம்... இப்படி ஹார்ன் அடிப்பது குற்றம் இல்லையா? இவர்... "அதெல்லாம் ஒன்னுமில்ல... அங்க பாரு போலீஸ் காரர் இவங்களுக்காக மற்ற வண்டிகளை போக சொல்றதை.. இவங்களுக்கு முக்கியமான கொண்டாட்ட நேரம் கல்யாணம் தான்"னு சொன்னார். உண்மை தான்.. அன்று முதல் இன்று வரை பல நாள் இரவில் தூக்காதில் கூட இந்த ஹார்ன் சத்தம் கேட்டு பயந்து எழுந்து இருக்கேன்... அப்படி அடிப்பாங்க... அவங்களுக்கு அதில் ஒரு சந்தோஷம். என்னவர் யாரோ ஒரு நண்பரின் திருமணத்துக்கு போய் வந்த கதையை சொல்ல ஆரம்பித்தார்... காப்பி முடிந்து போனது... சரி என்று கதை கேட்டு கொண்டே முடி வெட்ட (எனக்கு தான்) அழகு நிலையம் ஒன்றை நோக்கி நடந்தோம்.

"இங்க ஒரு முறை ஒரு சிரியன் அழைத்த திருமணத்துக்கு போனேன், அந்த பொண்ணுக்கு ஒரு 22, 23 இருக்கும் (வயசு தான்.... இதை எல்லாம் இவர் ஏன் கவனிக்கறாருன்னு தானே கேக்கறீங்க... இதை தான் நானும் கேட்டேன், என்னைவிட அழகா இருந்தாளான்னும் சேர்த்து கேட்டேன். இல்லைன்னு பொய் சொன்னது வேறு விஷயம்.) அந்த மாப்பிள்ளை'கு ஒரு 40 இருக்கும்.... நான் அவன் வந்து இன்விடேஷன் குடுக்கும் வரை அவனுக்கு கல்யாணம் ஆகி பசங்க இருக்கும்'னு நினைச்சிகிட்டு இருந்தேன்.... கேட்டா இந்த ஊரில் மாப்பிள்ளை வீட்டில் தான் கல்யாண செலவை பார்க்கனுமாம். இது போதாதுன்னு பையனுக்கு கார், வீடு எல்லாம் இருக்கனுமாம்... இப்படி நல்லா செட்டில் ஆன பையனை தான் கல்யாணம் பன்னுவாங்களாம் இந்த ஊர் பொண்ணுங்க. அப்படி ஒரு ஸ்டேஜுக்கு அவன் வர பாவம் அவனுக்கு இவ்வாளவு வயசு ஆயிடுது. இந்த ஊரில் யாராது ஆண்கள் 30 வயசுக்குள் திருமணம் ஆனவங்கன்னா... அவங்க ரொம்ப பெரும் பனக்கார ஆளுங்களா தான் இருக்கும். கூடவே பெண்களும் இஸ்லாமியரா இருந்தாலும் சரி, கிருஸ்தவறா இருந்தாலும் சரி, வெள்ளை கவுன் மாதிரி இங்லீஷ் படம் மாதிரி தான் ஆடை இருக்கும். பார்க்க நல்லா இருக்கும்."னு சொன்னார்.

ம்ம்... சொல்லி கதை கேட்டு முடிச்சப்போ பார்லர் வாசலுக்கு வந்துட்டோம். என்னவர் கதவை திறந்து, உள்ளே இருந்தவரை அழைத்தார்.... இந்த சின்ன கேப்'ல நான் பார்லரை ஒரு நோட்டம் விட்டேன்... கையில் ஸ்டையிலாய் ஒரு சிகரெட்டுடன் ஒரு பெண்!!!!... அவருக்கு சிகை அலங்காரம் செய்தவர் ஒரு ஆண்!!!. உடனே காதை கடித்தேன்... "அச்சச்சோ ஒரே ஆம்பலையா இருக்காங்க... பொண்ணுங்க யாராது முடி வெட்டுவாங்களான்னு கேளு"னு... பாவம் அவரும் அவருக்கு தெரிந்த அரைகுறை அராபிக்கில் அந்த ஆளை கேட்டார்... அவன் "லா லா"னு சொன்னான். எனக்கு ஒன்னும் புரியலை... "எதுக்கு இப்போ பாட்டு பாடறான்"னு கேட்டேன்.. "நோ நோ சொல்றான்"னு சொன்னார். சரி... நீயும் பதிலுக்கு "லா லா" பாட்டு பாடிட்டு வான்னு சொல்லிட்டு நிக்காம நடக்க ஆரம்பிச்சுட்டேன்.

