சிரிய நாடு - பகுதி 2

தோழிகள் பலரும் சிரிய (Syria) நாடு பற்றி தெரிந்து கொள்ள காட்டிய ஆர்வத்தை பார்த்து எனக்கும் இந்த நாட்டை பற்றி எழுத ஆசை வந்துவிட்டது. :) எனக்கு தெரிந்த விஷயங்களை என் அனுபவங்களை இங்கே எழுதுகிறேன். உங்களுக்கு சுவாரச்யாமாக இருந்தால் சந்தோஷம்... இதுவரை எழுதிய அனுபவம் இல்லை, இதுவே முதன் முறை, பிழைகளுக்கு மன்னிக்கவேண்டும்.

இத்தனை நாளா நான் தான் உங்களை நொச்சு பண்ணினேன் - போட்டோ போடுங்க போடுங்க ன்னு. ஆனா இன்னைக்கு சத்தியமா தாங்க முடியலைங்க. அதான் நானே தேடி போட்டோஸ் பார்த்துட்டேன்.

ஆர்வமுள்ளவங்க போயி இந்த லிங்க் பார்க்கலாம். ரொம்ப அழகா இருக்கு. இதையெல்லாம் தேடிப் பார்க்கத் தூண்டிய வனிதாவின் எழுத்துகளுக்கு - ஓஓஓஓஒ போடணும் !!!!

http://www.flickr.com/search/?q=aleppo%20mosque&w=all&m=tags

அப்படியே இத ஒரு விண்டோ ல வனிதா எழுதினது ஒரு விண்டோ ல ன்னு பார்க்கலாம், பார்த்துகிட்டே இருக்கலாம்.

இப்படிக்கு,
சந்தனா

வனி,உங்கள் எழுத்து நன்கு மெருகேறி ஏதோ பெரிய எழுத்தாளரின் தொடர் படிப்பது போன்று உள்ளது.நாளை சூக்கில் சந்திப்போம்.கோல்ட் சூக்கா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ரொம்ப நல்லா கொண்டு போறீங்க இந்த சிரியா நாடு பற்றிய கட்டுரையை.படிக்க படிக்க சுவாரசியம் குறையாதவாறு உள்ளது,அடுத்து குடியரசு தின விழாவை பற்றி படிக்க ஆவலாய் இருக்கேன்...

ஹாய் mrs sekar,புகைப்படம் தந்தமைக்கு நன்றி.அதில் ஆம்பிதியேட்டர் பார்க்க நன்றாக இருக்கு.நிறைய பக்கங்கள் இருக்கு.வனிதா சொல்வதை அப்படியே ஆங்கிலத்தில் டைப் செய்து அதிலே தேடினால் அந்த புகைப்படம் வருது.நல்லா இருக்கு.

welcome ங்க (தேங்க்ஸ் க்கு பதில் சொல்லுவாங்களே அந்த welcome ஹி ஹி). நான் நேரம் கிடைச்சா முந்தைய பதிவுகளையும் revise பண்ணி அதுல போயி பார்க்கலாமுன்னு இருக்கேன். ஆமா, அதுல search பண்ணினா இவங்க சொன்ன எல்லாமே கிடைக்கும். வனிதா தான் போட்டோ காமிக்க மாட்டேனுட்டாங்க :D. ஓசி டூர் கிடையாது ன்னு சொல்லிட்டாங்க :D. அதான் !!!

இப்படிக்கு,
சந்தனா

This site also has good photos. Try:

