நெல்லை தம் பிரியாணி

தேதி: April 2, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (9 votes)

 

மட்டன் - 1 1/4 கிலோ
பிரியாணி அரிசி - ஒரு கிலோ
எண்ணெய் - 150 மில்லி
நெய் - 150 மில்லி
இஞ்சி பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
ஏலம் - 3
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு (கரம் மசாலா பவுடர் போடுவதால், விரும்பினால் சேர்க்கவும்)
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி (ஏலம், பட்டை, கிராம்பு பொடி)
பச்சை மிளகாய் - 6
சில்லி பவுடர் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 300 கிராம்
பழுத்த தக்காளி - 400 கிராம்
தயிர் - 200 மில்லி
எலுமிச்சை - 2(சிறியது)
புதினா - சிறிய கட்டு
மல்லி - சிறிய கட்டு
ஆரஞ்ச் ரெட், லெமன் யெல்லோ கலர் - ஒரு பின்ச்
உப்பு - தேவைக்கு


 

வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். மல்லி, புதினாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிரியாணி அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
கறியை சுத்தம் செய்து கழுவி தண்ணீரை வடிகட்டி அதில் தயிர், ஒரு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு தேக்கரண்டி சில்லி பவுடர், உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அதன் பிறகு குக்கரில் ஊற வைத்திருக்கும் கறியை போட்டு 3 விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.
கறி வெந்த பின்பு எடுத்து தனியாக வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் 150 மில்லி எண்ணெய், 100 மில்லி நெய் விட்டு காய்ந்ததும் ஏலம், பட்டை, கிராம்பு தாளித்து நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் முழுவதையும் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கி சிவந்ததும், மீதமுள்ள 2 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா போட்டு பிரட்டவும். சிம்மில் வைத்து சிறிது நேரம் மூடி திறக்கவும்.
பின்பு அதில் தக்காளி, மிளகாய், மல்லி, புதினா, ஒரு தேக்கரண்டி சில்லி பவுடர், சிறிது உப்பு போட்டு பிரட்டி மூடி போட்டு மசிய விடவும்.
மசிந்ததும் வேக வைத்த மட்டனை சேர்க்கவும். சிறிது நேரம் தீயை மிதமாக வைத்து மூடி வைக்கவும். மட்டன் மூழ்கும் அளவு கிரேவி இருக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் தாராளமாக ஊற்றி கொதி வந்தவுடன் ஊற வைத்த அரிசியை போட்டு முக்கால் அளவு வெந்ததும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பின்பு மட்டன் மசாலா உள்ள பாத்திரத்தில் வடித்த சாதத்தை கொட்டி சமப்படுத்தி, ஆரஞ்ச் ரெட், லெமன் யெல்லொ கலரை சிறிது நீரில் கரைத்து சாதம் மேல் ஊற்றி விடவும். மீதி உள்ள 50 மில்லி நெய்யை சாதம் மேல் ஊற்றவும்.
பின்பு தம் போடுவதற்கு அலுமினியம் ஃபாயிலை போட்டு பாத்திரத்தில் மூடி அதன் மேல் தட்டு வைத்து மூடி போடவும். சிம்மில் கால் மணி நேரம் வைக்கவும். பாத்திரத்தின் அடியில் பழைய தோசைக்கல் அல்லது ஹீட் டிஃப்யுசர் இருந்தால் வைத்து கால் மணி நேரம் சிம்மில் வைத்திருக்கவும்.
அடுப்பை அணைத்து கால் மணி நேரம் கழித்து திறந்து ஒன்று போல் பிரட்டவும். சாதம் மட்டனுடன் சேர்ந்து வருமாறு பிரட்டவும். சாதம் உடையக்கூடாது. தம் போடுவதால் மட்டனில் உள்ள கிரேவி எல்லாம் சாதம் இழுத்து கொண்டு விடும்.
சுவையான கமகமக்கும் நெல்லை தம் பிரியாணி ரெடி. இதனை தயிர் பச்சடி, தாளிச்சா, ஸ்வீட் உடன் பரிமாறவும். இதைப் போல் சிக்கனிலும் செய்யலாம். இந்த தம் பிரியாணி குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக <b> திருமதி. ஆசியா உமர் </b> அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Hello madem,

my favorite recipe.. You have presented in nice way.. Nice pictures.. Iam going to try this on saturday.. For chicken means how many minutes i should put in dum? can i reduce the greenchilli? if i reduce will it give the same taste? reply please..