எங்காள் பின்னடியே வந்தார்... (பாட்டு பாடி அவனை அனுப்பிட்டு தான்), ஏன் வெட்டிக்க வேண்டியது தானே... "எனக்கு உள்ள போகவே பயமா இருக்கு.. ஒரு பொண்ணு உள்ளே உட்கார்ந்து தம் அடிக்கிது... அப்படியே இல்லைனாலும் எப்படி இவனை தலையில் கை வெய்க்க விடுறது... எனக்கு ஒரு மாதிரி இருக்கு... மாட்டேன்"னு சொன்னேன். இவர் சொன்னார்... அப்படி பார்த்தா நீ இந்த ஊரில் எங்கையும் முடி வெட்டிக்க மாட்ட... இதே சீன் தான் எல்லா இடத்துலையும், வேணும்'ன இன்னும் 4 இடம் காட்டவான்னு... வேணாம்... இந்தியா போகும்போதே வெட்டிகறேன்னுட்டேன். :(

இந்த கொடுமை கூட பரவாயில்லை... மருத்துவமனைக்கு போக வேண்டிய நிலை வந்த போது !!!

- நாளை தொடர்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்பா, ஒரு வழியா எழுதிட்டீங்களா? நானும் காலையில இருந்து வெயிட் பண்ணி பண்ணி களைச்சு போயிட்டேன் !! பத்திரிகைல ஒரு வாரம் தொடர் கதை போடலைன்னா ஒரு ஏக்கம் உண்டாகுமே - அந்த மாதிரி ஆகிப்போச்சு எனக்கு !!!! அடிக்கடி போயி சமீபத்திய பதிவுகள் செக் பண்ணீட்டே இருந்தேன். இன்னைக்கி நான் தான் முதல் போணி போல :D

இப்படிக்கு,
சந்தனா

ஹஹஹா... மிக்க நன்றி இவ்வளவு ஆவலோட காத்திருந்து படிச்சது சந்தோஷமா இருக்கு. இன்னைக்கு காலையில் இருந்து தலை வலி... சமைக்க கூட இலை, வேலைக்கு வந்த பொண்ணு சமைச்சுட்டு போனா, சாப்பிட்டும் குழந்தை தூங்கல, நானும் தூங்கல... மாலை நேரம் கொஞ்சம் தூங்கின பிறகு தான் நல்லா இருக்கு. அதான் பதிவு போட லேட். இன்னைக்கு வேணாம்'னு விட்டேன்... என்னவ்ர் உட்கார்ந்து முழு மூச்சா "சிவகாமி சபதம்" படிக்கறார். சரி... முடிச்சிட்டு வரட்டும் அது வரை இந்த பதிவை போடலாம்'னு வந்தேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சரி சரி - போயி நல்லா ரெஸ்ட் எடுங்க !! அப்ப தான் தலைவலி கொஞ்சமாச்சும் சரியாகும். சிவகாமியின் சபதம் முடிஞ்சா நீங்களும் படிங்க - ரொம்ப விறுவிறுப்பா இருக்கும்னு சொல்லுவாங்க. நான் கல்கியோட மத்த நாவல்கள் படிச்சிருக்கேன், ஆனா சிவகாமியின் சபதம் இன்னும் படிச்சதில்ல!!

இப்படிக்கு,
சந்தனா

தினமும் சிரியா தொடரை தேட ஆரம்பித்து விட்டேன்,நச்சென்று அதேசமையம் நகைச்சுவையாக எழுதுறீங்க.எழுதுங்க,எழுதுங்க,எழுதிகிட்டே இருங்க வனி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வனிதா இப்போதுதான் இந்த திரட் படித்தேன்.உண்மையில் மிக அழகாக எழுதி வருகின்றீர்கள்.ஒவ்வொரு பதிவையும் முடிக்கும் பொழுது வெகு சஸ்பென்ஸுடன் முடித்து படிப்பவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கின்றீர்கள்.சபாஷ்.சிரியா திருமணங்களை பற்றி இன்னும் சற்று விரிவாக எழுதி இருக்கலாம்.
இன்னும் தொடருங்கள்.படிக்க ஆவலுடன் இருக்கின்றோம்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்