காணாமல் சில நாட்கள்??

செந்தமிழ் செல்வி... இந்த சின்ன பொண்ணு கிட்ட கோசிக்க கூடாது. நீங்க வேறு காரணம் சொல்லாம ஒரு இடைவேளை விடப்போவதா சொன்னீங்களா... ஒரே டென்ஷன்... மண்டையில தான். அதனால் எல்லாரையும் கேட்டு தெரிஞ்சிக்க தான் இந்த பதிவு. சும்மா... விளையாட்டுக்கு... கோச்சிக்க கூடாது சரியா?! :)

//நானும் இப்ப அறுசுவைக்கு வருவதற்கு ஒரு சின்ன இடைவேளை கொடுக்கப் போகிறேன். அதற்கான காரணத்தையும், எப்போதிருந்தென்றும் விரைவில் சொல்கிறேன்//

தோழிகளே... வாங்க வாங்க. நம்ம செல்வி அக்கா'வின் இந்த திடீர் அறிவிப்பு நம்மில் பலரை குழப்பி இருக்கும். யாருக்கேனும் செல்வி உண்மை காரணம் சொல்லி இருந்தால் அவர்கள் இந்த போட்டியில் பங்கு பெற இயலாது. மற்றவர் எல்லாம் இங்கு வந்து இதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று உங்கள் மனதில் பட்டதை சொல்லுங்கள். அவர்களில் சரியான காரணத்தை யூகித்து சொல்லும் தோழிக்கு நல்ல பரிசு ஒன்று காத்திருக்கிறது. என்ன ஏதுன்னு கேக்க கூடாது, ஏன்னா குடுக்க போற செல்வி'கு தானே என்ன குடுப்பாங்கன்னு தெரியும்.... சரியா??!! சமத்தா வந்து எல்லாருக்கும் பதிவு போடுங்க. :D செல்வி.... யார் சரியா சொல்றாங்கன்னு கடைசியா சொல்லனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மகன்/மகளின் திருமண வேலை

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

வனிதா,

வந்த உடனே வேலைய ஆரம்பிசுட்டீங்க!!!! பாவம் செல்வி மேடம் !!!

எனக்கு என்னமோ அவங்க உங்க தொல்லை தாங்காம தான்.... (இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பல :))

ஒரு காரணம் தான் சொல்லனும்ன்னு கண்டிஷன் எதுவும் இல்லைல்ல?

வீடு வேலை
வருட விடுமுறை - அவங்க கிராமத்துக்கு போறாங்க
மகன் மகள் திருமணம்
பேரன் பேத்தி விசேஷம் - மகள் / மருமகள் டெலிவரி
வெளி ஊரிலேர்ந்து பேரன் பேத்தி வராங்க - அப்புறம் லேப் டாப் கிடைக்காதுல்ல (அவங்களுக்கு அவ்ளோ வயசாயிடுச்சான்னு தெரியல!!)
டூர் போக போறாங்க

சரிப்பா இதுல எது சரியாய் இருந்தாலும் எனக்கு தான் பரிசு
அப்புறம் ஒரு விஷயம் - இந்த எல்லா பதிலுக்கும் காப்பி ரைட் எனக்கு தான். வேற யாரும் இத எழுத கூடாது :)

இப்படிக்கு,
சந்தனா

முன்னமே அதனால் இந்த போட்டியில் நான் பங்கு கொள்ளவில்லை.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வனிதா சின்ன வயசில் அடி வாங்கினது போல. அதோட Thrill உங்களை விட மாட்டேங்குது.வேற என்ன சொல்ல!!

புது members எல்லாம் பாவம்.இதுக்கும் முக்கியத்துவம் தந்து யோசிச்சு ideas எழுதறாங்க!!

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

யோசிச்சு எல்லாம் எழுதல!!!! சும்மா விளையாட்டுக்கு தான், எனக்கு தெரியும் நீங்க எல்லாம் ஒருத்தர ஒருத்தர் வம்பிழுத்துகிட்டு இருக்கீங்கன்னு :)

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் வனிதா!
செல்விக்காவை பற்றி நீங்க தனி த்ரெட் போட்டும் நான் அதில் பதிவு போடாம இருந்தா, அக்காமேல் நான் வைத்திருக்கும் பாசத்திற்கு அர்த்தமே இல்லாம போய்டும்.
என்னதான் நானும் அவங்களும் ஒரு ஊர்க்காரங்களா இருந்தாலும் இந்த இடைவெளி பற்றி எனக்கும் உண்மையாவே தெரியலப்பா.
எனக்கு என்ன தோணுதுன்னா, பாண்டிச்சேரி டிஸ்ட்ரிக் பூராவும் எங்கெல்லாம் காலி இடம் கிடக்கோ அதையெல்லாம் விலைக்கு வாங்கி குறிஞ்சா பயிர் பண்ணி உலகம் பூராவும் ஏற்றுமதி பண்ற பிஸினஸ் பண்ணப்போறாங்கன்னு தோணுது! அதுக்குதான் இந்த இடைவேளை!
கூடிய சீக்கிரம் குறிஞ்சா பிஸினஸ் பற்றிய செல்விக்காவின் விளம்பரத்தினை நம் அறுசுவையில் பார்க்கலாம்.

(சவூதி செல்வி உஷார், நம் ரெண்டுபேரையும்தான் வொர்க்கிங் பார்ட்னரா சேர்த்து இலாபத்தில் 1% மட்டும் தரப்போறதா காற்றுவாக்கில் செய்தி வந்தது)

எனக்கு தெரியும் .அதனால் நான் இந்த ஆட்டத்தில் சேரவில்லை.
கீதாவின் குறும்புக்கு அளவே இல்லை.அக்கா என்னவென்று வந்து கேளுங்கள்.
அன்புடன்
சவுதி செல்வி

சவுதி செல்வி

செல்விக்கா பாட்டியாகப்போறீங்க அப்படி தானே.
//நானும் இப்ப அறுசுவைக்கு வருவதற்கு ஒரு சின்ன இடைவேளை கொடுக்கப் போகிறேன். அதற்கான காரணத்தையும், எப்போதிருந்தென்றும் விரைவில் சொல்கிறேன்//

இதைத்தான் நான் சொல்ல நினைத்தேன்.ஆனால் ஒரு 20 நாட்கள் பின்பு,நீங்க முந்திவிட்டீர்கள்.முடிந்தால் கண்டு பிடிங்க,என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணீடாதீங்க.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

செல்விமா நான் சொல்ல நினைச்சதை ஆசியாக்க சொல்லிடாங்க. பாட்டிக்கு பேரப்பிள்ளைய பார்க்க நேரம் சரியா இருக்கு. அப்புறம் எப்படி அறுசுவையில் கலக்க முடியும் இல்ல செல்விமா அப்படித்தானே... என்னை முறைப்பது நல்ல தெரியுது..

வனி என்னைக் கேட்டால் நான் சொல்லியிருப்பேன்.. இந்த ரகசியத்தை உங்க காதுக்குள்ள. அதுக்குள்ள இதுக்குனு தனி த்ரெட் ஓபன் பண்ணி உண்மைய சொல்ல வச்சுடீங்களே. செல்விமா நான் பொறுப்பில்லை எல்லாமே நம்ம வனிதான் காரணம்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்