உகாதி திருநாள் வாழ்த்துலாம் வாங்க..

தெலுங்கு சமுதாய மக்கள் நாளை உகாதி திருநாள்( வெள்ளிக்கிழமை )கொண்டாடுகிறார்கள்.அறுசுவையை பார்வையிடும் எம் தெலுங்கு சமுதாய மக்களுக்கு உகாதி திருநாள் வாழ்த்துக்கள்.எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

வாழ்த்துக்கள் ப்ரபாதாமு,எனக்கு நீங்கள் தெலுங்கு பேசுவதாக எங்கோ படித்த நினைவு.உங்களூக்கும் அனைத்து அறுசுவை தோழிகளுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

தெலுங்கு வருடப்பிறப்பை கொண்டாடும் அனைத்து தோழிகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

hi
where you are from?
How can we chat in this site
i am new to this
teach me about this site
mail me frequently to infantlikemady@gmail.com

Bye

Infant

hi
wish you a very happy ugathi to all viewers

by

Infant
infantlikemady@gmail.com

ஆசியா சொன்னதை வழி மொழிந்து நானும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்....

மிக்க மகிழ்ச்சி.நல்லது.நேற்று சன் டிவி பார்க்கும் போது முதலவர் கலைஞர், முன்னால் முதல்வர் ஜெயலலிதா,ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா இவங்களோட வாழ்த்து தெரிவிச்சாங்க,எனக்கும் ஆசை வந்து விட்டது,அது தான் நாமும் ஒரு திரெட் போடுவோமே என்று போட்டேன்,நமக்கு இதுவரை த்ரெட் போட்டு எல்லாம் அதிகம் பழக்கமில்லை அருண்.அப்புறம் உங்க பாஸும் நீங்களும் அருமை,பார்த்த முகம் போல் உள்ளது.உங்க ப்ளாக் போய் பார்த்தேன்.நான் கடவுள் பார்க்கணும்,பார்த்து விட்டு என் விமர்சனம் சொல்றேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

காலையில் இருந்து பிரபா உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கனும்,என்று நினைத்து கொண்டு இருந்தேன்.

தெலுங்கு வருஷ பருப்பு என்றார்கள்.

நானும் நீங்க தெலுங்கு என்று படித்தேன் ஆனால் எந்த திரெட் என்று தெரியல.

பரவாயில்லை இவ்வள்வு நல்ல தமிழில் எழுதுகிறீகள்.

பிரபா உங்களுக்கும், உலகத்தில் உள்ள தெலுங்கு மக்களுக்கும் உகாதி திருநாள் வாழ்த்துக்கள்.

இந்த தினத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள் என்றூ சொன்னால் நல்ல இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal

த்ரட் போடுறது என்ன மலையை சாய்க்கிற விஷயமா??? ஒரு நல்ல செய்தியை சொல்ல போறோம்... அவ்வளவு தானே... சரி ஆசியா... உங்களுக்கு தெரியுமா?? என்னுடைய நண்பனின் தங்கை பெயரும் உங்கள் பெயர் தான்....

அப்புறம் உங்க பையன் எக்ஸாம் நல்ல படியா முடிஞ்சதா?? கேட்டேன் என்று சொல்லுங்கோ....

பார்த்த முகமா?? அப்படியா... என்னோட பாஸ் மும்பை.... அவரை பார்த்து இருக்க முடியாதே... நானும் அபுதாபி பக்கம் வந்தது இல்லையே... ம்ம்ம்ம்... அருமை என்று வேற சொல்லி விட்டீங்களே??? சரி சரி ஆசியா நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்... ஹி ஹி... அப்புறம் நான் கடவுள் படிச்சு விட்டு சொல்லுங்க... கண்டிப்பா உங்கள் கருத்தை எதிர்பார்த்து இருக்கேன்... படம் வந்து ரொம்ப நாள் ஆச்சு...

சரி மீண்டும் பாக்கலாம் ஆசியா

வாங்க குழந்தை தமிழ் பிரபா .... எப்படி இருக்கீங்க???... சோ யுகாதி எப்படி போகுது??? சமையலில் ஸ்பெஷல் என்ன???... ஓகே பிரபா நேரம் இருக்கும் போது பதில் மொழி போடுங்க...

எஸ் ஜலீலா... மாலை வந்தனங்கள்... அப்புறம் உங்க பிளாக்-ல மேலும் மேலும் வேறு பிளாக் சேர்க்க இதோ... DASH BOARD => EDIT USER PROFILE => SHOW MY BLOGS => SELECT BLOGS TO DISPLAY இதில் சென்று மேலும் மேலும் உங்கள் மற்ற பிளாக்கள் ஆட் பண்ணி கொள்ளலாம்... சரி மீண்டும் பாக்கலாம்...

அருண் ஏதோ ப்ளாக் என்று சொல்றார்,பெயர் சொன்னால் நானும் போய் பார்க்கிறேன்,இல்லாட்டி காமெடிக்கு சொல்லி இருக்காரா?எனக்கு புரியலை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்