அரட்டை பாகம் 67

எல்லோரும் அரட்டையை இங்கே தொடருங்க. பழைய த்ரெட்டை 100 டன் முடிங்க

என் பொண்ணுக்கு நேத்து மாலையில் இருந்து பீவர் விட்டு விட்டு வருது. நெற்றியில் துணி நனைத்து போடலாமா. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை க்ரோசின் சிரப் கொடுக்கிறேன் சரிவரல. ஒரே கவலையா இருக்கு. சரியான சூடு. தலை தூக்காமல் கிடக்கிறாள்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

டாக்டரிடம் கேட்டு சப்போஸ்டரி கொடுங்க.கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கேட்கும்.அது கூட நேர இடைவெளிவிட்டு தான் கொடுக்கனும்.ஆனால் உடனே சூடு குறைவது தெரியும்.

தனிஷா,

இப்போதைய கிளமேட்டால் வைரஸ் இன்ஃபெக் ஷன் எங்கும் இருக்கிறது. நேற்று நானும் டாக்டரிடம் சென்றேன் என் மகனுக்காக.

ரொம்ப காய்ச்சல் என்றால் சப்போசிட்டரி கொடுங்கள். ஒரு மெல்லிய துணியை மிக மிக இளஞ்சூடான நீரில் நனைத்து உடல் முழுவதையும் சுற்றி 30 நொடி வையுங்கள். மீண்டும் மீண்டும் செய்யுங்கள். கண்டிப்பாக சூடு குறையும்.

தாமதிக்கமல் டாக்டரிடம் போங்கள். எந்த டாக்டரிடம் போனாலும் கூட்டம்தான். ஆன்டிபயாடிக் கொடுத்தால்தான் இன்ஃபெக் ஷன் கட்டுப்படும்

தனிஷா என்ன முன்று நாளா அடித்து நொருக்கும் கல்லு மழையில் குழந்தையுடன் நனைந்தீர்களா ?

காய்ச்சி ஆறியவெண்ணீர் ஒடிக்கலான் இருந்தால் அதில் நனைத்து போடுங்கள்.தலையில் துணி நனைத்து போடுங்கள்

ஃபீவர் ஓவர் என்றால் குரோசின் அப்ப்டியே கொடுங்கள்,

சாப்பிட பிடிக்காது எதை பார்த்தாலும் அழுகையா வரும் காட்டன் டிரெஸ் போட்டு விடுஙக்ள்.
பிஸ்கேட் உப்பு பிஸ்கேட், குலுக்க்கோஸ் பிஸ்கேட் எல்லாம் கண்ணில் படும்படி வையுங்கள் அப்படியே சாப்பிட்டால் ஒரு கடி கடிப்பாஅர்கள்.
ஹார்லிக்ஸ் அதான் தெம்பு ரொம்ப திக்காக கரைக்காமல் லட்டாக கரைத்து இரன்டு இரண்டு ஸ்பூன் அளவு அப்ப அப்ப கொடுத்தால் போதும்.

குளுக்கோஸ் ஒரு விரலாம் எடுத்து நாக்கில் கொஞ்சம் கொஞ்சம் தடவுங்கள்
இது வாய் கசப்பு, மற்றும் மயக்கம் வராமல் இருக்க.

தொடர்ந்து ஒரு சிறிய கர்சீப்பை தண்ணீரி நனைத்து போடுக்னக்ள்.

ஒன்றும் சாப்பிடாமல் அப்ப்டியே கிடந்தால் சிவரிங வரும், அதான் அப்ப ஒரு ஸ்பூன் அளவிற்கு ஏதாவது உள்ளெ போனால் கூட பரவாயில்லை. போனுக்கு நேர போட வேண்டாஅம்.
அப்ப்டியும் கேட்க வில்லை என்றால் டாக்டர் கிட்ட போங்க.

