Warning to All Parents!!

நேற்று மெயிலில் வந்த சென்ற வாரம் நடந்த உண்மை சம்பவம்..இன்று இங்கு நடக்குமென்றால் நாளை எங்கும் நடக்கலாம்...தோழிகள் கவனமாக குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும் உங்கள் தோழிகளுக்கும் தெரியபடுத்தவும்.

Kidnap Trick - Warning to All Parents!!

Even if you do not have little kids - please pass this one on to
everyone you can think of. You never know whom you
might save by forwarding this e-mail. I wanted to share something that
happened while shopping at Carrefour:

A mother was leaning over looking for meat and turned around to find
her 4 yr old daughter was missing. I was standing there right beside her
and she was calling her daughter with no luck.

I asked a man who worked at Carrefour to announce it over the
loudspeaker. He immediately walked right past me after I asked and went
to a pole where there was a phone. He made an announcement for all the
doors and gates to be locked - using a store code or something.
So they locked all the doors at once.

This took all of 3 minutes after I asked the guy to do this.
They found the little girl 5 minutes later in the store's toilet cubicle - drugged!
Her head was half shaved! and was dressed in her underwear with a bag of clothes,
a razor, and a wig sitting on the floor beside her - most likely to make her
look different!

Whoever this despicable person was took the little girl, brought her
into the bathroom, shaved half her head and undressed her in a matter of less than 10 minutes!!

This makes me shake to no end. Please keep a close eye on your kids
when in big places where it's easy for you to get separated like Shopping Malls.
It only took a few minutes to do all of that.

Another 5 minutes and she would have been out the door.
I am still in shock that some sick person could do this - let alone in a matter of minutes.
The days are over when our little ones could run rampant all over the place and nothing
worse would happen than them annoying some people.

The little girl is fine. Thank God for the workers who didn't take any chances.

Warning

ஹாய் தளீகா!
ரொம்ப நன்றிப்பா இந்த செய்தியை இங்கு பதிவு செய்ததுக்கு. இந்த செய்தி பற்றி என் ஹஸ் என்னிடம் சொன்னார். இதுவிஷயமா உங்ககிட்டே, தனிஷாகிட்ட எல்லாம் கேட்கலான்னு நினைச்சேன்.
கண்டிப்பா, இந்த விஷயத்தை படிச்சதும்,எல்லாரும் அலர்ட் ஆவாங்க. நான்கூட இங்கெல்லாம் இப்பிடி நடக்காதுன்னுதான் நினைச்சேன். நானும் அவரும் எப்பவுமே ரொம்ப ஜாக்கிரதையாத்தான் இருப்போம். இருந்தாலும் அது பத்தாதுன்னு தோணுது.என் கணவர் இதை சொன்னபிறகு, ராத்திரி பூராவும் தூக்கம் கூட இல்ல தளிகா. அதுவும் பெண்குழந்தைகளை பெற்றவர்கள் டபுளா கவனமா இருக்கணும்!
நானும் என் கணவரும் குழந்தைகள் விஷயத்தில் கவனம் எடுக்கிறதை பார்த்திட்டு, இங்க எங்க ஃப்ரெண்ஸ் திட்டுவாங்க. தேவையில்லாம ஓவர் கேர் எடுத்துக்கிறோம்னு. இப்ப இந்த நியூஸ் கேள்விப்பட்டா எங்க கவனம் எவ்வளவு சரீன்னு புரியும்!

நேத்து நைட் 10 மணிக்குத்தான் இந்த மெயிலை என்ஹ்ஸ் ஓபன் பண்ணி காட்டினார். நானும் அறுசுவையில் சொல்லனும் என்று நினைத்தேன். அதுக்குள்ள நீ சொல்லிட்ட. படிச்சிட்டு ஒரே பயம் வந்திட்டு. என் மகள் தங்க நகைகளை கழற்றி வைத்து விட்டேன்.

கீதா எங்கே இருந்தாலும் நாம கேர்புல்லாதான் இருக்கனும். நானும் உங்கள மாதிரிதான் இங்க இப்படியெல்லாம் நடக்காதுனு தைரியமா இருந்தேன். காலம் கலிகாலம்..