மிகவும் அருமையாக இருக்கு..பார்க்கும் பொழுது ஆசையாக இருக்கு..
அன்புடன்,
கீதா ஆச்சல்

அசத்துகின்றீர்கள் ஆசியா.எனக்கு பிரியாணி என்றால் கொள்ளைப்பிரியம்.அதிலும் தம்பிரியாணி,மொகல்பிரியாணி,ஹைதராபாத்பிரியாணி,கலயாணபிரியாணி,அரேபியன் பிரியாணி,காலித்பிரியாணி,மந்திபிரியாணி,தலைப்பாக்கட்டு பிரியாணி இப்படி வகைகையாக டேஸ்ட் செய்து இருக்கிறேன்.கண்டிப்பாக நாளை உங்கள் நெல்லை தம் பிரியாணிதான்.படங்களும் அழகாக வந்துள்ளது

arusuvai is a wonderful website

அசத்துகின்றீர்கள் ஆசியா.எனக்கு பிரியாணி என்றால் கொள்ளைப்பிரியம்.அதிலும் தம்பிரியாணி,மொகல்பிரியாணி,ஹைதராபாத்பிரியாணி,கலயாணபிரியாணி,அரேபியன் பிரியாணி,காலித்பிரியாணி,மந்திபிரியாணி,தலைப்பாக்கட்டு பிரியாணி இப்படி வகைகையாக டேஸ்ட் செய்து இருக்கிறேன்.கண்டிப்பாக நாளை உங்கள் நெல்லை தம் பிரியாணிதான்.படங்களும் அழகாக வந்துள்ளது

arusuvai is a wonderful website

அசத்துகின்றீர்கள் ஆசியா.எனக்கு பிரியாணி என்றால் கொள்ளைப்பிரியம்.அதிலும் தம்பிரியாணி,மொகல்பிரியாணி,ஹைதராபாத்பிரியாணி,கலயாணபிரியாணி,அரேபியன் பிரியாணி,காலித்பிரியாணி,மந்திபிரியாணி,தலைப்பாக்கட்டு பிரியாணி இப்படி வகைகையாக டேஸ்ட் செய்து இருக்கிறேன்.கண்டிப்பாக நாளை உங்கள் நெல்லை தம் பிரியாணிதான்.படங்களும் அழகாக வந்துள்ளது

arusuvai is a wonderful website

கீதாச்சல் ,நிஞ்சு கருத்துக்கு நன்றி.பாப்பு சிக்கனுக்கும் அதே நிமிடம் தம்மில் போடவும்,சிக்கனை குக்கரில் வைக்கவேண்டம்,நேராக பிரியாணி தாளிக்கும் பாத்திரத்தில் வைத்தே பாதி வேகவைத்து அதன் மேல் முக்கால் பாகம் வெந்த சாதத்தை தட்டி தம் போடவும்.மிளகாய் 3 கூட போடலாம்,ருசி மாறாது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பேக்கிங் ரெடியாகி கொண்டிருந்தோம்,ஒரு முறை அறுசுவை பார்வையிட்டு விட்டு கம்ப்யுட்டரை பேக் பண்ணலாம் என்று சொன்னேன்,பார்த்தால் நெல்லை தம் பிரியாணி,ஆச்சரியம்,மகிழ்ச்சி.என் கணவர் உடனே காலையில் பேக் செய்யலாம் என்று சொல்லி விட்டார்.முன்பே அனுப்பியது.உங்கள் கருத்துக்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பார்த்ததும் சாப்பிடவேணும் என ஆசையாக இருக்கு. நான் இதுவரை தம் போட்டதில்லை. இப்போ படத்தோடு இருப்பதால் பழகலாம் என யோசிக்கிறேன். நல்ல பதமாக எடுத்திருக்கிறீங்க. ஆனால் பெரும்பாலும் எல்லோர் குறிப்பிலும்,அதிகமாக தக்காழி சேர்ப்பதால் எனக்கு கஸ்டமாக இருக்கு. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், உங்கள் குண்டூர் சிக்கினும் செய்ய வேண்டும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அக்கா நேரம் இல்லை. என்னோட பக்கத்தில் வருவதற்காக.

indira

சூப்பர். நம்ம ஊர் பிரியாணி. நான் அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்தப்பதான் இதை டேஸ்ட் பண்ணி விட்டேனே. சுவை அபாரம். எல்லோரும் துணிந்து செய்யலாம். நல்ல உதிர் உதிராக சாப்பிட சாப்பிட திகட்டாமலும் இருந்தது. ஒரு பிடி பிடித்து விட்டுதான் வந்தேன்.

இன்று நல்லபடியாக அல்லைன் போயிருப்பீங்க. உங்க மனதுக்கு எல்லாம் சிறப்பாக நடக்க இறைவன் துணை செய்வான். இங்கிருந்த வரையிலும் உடன் பிறந்த சகோதரி போல் ஒரு கஷ்டம் என்றாலும் ஓடி வருவீங்க. இப்போ 1 மணி நேர பயணம் பண்ணி வரனும். அடிக்கடி வாங்க. ஊருக்கு போனாலும் நான் ஊர் வரும் சமயம் கண்டிப்பா உங்களை பார்க்க வருவேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஆசியா ரொம்ப சூப்பர் ஆ இருக்கு பார்க்கவே,அதுவும் டபுள்கலர் கொடுத்து கலக்கலா இருக்கு.

