குழந்தை வளர்ப்பு தகவல்கள்

அறுசுவை மக்களே குழந்தை வளர்க்கும் முறைகள்பற்றிக்கொஞ்சம் சொல்லித்தாங்கோ.அதாவது உணவு உடை அல்ல.நம் செய்கைகள் மூலம் அவர்களிடத்தில் நல்ல பழக்கவழக்கங்களை ஏற்படுத்துவது எப்படி?

குழந்தை வளர்ப்பு பற்றி நல்ல நல்ல புத்தகங்கள் தெரிந்திருந்தால் கொஞ்சம் சொல்லுங்கோ.ஒரு தாய்க்கு தன் குழந்தை செய்யும் எல்லாமே பிடிக்கும்.ஏன் சாப்பிடும்போது அம்மா மூஞ்சியில் பூ என்று துப்பினால் கூட செல்லமாக எடுத்துக்கொள்வார்கள்.ஆனால் குழந்தைக்கு தாய் தந்தை அல்ல உலகம்.அவர்கள் வெளிஉலக மனிதர்களிடம் தொடர்புடன் வாழப்போகிறவர்கள்.வீட்டில் கற்றதைத்தான் வெளியே செயாலாக்குவார்கள்.ஆகவே மற்றவர்களுக்கு அது இடையூறில்லாமல் எல்லோரும் மனதளவிலும் விரும்பும் குழந்தைகளை எப்படி உருவாக்குவது.

சுரேஜினி

புத்தகம் தெரியல.ஆனா இலா இந்த site-ஐ ஏற்கனவே எங்கோ கொடுத்திருந்தார்.நீங்களும் முன்பே பார்த்திருப்பீர்கள்.

http://www.wikihow.com/Be-a-Good-Parent

http://www.wikihow.com/Teach-Manners-to-a-Toddler

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

3A நலமா? இந்த லிங்கும் நல்ல உபயோகமாத்தான் இருக்கு.ஆனால் இதேமாதிரி புத்தகம் இருந்தா நல்ல இருக்கும் எண்டு நினைச்சு கேட்டேன்.ஏற்கனவே இதுல நிறைய நேரம் இருக்க கஷ்டமா இருக்கு.புத்தகம் எண்டா நித்திரை வராட்டி ,பாக் ,பீச் எண்டெல்லாம் கொண்டுதிரிஞ்சு படிப்பமுல்ல.அப்பிடியே அப்பா எப்பிடி நடக்கவேணும் எண்டு உடனயே எடுத்துச்சொல்லாம்ல.

சுரேஜினி

சுரேஜினி! இது ஒரு அவசர பதிவு.
Like the book "What to expect when you expect" there is a Book What to expect Toddler years - Somthing of that sort. Please check ma

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

Scribd தளத்தில் Parenting category-ல் நிறைய books-ன் contents எல்லாமே பார்க்கும் படி உள்ளது.உங்களுக்கு பிடித்திருந்தால் சிலதை download செய்யும் வசதியும் உள்ளது.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

இயற்கையகவே பெண்களுக்கு கவனத்தை பிரித்து செயலாற்றும் திறமை அதிகம். உதாரணத்திற்கு சமையல் செய்யும் போது 50% சமையலிலும், 40% அடுத்த அறையில் தூங்கும் சேய் மீதும், 10% சுற்றுபுற சூழல் மீதும் இருக்கும்.
அதே போல் வாழ்கையில் 20 வருடம் கழித்து மகன்/மகள் எப்படி இருக்கவேண்டுமோ அங்கு 50% மீதீயை வளரும் இடத்திலும் வைத்து கொள்ளவேண்டும்.

Note: Attention can be divided on time sharing like percentage or simultaneous obervations. 8 observation அஷ்ட அவதானி, 10 observation தச அவதானி.

இரண்டவதாக நாம் கற்று கொடுபதை விட அவர்கள் நம்மை பார்த்து கற்று கொள்வதுதான் அதிகம். அதனால் முதலில் நாம் சரியாக இருக்கவேண்டும்.

குழந்தை வளர்பில் தாயின் பங்கு மிக அதிகம். அறிவிற்கும், ஒழுக்கத்திற்கும் ( என் தாய்க்கு 100%) 8 மணி நேரம் பள்ளியில், 2 மணி நேரம் விளையாடில், தூங்கும் (including) நேரம் தவிர்த்து மற்றது தாயின் மடியில்.

Note 2: You have to teach your child the value systems.
a) Personal values
b) Family values.
c) Cultural values.
d) Universal values.

அறிவுள்ள பிள்ளை எங்கு சென்றாலும் பிழைத்து கொள்ளும்.

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.

Life is FULL range of emotions but dont lose focus on the life when your dealing with the emotions. EQ is must.
Haish

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

சுரேயினி, நேற்றே பதில் போட வேண்டும் என்று நினைத்தேன் பிள்ளைகளோடு ஒரே பிஸி. அனுபவம் தான் சிறந்த புத்தகம். உங்களையும், கணவரையும் பார்த்துதான் பிள்ளை வளரும். புத்தகத்தை வாங்கிப் படித்தால் பின்பு எல்லாவற்றையும் ஒப்பிட்டு பார்க்க தொடங்கி விடுவோம். எனது கணவரின் தங்கை அப்படித்தான். குறிப்பிட்ட வயதில் 20 சொற்கள் குழந்தை பேசும் என்று இருக்கும் ஆனால் சில குழந்தைகள் கூட, குறைய பேசும். கூடப் பேசினால் நல்லது. குறையப் பேசினால் ஏன் அப்படி என்று மனம் கண்டதையும் நினைக்கும், மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும். நீங்கள் மற்றவர்களோடு எப்படி பழகுகின்றீன்களோ அதையே அவர்கள் பின்பற்றுவார்கள். குழந்தைகளோடு நிறைய பேசுங்கள், எல்லாவற்றையும் விளங்கவையுங்கள். அவர்களுக்கு எல்லாம் விளங்கும். புத்தகத்தை சும்மா ஒரு பொழுது போக்கு/information படிக்கலாம்.

மேலும் சில பதிவுகள்