எனக்கு உன்கள் உதவி தேவை

எனக்கு கல்யாணம் ஆகி 1.5 yrs ஆகறது. இப்போ என்னகு 45 வது நாள் தலை சுற்றல் அடிகடி வருகிறது. 40 வது நாள் டஸ்ட் பண்ணி பார்த்த பொது negative தான் வந்தது. தலை சுற்றல் vomit வருவது போல் எப்போதும் இர்ருகிறது. இதற்கு என்ன காரணம்? எத்தனாவது நாள் test பண்ணினால் சரியாக தெரியும் . யாராவது என்னகு உதவி செய்யுங்களேன்

சுப்ஸ் நீங்கள் 40வது நாள் டெஸ்ட் எடுத்திருந்தால் அது சரியான காலமே.பிழையாகக்காட்டுவதற்கான சான்ஸ் மிக்கக்குறைந்த வீதமே.
தலைசுற்றல் வாந்தி என்பது சிலருக்கு ஒழுங்காக பீரியட் வந்துவிட்டு இரெகுலர் ஆகும் போதும் ஏற்படலாம்.அல்லது மனதளவில் உங்களுக்கு பொசிட்டிவாகவே இருக்கும் என்று நினைக்கும் போது அந்த நினைவு பொசிட்டிவ் ஆக இருந்தால் என்னென்ன அறுகுறி தோன்றுமோ அதுவெல்லாம் நமக்கு ஏற்படுவதுபோல் பிரமை உண்டாகும்.

இப்போ 45 நாள் எனும் பட்சத்தில் நீங்கள் டாக்டரிடம் போய் யூரின் டெஸ்ட் பண்ணலாம்.அல்லது பிளட் டெஸ்ட் செய்யலாம் உங்கள் பிளட் டெஸ்ட் தவறாகக்காட்டாது.

எனக்கு 1 வது முறை பீரியட் ஒழுங்கில்லாமல் ஆகிய 1வது மாதாம் இதுவெல்லாம் செய்தது.நான் பிளட் டெஸ்ட்டை கூட நம்பும் நிலையில் இருக்கவில்லை.ஸ்கான் எடுத்துப்பார்க்கும்படி டாக்டரை வற்புறுத்தி அவரும் எழுதித்தர ஸ்கான் எடுத்து நெகட்டிவ் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன்.[காரணம் அப்போதைய காலப்பகுதியில் குழந்தை வேண்டாம் என்று பின்போட்டு வைத்திருந்தோம்]

ஆகவே நீங்கள் குழப்ப நிலையில் இருப்பின் டாக்டரைப்பார்க்கலாம்.

சுரேஜினி

நன்றி அக்கா டாக்டர் இன்னும் 20 நாள் கழித்து தான் வர சொல்லி இர்ருகிறார். எனக்கு இர்ரெகுலர் periods தான். ஓவரி இல் நீர் கட்டி. ஒரு மாதமாக treatment எடுத்து வருகிறேன். இந்நிலையில் நான் கற்பமாக சான்ஸ் இல்லையென்றே தோன்றுகிறது. டெஸ்ட் பண்ணினால் 3 or 4 நிமிடங்கள் கழித்து மிக லேசான இரண்டாவது கொடு(line) வருகிறது. இதற்கு என்ன அர்த்தம் அக்கா?

ஹாய் சுப்ஸ்
கவலை வேண்டாம். எனக்கு 40 நாட்கள் தள்ளி இருந்த பொது மருத்துவரை அணுகினேன். நீங்கள் கோறியது போல் இரன்டவது கோடு லேட் ஆக தான் தெரிந்தது. டாக்டர் மிகவும் வீக் ஆக இருப்பதாக கூறி 60 டேஸ் ஆனதும் ஸ்கேன் செய்ய சொன்னார்கள். அதில் கருமுட்டை (குழந்தை இருக்கின்ற வெளிப்புர சுவர் மட்டும்) மட்டும் இருப்பதாகவும் குழந்தை இல்லை எனவும் கூறினார்கள். Periods 2 டேஸ் (32 days) தள்ளியதுமே எனது மகள் திரும்ப கிடைக்க போகிறாள் என நம்பி இருந்த என்னால் அதை தங்கி கொள்ள முடிய வில்லை. பிறகு எனது அன்பு கணவர் எனக்கு ஆறுதல் கூறி வேறு ஒரு இடத்திற்கு ஸ்கேன் செய்ய அழைத்து சென்றார். அதில் மிஹவும் தெளிவாக என்னிடமே காட்டினார்கள். குழந்தை நலமாஹ இருப்பதகவும் ஹார்ட் பீட் இருப்பதையும் காட்டினார்கள். இறைவன் கிருபையால் நான் 5 மாதம் கர்பமாக உள்ளேன். ஆகையால் அவசரம் வேன்டாம். கடவுளை நம்புங்கள். மேலும் எனக்கு தெரிந்த ஒருவருக்கு கர்ப்ப பையில் நீர் கட்டி இருந்ததால் அதற்கு ட்ரீட்மென்ட் எடுத்த இரண்டு மாததில் ப்ரெக்னன்ட் ஆனார்கள். ஆகையால் கவலை வேண்டாம். தைரியமாக இருக்கவும். எல்லாம் நன்மைக்கே.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

இன்று எனக்கு 50 வது நாள் பீரியட்ஸ் வந்து விட்டது. இத்தனை (50) நாளைய கனவு கலைத்துவிட்டது. இன்று நான் அழுத அழுகை அத்தனை அக்கா. எனக்கு வரவர குழந்தை ஏக்கம் அதிகமாகிவிட்டது. என்னால் என் அம்மாவிற்கு சமாதானம் சொல்ல முடிகிறது எனக்குதான் தன்னம்க்கை குறைகிறது.
குழந்தை இல்லாதவர்க்கு இவ்வுலகமே நரகம் என்பதை என்னால் உணர முடிகிறது
என் வாழ்க்கையில் இவ்வுலகம் சொர்க்கமாகுமா?

ஏக்கங்களுடன்
சுப்ஸ்

சுப்ஸ் கவலை படாதிங்க... மனசை தைரியமாக வைத்துகங்க... நம்பிக்கை தான் வாழ்க்கை.. இறைவன் மேல் நம்பிக்கை வைங்க...
“யார் யாருக்கு எது எது கிடைகனுமோ,,எப்போ கிடைக்கனுமோ,,,
அது நிச்சயமாக கிடைக்கும்...””
ரிலாக்ஸ்’’ஸா இருங்க...

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

மேலும் சில பதிவுகள்