http://www.theodora.com/wfb/photos/syria/

http://www.flickr.com/photos/31910792@N05/3139581014/ - Aleppo citadel entrance
http://www.flickr.com/photos/31910792@N05/3138736911/ - ruins of palmyra (back - citadel)
http://www.flickr.com/photos/31910792@N05/3139563006/ - view of Aleppo citadel
http://www.flickr.com/photos/31910792@N05/3139584924/ - main street of palmyra
http://www.flickr.com/photos/31910792@N05/3139584274/ - behind sun temple palmyra
http://www.flickr.com/photos/24866829@N00/3222035457/ - courtyard of umayad mosque Aleppo
http://www.flickr.com/photos/briansearwar/3185485653/ - courtyard of Umayyad mosque Aleppo
http://www.flickr.com/photos/briansearwar/3183938512/ - second entrance in Aleppo citadel
http://www.flickr.com/photos/n_a_kassem/3348769442/ - ampitheatre inside citadel of Aleppo
http://www.flickr.com/photos/n_a_kassem/3347934409/ - inside citadel Aleppo
http://www.flickr.com/photos/31910792@N05/3139573586/ - valley of tomb, palmyra
http://www.flickr.com/photos/31910792@N05/3138740491/ - Umayyad mosque, Damascus
http://www.flickr.com/photos/31910792@N05/3139570096/ - Umayyad mosque, Damascus
http://www.flickr.com/photos/31910792@N05/3139571844/ - tomb of a poor family, palmyra
http://www.flickr.com/photos/31910792@N05/3138752267/ - ampitheatre, palmyra
http://www.flickr.com/photos/31910792@N05/3138744001/ - tomb of elahbel, palmyra
http://www.flickr.com/photos/31910792@N05/3138750559/ - citadel, palmyra
http://www.flickr.com/photos/31910792@N05/3138750981/ - mosque inside Aleppo citadel
http://www.flickr.com/photos/31910792@N05/3139547998/ - ruins of palmyra

- பதிவு நாளை போடுகிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks vanitha.

இப்படிக்கு,
சந்தனா

வனிதா, இது என்னுடைய சமீபத்திய பதிவுகளில் வருவதற்காக ஒரு பதிவு. நேற்று சிரியா எங்க, சிரியா எங்கன்னு தேட வேண்டியதா போச்சு:) சரி, நீங்க மேல சொல்லுங்க.

நேற்று என்னவர் லேப்டாப் கேட்டுகொண்டே இருந்ததால் என்னால் பதிவு போட முடியாமல் போனது.

மிசஸ் சேகர்... மிக்க நன்றி. ஆனாலும் நான் இன்னும் எழுதாத இடத்தையும் சேர்த்து பார்த்து விட்டிர்களே... இது நியாயமா?! ;) எப்படியோ உங்க புன்னியத்தில் எல்லாரும் பார்த்தாச்சு. அண்ணாவிடம் கேட்டேன்... அண்ணா நான் சொன்னதை தான் சொன்னார்... சேர்த்தால் பக்கங்கள் திரக்க நேரம் ஆகும், புது தளம் வந்ததும் போடுகிறேன் என்று. அதனால் என்னிடம் இருந்த மெயில் ஐடி'கு மட்டும் அனுப்பி இருந்தேன்.

மிக்க நன்றி ஆசியா... :)

மிக்க நன்றி சுகன்யா... மிசஸ் சேகர் குடுத்த இழை நன்றாக இருந்தது. சில படங்களுக்கு மட்டும் என்ன இடம் என்று அதில் டேக் இல்லாமல் இருந்தது... அதனால் தான் நேற்று சின்ன லிஸ்ட் சேர்த்தேன். :)

மிசஸ் சேகர் உண்மையில் நேற்று நீங்க தந்த இழை முழுக்க நான் பார்த்தேன், நான் இது வரை எழுதிய அனைத்தும் அதில் உள்ளது. :) இனி எழுத போகும் இடம் பற்றியும் உள்ளது.

மிசஸ் ஹுசைன் நீங்கள் தந்த இழையும் பார்த்தேன், அதிகம் இல்லை... மிசஸ் சேகர் குடுத்ததை பாருங்க... நிறைய கிடைக்கும். :)

வின்னி... சிரியாவை எங்க தேடினீங்க?? அறுசுவை'லயா?? இல்ல என்னை போல உலக வரைபடத்திலா??? ;)

