அரட்டைக்கு இங்கே வாங்க பாகம் 70

எல்லோரும் இங்கே தொடருவோம் அரட்டையை. எல்லோரும் வாங்க சந்தோஷமா இருப்போம்

கவி, உசேன் என்னை வச்சு காமெடி பண்ணுறீங்களே இரட்டை பதிவு தனிஷானு என் நிலைமை அப்படி. ஒரு பதிவு போடுவதற்குள் நான் படும் பாடு அப்படி.

சுகன் நல்ல வேளை சொன்னீங்க. இன்னிக்கு நல்ல வென்னீர் வச்சு தலைக்கு ஊத்தலாம்னு இருந்தேன். ஆமாம்ப்பா. இப்போ ரன்னிங் நோஸ். இன்னும் கர் கர்னு சத்தம் நிக்கல. வெறும் உடம்புக்கு மட்டும் தண்ணீர் ஊற்றி பேபி கொலாஜன் போடலாம்னு இருக்கேன். ரொம்ப நன்றி சுகன். தேஜூவ நல்ல பார்த்துக்கோங்க

காயூ ரொம்ப நாள் கழிச்சு வந்ததால் எல்லோரையும் நல்லபடியா விசாரிச்சுடீங்க.

உமா எப்படி இருக்கீங்க. அர்ஜூனுக்கு வியர்குரு சரியாகி விட்டதா. வேக்ஷினேஷன் எல்லாம் ஒழுங்கா மறக்காம போட்டுருங்கப்பா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

எல்லாருக்கும் ஹாய்... சாப்பிட்டு வற்றேன். காத்திருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நமக்கு குழந்தைங்க உடம்பு தான் முக்கியம்.குளிப்பது அவசியம் தான்,ஆனால் இந்த மாதிரி நேரத்தில் கொஞ்சம் யோசிச்சு தான் செய்யனும்.உங்களுக்கு தான் தெரியுமே.நான் சொல்லனும் என்று அவசியமில்லை.

இங்க 1 வாரமா மழை.அதுவும் அந்த மழைதுளி விழும் போது சத்தம் வரும் பாருங்க.அவ்ளோ கனமான துளிகள்.அதிலும்,ரொம்ப பாதுகாப்பா அவளுக்கு ஜர்கின் போட்டு,காதில் பஞ்சு வைத்து வெளியே கூட்டிட்டு போனோம்.

ஒரு நாள் போய் அவளுக்கு தேவையான் யுனிஃபார்ம்,ஸ்கூல் பேக்,பள்ளிக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள் எல்லாம் போய் வாங்கி வந்தோம்.அப்புறம் 2 நாள் முன்னாடி தான் புக்ஸ் தந்தாங்க.அதுகொருமுறை போய் வாங்கி வந்தோம்.இப்ப லைட்டா இருமல் ஆரம்பிச்சிருக்கு.

இதை விட பெரிய விஷயம்,இங்க பசங்க காலையில் எழுந்து எல்லா வேலையும் முடிச்சுட்டு காலங்காத்தால இந்த குளிரில் பஸ்ஸில் தினமும் போக வேண்டி இருக்கும்.அதை நினைச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு.அதுக்கென்று இப்ப அப்பப்ப வெளியே போய் பழக்கப்படுத்திக்கிட்டு இருக்கேன்.அவளுக்கு நல்ல படியா க்ளைமேட் செட்டாக வேண்டும் என்று இறைவனை தான் வேண்டி கொள்கிறேன்.

என்னை விட்டு என் பொண்ணு அரை நாள் பிரிந்து இருக்க போறான்னு என் கணவர்கிட்ட சொன்னா,அவர்,ஆமா அவள் படிக்க தானே போகிறாள்.அது சந்தோஷப்பட வேண்டிய விஷயம்,இப்படியா ஃபீல் பண்ணுவே என்கிறார்.நீ தானே போய் பஸ் ஏத்தி விட போகிறாய்,அப்புறம் மதியம் சீக்கிரம் 12:30 ஆனதும்,மறுபடியும் போய் பஸ் வந்ததும் திரும்ப அழைத்து கொண்டு வர போகிறாய்.அவள் நல்லா படிக்கனும் என்று மட்டும் நினை என்கிறார்.அவர் சொல்வதும் சரி தான் என்றாலும் அந்த நாள் நெருங்க நெருங்க கொஞ்சம் மனசு ஒருமாதிரி தானிருக்கு.

சரிபா,நான் சமைக்கனும் அப்புறமா வரேன்.

