பிரட் புட்டு

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இனிப்பு பிரட் - ஒன்று
வெல்லம் - கால் கிலோ
ஏலக்காய் - 2
முந்திரி - 10
துருவிய தேங்காய் - அரை மூடி


 

பிரட் ஸ்லைஸின் ஓரங்களை எடுத்து விட்டு மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓடவிட்டால் பூ போல் கிடைக்கும். இதை அகலமான கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கனமான பாத்திரத்தில் வெல்லத்தை பொடி செய்து போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு கம்பி பதமாக காய்ச்சவும்.
கம்பி பதம் வந்ததும் ஏலப்பொடியை போட்டு இறக்கி பிரடில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறவும் தேங்காய் துருவல், முந்திரி வறுத்ததைப் போட்டு பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்