இதே தான் பா போன வருடம் உம்ரா போய் வரும் போது ஒரு வீட்டில் சாப்பிட்டு வந்தோம் அவர்களும் இப்படி தான் தனியாக கறியை வேக வைத்து போட்டார்கள்.
கண்டிப்பாக டைம் கிடைக்கும் போது செய்து பின்னூட்டம் தருகிறேன்.

அலைன் போயாச்சா வந்த புதிதில் போனது இன்னும் இது வரை போகல இப்ப நீங்க இருக்கீங்க, நேரா வந்து விட வேண்டிய்து தான்.
பையன், பொண்ணுக்கு அங்கு ஸ்கூல் சேர்க்க எல்லா ஏற்பாடும் செய்தாச்சா. வீடும் மாற்றி ஸ்கூலும் மாற்றி என்றால் ரொம்ப வேலையா இருக்கும்.
நல்ல எல்லாம் செட் ஆனதும் வாங்க வந்து கலக்குங்க.
உங்கள் அனைத்து வேலைகளையும் வெகு சுலபமாக முடிய தூஆ செய்கிறேன்.

ஜலீலா

Jaleelakamal

நிச்சயம் செய்து பாருங்க,இது ரொம்ப மைல்டாகத்தான் இருக்கும்.இறைச்சி,அரிசி எல்லாவற்றிற்கும் சேர்த்து தான் இந்த அளவு தக்காளி,இது நல்ல இருக்கும்.ட்ரை செய்துவிட்டு சொல்லுங்க.இதைவிட சிலர் அதிக்காமாக சேர்ப்பார்கள்.நான் குறைந்த அளவு தான் சொல்லிருக்கேன்.கருத்து தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நேரம் கிடைக்கும் பொழுது செய்து பாரு.மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்னோட பதிவில் வருவதற்காக ஒரு பதிவு போட்டு வைக்கிறேன்.நிச்சயம் விரதம் முடிந்து இந்த பிரியாணி தான்.நல்லபடியாக வீடு மாறிட்டிங்களா ஆசியாக்கா?கறியை தனியாக எடுத்து வைக்கனும்னு சொல்லிருக்கிங்க,அந்த கறி தண்ணியை என்ன செய்யணும்?

உங்கள் பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி.உரிமையாக நேராக வந்துவிடவேண்டியது தான் என்று சொன்னதே வந்த மாதிரி.அல்-ஐனில் ஜிமி ஏரியாவில் வீடு.வரும் போது சொல்லுங்க.23 ம் தேதி ஊர் பயணம்.பாதி வேலை முடிந்திருக்கிறது.வரும் வியாழனுக்குள் எல்லாம் செட் பண்ணி முடிக்கனும்.இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.நீங்கள் போன் செய்து முன்பு பேசியது நினைவு வருகிறது.எப்படி குறிப்புக்கள் மடமடவென்று கொடுக்கிறிர்களோ அதேமாதிரி பேச்சிலும் சுறு சுறுப்பு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உன் பதிவு பார்த்து மகிழ்ச்சி.போன் பண்ணியது மனசுக்கு இதமாக இருந்தது.அனேகமாக இந்த வாரத்தில் எல்லாம் செட் ஆகிவிடும்.பார்ப்போம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அதிரா உங்களுக்கு தக்காளி அதிகம் சேர்த்தால் பிடிக்காது என்றால்.
ஒரு கிலோ அரிசிக்கு கால் கிலோ மட்டும் சேர்த்து கொண்டு, அதற்கு பதில் தயிர், தேசிக்காய் சேர்த்து கொள்ளுங்கள்.

ஆசியா நல்ல படியா ஊர் போய் வாங்க, முன்பு ஏதோ மன்றத்தில் பார்த்து பேசியது அதோடு நம்பர் நோட் பண்ண வில்லை.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஆசியா அக்கா எப்படி இருக்கிங்க.நேற்று உங்க நெல்லை தம் பிரியாணி செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது. வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு இருந்தது.முக்கியமா என் மகளுக்கு [4 வயது] நன்றி.நன்றி.அக்கா.