நான் அப்பவே சொன்னேன்ல.நான் எல்லாரையும் விசாரித்து முடிப்பதற்க்குள் அடுத்த அரட்டை தொடங்கிடும்.அதனால் இந்த இழையை படிக்கும் முன் சமத்தா அந்த 69 அரட்டை பதிவை படிச்சிட்டு இதை படிங்க.ஏன்னா,அங்க இப்ப தான் எல்லாரையும் விசாரிச்சிட்டு வந்தேன்.ஒகேவா.

செல்விக்கா!
அடடா, 70 ஆரம்பிச்சது தெரியாம, நான் 69ல் போய் பதிவு போட்டுட்டு வந்தேன்.
இருக்கட்டும், செல்விக்கா, போனவாரம் சேலம் மீன் குழம்பு செய்தேன்.அத்தை மாமாவுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
பாதாம், புதினா சிக்கனும் செய்தேன். இந்த முறை ஏதோதோ வித்தியாசமா சமையல் பன்ணி எங்களை நடக்க முடியாம ஆக்க போறியன்னு கேட்கிறாங்க.
அத்தைக்கு கொஞ்சம் பெரிய உடல்வாகு. டயட்டில் இருக்க ட்ரை பண்ணியும் நான் சமையல் பண்ணி அதை கெடுக்கறேன்னு சொல்லி இப்ப தனியா சமைக்க ஆரம்பிச்சிட்டாங்க.

ஒரு நாலஞ்சு ஐட்டத்துக்கே இப்பிடி. இன்னும் நம் அறுசுவை குறிப்பு எல்லாம் பண்ண ஆரம்பிச்சா நாளைக்கெ ஊருக்கு போய்டுவேன்னு மிரட்டறாங்க.
வந்து 10 நாளிலேயே அத்தை மாமா, ரெண்டுபேருமே கொஞ்சம் வெயிட் போட்டுட்டாங்க.
அத்தைக்கு 59 வயசு, மாமாவுக்கு 67 ஆய்டுச்சு. அதனால் சாப்பாட்டு விஷயத்தில் ரொம்ப கவனமா இருக்காங்க.,
நானும், எல்லாம் செய்திட்டு டேபிளில் வெச்சிட்றேன்.கொஞ்சம் மட்டும் டேஸ்டுக்கு எடுக்கறாங்க.
அபிக்கு உடம்பு முடியாததால அவங்களுக்கு தகுந்த குறிப்பினை பொறுமையா தேடமுடியலை.
ராத்திரி எல்லா வேலைகளையும் முடிச்சிட்டு வந்து உட்காரணும்!

ஆமாம்ப்பா. இங்கேயும் மழைதான். நான் அந்த சமயம் இவளை கீழே அழைச்சிட்டு போயிருந்தேன். மழை திடீர்னு சோ ஆரம்பிச்சுட்டு. நல்ல பெரிய பெரிய துளிகள் நான் கூட ஆலங்கட்டி மழையோனு நினைச்சேன். நல்லவேளை அவளுக்கு ஜெர்கின் போட்டுருந்தேன்.

நீங்க சொன்னப்பிறகுதான் கீழபோய் மீன் வாங்கிட்டு வந்து சமைச்சிட்டு இருக்கேன். மதியம்தான் கொடுத்து பார்க்கனும். அப்புறம் தேஜூ ஸ்கூல் போறத பத்தி கவலை பட்டுட்டு இருக்காதீங்க. நாம் எல்லாம் அப்படித்தான் அப்ரா காய்ச்சல முனங்கிட்டு இருக்கும் போது எனக்கு அழுகை வந்துட்டு, அழுதேன் இவர் திட்டினார். பீவர் வந்தால்தான் குழந்தைங்களுக்கு இம்யூனிட்டி பவர் கிடைக்கும் அடிக்கடிதான் வரக்கூடாது. நீ தைரியமா இருந்தாதான் அவளை நல்ல படியா பார்க்க முடியும்னு சொன்னார்.

முதல்நாள் ஸ்கூல் போகும் போது உங்களுக்கு கஷ்டமா இருக்கும். அப்புறம் பழகிடும்ப்பா. எனக்கே கஷ்டமாதான் இருக்கு. நம்ம கூடவே குழந்தைங்க இருந்திட்டு ஒருநாள் மதியம் வரை வெளியே போனா டக்குனு வருத்தமாதான் இருக்கும். நல்ல விஷயத்த கத்துக்க போறா, இனிமேதான் அவளுக்கு உலக நடப்புக்கள் மெல்ல மெல்ல புரிய ஆரம்பிக்கும். சந்தோசமா மகளை அனுப்புங்க சுகன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

தனிஷா அப்ரா நலமா? மழை செம்ம மழை அடிச்சி இன்று தான் பரவாயில்லை ரோடெல்லாம் காய்ந்து இருக்கு.