தொடர்ந்து படித்து கருத்துகளை பதிவு செய்யும் அனைவருக்கும் மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அலெப்போ சிடாடல் விட்டு வெளியே வந்த போது, எங்கள் வாகன ஓட்டுனர் அருகே ஒரு சூக் இருப்பதாகவும், அங்கே செல்லலாம் என்றும் சொன்னார். சரி என்று கிளம்பினோம்.... சிடாடலுக்கு மிக அருகில் இருந்தது அந்த சின்ன வாசல். ஏதோ குகைக்குள் நுழைவது போல் ஒரு உணர்வு. உள்ளே நுழைந்ததும் வெளி உலகுக்கு நமக்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருந்தது. முற்றிலும் கவர் செய்யப்பட்ட சூக். மிடிலீஸ்ட் பகுதியிலேயே மிக பெரிய கவர்டு சூக் இது தான் என்று என்னவர் சொன்னார். என்னடா சின்னதா தானே இருக்குன்னு நினைச்சேன்.... ஏன்னா அது அவ்வளவு அகலமா இருக்காது. கல்லால் ஆன சுவர்கள், அதுல சின்ன சின்ன கடைகள்.... நம்ம ஊர் மார்கட் மாதிரி கூவி கூவி அழைப்பார்கள். (நமக்கு ஒன்னும் புரியாதுங்கிறது வேறு விஷயம்) போனோம் போனோம் போனோம்... போயிகிட்டே இருந்தோம். இங்கே வந்தா எல்லாரும் கண்டிப்பா வாங்க கூடிய பொருள் "ஹேன்ட் மேட் சோப்"(Herbal homemade soaps). அவங்க சொல்வதை கேட்டா பயந்துடுவீங்க... நாங்க போனப்போ நிறைய கடைகளில் வருசையா பச்சை மற்றும் சாம்பல் நிர சோப் கட்டிகள் மூட்டை மூட்டையாக வைத்து இருந்தார்கள்.... என்ன இது என்று போய் கேட்டோம்... சோப் என்றார். என்ன சோப்?? உடம்புக்கா, துணிக்கா, பாத்திரத்துக்கா?? என்றோம்.... "எல்லாத்துக்கும் தான்"னு சொல்லி ஒரு நிமிஷம் என்னை முழிக்க வெச்சுட்டார் அந்த கடைகாறர். இப்படி கூட சோப் இருக்குமா என்று !!! உண்மையில் அலெப்பொவில் இப்படி பட்ட சோப்'கள் விர்க்க படுகின்றன... மிகவும் விலை குறைவு, தரமான சோப்கள் இவை. ஆனால் நம்மை போன்றவர்களுக்கு இவை துணிக்கு மட்டுமே பயன்படுத்த தோண்றும் (அழகா இருக்கோம்ல... நம்ம அழகுக்கு வம்பு வந்துடுவோம்'னு ஒரு பயம்). ஆனால் இதுக்கு என்றே பல இடங்களில் அலெப்போ'வில் செய்யப்பட்ட குளியலுக்கு என்றே செய்யப்படும் ஆலிவ் ஆயில் சோப்கள் கிடைக்கும். மிகவும் இயர்க்கையான இந்த சோப்களை இந்த ஊருக்கு சென்று வரும் அனைவரும் வாங்குவார்கள் (ஹமாமில் இந்த சோப் போட்டு குளித்து தான் இந்நாட்டு பெண்கள் அழகா இருக்காங்க போல).

இது மட்டும் அல்ல... இங்கு பல நாடுகளில் இருந்து வர வைக்கப்பட்ட பொருள்கலும் உண்டு. நானே கேஷ்மீர் வுல் அங்க வாங்கினேன்னா பாருங்களேன். ;) ஆடை, அபரனம், ஹுக்கா, இஸ்லாம்யர்களின் சிறப்பான ஆடைகள், கயிருகள், ஷால்கள், கார்பட்டுகள், ஹேன்ட் மேட் கிப்ட்ஸ், பொம்மைகள், ஓவியங்கள், ஜாடிகள் என அடுக்கி கொண்டே போகலாம்... உலகில் ஒரு பொருளை விர்ப்பர்கள் என்று சொன்னால், அதை அந்த சூக்கில் பார்க்கலாம். ஒரு அளவுக்கு மேல் நடக்க முடியவில்லை.... ஏதோ வால் போல் நீண்டு கொண்டே போனது அந்த சூக். அவ்வளவு தூரம் (முழுசும் போகல) போனதே முடியல... அங்க இருந்து திரும்ப முக்கிய சாலைக்கு எப்படி திரும்புவது??!! எப்படியோ ஒரு வழியாய் வந்து சேர்ந்தோம்... வெளியே வந்ததும் நம்ம ஊர் பணம் 50 ரூபாய்க்கு ஒரு பெரிய (மிக பெரிய) கப் நிறைய கண் முன் தயாரித்த ஆரஞ்சு ஜூஸ் தந்தார் ஒரு கடையில்... ஆஹா... இந்த சுவையான ஆரஞ்சு உலகில் வேறு எங்கும் கிடைக்காது. அமிர்தம்.