செய்து அருமையான பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.ஆசியா அக்கா என்று அழகாக விசாரித்து இருப்பது மனதை தொட்டது,நீங்கள் அனைவரும் நலமா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு ஆசியா,

உங்கலை எப்படி பாராட்டுரதுனு தெரியல...நான் நேன்று என் ஹஸ் பிறந்த நாளிற்காக உங்கலுடய இந்த நெல்லை தம் பிரியாணி செய்தேன். மிகவும் நன்ராக இருந்தது. இதுதான் நான் செய்த முதல் மட்டன் பிரியானி, ரொம்ப நல்லா இருந்தது. என் ஹஸ்' Friends lunch-ku வந்திருந்தார்கள். நான் செய்த முதல் பிரியானி என்று சொன்னால் நம்பவில்லை. நல்ல அனுபவம் இருப்பவர்கள் செய்வது போல் இருப்பதாக சொன்னர்கள். மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். so many compliments for the biriyani. எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. நான் உங்களுக்குதான் thanks சொல்லனும் புதிதாக செய்பவர்கலும் easy-ya கற்று கொள்கிற மாதிரி உங்க Recipe இருக்கு.

The measurements are perfect.. kudos to UU...

உங்கள் பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சியை தருகிறது.thanks a lot.என் கணவரும் குழந்தைக்களூம் சொல்வாங்க,மம்மி,உங்க பிரியாணி தான் எங்களுக்கு ரொம்ப பிடிக்சிருக்குன்னு,நான் நினைப்பேன்,எனக்காக சொல்றாங்கன்னு,உங்க பதிவை பார்த்து மற்றவர்களுக்கும் பிடித்திருக்கு எனும் பொழுது சந்தோஷமாக இருக்கு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

விடுமுறைக்கு ஊருக்கு சென்று இருந்த போது புதிதாக திருமணம் ஆன நண்பரை விருந்துக்கு அழைத்து இருந்தோம் அவர்களுக்குகாக நான் இந்த பிரியாணி செய்தேன். மிகவும் சூப்பராக இருந்தது வந்த விருந்தினர்கள் பாராட்டினார்கள் என்பதை விட் என் பிள்ளைகள் இருவரும் மிகவும் விரும்பி சாப்பிட்டது மட்டும் அல்லாது, லதாவிடம் எங்களுக்கு அப்பா செய்த அந்த நெல்லை பிரியாணிதான் வேண்டும் என்று தொல்லை கொடுக்க லதா என்னிடம் நெட்டில் இருந்து கேட்டு செய்தார் இருந்தாலும் பிள்ளைகள் சொல்லிவிட்டார்கள் அப்பா செய்ததுதான் பெஸ்ட் என அதை கேட்ட பின் மறந்து இருந்த பின்னுட்டம் நினைவுக்கு வரவே இப்போது அந்த பாரட்டுகள் எனக்கு கிடைக்க உதவி செய்த உங்களுக்குதான் சேர வேண்டும். என் சமையல் திறமையை வெளிக் கொண்டு வந்த உங்களின் அருமையான இந்த குறிப்புக்காக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

நன்றி,மிக்க மகிழ்ச்சி,உங்களின் நீண்ட பின்னூட்டம் கண்டு வியப்பு.இந்த பிரியாணி ரொம்ப சிம்பிளாக குழந்தைக்களுக்கு தக்கபடி இருக்கும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

Your recipe is very good.I did it for the first time,it came fantastic.Thanks for ur recipe...

ஆசியா... இன்று வெகு நாட்களுக்கு பின் பள்ளி, கல்லூரி காலத்து தோழி மதிய நேரம் வீட்டில் இருந்தார். நல்லா அசைவம் சமைப்பார். இன்று உங்கள் மட்டன் பிரியாணி சாப்பிட்டு ஆகா ஓகோ என்று பாராட்டிட்டார். உங்க குறிப்பு என்று சொன்னேன். அவரும் திருநெல்வேலி தான்.... ரொம்ப சந்தோஷபாட்டார். மிக்க நன்றி ஆசியா. சூப்பரான சுவை. வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடிச்சுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் குறிப்பில் "பின்பு தம் போடுவதற்கு அலுமினியம் ஃபாயிலை போட்டு பாத்திரத்தில் மூடி அதன் மேல் தட்டு வைத்து மூடி போடவும். சிம்மில் கால் மணி நேரம் வைக்கவும். பாத்திரத்தின் அடியில் பழைய தோசைக்கல் அல்லது ஹீட் டிஃப்யுசர் இருந்தால் வைத்து கால் மணி நேரம் சிம்மில் வைத்திருக்கவும்" என்று சொல்லி உள்ளீர்கள். 1/2 ம்ணி நேரம் தம் போட வேண்டுமா.
I got confused.Please let me know.

ஆசியா அக்கா ! நேற்று உங்க நெல்லை தம் பிரியாணி தான் செய்து சாப்பிட்டோம். மிகவும் சுவையாக இருந்தது. என் கணவருக்கு மிகவும் பிடித்து விட்டது நன்றி.
அன்புடன்
தக்ஷினா

அலுமினிய பேப்பர் இல்லாமல் எப்படி தம் போடுவது?