மறைபொருள் ரகசியங்கள்

"சீவாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே
அவன் அடி நாள்தொறும் சிந்தை செய்து
ஆகமம் செப்ப லுற்றேனே"

திருமுலர்

நேரம் கிடைக்கும் போது மந்திரம், தந்திரம், யந்திரம், ரசவாதம், சோதிடம், வர்மம், நுண் ஆற்றல் எனும் சத்தி மருத்துவம், மூவுலகம், யோகத்தில் ஹதயோகம், கர்மயோகம், இர்ரஜயோகம், ஞானயோகம், சரயோகம், வாசியோகம், தற்காப்புகலையில் வெண்கல உடல், நிஞ்ஜா, கினோசி, சீ குங், தசமகா வித்தை, அட்டகர்மம், பஞ்சபச்ஷி போன்ற சில ரகசிய மறைபொருள்களைபற்றி எனக்கு தெரிந்த சிறிதளவு பகிர்ந்து கொள்ளலாமா??? (365.25 நாட்களுக்கு மட்டும். அது ஒரு சுட்ஷம கணக்கு)

பி.கு: தனிஷா மேடம் திட்டுவது தெரிகிறது? அது என்ன 365.25 நாட்கள் பதில் 27 மார்ச் 2010 இரவு 23:59:59 (IST இந்திய நேரபடி)/ (18:29:59 (UTC/GMT)!!! அல்லது நடுவிலே தவறி சொன்னாலும் சொல்லிவிடலாம்.

ஊக்கம் கொடுத்த திரு அட்மின் அவர்களுக்கு நன்றி. முதலிலேயே நன்றியை கூறி விட்டேன் எதற்கு தெரியுமா? அவசரகாலத்தில் ஓடி வந்து அடிவாங்காமல் காப்பாற்றதான்!!!

ரசவாதம் = பெளதிகம் + ரசாயனம் + நுண் பெளதிகம்.
Alchemy = Physics + Chemistry + Quantum mechanics (அணுவும் அதை விட நுண்ணிய பரமாணு(க்குவார்க்))

அருசுவைக்கும் பஞ்சபூததிற்க்கும் உள்ள தொடர்பும் ரசவாதம்தான். அதனால் முதலில் பஞ்சபூததை பற்றி சொல்கிறன்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவை ஐந்தும் பஞ்ச பூதங்கள்--ஆகாயத்திற்கு மேலே என்ன என்று பிறகு பார்போம். சுவையின் ஆதாரம் நீர் ஆனால் எந்த சுவையும் ஒரு பூதத்தில் இருந்து வருவதிலை. அருசுவை உடலுக்கு என்ன தரும் என்று ஆரோக்கியம் பகுதியில் எழுதி இருபதால், மனதுக்கு என்னதரும் என்பதை மட்டும் இங்கே சொல்கிறேன்,

இனிப்பு- நிலம், நீர்-மனநிறைவு, மகிழ்ச்சி- வாயு,பித்தம்
புளிப்பு- நிலம், நெருப்பு-மனது, புலன் பலவீனம்-வாயு,கபம்
உவர்ப்பு- நீர், நெருப்பு- நரம்பு, மனம் அமைதி அடையும்-வாயு
காரம்- நெருப்பு, காற்று-மனம்,புல்ன்கள் திறக்கும்-வாயு,கபம்
கசப்பு- ஆகாயம், காற்று-உணர்வு,புலன் சுத்தபடும்-பித்தம்,கபம்
உவர்ப்பு-நிலம், காற்று-உணர்வு,புலன்,ஆக்ரோஷமான மனம் சமன் அடையும், சோம்பேரித்தனதை போக்கும்.
அதனால் எல்லா சுவைகளும் மனிதனுக்கு தேவை ஆனால் அளவுக்கு மிஞ்சினால் நீங்கள் செய்த அமிர்தம் கூட விஷமாகும்.
இதில் அவரவர் உடல் தோஷத்திற்கு (வாதம், பித்தம், சிலேத்துமம்) ஏற்றவாறு சுவையை சேர்த்து கொள்ள வேண்ணடும். உங்கள் வீட்டில் உள்ளவரின் மனநிலைக்கு ஏற்ப தேவையான சுவையை கொடுத்து முயற்சி செய்து பாருங்கள்,

ஒரு சிறிய அருசுவை கணக்கு-பயந்து விடவேண்டாம். நானே சொல்லி விடுகிறன். நாம் சாபிடும் சாப்பாடு எவ்வளவு தெர்யுமா?

