அரட்டை பாகம் 67

எல்லோரும் அரட்டையை இங்கே தொடருங்க. பழைய த்ரெட்டை 100 டன் முடிங்க

இருமுறை பதிவாகி விட்டதா. ஒன்றை 68 ஆக வைத்துக் கொள்ளலாம்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனீ எப்படி இருக்கீங்க,இப்பெல்லாம் 2பதிவுகள் அதிகமா இருக்கே ஏன்?
அஃப்ரா எப்படி இருக்காங்க.
ஹாஸ்பிட்டல் போகணும்னு சொன்னீங்க,என்னாச்சு திரும்பவும் முதுகு வலி வந்திடுச்சா?

பழைய த்ரெட்டில் யாரெல்லாம் என்னை விசாரிச்சீங்கனு தெரியல. ஓபன் ஆகல அது. இரவு பார்த்து ரிப்ளே போடுறேன்

கவி எப்படி இருக்கீங்க. ஷாம்குட்டி என்ன பேசுறார் இப்போ கொஞ்சம் அவுத்து விடுங்க. அப்ரா நல்ல வாய். என் ஹஸ் 2 நாள் முன்னாடி வீட்டில் விழுந்துட்டார் பேக்கில் நல்ல அடி. நேற்று ரொம்ப பெயின் என்று ஆபிஸில் 2 நாள் லீவு போட்டுட்டு வந்துட்டார். அதான் ஹாஸ்பிட்டல் போனேன் கவி. எக்ஸ்ரே பார்த்தோம் ஒன்னும் ப்ராப்ளம் இல்லை.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனீ,இப்ப உங்க ஹஸ் நல்லா இருக்காரு கேட்டு ரொம்ப சந்தோஷ்மபா.

சாம் என்ன பேசறானு இன்னும் புரியல தனி அவபாட்டுக்கு எதோ பேசிட்டு இருக்கான்,ஆன ஒரு சில வார்த்தைகள் சொல்ல டிரை பண்றான். அவன் பாஷைல பஸ்ஸுக்கு அவா'னு சொல்லுவான்,காருக்கு கா'னு சொல்லுவான், டிரைனுக்கு டீ'னு சொல்லுவான், மாட்டை பார்த்தா,அம்மா கவ் அப்படினுவான்,இந்த மாதிரி கொஞ்ச வார்த்தைதான் பேசறான், அவன் பேசறதை பார்த்து இப்ப நாங்க கூட பஸ்சை அவா'னு தான் சொல்லறொம்:‍)

அஃப்ரா நல்லா பேசறாங்கல்ல,இவன் இன்னும் சரியா பேச ஆரபிக்கலை, கொஞ்சம் பயமா இருக்கு.

நான் வனிதாக்கு மட்டும் சப்போர்ட்டுக்கு வரமாட்டேன்பா.உங்களுக்கும் தான்.பாருங்க (உ.தா).நீங்க தனியாக புலம்பும் போது,நான் வந்து ஹாய் சொல்லிட்டு சமைக்க போவேன் அதுமாதிரி,உங்களையும் யாராவது வெளிநடப்பு செய்ய சொன்னாங்கன்னு வச்சுக்குங்க(ஒரு பேச்சுக்கு),அப்பவும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவேன்,அதுக்காக சப்போர்ட் பண்ண மட்டுமே வருவேன்னு நினைச்சிக்காதீங்க.சப்போர்ட்ட்ட் பண்ணவும் வருவேன் அப்ப்டி படிக்கனும் சரியா..

ஹாய் தனிஷா,அப்ரா என்ன செய்துட்டு இருக்குறா.

அப்புறம் கவி.எஸ்,அதுக்கெல்லாம் பயப்படாதீங்க.நீங்க எதுவாச்சும் அவர்கிட்ட பேசிக்கிட்டே இருங்க.ஆட்டொமெடிக்கா அவர் புடிச்சிப்பாரு.ஆமா பஸ்ஸை அவர் பா..ன்னு தானே சொல்லனும் அதென்ன அவா?

ஹாய் மேனகா,ஷிவானி பிறந்து இப்ப எத்தனை மாதம் ஆகுதுபா?உங்களுக்கு உடம்பு எப்படிபா இருக்கு?

ஹாய் தோழிஸ் நலமா?

ஹாய் தோழிஸ் நலமாக்க்;ஒ;;ஓ;ம்,ஒஇக்ய்7ஈஊஈஊஉஇஉஇஉஇஉஈஉ

என்ன ஆச்சு உங்களுக்கு?என்ன எழுதிருக்கிங்க?

என்னபா இப்படி கன்னாபின்னான்னு கத்துறீங்க,யாரும் இல்லை என்பதற்க்கு இப்படி கத்தி கூப்பிட்டாதான் வரும்வோமா என்ன?இல்லாட்டியும் வருவோம்(கொஞ்சம் லேட்டாக)

ஜெயலஷ்மி இதென்னது ஹரியோட பாஷையா?!!!!!

சுகன்யா நீங்க சமத்துதான் (ஒரு சில சமயம்), நான் இவன்கிட்ட பேசிட்டுதான் இருக்கேன், கொஞ்ச நேரம் வர, உங்கக்கிட்டயே இப்படி பேசறேன்னா ,சாம்கிட்ட எப்படி பேசுவேனு பார்த்துக்கோங்க,அதுக்காக நான் ரொமப் பேசுவேனு எல்லாரும் நினைச்சிடாதீங்க,நான் வீட்டில புலி வெளில எலி:‍‍(

சுகன்யா பஸ்'ஐ ஏன் அவானு சொல்ரேனு சாம்கிட்ட கேட்டு சொல்றேன்:)

மேலும் சில பதிவுகள்