வாழ்த்து அட்டை செய்முறை - 9

தேதி: March 25, 2009

No votes yet

இதில் எளிமையான பேப்பர் குயில்லிங் (Paper Quilling) முறையில் எவ்வாறு வாழ்த்து அட்டைகள் செய்வது என்று பார்க்கலாம். பேப்பர் குயில்லிங் என்பது மெல்லிய அட்டை அல்லது கடுதாசிகளை மெல்லிய கீலங்களாக வெட்டி உருட்டி ரோல் போல செய்து பின் பிடித்தமான பூ, மரம், பழம், மிருகங்கள் போன்றவற்றை செய்வதாகும். இந்த வாழ்த்து அட்டை செய்முறையை திருமதி. நர்மதா அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இங்கே செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை.

 

வெறும் வாழ்த்து அட்டைகள் & உறைகள்
குயில்லிங் பேப்பர்
பசை/கோந்து
நிற அட்டைகள் & கடுதாசிகள்
பெயிண்ட்

 

குயில்லிங் பேப்பர் (Quilling Paper): இது பல அளவுகளில் கிடைக்கும். 1/8", 2/32", 3/8", 1/4" etc. பொதுவாக உபயோகப்படுத்துவது 1/8" பேப்பர். தாங்களே நிற பேப்பர்கள், அட்டைகள் வாங்கி தேவையான அளவிற்கு வெட்டலாம் அல்லது கடைகளில் ரெடிமேடாக வாங்கிக் கொள்ளலாம்.
குயில்லிங் டூல் (Quilling Tool): இது ஒரு ஊசி போல முனையில் பிளந்து இருக்கும். இதன் நடுவில் குயில்லிங் பேப்பரை சொருகி பின்னர் உருட்டுவது இலகுவாக இருக்கும். டூல் இல்லாவிட்டாலும் கைகளால் உருட்டிக் கொள்ளலாம். கைகளால் உருட்ட மிகவும் பொறுமை தேவை. பழகினால் இலகுவாக வரும்.
குயில்லிங் போர்ட் (Quilling Board): இதுவும் கடைகளில் கிடைக்கும். வட்டமான துவாரங்கள் பல அளவுகளில் இதில் போட்டிருப்பார்கள்.
இதுப் போல் போர்ட் கிடைக்காவிட்டால் நாமே இதை தயாரித்து கொள்ளலாம். ஒரு போம் ஷீட்டில் பல அளவுகளில் வட்டங்கள் கீறி வெட்டி விட்டால் போதும்.
குயில்லிங் முறையில் பூச்சாடி மற்றும் பூ, இலை செய்வது பற்றி பார்க்கலாம். முதலில் குயில்லிங் டூலில் பிடித்த வர்ண (ஆரஞ்சு) குயில்லிங் பேப்பரை செருகி சுற்றி அவதானமாக கழற்றவும்.
கழற்றிய பேப்பர் ரோலை குயில்லிங் போர்ட்/அச்சில் வைக்கவும். (இங்கு 1 Dime (10 cent coin) அளவான வட்டம் வெட்டப்பட்டுள்ளது). இப்போது பேப்பர் ரோல் லூஸாகி (Loose roll) இருக்கும். வெளிப்பக்க முனையில் பசை தடவி ஒட்டவும்.
பூவிதழ்: பின்னர் பேப்பர் ரோலின் ஒரு பக்கத்தை கட்டைவிரல் மற்றும் பெரிவிரலால் பிடித்து நசிக்கவும். இப்போது நீர்த்துளி (TearDrop) போன்ற வடிவம் கிடைக்கும். இதுவே ஒரு பூவிதழாக பயன்படும்.
இலை: இதற்கும் மேற்கூறியவாறு ரோல் செய்து ரோலின் எதிரெதிர் பக்கங்களைப் பிடித்து அமுத்தவும். இப்போது இரு பக்கமும் கூரான இலை வடிவம் கிடைக்கும்.
முக்கோணம்: மேற்கூறியவாறு நீர்த்துளி போல செய்து அடிப்பாகத்தைகிடையாக அழுத்தி விடவும். இப்போது முக்கோண வடிவம் கிடைக்கும். இது பூச்சாடி செய்ய பயன்படும்.
இறுக்கமான ரோல்: பேப்பரை டூலில் வைத்து சுற்றி லூஸாக்காது அப்படியே இறுக்கமாக வைத்து முனையில் பசை தடவி ஒட்டி விடவும்.
இவ்வாறு 5 பூவிதழ்கள், 2 இலைகள், 3 முக்கோணங்கள் மற்றும் 1 இறுக்கமான ரோலை செய்து கொள்ளவும்.
பின்னர் 3 முக்கோணங்களையும் படத்தில் காட்டியவாறு ஒழுங்குபடுத்தி ஒன்றுடன் ஒன்று ஒட்டி சுற்றிவர அதே நிற பேப்பர் வைத்து இறுக்கமாக ஒட்டவும்.
ஒரு சதுரமான மட்டை அல்லது கடுதாசியை வெட்டி அதன் ஓரங்களை குயில்லிங் பேப்பரால் அலங்கரிக்கவும்.
பின்னர் இந்த சதுர கடுதாசியை வாழ்த்து அட்டையின் நடுவில் வைத்து ஒட்டி அதன் மேல் செய்து வைத்திருக்கும் குயில்லிங் பேப்பர் பூச்சாடிய வைத்து ஒட்டவும். பின்னர் பூக்காம்பு, இலைகளை வைத்து ஒட்டவும். பின்னர் பூவிதழ்களை அடிக்கி நடுவில் இறுக்கமான ரோலை வைத்து ஒட்டவும். பின்னர் பிடித்தமான வாழ்த்து வாசகத்தை அட்டையின் மேற்பகுதியில் பதிக்கவும். அழகான இலகுவான வாழ்த்து அட்டை தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

நர்மதா,
மிக மிக அருமையான வாழ்த்து அட்டை செய்து காட்டியிருக்கிறீர்கள். அழகாக இருக்கிறது.
நன்றி.
அன்புடன்,
செபா.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta