சொல்லுங்கள் pls

Beta HCG scan என்றால் என்ன?இந்த scan எதற்கு எடுக்கிறார்கள்.கர்ப அறிகுறிகளாகிய வாந்தி,மயக்க,அடிவயிற்றில் இழுப்பது போல் வலி,மார்பகம் பெரிதாதல் போன்றவை எப்பொழுது ஏற்படும் இவை 30 நாட்களுக்கு முன்பே தெரியுமா?இல்லை தோராயமாக எப்பொழுது தெரியும்.

"நல்லதே நடக்கும்"

http://healthengine.com.au/tests/blood/beta_hcg.html

http://findarticles.com/p/articles/mi_m0CYD/is_16_38/ai_107275721

எனக்கு சரியா தெரியலைங்க... அதான் உங்களுக்கு உதவுமோன்னு இந்த இழைகளை தந்தேன். பாருங்க. கூடவே நம்ம தோழிகள் யாராவது சொல்லுவாங்க. கவலை வேண்டாம். நீங்க சொல்லும் அறிகுறி எல்லாம் ஒரு சிலருக்கு கர்பம் உருவானதுமே தெரியும்'னு நினைக்கிறேன்... எனக்கு ஒரு மருத்துவர் சொன்னது, சரியா தெரியலை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பீட்டா ஹெச் சி ஜி என்று கூகுளில் தேடினால் பல நல்ல விஷயங்கள் வருது. எல்லாத்தையும் இங்க எழுதமுடியாது.இந்த ஹார்மோன் அளவு நீங்க ப்ரெக்னெடா இருந்தா ஒவ்வலூஷன் நடந்து கருத்தரித்து இருந்தால் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை இரட்டிப்பாகும். அதனை வைத்து நீங்க கர்பமாகிவிட்டீர்கள் என்று ரத்தப்பரிசோதனை மூலம் உறுதி படுத்துவார்கள். வீட்டில டெஸ்ட் எடுக்கும் போது ஹோம் ப்ரெக்னென்சி ஸ்ட்ரிபுஸ் எல்லாம் 25 to 50 என்ற எண்ணிக்கையில் இருந்தால் பாசிட்டிவ் காண்பிக்கும்.

சில டெஸ்ட் ரொம்ப சென்சிடிவ் அது தான் பிரியட் வருவதற்க்கு 5 நாள் முன்னமே பாசிட்டிவ் காண்பிப்பது.

ஸ்கேன் எதுக்க்ன்னா.. நீங்க இப்ப செயற்க்கை முறை கருத்தரிப்பு/ஹை-ரிஸ்க் பிரிவில இருந்தால் உங்க பாப்பாவின் வளர்ச்சியை மானிட்டர் செய்வதற்க்கு.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அன்பு சகோதரிகளே உடனே பதில் தந்தமைக்கு நன்றி.

"நல்லதே நடக்கும்"

"நல்லதே நடக்கும்"

மேலும் சில பதிவுகள்