ஜலீலா

Jaleelakamal

சுகன் இதுவரை அப்ராவுக்கு இந்த மாதிரி பீவர் வந்ததில்லை. எனக்கு ரொம்ப அழுகையா வருது. எனக்கு காட்டுவதற்காக அடிக்கடி nmc hospital போனேன். அங்கு ஏதாவது இன்பெக்ஷன் ஆயிருக்குமானு தெரியல. அல்லது க்ளைமேட் சேஞ்ஜ் ஆறதால இப்படி இருக்கானு தெரியல. சளி வேறு இருக்கு. நேத்து அடால் ஊத்தினேன். குடிக்காம வாமிட். அதனால் க்ரோசின் சிரப் ஊத்தினேன். சளிக்கு ஊரில் இருந்து கொண்டு வந்த டீ மினிக் கொடுத்தேன். மருந்து கொடுத்தா போகுது அப்புறம் வந்துடுதுப்பா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நேற்றிலிருந்து ஜுரம் என்று சொல்றீங்க.டாக்டர்கிட்ட போனீங்களா?நேற்று விடுமுறை என்றாலும்,இன்றாவது செல்லுங்கள்.கைவைத்தியம் மற்ற எல்லாவற்றிற்க்கும் ஒத்துவரும்..சளி,இருமல் இது போல்.ஆனால் ஜுரம் வந்துட்டா,உடனே டாக்டர்கிட்ட ஓடிடனும் நேரம் தாழ்த்தாமல்.முன் ஒருமுறை என் பொண்ணுக்கு கூட ஜுரம் வந்து 2 நாள் தொடர்ந்து க்ரோசின் கொடுத்து கேட்காமல்,டாக்டர்கிட்ட போனோம்.அவங்க சபோஸ்டரி தான் பிரிஸ்க்ரைப் பண்ணாங்க.அது கொடுத்த பிறகு தான் சரியானது.

அப்போதான் டாடர் சொன்னாங்க,எப்பவும் ஹைஃபீவர் வந்தால் சப்போஸ்டரி கொடுங்க என்றும் சொன்னார்.எனக்கு ஒருவேளை வைரல் ஃபீவரா இருக்குமோன்னு சந்தேகம் வந்து டாக்டர்கிட்ட போனேன்.ஆனால் அது போல் இல்லை என்று டாக்டர் கூறினார்.அதனால் உடனே டாக்டர்கிட்ட போங்க.

தனிஷா,

கண்டிப்பாக தாமதிக்கமல் உடனே டாக்டரிடம் போங்கள். ஆன்டிபயாடிக் கொடுத்தால்தான் இன்ஃபெக் ஷன் கட்டுப்படும். முஸஃப்பாவிலும் என்.எம்.ஸி, மற்றும் அல் நூர் ஹாஸ்பிட்டல் இருக்கின்றன.

ஊரில் இருந்து கொண்டு வந்த மருந்தெல்லாம் கொடுக்காதீர்கள்.

துணி நனைத்து தொடர்ந்து போடுங்கள் , ஹாஸ்பிட்டலில் கூட இன்பெக்ஷன் ஆகி இருக்கும். மாலை வரை பாருங்கள் ரொம்ப ஓவரா இருந்தா உடனே போங்க டாக்கர் கிட்ட.

ஜலீலா

Jaleelakamal

உங்க பதிலுக்கு ரொம்ப நன்றீ. துபாயில்தான ஆலங்கட்டி மழை. அபுதாபியில் மண்புயல்தான், அதோடு நேற்று ஹாஸ்பிட்டலில் ஸ்கேன் எடுக்க போனேன். எதுவோ தெரியல. அவள பார்க்க மனசுக்கு ரொம்ப சங்க்டமா இருக்கு.

எதுவுமே குடிக்க மாட்டேங்குறா. 10 நிமிஷத்துக்கு ஒருமுறை தண்ணி தண்ணினு கேக்குறா. தண்ணி மட்டும்தான் குடிக்குது. காய்ச்சி ஆறியவெண்ணீர் ஒடிக்கலான் போட்டு நெத்தியில் போடுகிறேன்

கீழே போயி க்ளூக்கோஸ் வாங்கிட்டு வரனும். பால் பார்த்தாலே வேண்டாம் என்கிறாள். நீங்க சொன்னபடி செய்து பார்க்கிறேன் அக்கா.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

இப்போ போனால் டாக்டர் இருப்பாங்களா. என்.எம்.சியில். அப்பாயிண்மெந்த் எதுவும் வாங்கனுமா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்