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஓவெரா கவனிக்கிறோம்னு சிலர் சொல்லத் தான் செய்வாங்க..கண்டுக்காமவிட்டுட வேண்டியது தான்...நம் பிள்ளைகளாகவே நல்லதேது கெட்டதேது என்று உணர்ந்து கொள்ளும் வயசு வரை ரொம்ப பொத்தி பொத்தி வைக்காமல் அவங்க மேல ஒரு கண் இருந்துகிட்டே இருப்பது நல்லது..நானும் எங்கு போனாலும் எப்பவும் கண் குழந்தை மேல தான் இருக்கும்...யார் என்ன சொல்வாங்கன்னு கவலை பட மாட்டேன்..
அதுவும் இந்த நாட்டில் ரொம்ப ஓவெர்..அப்படியே பிள்ளைகளை அலைய விடுகிறார்கள்..எஸ்கலேடரில் எல்லாம் பிள்ளைகள் விளையாடுது..சிலது அழுது அம்மாவை தேடி நடக்கும் பாவமாக இருக்கும்..
இதெல்லாம் நடக்க ரொம்ப அதிக நேரம் கூட வேண்டாம் சில நொடி போதும்..ஓரிரண்டு முறை என் மகள் கூட கைய்யை விட்டுக் கொண்டு ஓடியிருக்கிறாள்..ஆனால் பின்னாலேயே ஓடி பிடித்து விடுவேன் ஒரு நாள் துணிக்கடையில் துணிக்குள் ஒளிந்து விட்டாள்...உடனே எனக்கு அழுகையே வந்து விட்டது சுதாரித்துக் கொண்டு முன்னால் செக்யூரிடியிடம் சென்று உடனே குழந்தையை கண்டால் அங்கு நிறுத்தும்படி சொல்லிவிட்டு வந்து திரும்ப தேடினேன் ஒரு ஷர்டுக்குள் ஒளிந்து நின்கிறாள்..எனக்கு ரெண்டு போடலாம் போல வந்தது ஆனால் அதுவோ என்னை பார்த்ததும் உஈஇ என்று கத்திக் கொண்டு சந்தோஷத்தில் இன்னும் உள்ளே நுழைந்து விளையாடுது...சிரித்துக் கொண்டே தூக்கி வந்தேன்..
நேற்று நானும் அதே தான்..கண்ணை சும்மா மூடினாலே மொட்டை அடிக்கப்பட்ட குழந்தையின் முகம் வந்து மனசே சரியில்லை..இன்னைக்கு தூங்கி எழுதபின் தான் கொஞ்சம் சரியானது.
பெண்குழந்தைகளை விட ஆண் குழந்தைகளை இன்னும் கொஞ்சம் அதிகம் கவனிக்க வேண்டுமென்பேன்..பெண்குழந்தைகளையாவது ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்போம்..ஆண்குழந்தைகள் ஒரு 10 வயதுக்குற்பட்ட பிள்ளைகள் வெளியே Kஅடைக்கு போக கீழே ஃப்ரென்ட்ஸ்கிட்ட பேச என்று போவார்கள்...இப்ப தான் காலம் மாறி விட்டதே ஆணுக்கு ஆணும் பெண்ணுக்கு பெண்ணும் தான் ஜோடி..அதனால் ஆண்குழந்தைகளை ரொம்ப பத்திரமாக பார்க்க வேண்டும்.
மனுஷன் இல்லாத இடம் ஒன்று தான் பாதுகாப்பான இடம் அதனால் உலகில் எந்த முக்கு மூலையிலும் இது நடக்கும்..என்ன இங்கெல்லாம் அதிகம் நடக்காது ஆனால் நடந்தால் பயங்கரமாக நடக்கும்.
சரி இன்னொரு சின்ன தகவல்...நேற்று முந்தைய தினம் என் கணவரின் கொலீகின் வீட்டில் அபு தாபியில் சிடியில் பட்டபகலில் திருட்டு போனது...20,000 திர்ஹம்ஸுக்கான பொருட்கள் களவாடப்பட்டது..
அதனால் என்றும் கவனமாக இருக்க வேண்டும்.வீட்டை பூட்டி விட்டு போனால் போதும் இல்லையென்றால் கார்டால் கதவை திறக்கலாம்.
வீட்டுக்கு யார் வந்தாலும் நல்ல நாலு தடவி பேசி முடிந்தவரை மாலை கணவர் வந்தபின் வர சொல்லலாம் அல்லது எதிசலாட் போன்ற இடங்களிலிருந்து யூனிஃபார்மோடு வந்தால் பக்கத்து வீடில் ஃபோன் போட்டு இன்னுமொரு 30 மணிநேரத்தில் நம்மை கூப்பிட சொல்லலாம்...
இப்ப கூட அந்த வேலை தான் செய்தேன்..கதவின் தாழை வெளியே இழுத்து விட்டு அங்கயே சேர் போட்டு வாச்மேன் மாதிரி உக்காந்திருந்தேன்.

இந்த மெயிலைப் படித்து ரொம்ப ஷாக்காயிட்டேன்பா.கடவுள் அருளால் குழந்தை இந்தளவுக்காவது காப்பாற்றப்பட்டதுன்னு நன்றி சொல்லனும்.நினைத்துப்பார்க்கவே கொடுமையா இருக்கு.எல்லோருமே குழந்தைகள் மீது கவனமா இருக்கனும்.

மேலும் சில பதிவுகள்