ஒரு வேளைக்கு தோரயமாக நாம் உண்ணும் உணவின் எடை 250 கிராம். (போன வாரம் வாங்கிய சிக்கன் எடை நினைவுக்கு வருகிறதா?) அப்படி என்றால் !!! நாம்

ஒரு நாளைக்கு 750 கிராம்.
ஒரு வாரத்திற்கு 5.25 கிலோ
ஒரு மாததிற்க்கு 22.5 கிலோ
ஒரு வருடதிற்கு 273.75 கிலோ
10 வருடத்தில் 2,737 கிலோ
20 வருடத்தில் 5475 கிலோ
30 வருடத்தில் 8212 கிலோ
40 வருடத்தில் 10,950 கிலோ
50 வருடத்தில் 13,687 கிலோ
60 வருடத்தில் 16,325 கிலோ உணவை உண்கிறோமா???

எங்க நீங்களே சொலுங்க இவ்ளோ உள்ளே போயும் 54 கிலோ தான் இருக்கணும் நினைக்கிறோமே அது பேராசை இல்லையா?

இவ்வளவையும் சுவையோடு செய்து சலிக்காமல் சாப்பிட வைத்த பெண்ணினமே உங்களை மனமார வாழ்துகிறேன். அருசுவைக்கும் இங்கு ஒரு குட்டி வாழ்த்து. ஏன் என்றால் பெண்கள் இல்லை என்றால் அருசுவை ஏது? பெண்களை வாழ்தினாலே அருசுவையை வாழ்த்தியது போலதானே திரு அட்மின்.

இப்போது நமது முன்னோர்கள் சொல்லியது " உணவே மருந்து, மருந்தே உணவு." ஒர் உதாரணம், மண்ணால் சுவர் எழுப்பினால் மண் வீடு. செங்கல் சுவர் எழுப்பினால் செங்கல் வீடு. கருங்கலில் சுவர் எழுப்பினால் கருங்கல் வீடு. உங்களுக்கு எந்த வீடு கட்டவேண்டும் ? நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும் நாளை சந்திபோமா ???

இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

கோச்சுக்காதேங்கோ எனக்கு சிதம்பர சக்கரத்ல பேய் பாத்த மாதிரி இருக்கு.

சுரேஜினி

எனக்கும் என்ன சொல்ல வரார்னே புரியலைங்க !!!

இப்படிக்கு,
சந்தனா

ஹ்லோ சுரிஜினி, திருமதி சேகர்

முதலில் நன்றி.
இது தியரி (எனக்கும் தாங்க புரியல)! பின்பு ப்ராக்டிகல் வரும் போது சொல்லுங்க!!

இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

நீங்தானே முதல்ல கேட்டீங்க ?
ஒரு நாள் நான் நாக்பூரில் இருந்தேனா, அப்பொ என் நண்பரின் அப்பாவுக்கு புதுசேரியில் ஹார்ட் அட்டாகு அவரும் பதறி போய் எனக்கு போன் பண்ணி ஆஸ்பத்ரிலே angiography பண்ணணும், நிறைய பணம் கேக்றாங்க என்ன பண்ண என்று கேட்டார்,

நானும் கண்ணை மூடி (Honey I shrank the Kids movie போல உணர்ந்தேன்)--அவருக்கு 3 ரத்த குழாயில் அடைப்பு 86% இருக்கு, ஆப்ரேஷ்ன் முடிந்து நாளை காலை 1100 மணிக்கு வெளியே வருவார் பயபட வேண்டாம் என்று சொன்னென்,

அன்று மாலை அவர் சொன்னார், பத்மாவதி ஆஸ்பத்ரிலே பார்த்ததில் 3 ரத்த குழாயில் அடைப்பு 86.4% இருக்கு, ஆனால் ஆப்ரேஷ்ன் நாளை காலை 1000 மணிக்கு !!! ஹி ஹி இது மட்டும் தவறு என்றார். சரி இருகட்டும் என்று நானும் விட்டுவிட்டேன்.

ம்றுநாள் காலை சாவகாசமாக எல்லோரும் காலை டிபனை ஒரு கட்டுகட்டி விட்டு 9 மணிக்கு வந்தால் அவங்க அப்பாவை காலை 5 மணிக்கே O.T எடுத்து போய்டாங்களாம். சரியாக 1050 ஆப்ரேஸ்ன் முடிந்து ICCU கொண்டு வந்தார்களாம்

இந்த முறைக்கு ஊடுருவல் என்று-வர்ம வைத்தியதில் சொல்வார்கள் இதையே அடட்மா சித்துவில் "அனிமா" என்பார்கள். அப்படியென்றால் நமது மனசக்தியை பரமாணுவைவிட சிரியதாக சுருக்கி செயலாற்றுவது. அடட்மா சித்துவில் "மகிமா" என்பது நமது மனசக்தியை பிரபஞ்ஜத்தை விட பெரியதாக ஆக்கி செயலாற்றுவது.

இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதர, சகோதரிகளே

காந்தம் - கணவன் - மனைவி

ஒர் ஆணுக்கும் பெணுக்கும் ஈர்ப்பு காந்ததை போன்றது என்று அனைவரும் அறிந்ததே. அதனால் முதலில் காந்ததின் குணாதிசயங்களை பற்றி பார்ப்போம்.

காந்த்திற்கு இரு துருவம் உண்டு. அவை வட துருவம், தென் துருவம். இது தான் இரட்டை குணமான உலகம்.

ஆண் - பெண்
கணவன் - மனைவி
வட துருவம் - தென் துருவம்
பகல் - இரவு
கொடுத்தல் - ஏற்றல்
பாசிடிவ் - நெகடிவ்
யாங் - யின்

ஆணுக்குள்ளே பெண், பெணுக்குள்ளே ஆண் என்பது அவர்களுள் இருக்கும் வட, தென் துருவங்கள்தான். ஆணின் வட துருவம் கொடுப்பது, பெணின் தென் துருவம் ஏற்பது. இவை இரண்டும் "சுவாதிஸ்த்தானம்" இடத்தில் மையம் கொண்டு உள்ளது. (உறவின் போது இணையும் இடம்). இங்கு உள்ள ஆற்றல்தான் குழந்தை உருவாக காரணமாய் இருகிறது.

அதே போல் . ஆணின் தென் துருவம் ஏற்பது, பெணின் வட துருவம் கொடுப்பது. இவை இரண்டும் "அநாதகம்" இடத்தில் மையம் கொண்டு உள்ளது. (இரண்டு மார்புக்கும் நடுவில்) இதை "ஜீரோ பாய்ண்ட்" என்பார்கள். ஏன் என்றால் அதற்கு கீழே மூன்றும் , மேல் மூன்று சக்கரங்கள் உள்ளது. இங்கு உள்ள சக்தி அல்லது ஆற்றலைதான் நாம் "அன்பு" என்கிறோம்.

கணவன் அல்லது மனைவில் யாரவது ஒருவர் இரும்பாக இருந்தாலும் இருவருக்கும் பிரச்சனை வாரது, ஆனால் இருவ்ருமே காந்தம் ஆயிற்றே. "I" வடிவதில் இருக்கும் காந்த்தில் ஒரு துருவத்தை மட்டும்தான் ஒட்ட முடியும். அதே போல் அதை பிரிப்பது எளிது. அதனால் "ப" வடிவதில் இருக்கும் இரண்டு காந்தங்களையும் ஒன்றாக ஒட்டினால் அதை பிரித்து எடுப்பது மிகவும் கடினம்.

அதனால் சகோதர, சகோதரிகளே காநத்தின் ஒரு துருவத்தை மட்டும் ஒட்டுவதை மட்டும் நினைகாமல். இரு துருவங்களையும் சேர்த்து அன்னியோனியத்தை பிரிக்க முடியாதபடி செய்யுங்கள்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் விழ கூடாது.

இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

//கோச்சுக்காதேங்கோ எனக்கு சிதம்பர சக்கரத்ல பேய் பாத்த மாதிரி இருக்கு.//

எனக்கும் அப்படித்தாங்க இருக்கு. ஆனாலும், புரியாவிட்டாலும், புரிந்துகொள்ளவேணும் என ஆர்வமாக இருக்கு. நீங்கள் ஆணா/பெண்ணா என்பதே என்னால் கண்டுபிடிக்க முடியேல்லை(கோபிக்கவேண்டாம்), அப்போ எப்படி இவ் எழுத்துக்களின் அர்த்தத்தை என்னால் கண்டுபிடிக்க முடியும்.:).

உங்களுக்கு சாஸ்திரம் தெரியுமா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு சகோதரி அதிராவிற்கு

பள்ளி : செய்ட் தாமஸ் (சென்னை) & செய்ட் ஜோசப் (மெயின்) கடலூர்
கல்லூரி :அண்ணாமலை பல்கலை கழகம்
புதுசேரி : மனைவி(1989 இருந்து இன்று வரை), ஒரு மகன் (+2 ), ஒரு மகள் (7th)
இப்போது நான் மட்டும் ஒரிசாவில்.

இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரி அதிராவிற்கு

அர்தசாஸ்த்திரமா? ம்ம் தெரியுமே!!!

இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

செய்ட் ஜோசப் (மெயின்) கடலூர். கடலூரா உங்கலுக்கு.

நீங்க நேத்து சொன்னத பார்த்தா எதோ என்னமோனு எதிர்பார்த்துட்டு இருந்தேன். என்ன த்ரெட்டோனு

ஏதேதோ சொல்றீங்க. உங்கள் ஞானத்தினால் எல்லாம் புலப்படும் என்கிறீர்களா? புரியும்படி விளக்குங்கள் ஹைஷ்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மேலும் சில பதிவுகள்