சுகன்யா நலமா? சாரி போன் திரெட்டில் எனக்கு பதிவு போட்டு இருந்தீங்க நான் தான் பா பார்க்கல.
எப்படி இருக்கீங்க உங்கள் பக்கம் மழை எல்லாம் எப்படி இருக்கு இங்கு பேய் மழை, ஐஸ் கட்டி மழையெல்லாம் பெய்தது.

அதுவும் ஸ்கூல் ஆரம்பித்ததும் தொடர்ந்தது என்றால் தினம் தினம் லீவு தான்.இன்னும் ஊர் மாதிரி தொடர்ந்து பெய்தால் துபாய் ஒரு வழி தான்

ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலீலா!
நலமா? இங்கும் ஒரே மழைதான். ஆனா என்ன, குட்டி பேய் மழை அவ்வளவுதான்.
அதான், குளிர் இன்னும் இருக்கு. இன்னைக்குகூட என் பையன் ஸ்கூலுக்கு ஜெர்கின் போட்டுட்டு போறான். ஏப்ரல் மாசம் மாதிரியே தெரியல.
ஏனோ, தெரிய்ல இந்த வருடம்தான் இந்த அநியாயம்னு தோணுது. சம்மர் ரொம்ப ஷார்ட்டா இருக்குமோன்னு தோணுது.
இதெல்லாம் பயங்கர வெயிலுக்கு முன் வரும் அமைதின்னு ஒரு சிலர் பயமுறுத்தறாங்க.

இலா, உத்ரா (எல்லாரையும் வம்பிழுக்கும் இவர்கள் இருவரையும் இரண்டு நாட்களாக கானவில்லை. அடையாளம் நுனி நாக்கில் ஆங்கிலம்.) இரண்டு பேர் பதிவையும் 2 நாளா காணோமே... என்னாச்சு?? இருவரும் நலமா? யாருக்காது தெரியுமா அவங்க ஏன் வரலன்னு??

இமா... (இவரை பல நாட்களாக காணவில்லை.... இடை இடையே தலையை காட்டுவதும் பின் ஒலிந்து கொள்வதுமாகவே இருக்கிறார்.) அன்னைக்கு வந்தீங்க, இனி வருவேன்னு சொல்லிட்டு அப்படியெ காணாம போயிட்டீங்களே... நலமா? வாங்க சீக்கிரம்.

ஆசியா (இவரை மன்றத்தில் ஒரு பகுதியில் மட்டும் சில நாட்களுக்கு முன் கண்டது... அதிராவின் மிரட்டலால் காணாமல் போயிருப்பாரோ என்ற சந்தேகம் பரவலாக இருக்கிறது.) அறுசுவையில் எங்கையும் கணோமே.. யாராச்சும் பார்த்தா வனிதா தேடினதை சொல்லுங்கப்பா.

சீனா மஹா(சீனா பற்றி பதிவுகள் போடப்போவதாக சொன்னவர், மறு நாளே காணாமல் போய் விட்டார்... இன்னும் உடல் நலம் சரி இல்லையா அல்லது சீனாவை முழுஆக சுற்றி பார்த்து கட்டுரை எழுத போயிருக்கிறாரா என்பது தெரியவில்லை)... ஏர்கனவே நான் வந்தப்போ இவங்க இல்லை, சமீபத்துல தான் திரும்ப ரீஎன்ட்ரீ குடுத்தாங்க... மீண்டும் எஸ்கேப். உடம்பு சரி இல்லைன்னு வேறு யாரோ சோன்னீங்க... இப்போ எப்படி இருக்காங்கன்னு யாருக்காது தெரியுமா???

-- காணாமல் போன இவர்கள் பற்றிய தகவல் அறிந்தால் தெரிவிக்க வேண்டிய முகவரி... "அரட்டை பாகம் - (அப்போதைக்கு என்ன எண் போகுதோ அது), அறுசுவை".

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா!
பாத்தீங்களா? இதுக்குதான் எவ்வளவு வேலை இருந்தாலும் அப்பப்ப நான் தலை காட்டிட்டு போய்டறேன்.
இன்னைக்கு மட்டும் சிரியா பகுதியில் பதிவு போடாம விட்டிருந்தா என்னையும் இந்த லிஸ்டில் சேர்த்திருப்பீங்க!

மேலும் சில பதிவுகள்