தோழிகளே

தோழிகளே, எனக்கு நல்ல, உண்மையான, பண்பான,நேர்மையன,முக்கியமாக அன்பான சினேகிதி வேண்டும்? சிரிக்காதிங்க சீரியசாக கேட்கிரேன்

உண்மையான, நேர்மையான, பண்பான, அன்பான ஸ்நேகிதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி கிடைப்பது அபூர்வம். கிடைத்தாலும் நிலைப்பது அவரவர் அதிர்ஷ்டம். அத்தகய தோழிகள் எனக்கு கிடைத்திருக்கிறாகள். உங்களுக்கு கிடைப்பார்கள். நாம் எந்த அளவு தூய்மையானவர்களை எதிர்பார்க்கின்றோமே அதே அளவு தூய்மையாக நாமும் பழக வேண்டும். அதுதான் நட்பில் முக்கியம். (We should act in favour of our friends)

இதை படித்ததும் எனக்கு ஒரு பொன்மொழி நினைவுக்கு வருது

நண்பனுக்காக உயிரையும் கொடுக்கலாம்..
ஆனால் உயிர் கொடுக்கும் அளவுக்கு நண்பர்கள் கிடைப்பது அரிது

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

காய் தனு, உங்களை நான் அப்படி கூப்பிடலாமா? நான் அப்படி கேட்டதற்கு காரணம் நான் அப்படியானவள், நன்றி உங்கள் நட்பிற்கு, உங்கள் பெயர் நன்றாக உள்ளது, இலங்கை தமிழ் பெண், உங்களைப் பற்றி சொல்லுங்களேன்,னீங்கள் கூறிய வார்த்தை மிகச்சரியனது,எனக்கு வயது 24,திருமணமாகி இத்தாலியில் வசிகிறேன்

அக்கா உஷார இருங்க, இலங்கை பூஜா உன்மையா இல்ல கலாய்கிராங்கலானி பார்த்து பதில் போடுங்க

உங்கள் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹலோ பூஜா,உங்களின் தேவையை கேட்டு விட்டு பின்னர் சிரிக்காதீங்க,சீரியஸா கேட்கின்றேன் என்ற உங்கள் வரிகளைப்பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்தது.உண்மையான,பண்பான,நேர்மையான,முக்கியமாக அன்பான ஸ்னேகிதி மட்டுமல்ல,எந்த எதிர்பார்ப்பும் இல்லாத,ரகசியங்களை காக்கின்ற,ஆபத்துக்கு உதவுகின்ற,அந்யோன்யமிக்க,கஷ்டத்தைத்தராத ,இன்னும் சொல்லப்போனல் ரணத்திற்கு மயிலிறகால் மருந்து போடுவது போல் இதமான தோழி கண்டிப்பாக உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் வேண்டும்.ஆனால் இப்படி கேட்டுத்தான் தோழி கிடைக்கும் என்று கருதாதீர்கள்.அப்படிப்பட்ட ஸ்னேகிதம் தானாக அமைய வேண்டும்.
சகோதரி சோனியா கருத்துக்கேப்ப நீங்கள் கலாய்க்க இதை சொல்ல வில்லை,ஸீரியாசாகத்தான் கேட்டுள்ளீர்கள் என்று கருதியே இந்த பதிவு.சரிதானே??
ஸாதிகா

arusuvai is a wonderful website

போச்சுடா நான் இன்று கேட்டது பிலையா? அல்லடு கேட்டதே பிலையா? ஐரோப்பவில் இருப்பதால் ,அறுசுவைக்கு புதிது என்பதால் தமிழ் நண்பிகளை தேடுறன், சந்தேகத்துடன் இனைந் த சோனியா அக்கா,ஷாதிகா அக்காகும் நன்றிகள்,

ஹாய் பூஜா எப்படிபா இருக்கீங்க?ஏதோ கேள்வி கேட்டு இருக்கிங்கனு இந்த த்ரெடுல நுழைஞ்சா நீங்க தோழிகளை தேடூறீங்களா?ஓகே அப்புறம் பேசுவோம் பா.

ஹாய் பூஜா ஏற்கனவே தனு என்ற சகோதரி இருக்காங்க அதனால் தனீ என்று கூப்பிடுங்க சரியா. நீங்களும் என் தோழிதான். நான் அமீரகத்தில் இருக்கிறென்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஜெயா, தனீ சுகமாக உள்ளேன், ஐயோ நண்பிகளே 'அந்த' கேள்விய மறந்துடுங்க, நான் பட்ட பாடு போதும், தனீ அமீரகம் எங்கு உள்ளது, திருமணம் ஆகிவிட்டதா,பிள்ளைகள் உண்டா,

பூஜா தயவு செய்து என்ன அக்கானி கூப்பிடாதிங்க.என்ன உங்க தோழியா நினைத்தால் சோனியா என்று கூப்பிடுங்க. நான் என்றும் உங்கள் தோழி தான்.

உங்கள் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் பூஜா ஓகே பா.

மேலும் சில பதிவுகள்