இந்த இடம் தான் அந்த காலத்தில் வணிகத்துக்கும் வியாபாரத்துக்கும் முக்கிய இடமாக இருந்தது. பல நாடுகளில் இருந்து இங்கு வந்து வியாபாரம் செய்து இருக்கிறாகள். இன்றும் அந்த சூக் நன்றாக பராமரிக்க படுவது தான் சிரியர்களின் திறமை என்று சொல்ல வேண்டும். எத்தனை மக்கள் கூடும் இடம்... எத்தனை நாட்டவர் கூடும் இடம்... ஒரு குப்பை கூட தரையில் காண இயலாது. அத்தனை அழகாக இருக்கும் சூக். இப்படி சில இடங்களை சுற்றி விட்டு மீண்டும் அரைக்கு சென்றோம். மாலை நேரம் குடியரசு தின ரிசப்ஷன்.... அழகாக பட்டுடுத்தி ஒரு பெரிய 5 நட்சத்திர ஹோட்டலில், ஒரு பிரம்மாண்டமான ஹாலில் நுழைந்தேன். உள்ளே முழுக்க நான் சொன்ன மர வேலைப்பாடு உள்ல பொருட்கள் தான். சும்மா இல்லை... பெரிய மேஜைகள், முகம் பார்க்கும் கண்ணாடிகள்.... ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்தால், அதன் எதிரே இருக்கும் கண்ணாடி தெரியும், அதனுள் இன்னும் ஒன்று, அதர்க்குள் இன்னும் ஒன்று என்று.... பார்க்க அழகாக தெரியும்... எத்தனை அழகாக யோசித்து இந்த இடங்களில் இந்த கண்ணாடி வைத்திருக்கிறார்கள் என்று நின்று பார்த்துகொண்டே இருந்தேன்.. (என்னை அல்ல... அந்த கண்ணாடிக்குள் கண்ணாடி தெரியும் அழகை தான். நிச்சயம் அந்த கண்ணாடி முன் நிற்கும் யாரும் அவர் முகத்தை பார்க்க மறந்து போவார்).

விருந்தினர் எல்லாம் வர துடங்கினர்... போய் வருசையில் நின்று அனைவரையும் வரவேர்க்க போனோம். வரும்போதே ஒரு சிலரை பார்க்க நம்ம ஊர் என்று நெற்றியில் எழுதி ஒட்டி இருந்தது. அனைவரும் வந்ததும் உள்ளே வந்தால் நான் பார்த்தவர்கள் என்னை பார்த்து பேச வந்தார்கள்... "Hello madam... where are you from??".. நான் "சென்னை"... "அடடா நம்ம ஊர் பொண்ணு சிரியாவிலா... எப்போ வந்தீங்க இங்க" இப்படி ஆரம்பிச்சு நம்ம தமிழில் சம அரட்டை. சிரியா வந்து பல தமிழரை சந்தித்த சந்தோஷம். சிரியாவில் தமிழர்கள் அதிகம் காணப்படும் இடம் அலெப்பொ தான். யாரும் சும்மா வருவதில்லை, மிக நல்ல சம்பலம், போக்குவரத்து வசதி அனைத்தும் பெற்றே வருகிறார்கள். வெளி நாட்டவர்களும் வந்தனர்... இஸ்லாமிய மற்றும் கிருஸ்தவ மதத்தின் இந்நாட்டு பெரும்புள்ளிகளுடம் நமது குடியரசு தின கொண்டாட்டம் இனிதே முடிந்தது. அப்போது இரவு 10 மணிக்கு மேல் இருக்கும். காலெல்லாம் வலி.... போய் தூங்களாம் என்று இருந்த நேரம்.. என்னவர் "இங்கு இருக்கும் சிரிய நண்பர் அனைவரையும் உணவு விடுதிக்கு அழைக்கிறார்" என்றார். அச்சோ... மறுபடியுமா வெளியே... என்று நொந்து போனேன்.

ஆனால் நான் போன இடம் போல் இது வரை ஒரு இடத்தை நான் பார்த்ததில்லை !!!

- நாளை தொடர்கிறேன் தோழிகளே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்