(ஸ்டெம் செல் மற்றும் கோர்ட் ப்ளட்) தெரிந்தவர்கள் உதவுங்கள் ப்ளீஸ்.

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் எனது சலாமுடன் வணக்கங்களும்.

கடந்த 02 ஜூலை 2008 அன்று ஒரு தங்கத் தாரகையை பெற்றெடுத்தேன். ஆனால் அந்த சுவனத்து கனி மண்ணுலகில் நான்கு மாதம் இரண்டு நாட்கள் மட்டும் எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டு நம்மை படைத்த இறைவனிடம் சென்று விட்டாள்.

எல்லாம் வல்ல இறைவனின் கருணையாலும் கிருபையாலும் நான் எனது மகளை மறுபடியும் அடையும் பாக்கியதினை அடைந்து உள்ளேன். ஐந்து மாதம் கர்ப்பமாத உள்ளேன்.

எனது முதல் குழந்தைக்கு பிறந்தது முதல் சளி, கால் அசைவு மிக குறைவு, கழுத்து நரம்பு வீக், பால் குடிக்க இயலாமல் மிகவும் கஷ்டபட்டாள்.

பிறந்த பதினெட்டாவது நாளே அவளுக்கு நிமோனியா ஜுரம் வந்தது.

எனது குழந்தைக்கு இருந்த நோயின் பெயர் SMA (Spinal Muscular Atrophy)என என் மகள் எங்களை விட்டு பிரிந்த பிறகு தான் தெரிந்தது. இந்த கொடிய நோய்க்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்க வில்லையாம்

நானும் எனது கணவரும் உறவினர்களும் இல்லை.

இறைவன் கிருபையால் இந்த குழந்தையாவது நலத்துடன் எங்களுடன் வாழ வேண்டும் என ஆசை படுகிறோம்.

அறுசுவை யில் ஸ்டெம் செல் பற்றிய லிங்க் யை பார்த்தேன்.
ஸ்டெம் செல் மற்றும் கோர்ட் ப்ளட் பற்றி விவரம் தெரிந்தவர்கள் தயவு செய்து கூறவும்.

இதை யாரும் பயன் படுத்தி உள்ளிர்களா?

தயவு செய்து உதவுங்கள்.ப்ளீஸ்.

பாத்திமா இந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக பிறக்க கடவுளை வேண்டுகிறேன்.ஸ்டெம் செல் என்பது பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கபடும் ரத்தம்.இந்த ரத்தம் கொண்டு 70 கொடிய நோய் சரி செய்யபடுகிறது.இந்த ரத்தத்தை பாதுகாப்பதால் மிகுந்த நன்மை.

Dear Fathima, After a baby is born and the umbilical cord is cut, some blood remains in the blood vessels of the placenta and the portion of the umbilical cord that remains attached to it. After birth, the baby no longer needs this extra blood. This blood is called placental blood or umbilical cord blood: "cord blood" for short.

Cord blood contains all the normal elements of blood - red blood cells, white blood cells, platelets and plasma. But it is also rich in hematopoietic (blood-forming) stem cells, similar to those found in bone marrow. This is why cord blood can be used for transplantation instead of bone marrow.
(I read this article from National Cord Blood Program)
இங்கு அமெரிகாவில் குழந்தை பிறந்ததும் அது option ஒரு ஆகவே கேட்பார்கள். அதை cord blood bank இல் வைத்து பாதுகாப்பார்கள். மாதந்தோறும் பணம் கட்ட வேண்டும்.
கவலைப்படாமல் உடம்பை கவனியுங்கள்.

vaany

மிக்க நன்றி
அன்பு தோழிகள் ஜெய சித்ரா, வாணி இருவருக்கும் நான் தற்போது ட்ரீட்மென்ட் எடுத்து வரும் டாக்டரிடம் இதை பற்றி கேட்டேன். அவடுக்கு தெரிந்த ப்ளட் பேங்கை தொடர்பு கொள்ளுமாறு கூறினார்கள். வல்ல இறையோனின் துணையால் எனது குழந்தை நலமாக இருக்கும் என நம்புகிறேன். மேலும் எனக்கு தெரியும் விவரஙலை நிசயமாக இந்த பகுதியில் போடுகிறென்.
என்னை போன்ட்ர தோழிகளுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறென்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

மேலும் சில பதிவுகள்